32.வீரலட்சுமி மாடசாமி
32. வீரலட்சுமி மாடசாமி
மகேந்திர வர்மன் சொன்ன காதலை மனதில் ஏற்றுக்கொண்டவளோ வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் விரைவாக சென்றவளின் கைகளை திரும்பவும் பிடித்தான்.
மிருணாளினி, "சார் கையை விடுங்க? எனக்கு லேட் ஆயிடுச்சு." என முகத்தை சுழித்துப் படியே கூற, படாரென்று கையை விட்டவனோ திரும்பி நின்றான். அதை உணர்ந்தவளோ அவனெதிரே சென்று முன் நின்றாள்.
மகேந்திர வர்மன், "என்னுடைய காதலை எல்லாம் மொழிகளிலும் சொல்லிட்டேன். இறுதியாக, "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் "
என்னுயிர் காதலை ஏற்றுக்கொள்வாயா?" என்றான்.
மிருணாளினி, "ஹா.. ஹா..ஹா.." என ஏளனமாக சிரித்தாள்.
மகேந்திர வர்மன், "இப்ப எதுக்காக சிரிக்குற? நான் காமெடி எதுவும் பண்ணலயே?" என்றான்.
மிருணாளினி, "நீங்க யாரு? IPS ஆபிசர். நான் யாரு? சாதாரண பொண்ணுன்னு கூட சொல்ல முடியாது. அதுக்கும் கிழ இருக்க ஒரு அனாதை. உங்களோட தகுதிக்கும் என்னோட தகுதிக்கும் ஏணி வைச்சா கூட எட்டாது. ஏற்கனவே சொன்னது போலவே இதெல்லாம் சரியாக வராது. என்னை விட்டுடுங்க" என்றாள் அவனை காணாமல்.
"ஏன்டி!.. மிரு.. மிரு.. உனக்கு எத்தனை முறை சொன்னாலும் புரியாதா? உம் மேல எனக்கு இருக்க அளவுக்கடந்த அன்பு தான் காதலாக மாறியது. இந்த காதலுக்கு தகுதியெல்லாம் தெரியாது. இதுவரைக்கும் எந்த பொண்ணையும் ஏறேடுத்தும் பார்க்காதவன் உன்னை மட்டும் என் உயிருக்கும் மேலா விரும்புறேன் அது எப்படி? என்னுடைய காதலை புரிஞ்சுக்கோம்மா!" என்றான்.
மிருணாளினி, "சார், என்னோட மனசுல நீங்க இல்ல?அவ்வளவு தான்" என நகர்ந்தாள்.
மகேந்திர வர்மன், "நீ பொய் சொல்ற."
மிருணாளினி, "யாரு நானா? பொய் சொல்றேனா? எம் மனசுல நீங்க இல்லை என்பதை இந்த நிமிஷமே நிரூபித்து காட்டுறேன்." என்றாள்.
மகேந்திர வர்மன், "நீ கோபப்பட்டு பேசும்போதே உன் இருவிழிகளையும். பார்த்து புரிஞ்சுக்கிட்டேன்."
மிருணாளினி, "எம். வி. சார், இதென்ன புதுக்கதை? இது எப்ப நடந்துச்சு?"
மகேந்திரவர்மன், "மிரு, நீ நல்லாவே நடிக்குற?"
மிருணாளினி, "ஐய்யோ! இப்ப தான் போலீஸ் பிரைன் நல்லா வேலை செய்யுது" என்றவளோ அவனின் விழிகள் மீது பார்வையை பதித்தாள்.
"உன் விழிகளிலேயே சரணம்
.. ...அடைந்தேனடா…
இரு விழிகளுக்குள்ளே எனது முகம்
அறிந்தேனடா!
எனது இதயத்தில் நீயடா!
என்னுள் காதலை
சொல்ல துடிக்கிறேனடா!"
மகேந்திரன், "ஹேய்! மிரு. என்னது இப்படியே சிலையாக நிக்குற?" என்றான்.
மிருணாளினி, "அதுவா.. அது சார்.." என ஆசையாக கூறப் போகும் போது அவனின் கைப்பேசி ஒலித்தது.
"ஹலோ, சொல்லுங்கம்மா?"
கயல் விழி, "டேய்! சீக்கிரம் வாடா! அப்பா உன்னிடம் ஏதோ ஒரு முக்கியமான விஷயம் பேசனுமாம்?"
"இதோ வரேன்" என அழைப்பைத் துண்டித்துவிட்டு எதிரே நின்ற மிருணாளினியை பார்க்க, அவளோ தூரமாக சென்றிருந்தாள்.
நேரம் தவறாமல் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு வந்தவளோ, தனது கடமையில் கண்ணும் கருத்துமாக பணிபுரிந்தாள். அந்நேரத்தில் மகேந்திரன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் அவளது கண் முன்னே வந்து போனது.
'எனக்கு என்னாச்சு?அவரது நினைவாகவே இருக்கிறதே?' என குழம்பி ஆழ்ந்த சிந்தனைக்குச் சென்றாள்.
'எனக்கு ஆசிரமம் மட்டும் தான் குடும்பம் என நினைத்து வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால் கல்யாணத்தைப் பத்தி யோசித்ததே இல்லை. என்னை அறியாமலேயே அவர் மேல் காதல் மலர்ந்தது. முதல் சந்திப்பிலேயே அவரது நேர்மையான குணத்தை ரசித்தேன். இரண்டாவது முறை சமூகத்தில் நடக்கின்ற பிரச்சினையைத் தட்டி கேட்கும் நல்லுள்ளத்தையும் கண்களால் கண்டேன். அதன்பிறகு குழந்தைக் கடத்தும் பிரச்சனையில் மிகவும் தீவிரமாக இருந்த அவருடைய இச்சமுகத்திற்கான சேவை பணி. இதெல்லாமே ஏதோ ஒரு வகையில் அவர் மேல் ஈர்ப்பு உண்டாக்கியிருக்கிறது.
இச்சிந்தனையில் மிருணாளினியும் பணிபுரிவதில் கவனத்தை சிதற விட்டாள். அதனை கவனித்த ராஜேந்திரன் அவளின் எதிரே வந்து நின்றார்.
"மிருணாளினி.. மிருணாளினி" என ஓங்கி குரலிட, அச்சத்தத்தைக கேட்டதும் அதிர்ச்சியாக எழுந்து நின்றாள்.
எப்போதுமே தன் வேலையில் கவனமாகவும், சுறுசுறுப்பாகவும், குழந்தைகளின் பிரச்சினைகள் என்னென்ன என்பதை அறிந்து பாசத்தை பொழிய அந்த பிஞ்சு குழந்தைகளின் இதழ்களில் இவளால் புன்னகை மலரும். உம் முகத்தைப் பார்த்தால் நீ வேற ஏதோ ஒரு யோசனையில் இருக்கிற மாதிரி தெரியுது." என்றார்.
********
பிரதிலிபி ஐடி :Veeralakshmi madasamy
********
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top