14.தர்ஷினி விக்னேஷ் 'குழலி'

14 .தர்ஷினி விக்னேஷ் 'குழலி'

"அப்பா என்ன சொல்றீங்க? இப்போ இந்த சின்ன பையனை அங்கே விட்டா நம்ம மாட்டிக்குவோம்." என்றான் அவன்.

"இந்த  பொடியனை விடலான தான் கண்டிப்பாக நம்ம மாட்டுவோம்..." என்றார் அவனின் தந்தை.

ஆறுமுகத்தின் மகன் புரியாமல் விழிக்க,

"இப்போவே அந்த மகேந்திரன் மோப்பம் பிடிக்க ஆரம்பிச்சுட்டான். ஒரு வேளை இவனை விடலனா அவன் ஏதாவது கண்டிப்பாக வழி கண்டுபிடிச்சு நம்மள நெருங்க வாய்ப்பு இருக்கு. இப்போ இந்த பொடியன அங்க விட்டுட்டா வேற பக்கம் அவங்க திசை திரும்பும். நம்ம கிட்ட அவன் நெருங்கி வரத்துக்குள்ள நம்ம எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்." என்று ஆறுமுகம் கூற, தந்தை சொல்வதை கடைப்பிடப்பதே அனைவருக்கும் நல்லது என்று அதை கடைபிடிக்க முடிவு செய்தான்.

"டேய்! இந்த பையன் மயக்க மருந்து குடுத்து ரொம்ப நேரம் ஆச்சுல? திரும்ப ஒரு தடவை கொடுத்து தூக்கிட்டு போய் அங்கேயே விடுங்க." என்றான் அவன் அடியாட்களிடம்.

அதை ஆறுமுகம் தடுத்தார். "இல்ல வேணாம். மயக்க மருந்து கொடுத்துட்டா தேட ஆரம்பிச்சது தெரிஞ்சு தான் கூட்டி வந்துட்டோம்னு தெரிய வாய்ப்பு இருக்கு. நேரத்தை கடத்தாம இவனை கொண்டு போய் ஆசிரமம் முன்னாடி  போடாம கொஞ்சம் தூரத்தில் எல்லாரும் ஈஸியா பாக்குற மாதிரி ஒரு இடத்துல போட சொல்லு குரு" என்று தன்  மகனிடம் கூறிவிட்டு அவர் கிளம்பினார்.

பின் குரு அடியாட்களிடம்,  "அப்பா சொன்னது கேட்டீங்க தானே? அதே மாதிரி பண்ணிடுங்க. அப்றம் ஒரு நிமிஷம் அந்த போலீஸ் காரன் விஷயத்துல நடந்த மாதிரி இதுல எந்த தப்பும் நடக்க கூடாது. மீறி நடந்துச்சு உங்க உயிருக்கு உத்திரவாதம் இல்ல" என்று அவர்களை எச்சரிக்கை செய்து கொண்டு இருக்கும் போது அவனது கைபேசியில் ஒரு அழைப்பு வரவே யோசனையாய், "இந்த போலீஸ் நாய் எதுக்கு கால் பண்ணுது?" என்று யோசனையுடன் அதை எடுத்து பேசினான்.

"சார். அந்த பையனை என்ன பண்ணுனீங்க சார்?" என்றான் எதிரில்.

"ஏன்யா எதுக்கு கேக்குற?" என்றான் குரு.

"ஒன்னும் இல்ல சார். அவனை தேட ஆரம்பிச்சுட்டாங்க. அது தான் என்ன பண்றீங்கன்னு தெரிஞ்சா... ஹெல்ப் பண்ணலாமே" என்று அவன் கூற,

"இல்ல. அவனை ஒன்னும் செய்யல. உன் ஹெல்ப் இதுல தேவை படாது. நீ வேற ஏதாவது நடந்தா உடனே தகவல் கொடு முருகா." என்றான் குரு.

அந்த பக்கத்தில் இருந்து பேசி கொண்டு இருந்த முருகன், "சார்! அப்றம்..." என்று இழுக்க.

"என்ன முருகா??"

"இல்ல... மாச கடைசி..."  என்றான் இழுவையாக.

"பணம் தான? அது உன் வீட்டுக்கு தானா வந்துடும்." என்றவுடன் அனைத்து பற்களும் தெரியும்படி சிரித்து அழைப்பை துண்டித்தான் ஹெட் கான்ஸ்டபிள் முருகன்.

அந்த நேரத்தில் அடியாட்கள் சின்னாவை தூக்கி கொண்டு கிளம்ப   அவனிடம் அனுமதி கேட்க, குரு போனில் பேசி கொண்டே அவர்கள் கிளம்ப தலையசைத்தான்.

