7. மலர்பாலா

தனக்கே தெரியாமல் தன் மனம் கவர்ந்தவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி கொண்டிருக்கின்றான் என்பது ஒருபுறம் இருக்க மங்கையவளின் மனம் அவளுள் அவளுக்கே தெரியாமல் ஒரு போர் தொடுத்து கொண்டிருந்தது.
இதுவரை யார் என்றே தெரியாமல் அவன் மேல் அவளுக்கு ஒரு ஈர்ப்பு வந்தது உண்மையே.

ஆனால் தற்போது அவளை படிக்க வைத்த எம்.வீ டிரஸ்டின் உரிமையாளரின் மகன் என்ற உண்மை அவளை படுத்தி எடுத்தது. இதுதான் என்று சொல்லிவிட முடியாத ஒரு பாரம் அவள் மனதுக்குள் குடிக்கொண்டது. தன் மனதுக்குள் நடக்கும் போராட்டத்தை இன்னதென்று புரிந்துகொள்ள முடியாமல் அந்த அவசர சிகிச்சை பிரிவின் வாசலில் அப்படியே நின்று கொண்டிருந்தவளை அங்கு வந்த நர்சின் குரல் நிகழ் உலகத்திற்கு கொண்டு வந்தது.

"மேம்.. மேம்.."

"ம்.. சொல்லுங்க" என்றாள்.

"உங்களை டாக்டர் உள்ளே வர சொல்றாரு மேம்" என்றாள்.

உள்ளே சென்றவளுக்கு அவன் இப்போது அபாய கட்டத்தை தாண்டி விட்டான் என்ற செய்தி சற்று நிம்மதி அளித்தது. 

"வாமா மிருணாளினி. நீங்க காப்பாத்தியது நம்ம மருத்துவமனையோட நிறுவனர் பையனதான். அதுமட்டும் இல்ல எனக்கு நெருங்கிய நண்பனோட பையனும். உனக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியலைமா" என்றவரை இடைமறித்தவள்,

"சார். இதில என்ன இருக்கு. நாம எல்லோருமே மருத்துவர்கள். ஒரு உயிரை காப்பதுதானே நம்முடைய முதல் கடமை? அதில் யார் என்ன என்றெல்லாம் பார்க்க முடியுமா?" என்றாள்.

அவரும் ஒரு சிறிய சிரிப்புடன் "அதுவும் சரிதான். அம்மா எனக்கு இன்னும் ஒரு உதவி செய்ய வேண்டுமே" என்றார்.

"சொல்லுங்க சார்" என்றவளிடம்
"எனக்கு வேறு ஒரு ஆபரேஷன் இருக்கு.

மகியின் வீட்டிற்கு செய்தி சொல்லியாச்சு. இப்போ வந்துருவாங்க. உன்னை நேரில் பார்த்து நன்றி கூறவேண்டும் என்றார்கள்." என்றவரிடம்,

"சார் நான் படித்து இன்று நல்ல நிலையில் இருக்க காரணமே ராஜேந்தரன் சார் தான். இதற்காக நான் எவ்வளவோ நன்றி கடன் பட்டுருக்கேன். இது நான் அவருக்கு செய்த உதவியா பார்க்கல என்னோட நன்றியாதான் சார் பார்க்குறேன். இருந்தாலும் அவர்கள் வரும்வரை நான் இருக்கேன்" என்று அவள் கூறவும் அவர் அவரது அடுத்த வேலையை நோக்கி சென்றார்.

அவர் விடைப்பெற்று செல்லவும் அந்த அறையில் அவளும் அவனும் மட்டுமே தனித்து விடபெற்றிருந்தனர்.

மருந்தின் தாக்கமும் அடிபட்டதின் விளைவுமாக அவன் கண்கள் மூடி மயக்கத்தில் படுத்திருக்க மாலையில் காக்கி உடையில் கம்பீரமாக அவன் நின்றது அவள் மனதினில் தோன்றி மறைந்தது.

