22.தமிழ் அழகினி✍️
22.தமிழ் அழகினி✍️
காதலில் மூழ்கி நேரம் காலம் அறியாது தென்றல் காற்றுடன் பேசிக் கொண்டே வெளியே வந்தாள் மிரு.
அன்பானவனின் பார்வையும் குரலின் ஒலியும் ஆழ்மனத்தில் ஓடிக்கொண்டே இருந்த அவ்வேலையில் அந்த இரவே அவர்களுக்குள் தூதாக இருந்தது இருவரின் நினைவுகளுக்கும்.
"நான் வந்துருவேன் மிரு. ஏதாச்சும் பக்கத்துல இருக்கிற எடத்துல மறஞ்சுக்கோ." பதட்டமாக இருக்கும் நிலையை மனதினில் மறைத்தவாறே ஓடினான்..
*****
"பாஸ் எங்க முன்னாடி ஓடிகிட்டு இருந்த பொண்ண இப்போ காணோம் பாஸ். என்ன பண்றது பாஸ்?" என அந்த கும்பலில் ஒருவன் தன் பாஸிடம் ஒப்பித்து கொண்டிருக்க, மறுபுறம் 'அவள் எப்படியாச்சு கண்டு புடுச்சு தூக்கிட்டு வரலன்னா உங்களையும் உங்க குடும்பத்துல இருக்கற யாரையும் உயிரோட விடமாட்டேன். ஒழுங்கா சொன்ன வேலையை செஞ்சுட்டு வாங்க டா..." என்றான் அழுத்தமான குரலில்.
அப்பொழுது அந்த இராப்பொழுது இருட்டிலும் பால் நிலவைப்போல முகம் இருப்பதால் என்னவோ அவளது முகவொளி அந்த இடத்திற்கே வெளிச்சமாய் இருந்தது.
மிரு ஒளிந்திருந்த தெரு துர்நாற்றமும் பல குப்பைகளும் தேங்கி இருந்த ஒரு குடோனுக்கு வெளியே பல இரும்பு பொருள்களின் இடையில் அமர்ந்திருந்தாள்.
மிருவிற்கு பலத்த குழப்பமாக இருக்க, மூளையுடன் சண்டை போட்டுக்கொண்டு இருந்தாள்.
'இவங்க எல்லாரும் யாரா இருக்கும்?🤔என்ன எதுக்கு துரத்தீட்டு வராங்க??🤔' என மூளை பிதிங்கும் அளவிற்கு யோனை செய்தவளின் மனதில் அலைகடல் போல திரண்ட தன் கள்வனின் ஞாபகங்கள் வர, கடற்கரையில் சுண்டல் விற்கும் பையனை காப்பாற்றிய போது மகி அவளைப் பார்த்ததும் அவளிடம் கூறியதும் நினைவுக்கு வந்தது.
'நம்பல பாக்கறவங்க எல்லோரும் லவ்வர்ஸ் தான் நெனைப்பாங்க.' என்பதை நினைத்து பார்த்தவாறே சிறு புன் முறுவலுடன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவன் அந்த வசனத்திற்கு முன்பு சொல்லியது நினைவில் தோன்றியது.
தாக்கும் போது அவன் அருகில் இருந்ததையும் அப்போது அந்த பையனை காப்பாற்றும் போது அருகில் இருந்ததையும் அந்த கடத்தல் கும்பல் மக்களோட மக்களா இருந்து நம்பல நோட் பண்ணீட்டே இருப்பாங்க. என்ற அவன் கூறிய சொற்கள் அனைத்தும் மனதின் வழியாக நுழைந்து காதினுள் பாய்ந்தது.
அப்போது ஒருவனின் காலனி சத்தம் கேட்க நினைவுக்கு வந்தவளாய் உணர்ந்து. பின் பயந்தவளாய் படபடப்புடன் வியர்த்த தேகத்தை மூச்சுக்காற்றால் விசிறிக் கொண்டு இருந்தாள்.
என்ன ஆனாலும் இவனுங்க கிட்டமட்டும் மாட்ட கூடாது மகி வரவரைக்கும். மகி வரும் வரைக்கும் இவர்களை இங்கு இருந்து போகவும் விடக்கூடாது என மனதினில் திடமான உறுதி மொழியோடு அந்த இடத்தைவிட்டு வெளியே வந்தாள்.
பிரதிலிபி ஐ.டி: 😍தமிழ் அழகினி✍️
பி ஐ.டி: 😍தமிழ் அழகினி✍️
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top