20.சஹானா "ஹரீஷ்"
வழக்கமாக கடற்கரையில் மட்டும் ரசிக்கும் நிலவை இன்று தன் அறைக்குள் இருந்து ரசித்துக் கொண்டிருக்கிறாள் மிருணாளினி.
எவ்வளவு தடுத்தாலும் தன்னுடைய நிலையை அறிந்து விலக நினைத்தாலும் அதையெல்லாம் தாண்டி அவனுடைய மதிமுகம் கண்முன் நிழலாடுகிறது.
காதல் எனும் போதை கண்ணுள் இருக்க என்ன செய்துவிட முடியும் இந்த பேதை பெண்ணால்.?
அவனுடைய மிரு என்ற அழைப்பும், உரிமையான அந்த பார்வையையும் மறுபடியும் காண ஏங்கித் தவிக்கிறது இவளின் மனது.
அது எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து சின்னாவை மீட்டிருக்கிறார். இன்றும் கடற்கரையில் சுண்டல் விற்ற சிறுவனை கடத்த முயன்ற போது அவனின் ருத்ர தாண்டவ ஆட்டத்தை கண்முன்னே கண்டவளாயிற்றே..
யார் இவர்கள் எதற்காக சிறுவர்களை கடத்திக் கொண்டு செல்கிறார்கள் அதனால் அவர்களுக்கு என்ன லாபம்? இவளும் தினசரிகளில் படித்து இருக்கிறாள் தான்... குழந்தை கடத்தல் ஆட்கடத்தல் என. ஆனால், சில நாட்களாக அதை கண்முன் காணவும் நெஞ்சுக்குள் பய பந்து உருளுவதை தடுக்க முடியவில்லை அவளால்.
இதோ இவள் தனது அறைக்கு வந்து நான்கு மணி நேரம் கடந்திருந்தது. அவனிடமிருந்து எந்த ஒரு குறுஞ்செய்தியும் வரவில்லை, அவனுக்கு அழைத்து பார்க்கலாம் என எண்ணினாள். அப்போதுதான் நினைவு வந்தது தன்னுடைய அலைபேசியில் அவருடைய எண் இல்லை என்பது.
அப்படியிருக்க தான் சொன்னதும் அவர் சரி என ஏன் சொன்னார்? என்ன ஒரு முட்டாள் தனம் செய்து விட்டோம் என காலம் கடந்து யோசித்தாள் அந்த பாவை.
அதே நேரம் இரவு 1 மணியளவில் இவளைப் பற்றி தான் அந்த கள்வனும் யோசித்துக் கொண்டிருக்கிறான்.. அவளுடைய எண்னை கண்டுபிடிப்பது இவனுக்கு என்ன கஷ்டமா? எப்பொழுதோ அதைப் பெற்று விட்டான். ஆனால், ஒருமுறை கூட அவளிடம் பேசியதோ, குறுஞ்செய்தியோ அனுப்பியதோ இல்லை.. ஏதோ ஒர் தயக்கம், பெண்களிடம் அதிகம் பேசி பழகாதவனாயிற்றே..
ஆனால் இன்று அப்படி அல்ல, அவளே பணி முடிந்ததும் குறுஞ்செய்தி அனுப்ப சொல்லி இருக்கிறாள். துணிந்து அனுப்பி விடலாம் என தட்டச்சு செய்கிறான்... அழிக்கிறான்... கடந்த அரைமணி நேரம் இதை தான் அவன் செய்துக் கொண்டிருக்கிறான்.
"இங்க பாரு, ஒன்னு மெசேஜ் அனுப்பு இல்ல அடுத்த வேலைய பாரு.. சும்மா எழுதி எழுதி அழிச்சிட்டு இருக்க?" செழியன் கேட்டே விட்டான் பொறுமை இழந்து.
"அது இல்லடா. அவ என்னை தப்பா நினைச்சிட்டா?"
"ஏய் அந்த டாக்டர் தானே உன்னை மெசேஜ் பண்ண சொன்னது?"
"ஆமா"
"அப்பறம் என்ன?"
" ஈவ்னிங் அவகிட்ட பேச தான் போனேன். பட் ஏதேதோ நடந்து போச்சு. இப்ப பேசணும் போல இருக்கு."
"டேய் டைம் என்ன ஆச்சு பார்த்தியா?"
"அதான் என்ன செய்யறதுன்னு தெரியல."
"பரவாயில்லை கால் பண்ணு. அட்டெண்ட் பண்ணா பேசு, இல்லன்னா மார்னிங் தெரியாம பண்ணிட்டேன்னு பேச்ச வளர்த்திடு."
"பார்ரா இது நல்ல ஐடியாவா இருக்கே..."
"நான் கிருத்திகா கிட்ட இப்படி தான் பேச ஆரம்பிச்சேன்." என்றான் புன்சிரிப்புடன்.
"நல்லவன்டா." என்றவன் அதனைச் செயல்படுத்த தொடங்கினான்.
அழைப்பு துண்டிக்கப்படும் நேரத்தில் அழைப்பு ஏற்கப்பட்டது மறுபுறம்.
இவன் ஹலோ என்றிட அவளோ, "எம்வி சார், என்னை யாரோ துரத்துறாங்க. தூக்கம் வரலன்னு வெளியே வந்தேன் அப்ப நாலு பேர் எங்கிட்ட..." இவள் மூச்சு வாங்க பேச இவனின் ரத்தம் கொதித்தது.
"மிரு.. மிரு லைன்ல இருக்கியா?"
"ஹான் இருக்கேன்."
"இப்ப நீ எங்க இருக்க?" என்று கேட்டான் பயமிருந்தும் காட்டிக்கொள்ளாமல்.
"தெரியல சார்.. ரொம்ப இருட்டா இருக்கு." என்றாள் பதட்டமாக.
"ஓகே பைன் நீ மொபைல்ல ஆப் பண்ணாத. நான் நீ இருக்க லோகேஷன பார்த்து உடனே வரேன்." என்றவன் செழியனிடம் கூறி விட்டு தனது வாகனத்தை எடுத்து கொண்டு விரைந்தான் மிருணாளினி இருக்கும் இடம் நோக்கி.
மிருணாளினியை ஏன் துரத்துகிறார்கள்? மகி என்ன செய்வான்?
Pratilipi id :சஹானா "ஹரீஷ்"
Watpad id: Sahana Harish
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top