19. பிரவீணா தங்கராஜ்

19. பிரவீணா தங்கராஜ்

"ஒரு பைன் மட்டும் போடுங்க சார்."  என்ற அவளின் சொற்கள் அவனின் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்க, இதழ்கள் தானாய் விரிந்து, கடற்கரையில் இருந்து அவளை தன்னுடன் வாகனத்தில் அழைத்து வந்த நொடிகள் மனதினில் நிழற்படமாய் ஓடத்தொடங்கியது.

தன் மனதை வென்றவள் தன் நலனில் அக்கறை செலுத்த கர்வமாய் இருந்தான் அக்காவலன்.

    "மீரு.. இந்த சாரை கட் பண்ணிடேன். எம் வி-னு கூப்பிடலாமே." என்றதும், "இல்லை சார். என்னை மாதிரி ஆசிரமத்துல வளர்ந்தவங்களையும் ஒரு டாக்டரா அடையாளப்படுத்தி கொடுத்தவரோட மகன் நீங்க. உங்கப்பா தான் நான் வணங்கும் முதல் கடவுள். அப்படியிருக்க.. நான் உங்க பெயர் சொல்ல கூடாது. என்னோட தரப்புல எப்பவும் உங்களுக்கான மரியாதை இருக்கும். அதை தாண்டி சாரை தவிர்க்கனும்னா.. அது... அது முடியாதே சார்." என்று அவனின் உயர்வுக்கு தான் தாழ்நிலை என்பதாக அவளே முடிவெடுத்து விட்டாள்.

     மகேந்திர வர்மாவோ அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் சென்று, ரோந்துக்கு வந்த வண்டியை செலுத்தினான்.

      அவளோ 'சரியா தானே பேசினோம். அவர் பேசினால் காலில் சிறகு முளைக்கிறது. நான் ஆசைப்படலாம். ஆனால் பேராசை வேண்டாம். அவர் சாதாரணமாய் பார்த்து மனதில் பேராசை உருவாகி இப்படி ஒருத்தனை மறக்க முடியாமல் தவிக்கவா? இப்பொழுதே இவனுக்கு என்னாகுமோ ஏதாகுமோயென்று நெஞ்சு பதபதக்கிறது.' என்று யோசித்தபடி மெதுவாய் நடந்து வந்தவள் எதிரே மகேந்திர வர்மன் நின்றான்.

       "என்னோட நீயும் கிளம்பு. தனியா இருப்பது சரியில்லை. இனி இப்படி இங்க வராதே. இரண்டு முறை இந்த இடத்தில என்னோட நீ இருந்திருக்க. குழந்தை கடத்தல் செய்யறவன். என்னை மட்டும் நோட்டமிட மாட்டான். என்னை சுற்றியும் நெருங்கினவங்களை டார்கெட் பண்ணுவான்.

   தெரிந்தோ தெரியாமலோ முதல்ல என்னை தாக்கினப்பவும் நீ என்ன காப்பாற்றி மருத்துவமனையில சேர்த்து இருங்க, இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்ன கடத்தின குழந்தையோட மீட்டெடுத்தினப்பவும் கூட இருந்திருக்க, இங்க குழந்தையை கடத்தறவன் ஒருத்தனா வந்து தூக்கியிருக்க மாட்டான். அதனால எங்கயாவது மக்களோட மக்களா நின்று உன்னை என்னை நோட் பண்ணியிருப்பாங்க.

   நீ நான் வேற லவ்வர்ஸ் மாதிரி நின்று பேசிட்டு இருக்கோமா... எதுக்கு வம்பு. நான் இன்னிக்கு டிராப் பண்ணிடறேன்." என்று கூறவும் அவன் சொல்வதெல்லாம் சரி யாரெனும் பார்த்து கொண்டு இருப்பார்களென யோசித்தவள் கடைசியாய் கூறிய லவ்வர்ஸ் மாதிரி என்ற சொல்லில் முட்டைக்கண்ணை உருட்டினாள்.

     'எப்பா... என்ன ரியாக்ஷன் டா. வர்மா.. நினைவுப் பெட்டகத்துல சேர்த்து வை' என்று மனதிற்கு ஒரு கட்டளையை பிறப்பித்து அவளிடம் ஏற கூறினான். மிருளாயினியோ சற்று தயங்கினாலும் தன்னுடைய நலனுக்காக தானே கூறுகிறான் என்று எண்ணி பொம்மை போல ஏறியமரவும் வண்டி புறப்பட்டது.

வண்டியில் இருந்து இறங்கியதும் வீட்டிற்குள் போகும் முன் தான், அவள் கூறியது.

அதே வேளை, கடற்கரையில்,

   மகேந்திரன் எண்ணியது போலவே ஒருவன், "சார். அந்த மகேந்திரன் நம்மாளை பிடிச்சிட்டு போயிட்டான். சரி அவனோட இருந்த அந்த பொண்ணை பிடிச்சி தூக்கிட்டு வந்து உங்க முன்ன நிறுத்தலாம்னு கிட்டவரை போயிட்டேன். திடீரென எங்கிருந்தோ மறுபடியும் மகேந்திரன் வந்து அவளை அவன் வண்டில அழைச்சிட்டு போயிட்டான்." என்று யாருக்கோ தகவல் அளித்தான்.

    "...." என்று அந்தப்பக்கம் ஏதோ கேட்டதும், "சார் அதே பொண்ணு. பின் தொடர்ந்து அவளோட ஆதி அந்தம் பார்த்து மகேந்திரனுக்கு என்ன சம்மந்தம்னு பார்க்கவா. இல்லை இரண்டு நாளில் அந்த தத்து கொடுக்கற குழந்தையோட அந்த பொண்ணையும் தூக்கலாமா? முடிந்தா அதுக்கு முன்னாடியே தூக்கலாம் சார். அது அநாதை பொண்ணு." என்று இகழ்ந்து வைத்தான். அவனுக்கு தெரியவில்லை அது மகேந்திரன் மனதை(M) வென்றவள்(V) என்று அறியாத முட்டாள். தன் போனில் M.V என்று அவள் பெயரை சேமித்தவன் விட்டு வேடிக்கை பார்ப்பானா?

Pratilipi id: பிரவீணா தங்கராஜ்

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top