16. ஆர்த்தி பார்த்திபன்

16 ஆர்த்தி பார்த்திபன்

குற்றங்கள் செய்பவர்களை கூண்டோடு அழிக்க வேண்டிய காவல்துறையில் பணியாற்றி கொண்டிருக்கும் அவனே, இன்று ஒரு குற்றவாளியாக அவன் பணியாற்றிய அதே காவல் நிலைய செல்லில் அடைக்கப்பட்டிருப்பதை நினைத்து மிகுந்த வேதனையாகவும் அதே சமயம் பெரிய அவமானமாகவும் இருந்தது முருகனுக்கு.

என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக அங்கு அமர்ந்திருந்தான்.

"என்ன முருகா, இப்படி பண்ணிட்ட. மகேந்திரன் சார் பற்றி தெரிஞ்சும் நீ இப்படி எல்லாம் செய்யலாமா? அதை விடு, ஒரு போலீஸ்காரன் நீ, இப்படி ஒரு தவற நீ எப்படி செஞ்ச?" என்று ஆதங்கமாக அவனை பார்த்து கேட்டார் அங்கு பல வருடங்களாக வேலை செய்து கொண்டிருந்த காவலர் மணி.

முருகன் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தான். அவரும் வேறெதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினார்.

"சார்! நம்ம ஊர்ல போதை பொருள் கடத்துறது ரொம்ப நாளாவே நடந்துட்டு இருக்கு, அது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். ஆனா அதை விட சீரியஸான இன்னொரு க்ரைமும் இங்க நடந்துட்டு இருக்கு.

இன்னும் அந்த க்ரைம் எதுவும் ஆதார பூர்வமா நிரூபிக்க படல, பட் நிச்சயம் என்னால அதை நிரூபிக்க முடியும். அந்த போதை பொருள் கடத்துற கும்பல் தான் இந்த க்ரைமையும் பண்ணிட்டு இருக்காங்கனு ஆரம்பத்தில் இருந்தே எனக்கு ஒரு சந்தேகம் இருந்துட்டு தான் இருக்கு.

அதற்காக தான் ரொம்ப க்ளோஸா நிறைய பேருடைய நடவடிக்கைகளை கவனிக்க வேண்டி இருந்துச்சு. அப்படி நான் இன்வெஸ்டிகேட் பண்ணும் போது தான், நம்ம டிபார்ட்மெண்ட்ல யாராவது அவுங்களுக்கு உதவி செய்யுறாங்களோனு ஒரு டவுட்.

அந்த சந்தேகத்தால நான் இன்வெஸ்டிகேட் பண்ணும் போது தான் முருகன் நடவடிக்கைகள் தவறா இருப்பது புரிஞ்சுது. இவரே நிறைய முறை அந்த கும்பலை சேர்ந்தவர்களுக்கு ஃபேவர் பண்ணிருக்க மாதிரி தோணுச்சு, அதான் இவர இன்னும் க்ளோஸா வாச் பண்ணுனேன்.

அப்போ தான் இவருக்கும் அந்த கும்பலுக்கும் சம்பந்தம் இருப்பது ஊர்ஜிதம் ஆச்சு. நிச்சயம் இந்த கும்பலை பற்றி முருகனுக்கு எதாவது ஒரு தகவல் தெரிஞ்சிருக்கும்னு எனக்கு தோணுது சார்.

அவருடைய கால் ஹிஸ்டரி அன்ட் அக்கவுண்ட் ட்ரான்ஸாக்ஸன்ஸ் எல்லாம் ட்ரேஸ் பண்ணுனதுல அவர் இந்த இல்லீகல் கேங் இவருக்கு ரொம்ப நாளாவே பழக்கம்னு தெரியுது.

இவரை அரெஸ்ட் பண்ண பர்மிஷன் கொடுத்த மாதிரி, இதை கொஞ்சம் காண்ஃபிடென்ஸியலா வச்சுக்கவும் பர்மிஷன் கொடுங்க.

இவரை நாம அரெஸ்ட் பண்ணுனது தெரிஞ்சா, நிச்சயம் அந்த கேங் அலர்ட் ஆயிடுவாங்க, அதோட இவருக்கு த்ரெட்ஸ் வரவும் வாய்ப்பு இருக்கு" என்று மகி கூறிய அனைத்தையும் பொறுமையாக கேட்டு கொண்டிருந்தார் கமிஷ்னர்.

"ஓகே மிஸ்டர் மகேந்திரன், நீங்க உங்க ட்யூட்டிய செய்ங்க, இதை காண்ஃபிடென்ஷியலா நான் பார்த்துக்கிறேன்.

நம்ம டிபார்ட்மெண்ட்ல இருக்க வேற‌ யாருக்கும் இதை பற்றி தெரியாம நான் பாத்துக்கிறேன். அவர் ஃபேமிலிக்கும் கூட இது தெரிய வராது" என்று அவர் அவனுக்கு உறுதி அளித்தார்.

அவனும் சிறு புன்னகையுடன் அவரிடம் விடைபெற்று கொண்டு அங்கிருந்து கிளம்பி முருகன் செல்லில் அடைக்கப்பட்டிருந்த காவல் நிலையத்தை அடைந்தான்.

முருகன் கைதானதில் இருந்து அந்த காவல் நிலையத்தில் சில காவலர்கள் மட்டுமே இருந்ததை அவன் கவனிக்கவில்லை. மாட்டிக் கொண்டோமே என்ற பயத்தாலும் அவமானத்தாலும் அந்த செல்லின் விட்டத்தை வெறித்து பார்த்து படியே அமர்ந்திருந்தான் அவன்.

அவ்வாறு அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்த போது தான் அவன் செல்லுக்கு முன் யாரோ வந்து நிற்பதை உணர்ந்து அவன் நிமிர்ந்து பார்த்தான். அங்கு கம்பீரமாக நின்றிருந்த மகேந்திரனை பார்த்து அவன் பயம் அதிகரித்தது.

"கான்ஸ்டபிள் எனக்கு ஒரு டீ சொல்லுங்க" என்று கூறி விட்டு முருகனை ஒரு பார்வை பார்த்தவாறு தன் அறைக்கு சென்றான் மகி.

மாலை மங்கி கொண்டிருந்த வேளையில், தன் பணி முடிந்து மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு கொண்டிருந்தாள் மிருணாளினி. அவள் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு அவளுக்கு பிடித்த கடற்கரையை நோக்கி பயணித்து கொண்டிருந்தாள்.

முன்பெல்லாம் அவ்வாறு பணி முடிந்து திரும்பும் போது அவளுக்கு மிகவும் பிடித்த ஆதவனை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே அவள் மனம் முழுவதும் நிறைந்திருக்கும். ஆனால் சில நாட்களாக அவள் மனம் கவர்ந்தவனை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தாலேயே கடற்கரைக்கு பயணித்தாள்.

என்ன தான் அவள் மூலை அவன் தனக்கு எட்டாத கனி என்று பல முறை அவளுக்கு எச்சரிக்கை செய்தாலும், அவள் மனமோ, அதை சிறிதும் பொருட்படுத்தாமல் அவனை சந்திக்க எதாவது ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா என்றே ஏங்கி கொண்டிருந்தது.

அவள் எதிர்பார்த்த அந்த தருணம் எதிர்பாரா விதத்தில் அன்றே அமைய போகிறது என்று அவள் அப்போது நினைத்து கூட பார்க்கவில்லை.

வாட்பேட்: Aarthi_Parthipan
பிரதிலிபி: Arthi Rohini

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top