எதிர் பாரா திருமணம்
" என்ன நடக்கிறது ?" என்று தன் மான்விழியால் மிரண்டபடி அவன் கண்களையே நேருக்கு நேராக பார்த்து கொண்டேயிருந்தாள்.
அவளின் கண்களையே உற்று பார்த்தபடி மூன்றாவது முடிச்சியையும் போட்டு முடித்தான்.
"யார் இவன்? என்ன செய்கிறோம் என்று தெரிந்து தான் செய்கிறானா? பிறந்ததிலிருந்தே அன்பெனும் சொல்லை கனவிலும் கேட்காத துர்பாக்யசாலி ஆயிற்றே நான்"
"நா மஹாலக்ஷ்மி பெயரில் மட்டும் தான் எல்லோர் கண்களுக்கும் அம்மாவை விழுங்கிவிட்டு வந்தவள்" என்று தன்னை பற்றி சிந்திக்கையில்,
அவளின் கை பற்றி "இந்த நிமிஷத்துலேர்ந்து இவங்க என் மனைவி" என்றவன் திரும்பி அவர்கள் இருவரையும் எரித்துவிடுவது போல் பார்த்தான்.
"இனிமேல் இவளை திட்றதுக்ககோ அடிக்கறதுக்கோ யாருக்குமே உரிமை கிடையாது என்னை தவிர என்னையும் மீறி அவளை கஷ்டப்படுத்தணும்னு நினைச்சிங்க அப்புறம் இருந்த இடம் தெரியாம போயிருவீங்க!"என்று ஆட்காடி விரலை உயாத்தி எச்சரித்துவிட்டு அவளின் கையை பிடித்து மணவறையை விட்டு கீழே கூட்டிச்சென்றான்.
கண்களில் மிரட்சியுடன், இருஜோடி கண்கள் தன்னை கொலைவெறியுடன் பார்ப்பதை பார்த்து கொண்டே வருபவள் விரல் விடுத்து அவளின் தோளில் தன் கை போட்டு அணைத்தபடி கூட்டிச்சென்றான்
மண்டபத்தை விட்டு வெளியே வந்தவன் காரின் கதவை திறந்து " உள்ள உக்காரு " என்றான்.
"மஹா உள்ள போ " என்று அவளை கை பிடித்து உள்ளே உட்கார வைத்தான்.
காரை வேகமாக ஸ்டார்ட் செய்து தான் இருக்கும் வீட்டை நோக்கி செலுத்தினான்.
யோசனையில் இருந்தவன் திடீர் என்று "உன்னோட சர்டிபிகேட் எல்லாம் எங்க இருக்கு ?" என்றான் அவளிடம் திரும்பாமல்
பதில் ஏதும் வராததால் அவள பக்கம் திரும்பி இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை அவள் முகத்தின் முன் தன கையை காற்றில் அசைத்தான்.
அவள் தோளை மென்மையாக தொட்டான் அந்த ஸ்பரிசத்தில் பதறிப்போய் பின்னே ஒடுங்கினாள்.
"ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனேன் சே! என்ன மனிதர்கள் இவர்கள் எப்படி நடுங்குகிறாள் இவள், இவளிடம் எப்படி பேசுவது தெரியவில்லையே ?" யோசித்தான்.
பட்டென்று வேகமாக காரின் பிரேக்கை போட்டான்.
கார் குலுங்கி நின்றதில் சுயஉணர்வுக்கு வந்தவள் அவனை பார்த்தாள், அவன் தன்னையே கண் இமைக்காமல் பார்ப்பதை பார்த்து தலை கவிழ்ந்து கொண்டாள்.
மஹாவின் செயல் அவனுக்குள் சிரிப்பை வரவழைத்து மெல்ல தன இதழை கடித்து சிரிப்பை அடக்கியவன்.
"இங்க பாரு நம்மளுக்கு டைம் இல்ல உன்னோட சர்டிபிகேட்ஸ் எல்லாம் எங்க இருக்கு " என்றான்.
"எல்லாம் வீட்ல இருக்கு " என்றாள்.
"சரி வீட்டுக்கு வழி சொல்" என்றபடி காரை ஸ்டார்ட் செய்தான்.