மிரு சின்னாவை நினைத்து பதட்டத்தில் மகியின் அறையில்  நடந்து கொண்டு இருந்தாள். அவள் படும் அவஸ்தையை கைபேசியில் கட்டளைகளை பிறப்பித்து கொண்டே தான் கவனித்து கொண்டு இருந்தான். இவர்கள் இருவரையும்  மகியின் பெற்றோரும் கவனித்து கொண்டு இருந்தனர்.

பின் இருவருக்கும் ஒரு சேர அழைப்பு வந்தது. மிருவிற்கு ஆசிரமத்தில் இருந்து. மகிக்கு செழியனிடம் இருந்து. இருவரும் அழைப்பை ஏற்றனர்.

"என்ன சொல்றீங்கப்பா? சின்னா வந்துட்டானா?" என்றாள் கண்ணீரோடு சின்னா வந்த சந்தோசத்தில்.

"என்ன சொல்ற செழியா? இது உண்மையா?" என்று மகி தன் பற்களை கடித்தான்.

பின் அவள் சின்னா கிடைத்த விஷயத்தை கூற, "நானும் உன்கூட வரேன். வா மிரு" என்று கிளம்ப போக.

"இல்ல சார். உங்க உடம்பு இருக்க நிலையில் அங்க வர வேணாம். நானே இங்க சின்னாவை கூட்டிட்டு வர சொல்லிட்டேன். இன்னும் கொஞ்சநேரத்துல வந்துடுவான்." என்றாள்.

தன் மேல் அவள் காட்டும் பாசத்தில் உலைகலனாய் கொதிருக்கும் அவன் இதயமும் சற்று குளிர்ந்து தான் போனது.

பின் சின்னா வந்ததும், மிரு அவனுக்கு ஏதும் உடலில் பிரச்சனை இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, அவனை பழையபடியாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் சற்று வெற்றி கண்ட பின், நடந்ததை பற்றி மெதுவாக கேட்க ஆரம்பித்தாள்.

"அக்கா! நான் ஓடி வரும் போது யாரோ பின்னாடி இருந்து முகத்தில் ஏதோ வச்சு தூக்கிட்டு போய்ட்டாங்க. அப்றம் என்னாச்சு தெரியல அக்கா." என்றான் பயந்தபடி உதட்டை பிதுக்கிக்கொண்டு.

"சரி. நீ தூக்கத்தில் இருந்த தங்கம். வேற ஒன்னும் இல்ல. நான் தான் உனக்கு நாளைக்கு பிறந்த நாள்னு சர்ப்ரைஸ் கொடுக்க இப்படி பண்னேன்." என்றாள் குழந்தையின் பயத்தை போக்க.

"அய்யோ நீங்களா அக்கா. நான் கூட பயந்துட்டேன். ஆனா, அங்கே யாரோ புதுசா குருன்னு ஒருத்தர் கிட்ட பேசுனாங்க. அவர் இவனை ஆசிர்மத்துல விட்டுடுன்னு சொன்னாங்க. அவங்க உங்க பிரண்ட்டா அக்கா?" என்று குழந்தை கேட்டதும்,

"ஆமா கண்ணா. அவர் என்னோட நண்பன் தான்." என்று மகியும்,
"நான் தான் உன் அக்காக்கு ஹெல்ப் பண்ணுன மாமா." என்றான் பூடகமாக.  இருந்தும் அதை புரியும் நிலையில் தான் மிரு இல்லை.

"வேற ஏதாவது உளறினானா குரு? அதாவது உன் பர்த்துடேசர்ப்ரைஸ் தான் இதுன்னு?"  என்று அவள் மெதுவாய் கேட்க,

"ஹாங்... ஆமா அக்கா. முருகா உன் வீட்டுக்கு எல்லாம் வந்துடும்னு போன்ல யாருக்கிட்டாயோ பேசுனாரு. அப்றம் ஏதும் கேட்கல அக்கா." என்றது குழந்தை.

'எட்டப்பா முருகா" என்று தன் வாய்க்குள் அந்த பெயரை கடித்து துப்பினான் மகி.

'அதோட எவ்வளவு அருமையாக சிறு குழந்தையிடம் அனைத்து உண்மைகளையும் வாங்கி விட்டாள் இவள்' என்று அவள் புத்தி கூர்மையை எண்ணி வியந்தாலும், 'இந்த போலீஸ்காரனுக்கு ஏத்த கன்ட்ரோல் ரூம் நீ தான்டி' என்று மனதுக்குள் காதல் கோட்டை கட்ட துவங்கி விட்டான்.

Pratilipi id: தர்ஷினி விக்னேஷ் 'குழலி

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top