17.சீதாலக்ஷ்மி
கதிரவன் மறைந்து நிலாமகள் தன் குளிர்ந்த நேசக்கரங்களைக் கொண்டு பூமியத்தழுவ ஆயத்தமாக இருந்தாள். அந்த அந்திமாலைப் போழுதில் பொன் மஞ்சள் ஒளியின் கீற்றுகள் எங்கும் பரவிட தகதகவென மின்னிய கடற்கரை மணலில் தேவதையைப் போல் அமர்ந்து இருந்தாள் மிருணாளினி.
அவள் என்னதான் மகியைப் பற்றி நினைக்கக் கூடாது என எண்ணினாலும் அவள் மனம் என்னாவோ அவனையே தான் நினைத்துக் கொண்டிருந்தது. அவள் எத்தனை முறை அவள் மனதை அடக்க நினைத்தாலும் அவளால் அது மட்டும் முடியவில்லை.
தன் துணையாய் தன்னை காலம் முழுதிற்கும் தாங்கி தாயாய் தன்னை காக்க வந்தவன் அவனே என மனம் சொல்லியது. தான் நினைப்பது சரியா தவறா என சிந்திக்கும் நிலையையும் அவள் கடந்து இருந்தாள். என்னதான் அவன் எட்டாக் கனி என அவள் மூளை எச்சரிக்கை செய்தாலும் மனம் மட்டும் கேட்பதாயில்லையே.
அவளின் நிலை பற்றி தெரிந்து இருந்தாலும் அவள் மனம் என்னாவோ அவன் பின் தான் சென்றது. அந்த அளவிற்கு அவள் மனம் முழுக்க அவனே வியாபித்து இருந்தான். இப்படியாய் அவனை நினைத்து கடற்கரையில் அமர்ந்து மறையும் ஆதவனிடத்திலும் தோன்றும் முழுமதியிலும் அவன் முகமே தெரிந்திருக்க நாணத்துடன் தன் நினைவை எண்ணி அவளே வெட்கப்பட்டாள்.
‘என்ன இது நான் ஏன் இப்படி மாறிப் போனேன்’ என அவள் நினைத்தாலும் அதுவும் அவளுக்கு பிடித்தே இருந்தது.
*******
அங்கு முருகனைப் பார்த்து விட்டு தன் அறைக்கு வந்த மகி அதே யோசனையில் இருந்தான். ஒரு நாளுக்கு சுமார் 178 பசங்க காணாம போறாங்க. அதுல பாதி பேரை கூட மீட்க முடிவது இல்லை. இதை எப்படியும் தடுத்தே தீரணும் என்ற முடிவுக்கு அவன் வந்து பல நாட்கள் ஆனது. நம்ம டிபார்ட்மென்ட்லயே இதுக்கு துணை போறவங்கள் நெனச்சா தான் அவன் மனம் கொதித்தது.
இதை செய்யுற ஒருத்தரையும் சும்மா விடமட்டேன் என மனதுள் கருவிக் கொண்டவன் அவன் நண்பன் செழியனை உடனே போனில் தொடர்பு கொண்டான்.
“செழியா உடனே நாம மீட் பண்ணணும். முக்கியமான விஷயம் பேசணும். நான் சொல்ற இடத்துக்கு வந்துரு.” என்று சொல்லி கடற்கரைக்கு வரசொன்னான். அதைகேட்ட செழியன், ”என்னடா அடிக்கடி பீச் பக்கம் போற. உங்காளு பாக்கத்தான?” என்றான்.
“டேய் நீ வேற, அதெல்லாம் ஒன்ணுமில்ல. எப்படியும் ரவுண்ட்ஸ் போகணும். அங்க வெச்சு பேசுறது நல்லதுனு தோணுச்சு அதான்.” என்று அவனுக்குள் அவன் சமாதானம் செய்து கொண்டாலும் இனியவளை பார்ப்பதற்காகவும் தான் அவனை அங்கு வர சொன்னது.
தன் நண்பன் தன்னை இனம் கண்டுகொண்டது அவனுக்கு வசதியாகிப் போயிற்று. அவள் நினைவில் அவன் முகத்தில் அத்தனை டென்ஷனிலும் அவன் உதட்டில் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. அவளை பற்றிய சிந்தனையில் அவன் மனம் சென்றது.
