18. தீபா செண்பகம்
18. தீபா செண்பகம்.
மாலை நேரத்தில், கடற்கரை ரோந்து பணிக்கு வரும் காவலன் காக்கிச் சட்டையை விடுத்து, இலகுவான அரைக்கை சட்டையில் தான் வருவான் எப்பொழுதும். அதிலும் தன் பார்வை யாரைப் பார்க்கிறது எனத் தெரியாமல் இருப்பதற்காக கறுப்புக் கண்ணாடியையும் அணிந்து வருபவன், தன் மனதிற்க்கினியவள் தரிசனம் கிட்டியதில் தான் தன்னை மறந்து, அதனைக் கழட்டியிருந்தான்.
காதலென்று வந்துவிட்டால், காவலனும் கள்வன் ஆவான் போலும், அத்தனை பெரிய கூட்டத்தில், தன்னவளைத் தேடி அந்தப்பக்கமே, ரோந்து வரும் பாவனையில் உலா வர, தன் நினைவின் நாயகனே நேரில் வந்ததில் மகிழ்ந்த வஞ்சியவள், முகம் மலர்ந்து மாலையில் தாமரையாய் மலர்ந்தாள்.
அவனும் அதே ஸ்நேகப் புன்னகையோடு அவளை நோக்கி வந்தவன், நொடியில் பார்வை மாற்றி, கண்கள் சிவக்க மற்றவர் கவனம் ஈர்க்காமல், அவளைக்கடந்துச் செல்ல, முதலில் துணுக்குற்றவள், பின் அவன் கடமை உணர்ந்ததாலோ என்னவோ ஏதோ அசம்பாவிதம் என யூகித்து, அவனை பின் தொடர்ந்தாள்.
அவன் நடந்துதான் சென்றானா இல்லை பறந்து சென்றானா என வியக்கும் வண்ணம், அந்த ஜனத்திரளைத் தான்டி அவன் அரைக் காதா தூரம் சென்றிருக்க, ஏதோ ஒரு சக்தியால் உந்தப்பட்டவளாய் அவளும் அவன் பின்னால் ஓடினாள்.
கடற்கரையில் சுண்டல் விற்கும், சிறுவனைப் படகு மறைவில் ஒருவன் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு செல்வதைப் பார்த்துத் தான் மகேந்திரன் கண்கள் சிவந்தது. என்ன தான் பார்மல் உடையிலிருந்தாலும், கடத்தியவனுக்கு, மகேந்திரனின் முடி வெட்டையும், உடற் கட்டையும் பார்த்தே தூரத்திலேயே வருபவன், காவலன் எனது தெரிந்து விட்டது. எனவே அவனும் விரைந்து தூக்கிச் சென்றான்.
கடற்கரை மணலில் கால் புதைய அந்த கடத்தல்காரனால் அவ்வளவு வேகமாகச் செல்ல முடியவில்லை, ஆனால் பயிர்ச்சி பெற்ற காவலன், நிமிட நேரத்தில் அவனை மடக்கிப் பிடிக்க, அந்த சிறுவனைக் கீழே போட்டு விட்டு ஓடப் பார்த்தான். அதற்கும் விடாமல் அவனை மடக்கிப் பிடித்தவன், பின்னால் மூச்சிரைக்க ஓடி வந்தவளை, “மிரு! கம் கிவிக்.“ என உரிமையாக அழைக்க, அடுத்த நிமிடம் அவனை அடைந்தவள், நாயகனுக்கு ஏற்ற நாயகியாய் மயங்கிக் கிடந்த சிறுவனை தன மடியில் கிடத்திக் கொண்டு பரிசோதித்தாள்.
“எம்வி சார். சின்னாக்கு, கொடுத்த அதே மயக்க மருந்து தான் இதுவும். அதே க்ரூப் போல இருக்கு.” என சட்டென தன் அனுமானத்தை அவள் சொல்ல, அவன் பார்வையில் மெச்சுதல் தெரிந்து.
