23.பிந்து சாரா (Devil Angel)
23. பிந்து சாரா (Devil Angel)
வேலை என்று வந்துவிட்டால் வேங்கையாக சீறுபவன் இன்று அதனோடு காதலும் சேர்ந்து அவனது மூளை வேகமாக வேலை செய்தாலும் அவனுள் ஒரு பதற்றம் இருக்க தான் செய்தது.
தொழில்நுட்ப உதவியோடு மிரு இருக்கும் இடம் அறிந்து கொண்டவன். வேகமாக விரைந்தான்.
***
உயிரை பிடித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்த மிருக்கு பயத்தில் கால்கள் நடுங்க துவங்கியது. முதலில் சமாளித்து ஓடியவளுக்கு போக போக உடலும் மனதும் சேர்ந்து கலைத்தது.
'மிரு உன் வாழ்க்கையில் போராடிய போராட்டத்தை விட இது பெரியது இல்லை. உன்னால முடியும் ஓடு… ஓடு' என தனக்கு தானே செல்ப் பூஸ்ட் செய்து கொண்டவள், வேகத்தை விட்டுவிட்டு விவேகமாக சிந்திக்க துவங்கினாள்.
பெருமையாக தனது கண்களை சுழற்றி பார்த்து பின் துரத்தி வந்தவர்களிடம் போக்கு காட்டிவிட்டு ஒரு திசையில் ஓடுவது போல ஓடி வேறு ஒரு குறுகிய சந்தில் ஒளிந்து கொண்டாள்.
அவளை துரத்தி வந்து இரு தடியன்கள் குழம்பி நின்றார்கள் எந்த பக்கம் போவது என தெரியாமல். காரணம், இருவருக்கும் முன் இரண்டு பாதை பிரிந்து சென்றது.
“டேய் எந்த பக்கம் போய் இருப்பா அந்த இம்சை பிடித்த டாக்டர்?” என்றான் ஒருவன்.
“குழப்பமா இருக்கு. ஒன்னு பண்ணு நீ இந்த பக்கம் போ. நான் அந்தப் பக்கம் போறேன். அவ இல்லாம போனா நம்ம தலை நம்மகிட்ட இருக்காது. சீக்கிரம் போ.” மற்றவனுக்கு கட்டளையிட்டு தடியனும் வேகமாக தேட போக.
இருவரும் விலகி போனதும் தான் மிருக்கு மூச்சே சீராக வந்தது.
“அப்பாடா போய்யிட்டானுங்க.” இப்போது தான் போன உயிர் திரும்ப வந்தது.
அந்த நிம்மதி கொஞ்ச நேரம் கூட நிலைக்கவில்லை.
அவளை பின்னிருந்து ஒரு வலிய கரம் அவளது வாயை பொத்த.
கை கால்களை அசைத்து அவனிடம் இருந்து விடுபட நினைத்தாள்.
ஆனால், அந்த கரத்தின் அழுத்தம் கூடிக்கொண்டே தான் போனது.
“மிரு…” என மெதுவாக அழைத்தான் வர்மா.
அவனது குரல் செவியை அடைந்ததும், 'அவரா…?' வேகமாக தன் கையை எடுத்து அவன் கையை வாயிலிருந்து விலக்கினாள்.
“சார் நீங்களா!”
“நானே தான்.” என பதில் அளித்தான் இருவரும் அந்த குறுகிய சந்தில் நின்றிருந்தார்கள்.
“பரவால்லையே போலீஸ் எல்லாம் முடிஞ்சி தான் வருவாங்க. நீங்க சரித்திரத்தையே மாத்திட்டிங்க.” சாதாரணமாக பேசியவளை வினோதமாக பார்த்தான்.
‘மிரு உனக்கு இப்படி எல்லாம் பேச தெரியுமா?’ மனதில் நினைத்தவன் அவள் உரிமையாக தன் மீது சாயிந்து பேசிக்கொண்டிருப்பதை உரிமையோடு ரசித்தான்.
“மிரு நீ நல்லா பேசுற டா.”
அப்போது தான் சுய நினைவுக்கு வந்தவள் வர்மாவிடம் இருந்து விலகி நின்றவள்.
“சாரி சார். அது வந்து, எனக்கு… உங்களை பார்த்ததும் நிம்மதியாகி. ஏதே கிண்டலா பேசிட்டேன். மன்னிச்சிடுங்க.” என்றாள் தயக்கமாய்.
வர்மாவிடம் இருந்து அழுத்தமான பார்வை தான் பதிலாக வந்தது.
‘இந்த ஒதுக்கம் தான் எனக்கு பிடிக்கலை மிரு. உன்னோட இந்த தயக்கத்தை நான் உடைத்தே தீருவேன். அதுக்கு முன்னாடி இங்கிருந்து பத்திரமா போகனும்.’ சுற்றி முற்றி பார்த்தவன் பக்கத்து தெருவில் நுழைந்து மிருவை அழைத்து சென்றவனை நோக்கி இரு உருவம் இரும்பு ராட் கையில் ஏந்தி இருவரையும் போட்டுத்தள்ள இருவருக்கும் தெரியாமல் இரண்டு நிழல் உருவம் மெதுவாக வந்துக்கொண்டு இருந்தது.
Watpad: bindusara
Prathlipi: பிந்து சாரா “Devil Angel”
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top