“டேய், போதும்டா நீ வழியறது எனக்கு இங்க தெரியுது. பொண்ணுங்கள பாத்தாலே காத தூரம் ஓடுற நீ, ‘மீரு மீருனு’ உருகறது எனக்கு தெரியாதாடா, எங்கிட்டயேவா? இரு உன்ன நேர்ல வந்து வெச்சிக்கறேன்.” என்றவன் போனை வைத்துவிட்டு அவன் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தான்.
இருவரும் வந்து சேர்ந்ததும் அவன் கண்கள் மீருவைத்தான் தேடியது. இருந்தும் அவளைப் பார்த்தால் அவன் மனம் வேறு எதையும் நினைப்பதில்லை என உணர்ந்தவன் தன் வேலையில் கவனம் செலுத்தினான்.
“செழியா, வருஷத்துக்கு 60000 குழந்தைகள் கடத்தப்படுறாங்க. அதுல பத்து சதவிகிதம் வெளிநாட்டுக்கு அனுப்பபடுறாங்க. மீதி இருக்கற தொண்ணூறு சதவிகிதத்துல 80 சதவிகதம் பேர பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தறாங்க. இதுல ஆண் பெண் பேதமில்லை. இத நினச்சாலே மனசு நடுங்குதுடா. அந்த பிஞ்சு குழந்தைகளுக்கு என்ன தெரியும் சொல்லு? இத எப்படியும் தடுத்து நிறுத்தியே ஆகணும்டா.” என்றவனின் வார்த்தையில் இருந்த உண்மை அவர்களை சுடத்தான் செய்தது.
“என்ன செய்யணும்னு சொல்லுடா செய்யலாம்.” என்ற தன் நண்பனுடன் சேர்ந்து கடகடவென ஒரு திட்டம் தீட்டினான்.
“நான் சொல்றத கேளு. எப்போதும் போல் முருகன் அவங்க கூட பழகவிட்டு கொஞ்சம் கொஞ்சமா அவங்கள பத்தி தெரிஞ்சிக்கறது நல்லது. முள்ள முள்ளால தான் எடுக்கணும். அதே சமயத்துல மிகுந்த எச்சரிக்கையோடவும் இருக்கணும்.” என்றான் மகி.
"நீ சொல்றது சரிதான். ஆனா, இதுல முருகன் எந்த அளவுக்கு ஒத்துழைப்பான்னு தெரியல. இது பத்தி நான் ஸ்டடி பண்ணிட்டு நாளைக்கு உனக்கு ரிப்போர்ட் தரேன். அப்புறம் முடிவு பண்ணலாம்.” என்ற செழியன் மகியின் கண்கள் சுழல்வதை கண்டான்.
"என்னாடா உன் ஆளதான தேடுற?” என்றான்.
அப்போது சில்லென்ற காற்று அவன் மேனி உரசி செல்ல அதில் அவள் வாசம் கலந்து வர, அது சொல்லாமல் சொல்லியது அவன் மனதை கவர்ந்தவள் அங்கு தான் இருக்கிறாள் என்று.
அவன் பதில் கூறாமல் காற்றை சுவாசிப்பதை கண்டவன், “டேய் என்னடா ஆச்சு உனக்கு? இங்க ஒருத்தன் கத்திட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு இயற்கையை ரசிச்சிகிட்டு இருக்கியா? நீ சரிப்படமாட்ட. நான் கிளம்பறேன் எனக்கு நிறைய வேலை இருக்கு. நீ இருந்து உன் வேலைய முடிச்சிட்டு வாடா.” என்றவன் விடைபெற்று கிளம்பினான்.
பின் மகி தன் கடலோர ரோந்து பணியை செய்து கொண்டே வந்தவன் அவனையும் அறியாமல் அவளிடம் தான் வந்து நின்றான்.