கடத்தல்கானை, அதற்குள் தக்க விதத்தில் விசாரித்தவன், தனக்குத் தேவையான தகவல்களை பெற்றிருந்தான். மகேந்திரனின் போலீஸ் அடிக்கு பயந்தே உண்மையை கக்கியவன், குருவின் குண்டுக்கு பலியாகாமல் தப்பிக்க, இந்த சிறுவனை கடத்த முயன்றான்.
இது போன்ற சிறுவர்களை கடத்தினால் தேடவும் ஆளிருக்காது என்பது அவன் கணக்கு. ஆனால், அன்று சுலபமாக காவலன் பின் மண்டையிலடித்து தப்பித்தவன், இன்று வசமாக மாட்டிக் கொண்டான். அதுவும் பதட்டத்தில் அத்தனையையும் அவனறியாமல் உளறி விட, அவர்கள் இருப்பிடத்தையும் அடுத்த அடியில் கறந்து அவனது தேவை தற்போதைக்கு போதுமென மயக்க மருந்து இல்லாமலேயே, அவனை மயக்கமுறச் செய்தான்.
இப்போதெல்லாம், முதலுதவி கிட்டை தன் கைப்பையில் வைத்திருக்கும் மிரு, அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளித்து விட்டு, மயக்கம் தீர இரண்டு மணி நேரமாவது ஆகும் என தனது மருத்துவ தகவலைச் சொல்வதற்கு, அவனை ஏறிட்ட போது தான், தன் ஐ பி எஸ் பயிற்சியை அவனிடம் பிரயோகித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் காவலன்.
கண்களை விரித்து அவள் பார்த்த பார்வையில், ‘சொந்த செலவுல சூனியம் வச்சு கிட்டேனோ? இனி டாக்டரம்மா நம்ம பக்கமே திரும்பமாட்டாளோ?' என எண்ணியவன், ‘இருக்கட்டும். இதுவும் நல்லதுக்குத் தான். போலிஸ்க்காரனுக்கு பொண்டாட்டியாகனுமுன்னா இதெல்லாம் தெரிஞ்சுக்கனும்.‘ என மனதை தேற்றிக் கொண்டவன்
ஓர் மென்னகையுடன், “அவன் கிரிமினல். என் பேசன்ட் இல்லை.“ என்றான் அவளை சமாதானப்படுத்தும் விதமாக.
தன் பார்வைக்குத் தான் அந்த பதிலளித்த தருகிறான் என உணர்ந்தவள், “புரியுது. உயிரோட இருந்தா சரி தான்.”என மட்டும் பதில் தந்தாள்.
மகேந்திரன் அழைப்பின் பேரில் வந்த காவலர்கள், கடத்தல்காரனை கொண்டு சென்றனர்.
இன்று இரவு குருவின் இடத்தை சுற்றி வளைக்க அதற்குள் செழியனுடன் சேர்ந்து திட்டம் வகுத்திருந்த மகேந்திரன், போனில் பேசிய பின் மிருணாளினியிடம் வந்தான்.
சுண்டல் விற்ற சிறுவன் கண் விழிக்கவும், அவனை உரியவரிடம் ஒப்படைத்து விட்டு, அவனைப் போன்ற சிறுவர்களையும் எச்சரிக்கை செய்தனர்.
மிருணாளினியை அவள் தங்கியிருக்குமிடத்தில் இறக்கி விட்டு அவன் கிளம்ப எத்தனிக்க, தயங்கி தயங்கி, “எம்வி சார். சொல்றேன்னு தப்பா நினைச்சுறாதீங்க.“ என்ற பீடிகையோடு அவள் ஆரம்பிக்க, அவளை கனிந்த முகத்தோடு பார்த்திருந்தவன், 'சொல்லு' என்பது போல் தலையை அசைத்தான்.
“உங்க மிஷன் முடியவும், எத்தனை மணினாலும், பைன் ன்னு ஒரு மெஸேஜ் மட்டும் போடுங்க ப்ளீஸ்.” என அவள் கேட்ட விதத்தில் தன்னை மொத்தமாய் அவளிடம் தொலைத்திருந்தான் காவலன்.
Pratilipi id: தீபா செண்பகம்
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top