'எவ்வளவு கம்பீரமாக நின்றவன்! இப்போது இப்படி குழந்தை போல படுத்திருக்கின்றான்' என்று சிந்தித்தவள் அந்த கடற்கறையில் நடந்த நிகழ்வுகளை மீண்டும் நினைவுபடுத்த முயற்சித்தாள்.

அவள் முயற்சிக்கும் போதே அதற்குள் அவனது ஸ்டேஷனில் இருந்து கான்ஸ்டபிள்கள் இருவர் வரவும் சரியாக இருந்தது.

பதற்றமாக வந்த காவலாளிகளிடம் நடந்தவற்றை கூறியவள் அங்கிருந்த நர்சை அழைத்து மகேந்திரன் யார் என்ற விபரத்தை கூறியவள் அவனது பெற்றோர் வந்தால் அவளிடம் கூறும்படி கூறிவிட்டு அந்த மருத்துவமனையில் இருந்த அவளது அறைக்குள் சென்று அமர்ந்தாள்.

அவளது வாழ்க்கையிலேயே அந்த நாள்தான் மிகவும் நீண்ட நாள் போன்று தோன்றியது அவளுக்கு. ஆனால் அந்த நாள் இன்னும் முடியவில்லை என்பதை நினைவு படுத்தும் விதமாக அவளது கைப்பேசி ஒளியெழுப்பியது.

'இந்த நேரத்தில் தனக்கு யார் அடிக்கிறது' என்று அவளது கைப்பேசியை எடுத்தவளுக்கு அது அவளது ஆஸ்ரமத்தின் எண்ணை காட்டியது.

மணி இரவு ஒன்பதை தாண்டிய நிலையில் இப்போது ஏன் அடிக்கின்றார்கள் என்ற சந்தேகத்தோடு எடுத்தவளுக்கு அடுத்த பேரதிர்ச்சி காத்திருந்தது.

அழைப்பில் பேசியவர் அவளை வளர்த்த அந்த ஆஸ்ரமத்தின் நிர்வாகிதான்.

"மிருமா.." என்று பதற்றமாக அவர் பேசவும்,

"சொல்லுங்க அப்பா. என்ன ஆயிற்று ஏன் பதட்டமா பேசுறீங்க? யாருக்காச்சும் உடம்பு முடியலையா?" என்று கேட்டாள்.

"இல்லம்மா அது.. நம் சின்னா-வை காணும்மா" என்றார்.

"காணுமா? என்னப்பா சொல்றீங்க அங்கதான் எங்கயாச்சும் இருப்பான் நல்லா பார்த்தீங்களா?" என்றாள்.

அதற்கு அவரிடம் இருந்து வந்த பதிலோ அவள் சற்றும் எதிர் பார்க்காதது,
" இல்லம்மா. வழக்கம் போல காலைல பள்ளிக்கூடம் போனான். ஆனா சாயங்காலம் வரவே இல்ல. அப்போல இருந்து நாங்களும் தேடுறோம். எங்க போனானே தெரியலை" என்றார்.

அவரது குரலிலேயே அவர் எவ்வளவு பயத்தும் கவலையுடனும் இருக்கின்றார் என்பதை மீருவால் புரிந்து கொள்ள முடிந்தது.

'ஆனால் சின்னா எங்கு சென்றிருப்பான் அதிலும் ஏழு வயதே ஆன சிறுவன். ஆஸ்ரமத்தில் இருந்து அடுத்த தெருவில் தான் அவன் படிக்கும் பள்ளியும் இருந்ததால் வழி மாறி சென்றிருக்கவும் வாய்ப்பு இல்லையே' என்று சிந்தனையில் மூழ்கியவளை மீண்டும் அளைப்பில் இருந்தவரின் குரல் நிகழ் உலகத்திற்கு கொண்டு வந்தது.

Pratilipi id: malarbala

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top