எப்படியாவது இன்று அவனை கண்டு பேசிவிட துடித்தவளுக்கு அந்த வாய்ப்பு தானாய் கிட்டியது அவளுக்கு ஆச்சரியம் தான். அவனே அவளைத்தேடி வந்ததும் அவள் செய்வத்றியாது திகைத்தபடி பார்த்தாள். ஆனால் அவனின் கண்களோ அவளையும் தான்டி வேறு எங்கோ நிலையிட்டு இருந்தது. அவன் கண்கள் சிவக்க முகத்தில் தீவிரத்தை கண்டவள் ஒன்றும் புரியாது திகைத்து நின்றாள்.
பிரதிலிபி ஐடி: சீதாலக்ஷ்மி.
வாட்பேட் ஐடி: சீதாலக்ஷ்மி.
குழந்தை தலைப்பில் ஒரு கவிதை
இறைவனின் படைப்பில் குழந்தைகள் அதிசயம்
அந்த அதிசயங்களுக்கு அவை குடிகொண்ட கருவறை அதிசயம்
வெளிவந்து அன்னையின் மடியில் தவழ்ந்தது அதிசயம்
தந்தையிடம் கொஞ்சுவது அதிசயம்
உலகை உயிர் கொண்டு விழி விரித்து பார்ப்பது அதிசயம்
ஆனால் பார்ப்பதில் தான் பாழாகிப் போகின்றன பல பிஞ்சுகளின் வாழ்க்கை
வாழா வாழ்க்கையை வாழ விடு இறைவா என்று போராடும் மழலைகள் ஏராளம்
ஆனால் மனம் இறங்கா மனிதன் தான் அட்டூழியங்களின் அஸ்திவாரம்
அவனும் ஓர் குழந்தையாய் தன் அன்னை மடி வளர்ந்தவன் என்று மறந்ததேனோ
தந்தை மடி தவழ்ந்தவன் என்று சிந்திக்க மறப்பதேனோ
உலகம் அறியா இளம் பிஞ்சுகளை இமைக்கும் பொழுதினின் ஊரை விட்டு ஊர் கடத்தும் கொடுமை
தெருவோரம் துயிலும் தளிர்களின் நிலைமை சொல்லில் சொன்னால் அடங்குமோ
கொடூரத்தின் உச்சகட்டம் கடத்திய குழந்தைகள் கசையடிகள் கொடுக்கப்பட்டு உடல் முழுதும் அழியா தழும்புகளைப் பெறுகிறார்கள்
அவை வெறும் தழும்புகள் இல்லை அவை தாங்கள் தாங்கிய வலிகளின் அடையாளம்
காலை பள்ளி சென்ற செல்வ மகன் அந்திமாலையிலே தேடி அலைய வைத்தான்
அர்த்த இராவிலே எங்கள் அமைதி அழிந்து போனதே
அழகியாய் சிங்கரித்த என் அன்பு மகள் அகல்விளக்காய் காலை பார்த்தேன்
இருளிலே ஒளியின்றி எங்களை தவிக்கவிட்டு கயவர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்டாள்
கண்ணுக்குள் பொத்தி வளர்த்த காந்தலள் மலரே உன்னை கடத்திச் சென்ற இடத்தில் காட்டுப்பன்றி கூட்டம் உளதோ
காட்டுப்பன்றி கூட்டங்கள் நடுவிலே கானகத்து நரியாய் இருக்க வேண்டும்
சிங்கமாய் இருந்து வீரத்தை வெளிப்படுத்த வழியில்லையேல்
தந்திரமாய் புத்தி வெல்லும் நரியாய் நீ செயல்படு
விட்டு விடுங்கள் எங்கள் இளம் தளிர்களை
அவை முளை வந்து காய்த்து கனி விடுத்து குலுங்கும் அழகை நாங்கள் கண் குளிர கண்டு மகிழ
பத்துத் திங்கள் பாரம் சுமந்த தாயின் கருவறையில் நாமும் இருந்தோம் என்று நினைத்துப் பாருங்கள்
உலகின் வாழும் அத்துனை குழந்தைகளும் இறைவனின் அதிசயம்
அந்த அதிசயத்தை அசந்து பார்க்க நினையுங்கள்
அழித்துப் பார்க்க அல்ல...!!!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top