24.மு.அமானுல்லாஹ் பாகவி

24. மு.அமானுல்லாஹ் பாகவி

‘இந்த ஒதுக்கம் தான் எனக்கு பிடிக்கலை மிரு. உன்னோட இந்த தயக்கத்தை நான் உடைத்தே தீருவேன். அதுக்கு முன்னாடி இங்கிருந்து பத்திரமா போகனும்.’ சுற்றி முற்றி பார்த்தவன் பக்கத்து தெருவில் நுழைந்து  மிருவை அழைத்து சென்றவனை நோக்கி இரு உருவம் இரும்பு ராட் கையில் ஏந்தி இருவரையும் போட்டுத்தள்ள இருவருக்கும் தெரியாமல் இரண்டு நிழல் உருவம் மெதுவாக வந்துக்கொண்டு இருந்தது.

தனக்குப் பின்னால் யாரோ நடந்து வரும் அரவம் கேட்க சட்டென சுதாரித்தவன், 'மிரு ஜாக்கிரதையாக இரு' என்று கூறி பட்டென திரும்பி தனது வலது காலை உயர்த்தி ஒருவனின் நெஞ்சில் பலமாக உதைக்க, அவன் "ஆ
... அம்மா" என அலறினான்.

மீண்டும் தாமதிக்காமல் தனது இடது கையால் இன்னொருவனின் முகத்தில் ஓங்கி குத்தினான்.

அவனும் கதறிக்கொண்டு கீழே விழ, அவனது கையில் இருந்த இரும்பு கம்பி சிதறி விழவும் அதை தன் கையில் எடுத்துக்கொண்டு மகி இரண்டு பேரின் முட்டிகளையும் அடித்து உடைத்தான் அதற்குமேல் அவர்களால் நகரக் கூட முடியவில்லை. 

மறுபக்கமாக திரும்பி, "மிரு, உனக்கு ஒன்னும் இல்லையே?" எனக் கேட்க, அவள் "எனக்கு ஒன்னும் இல்லை. அவங்களுக்குத் தான் முட்டி உடைஞ்சிடுச்சு ன்னு நினைக்கிறேன்." என்றாள்.

"என்ன பண்றது மிரு? லேசா அடிச்சா மறுபடியும் தாக்க வருவார்கள். எனக்கு ஏதாவது ன்னா கூட பிரச்சனை இல்லை நான் தாங்கிக் கொள்வேன். உன்னை ஏதாவது பண்ணிட்டாங்கன்னா என்னால தாங்கமுடியாது மிரு." என்று மனதில் மறைந்திருக்கும் காதலை அக்கறையாக வெளிப்படுத்தினான் மகி.

அவன் மிரு... என்று சொல்கிற போதெல்லாம் மனதிற்குள் இறக்கை கட்டி பறக்கும் காதலை பகிர முடியாதவளாய் தவித்துக் கொண்டிருந்தாள்.

படபடக்கும் அவளது விழிகளின் மூலம் அவளது தவிப்பை புரிந்துகொண்டு வேண்டுமென்றே சற்று நெருக்கமாக அவளுக்கு அருகில் வந்து நின்று, "மிரு" என்று அழைக்க, 'என்ன?' என்பது போல் அவள் பார்க்க, ஏதோ சொல்ல வந்து இன்னொன்றை சொல்வது போல "கிளம்பலாமா?" என்றான்.

"ம்..." என தலையசைத்தவள், எதிர்ப்புறமாக பார்வையை செலுத்தி கதறிக் கொண்டு இருப்பவர்களை "இவர்கள்?" என கேள்விக்குறியாக நிறுத்தினாள்.

"அவர்களை செழியன் ஜெயிலுக்கு இழுத்துக்கொண்டு போவான்." என்று கூறவும் செழியன் வரவும் சரியாக இருந்தது.

"ஹலோ டியர்ஸ்! நீங்க லவ்வர்ஸ். நான் உங்களை தொந்தரவு பண்ண விரும்பல. ம்ம் ஜாலியா பேசிட்டே போங்க. இவர்களை நான் கவனித்து கொள்கிறேன்." என்று விட்டு இருவரின் கைகளிலும் விலங்கை பூட்டி அவர்கள் கதற கதற ஜீப்பில் ஏற்றினான்.

'நீங்க லவ்வர்ஸ்...' என்று செழியன் சொன்னது காதில் தேன் பாய்வதைப் போல் இனிமையாக இருந்தாலும் என்னது??? "நாங்க லவ்வர்ஸ் ஆ...? அப்படின்னு யார் சொன்னா உங்களுக்கு?" என பொய்யான கோபத்தை சிரமம் எடுத்து வெளிக் கொண்டு வந்தாள் மிருணாளினி.

"டேய் செழியா. ஏதாவது காமெடி பண்ணிட்டே இருப்படா நீ. உன்ன என்ன பண்றேன் பாரு." என மகி அவனை துரத்த...

"ஆமா. நீங்க தான் சொல்ல மாட்டீங்க... நானாவது ரெண்டு பேருக்கும் சொல்றேன்னு சந்தோசப் படாம என்ன அடிக்க வர்ரியா?" என கத்திக் கொண்டு தாவி ஜீப்பிற்கு அந்த பக்கமாக குதித்து கதவை திறந்து உள்ளே அமர்ந்து ஜீப்பை இயக்க அருகில் வந்த மகி, "ரொம்ப தேங்க்ஸ் டா நண்பா. நானே எப்படி சொல்றதுன்னு குழம்பி இருந்தேன். நீயே சொல்லிட்ட. நாம அப்புறம் பேசிக்கலாம் நீ கிளம்பு. ஜாக்கிரதையா போ" என்றான்.

ஜீப் கிளம்பவும் மகியும் மகிழ்ச்சியுடன் திரும்ப மிருணாளினி எதுவும் சொல்லாமல் நடக்க ஆரம்பித்திருந்தாள்

"மிரு...மிரூ..." என அழைத்தும் திரும்பி பார்க்காமல் சென்று கொண்டிருந்தாள்

என் மனதில்
உன்னை நுழைத்து
காதலால் என்னை குழைத்து
மௌனம் தந்து போகிறாயே...?

உன் மௌனம் கொன்று
உன் காதல் மொழியில்
நனைய காத்திருக்கிறேன்....

******

பிரதிலிபி ஐ.டி; மு.அமானுல்லாஹ் பாகவி

******

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top