வீட்டிற்குள் நுழைந்து மஹாவின் சர்டிபிகேட்ஸ் அவளின் சொத்து டாக்குமெண்ட்ஸ் என்று முக்கியமான அனைத்தையும் எடுத்துக்கொண்டு "உனக்கு ஏதாவது ரொம்ப முக்கியமா எடுக்கணும்னா எடுத்துட்டு வா " அவள் வேகமாக ஓடி சென்று பின் ஒரு சின்ன பெட்டியுடன் வந்தாள் சுற்றிலும் ஒரு பார்வை விட்டவன் பின் "வா போகலாம் " என்று அவள் கையை பற்றி வேகமாக காருக்குள் உட்கார வைத்து ஸ்டார்ட் செய்தான்.
" சாரி டா! இருந்த டென்ஷன்ல உன்ன கூப்பிடல சரி நீீ வீட்டுக்கு வந்துடு நாம இப்பவே சென்னைக்கு கிளம்பறோம் " என்று போனை கட் செய்தான்.
அவன் கார் ஓடுவதில் கவனமாய் இந்தான்"யார் இவன்? என்னை எங்கே கூட்டி செல்கிறான்? " என்று அவனை பார்த்தகொண்டே இருந்தாள்.
"நீ..... நீ.....ங்....க யா........ரு.....? எ..ன்..ன எ..து..க்..கு கல்யாணம் பண்ணீங்க ?" என்றாள் திக்கித்திணறி கேட்டாள்.
அவள் கேட்ட கேள்வியில் ஒநிமிடம் அவள் கண்களையே உற்று பார்த்தவன்.
பின்னர் அவளை பார்த்தபடியே " ஏன் உன்ன அவங்ககிட்டேர்ந்து காப்பாத்துனது பிடிக்கலையா அவங்ககிட்டயே போறியா? " என்றான் கோவமாக
வேகமாக "வேண்டாம்" என்று தலை ஆட்டும் அவளை பார்த்து சிரித்துக்கொண்டே "உன்னோட வேண்டுதலை கேட்டு கடவுள் உனக்காக என்னை அனுப்பி வைத்தார் போதுமா? எதை பத்தியும் யோசிக்காம அமைதியா பயப்படாம வா" என்றான்.
இன்னமும் அவள் மாந்தளிர் உடல் நடுங்கிக்கொண்டு இருப்பதை பார்த்து "இவளிடம் இப்போதைக்கு பேச்சு கொடுக்க கூடாது முதல்ல நிதானத்துக்கு வரட்டும் " என்று நினைத்தவன் அதற்கப்புறம் எதுவுமே பேசவில்லை.
"திடிரென்று ப்ளீஸ் எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் பன்றிங்களா?"
"என்ன?"
"இங்க இருந்து போறதுக்கு முன்னாடி எனக்கு ஒருத்தங்களை பார்க்கணும் ப்ளீஸ் கூட்டிட்டு போறிங்களா ?" என்று பயந்த கண்களுடன் கேட்கும் அவளை பார்த்து லேசா சிறிது தலை அசைத்தான்.
"இங்க பாரு இந்த நிமிஷத்துலேர்ந்து உனக்கு எது வேணும்னாலும் என்கிட்டே பயப்படாம கேளு" என்று மஹாவை பார்த்தான் .
அவனை காணாமல் சரி என்று தலை அசைத்தாள்.
இன்றில் இருந்து தன் வாழ்க்கையை வசந்தமாக்க வந்தவன் என்று அறியாமல் வழக்கம் போல் பயந்து கொண்டிருந்தாள்.
++++++++++++++++++++++++++++++++++++
இனிய தோழிகளுக்கு வணக்கம் !
"நெருங்க சொல்லுதடி உன்னிடம்" ஒரு புது கதை எழுதறேன் எப்படி நீங்க "என் உயிராய் நீ"க்கு ஆதரவு தரிங்க அதே மாதிரி இந்த ஸ்டோரிக்கும் தரணும்.
இந்த ஸ்டோரி முழுக்க கணவன் மனைவியோட அன்பு, கோவம் , காதல் எல்லாம் இருக்கும் சோ என்ஜாய்.
கண்டிப்பா ஒவ்வொரு எபிசொட் முடிஞ்சதும் உங்களோட வோட் ஷேர் பன்றிங்களோ இல்லையோ கமெண்ட்ஸும் ஷேர் பண்ணுங்க அப்போ தான் எனக்கு எபிசொட் நெக்ஸ்ட் எழுத இன்டெரெஸ்ட்டா இருக்கும் ஓக்கேவா பை
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top