34.அருள் நித்தியுவனி
34. Arul nithuyuvani
ஊட்டி......
இவர்கள் வந்த வாகனம், ராஜேந்திரன் எஸ்டேட்டுக்குள் நுழைய, முன்னே கம்பீரத்துடன் நின்றது அந்த மாளிகை.
வலது பக்கத்தில் பாறைகளில் இருந்து அருவி போல தண்ணீர் ஓடியது. அதன் முன் ஒரு அழகிய செயற்கை குளம்.
சுற்றியும் மலை காடுகள் அந்த ரம்மியமான இயற்கையை ரசித்தவாறே ஆழ்ந்த மூஞ்செடுத்து இயற்க்கை காற்றை சுவாசித்து அனுபவித்தாள்.
கண்களை மூடிய நொடி கூட அந்த காவலனின் முகமே கண் முன் தோன்றி இம்சித்தது.
அவன் கண்களை சந்தித்த நொடிகள், இப்பொழுதும் பிம்பமாய் கண் முன் தோன்ற,
நொடி பொழுதும்
உன் நினைவில்
கண்களால் கைது
செய்யும் காவலனே...
மனதை பறிகுடுத்தேன்
உன்னிடத்தில் மீட்க வழியாதோ ?
"மிருணாளினி" என்ற அழைப்பில் கண்களை திறந்தாள்.
அவள் முன் நின்றுந்த கமலேஷ்வரன், "பசங்கள கூட்டிக்கிட்டு உள்ள போம்மா." என்றார்.
'சரி' என்று தலையசைத்தவள், அனைத்து குழந்தைகளையும் அழைத்து கொண்டு வீட்டினுள் நுழைந்தாள்.
சிறிய வயதில் ஏற்கனவே ஒரு முறை இங்கு வந்திருப்பதால் பழகிய இடம் போல் தோன்றியது மிருணாளினிக்கு.
இவர்களை வரவேற்ற ஒருவர், "வாங்க அம்மா. வாங்க ஐய்யா. வாங்க குழந்தைகளா. எல்லாரும் வாங்க. என் பேரு ரங்கன். இங்கதா ஐய்யா கிட்ட வேலை செய்யுறேன். நீங்க வரீங்கன்னு ஐய்யா சொன்னாரு. உங்களுக்கு என்ன வேணும்னாலும் என்னைய கேளுங்க. எல்லாரும் களைப்பா இருப்பீங்க. குளிச்சுட்டு வாங்க சாப்பிடலாம்."
அனைவரும் குளித்து விட்டு உணவு உண்டனர். பின், பயண களைப்பில் குழந்தைகள் பல பேர் உறங்கி விட,
குழந்தைகள் இருவர் மட்டும் விளையாடலாம் என்று வெளிய செல்ல முயல, அவர்களை பார்த்த கமலேஷ்வரன், "எங்கயும் தனியா போக கூடாது. இருங்க நானும் வரேன்." என்று கிளம்பினார்.
மிருணாளினி, "அப்பா! நீங்க ரொம்ப சோர்வா இருகிங்க. நீங்க போய் ஓய்வு எடுங்க. நா பசங்கள பாத்துகுறேன்," என்று அவர்களை மிருணாளினி கூட்டி சென்றாள்.
குழந்தைகள் இருவரும் மிருணாளினியுடன் வெளியே விளையாட சென்றனர்.
குழந்தைகள் இருவரும் ஒரு பந்தை வைத்து விளையாடி கொண்டிருக்க, இவள் ஒரு கல் பெஞ்சில் அமர்ந்து அவர்களை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்.
மீண்டும் மனதை கொள்ளை கொண்ட கள்வனின் நினைவு வர, இவனை பற்றி யோசிக்காமல் இருக்க என்ன செய்யலாம். எப்படி அவனை பற்றி யோசிக்காமல் இருப்பது என்று எண்ணி அதிகமாக அவனை பற்றியே யோசித்து கொண்டிருந்தாள் பெண்ணவள் 😂
அவனது புன் சிரிப்பை எண்ணுகையில் இவள் இதழ் தானாய் புன்னகையில் மலர்ந்தது.
அவனது கூர் பார்வையை எண்ணுகையில் உடல் புல்லரித்தது. அவனது காதல் பார்வையில் சிக்குண்ட நொடியை எண்ணுகையில் மனமோ சிறகடித்து பறந்தது.
இவ்வாறு அவன் நினைவில் இவள் மூழ்கி இருக்க, குழந்தைகள் விளையாdi கொண்டிருந்த பந்து இவள் மேல் படவும் சுய நினைவு பெற்றவள்.
அவனை பற்றி நினைக்க கூடாது என்று நினைத்து விட்டு அவனை பற்றியே நினைத்து கொண்டு இருந்த தன்னை தலையிலே குட்டி கொண்டாள்.
அதன் பின், ஏதோ மனம் உருத்த சுற்றும் முற்றும் பார்த்தாள்.
வீட்டு வாசலில் நின்று கொண்டு ரங்கன் இவர்களை பார்த்து கொண்டு இருப்பதை கவனித்தாள்.
ரங்கன் இவர்களையே பார்த்து கொண்டு இருக்கவும், எழுந்து அவன் அருகில் சென்றவள்.
"என்னங்க ஐய்யா ஏதாவது சொல்லணுமா?
ரங்கன், "இல்லம்மா. ஐயா உங்க எல்லாரையும் கவனமாக பாத்துக்க சொன்னாரு. மழை வர்றது போல தெரியுது. இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்ட போகுது அதான் உள்ள கூப்பிடலாம்ன்னு வந்தேன்." என்றான்.
"சரிங்க. கொஞ்ச நேரத்துல உள்ளே வந்துருவோம்." என்றவள் சற்று நேரத்தில் குழந்தைகளை கூட்டி கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.
மறுநாள் எங்கு செல்லலாம் என்று கமலேஷ்வரன் மிருணாளினியுடன் ஆலோசித்து கொண்டிருக்க, அனைவருக்கும் பால் கொண்டு வந்தார் ரங்கன். பாலை குடித்து விட்டு அனைவரும் உறங்க சென்றனர்.
மறுநாள் பல அதிர்ச்சிகள் காத்திருப்பது தெரியாமல் அனைவரும் உறங்க சென்றனர்.
சூரியன் பூமி காதலியை காண ஆவலோடு கிளம்பி விட,
மிருணாளினியின் வாழ்கையை புரட்டி போடவிருக்கும் நாளும் புலர்ந்தது.
********
Watpad id: Arul nithuyuvani
********
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top