26.பாகி லக்ஷ்மணமூர்த்தி
26. பாகி லக்ஷ்மணமூர்த்தி
தன் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்தவளுடைய வார்த்தைகள் அவனை வேறு பரிமாணத்திற்கு கொண்டு சென்றிருந்தது.
சில அற்ப காரணங்களுக்காக தன்னை வேண்டாம் என்று ஒதுங்கி செல்பவளின் எண்ணத்தை முற்றிலும் ஏற்காதவன் அவளின் இடையில் கையிட்டு தூக்கிய சுழற்றியபடியே, "ஐ லவ் யூ மிரு." என்றான் அவள் கண்களை தன் கண்களுக்குள் சிறை செய்தவாறு.
"என்ன பண்றிங்க சார்? இது எல்லாம் நல்லாவே இல்லை" என்று அவன் கண்களை சந்திக்க மறுத்து முகத்தை வேறு பக்கம் திரும்பியவள், "என்னை விடுங்க சார்." என்று அவன் கைகளில் இருந்து விடுபட துள்ளினாள் மிரு.
"ஏய்! மிரு இரு இரு. நீ இப்படி பண்ணா ரெண்டு பேருமே சேர்ந்து விழவோம். வைட் நானே இறக்கி விடுறேன்." என்று அவள் காதில் கிசுகிசுப்பாய் கூறி அவளை கிழே இறக்கி விட்டான் மகி.
அவன் காதில் கூறிய வார்த்தைகள் சாதரணமானவை தான் என்றாலும் கூட தன் செவியை தீண்டிய அவன் உதடுகள ன் ஸ்பரிசத்தால் அவன் கண்களை சந்திக்க மறுத்தவள், "இப்பவும் சொல்றேன். எனக்கு நீங்க ரொம்ப அதிகம் சார். உங்களோட மரியாதையும் கௌரவமும் என்னால கெட வேண்டாம்." என்றவளுக்கு கண்களில் உதிர்ந்த நீர் முத்துக்கள் கன்னத்தில் வழிந்தது.
"மிரு! இன்னும் நீ இது பத்தியே பேசிட்டு இருந்தா எப்படி? உன் மனசு எனக்கு புரியது. ஆனா, என் விருப்பத்தை மீறி எதுவும் நடக்காதுன்னு நான் உறுதியா சொல்லும் போது நீ ஏன் பிடிவாதம் பிடிக்கிற?" என்றான் மகேந்திரன் அடக்கிய வைத்த கோவத்துடன்.
"நிச்சயமா இது நடக்காது சார்." என்று "எனக்கு வாழ்க்கை கொடுத்த தெய்வம் சார் உங்க அப்பா. அவருக்கு என்னால ஒரு கலக்கம் வரக்கூடாதுன்னு நான் நினைக்கறதுல தப்பில்லையே சார்?" என்று கூறி அவனை தாண்டி தன் இல்லம் நோக்கி ஓடினாள் மிரு.
தன்னை விட்டு சென்றவளையே பார்த்துக்கொண்டு இருந்தவன் கைபேசி அலர எடுத்தவன் தன் அன்னை தான் என்று தெரிந்ததும் "என்னம்மா?" என்றான் கரகரப்பான குரலில்.
"மகி! என்னப்பா? என்ன ஒரு மாதிரி பேசுற?" என்றார் மகனின் குரலை வைத்தே.
"ஒன்னுமில்லமா. ஒரு கேஸ் விஷயமா பேசிட்டு இருந்தேன். அதே நெனப்புல பேசிட்டேன்" என்றான் சமாளிப்பாக.
"அப்படியா மகி. நான் என்னமோன்னு நினைச்சி பயந்துட்டேன். நீ எங்க இருக்க கண்ணா? உன் அறையில பார்த்தேன் நீ காணும்" என்றார் மகன் மீது கொண்ட அக்கரையில்.
"இங்க தாம்மா பக்கத்துல. இப்போ வந்துடுவேன்." என்றவன் "நான் அப்புறம் பேசுறேன்" என்று போனை வைத்தவன், மிரு அவள் அறைக்கு சென்று விட்டாளா என்ற அறிந்த பின்னறே தன் வீட்டிற்கு சென்றான்.
அறைக்குள் வந்தவளுக்கோ நெஞ்சம் முழுவதும் பாரமே அழுத்தியது முகம் தெரியாத தன் தாய் தந்தையரை அன்று தான் நினைத்தாள்.
"நீங்க மட்டும் இருந்திருந்தா எனக்கு மிகவும் இப்படி ஒரு நிலமை வந்திருக்குமா?" என்று ஒரு மூச்சு அழுது ஓய்ந்தவள் தன் மனதிற்கு விருப்பமானவனை நினைத்தபடியே உறங்கி போனாள்.
…..
வீட்டிற்கு வந்த மகேந்திர வர்மனின் முகம் பார்த்த அவனது அன்னை மகனுக்கு ஏதோ சரியில்லை என்பது மட்டும் தெரிய மகனை வாஞ்சையாக பார்த்தவரின் மடியில் தலை வைத்து படுத்தான் மகேந்திரன்.
மகன் தன் மடி மீது படுக்கவும் தன் விரல்களில் தலையை கோதியவர் "என்ன பிரச்சனை கண்ணா?" என்றார் அவனின் மனதினை அறிந்தவர் போல்.
"அம்மா" என்றான் மகி நெகிழ்ந்த குரலில்.
"தெரியும் கண்ணா. உனக்கு சொல்லனும்னா சொல்லு பா" என்று மகனை ஊக்க படித்தவும்,
தான் மிருவை விரும்புவதும் அவள் தன் காதலை வேண்டாம் என்று ஒதுக்கும் காரணங்களையும் கூறினான்.
கேட்டவருக்கோ அதிர்ச்சி இல்லை ஏனென்றால் இதை எதிர்பார்த்து தானே இருந்தார். மகனின் மாற்றம் அறிந்த தாயிக்கு மாற்றத்திற்கான காரணம் மிரு என்பதையும் மருத்துவ மனையில் வைத்து அறிந்து தானே இருந்தார்.
"கவலைபடத மகி. நான் அப்பாக்கிட்ட பேசுறேன். அந்த பொண்ணும் பார்க்க முக்கும் முழியுமா லட்சணமா இருக்கா. எனக்கு அன்னைக்கே ஒரு சந்தேகம் இருந்தது. பார்த்த முதல் நாளிலேய எதுவும கேட்க வேண்டானு இருந்தேன் நீ கவலைபடாத கண்ணா. அம்மா இருக்கேன்." என்று அவனுக்கு நம்பிக்கை கொடுத்தவர் அவனை அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு அவரும் அறைக்கு சென்றார்.
தன் அறைக்குள் பிரவேசித்தவன் படுக்கையில் பொத்தென்று விழ அந்த பஞ்சு மெத்தை அவனை லாவகமாக உள்வாங்கிக் கொண்டது. மனதிலும் விழியலும் தன் தேவதையே வலம் வர அவளை நினைத்தபடியே கண் மூடினான்.
*******
வாட்பேட் : @Bhagiyalakshmi
பிரதிலிபி: bhagi lakshmanamoorthy
*******
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top