13.கதாரசிகை
இருள் நிறைந்த அவ்வேளையில் நிலவொளியில் தனது ஸ்கூட்டியை உயிர்பித்த மிருணாளினி நேராக அவள் பணிபுரியும் மருத்துவமனைக்கு மகேந்திரனை காண சென்று நிறுத்தினாள்.
அவளை பின் தொடர்ந்து வந்த செழியன் தன் நண்பனை காண அவள் பின்னேயே மருத்துவமணைக்குள் நுழைந்தான்.
மிருணாளினியின் பதட்டத்தையும் பயத்தையும் அவள் கைப் பிடியில் சிக்கி நசுங்கிக் கொண்டிருந்த கைப்பை தெளிவாக காட்டியது.
சின்னா காணாமல் போனதை கூறி மகேந்திரனிடம் உதவி வேண்ட வேண்டும் என்று வேக வேகமாக நடந்து வந்தவள் மகேந்திரன் அனுமதிக்கப்பட்டிருந்த அறையின் முன் நடையை நிறுத்தினாள்.
இப்பொழுது தான் அடிபட்டு சரியாகி எழுந்து அமர்ந்திருக்கிறார் இப்பொழுது உடனே சென்று உதவி என்று கேட்டால் தவறாக போய்விடுமோ என்ற பயமும் தயக்கமும் மேலோங்க, சின்னா காணாமல் போய் நான்கு மணி நேரத்திற்கு மேல் ஆனதால் அவனை கண்டுபிடிக்க வேறு வழியும் தெரியாததால் உள்ளே செல்வோமா வேண்டாமா என்ற இரட்டை எண்ணத்தில் கதவின் வெளியே நடந்துக் கொண்டிருந்திருந்தாள் மிருணாளினி.
அவள் பின்னே வந்த செழியன் மிருணாளியின் தயக்கத்தை கண்டுக் கொண்டு உள்ளிருந்த மகேந்திரனிற்கு அதை குறுஞ்செய்தி மூலம் தெரிவித்தான்.
தனது தாய் ஊட்டி விட்டுக் கொண்டிருந்த உணவை உண்டுக் கொண்டிருந்த மகேந்திரன் குறுஞ்செய்தியை பார்த்து புன்னகைத்து விட்டு, "அம்மா வெளியே யாரோ நிக்கிற மாதிரி இருக்கு யாருன்னு பாருங்க" என்று கூற மகேந்திரனின் தந்தை தனது மனையாளை மகனுக்கு உணவு ஊட்ட கூறிவிட்டு எழுந்து சென்று வெளியில் பார்த்தார்.
வெளியில் மிருணாளினியை பார்த்ததும் உள்ளே அழைத்தார். மிருணாளினியும் தனது மனதை திடப்படுத்திக் கொண்டு உதவி கேட்டு விடவேண்டும் என்ற நோக்கத்துடன் உள்ளே சென்றாள்.
"வாம்மா சாப்பிடுவ." என்று கயல்விழி அழைக்க மிருணாளினி அதை மறுத்து மகேந்திரனை பார்த்தாள்.
'என்ன கூற வேண்டுமோ கூறு உனக்காக நானிருக்கிறேன்' என்ற உறுதி மகேந்திரனின் கண்கள் மிருணாளினிக்கு பிரதிபலிக்க, தன் தயக்கத்தை தூர எறிந்து சின்னா காணாமல் போன செய்தியை கூறினாள்.
"ப்லீஸ் சார். எப்படியாவது சின்னாவ கண்டுபிடிச்சி கொடுங்க சார்." என்று மிருணாளினி சோகமாகவும் பதட்டமாகவும் கேட்க அவள் என்ன பிரச்சனை என்று கூறும் முன்னே அவளின் பிரச்சனையை அறிந்துக் கொண்டு அதற்கான செயலை முன்னே தொடங்கியவன் இப்பொழுது தனது அன்பானவளின் வாயாலே உதவி கேட்டு இல்லை என்பானா அந்த கள்வன்.
"கவலைய விடு மிரு என் கிட்ட சொல்லிட்ட இல்ல? சின்னா கிடைச்சிருவான்." என்று மகேந்திரன் மிருணாளினிக்கு தைரியமளிக்க, இராஜேந்திர வர்மனும் கயல்விழியும் தங்களது மகனின் பேச்சில் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
இருக்காதா பின்னே அவன் தான் இதுவரை எந்த பெண்ணிடமும் முகம் கொடுத்து பேசிடாதவனாகிற்றே...? இன்று பேசியதோடு தைரியம் வேறு அளிக்கிறானே சிறிய இதயம் கொண்ட அவனது பெற்றோருக்கு இது அதிர்ச்சி தானே.
******
தனது மகனின் தோள் மேல் கை போட்டு சமாதானம் கூறியவாறே ஓர் இரும்பு கதவை திறந்தார். உள்ளே பல ஜெயில் கம்பி கதவுகள் கொண்ட பல அறைகள் இருந்தது. ஒவ்வொன்றிலும் ஒரு சிறுவன் என்று பத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் கட்டி போடப்பட்டிருந்தனர்.
விஷயம் தீவிரமடைவதால் மகேந்திரனின் படிப்பையும் திறமையையும் முன்னிறுத்தி உடனே ஐ.பி.எஸ் பதிவியை ஏற்று இந்த கேஸை முடிக்க கோரி, மேலிடத்தில் இருந்து உத்தரவு வர, அவனும் ரகசியமாய் யாருமறியாமல் ஒருவாரத்திற்கு முன்னரே பதவியை ஏற்றிருந்தான். அவனின் உயிர் தோழனான செழியனை தவிர வறு யாருக்கும் இவ்விஷயமும் தெரியாது.
அதனால் இப்பொழுது மகேந்திரனின் கட்டுப்பாட்டில் சிட்டி உள்ளதென்பதை எப்படியோ தெரிந்து கொண்டவர்கள், சிறுவர்களை கைமாற்ற முடியாமல் கடத்திய சிறுவர்களை அடைத்து வைத்திருந்தனர் தந்தையும் மகனும்.
கடைசி அறையில் கண்களோடு கை கால்களையும் கட்டி மயக்கத்தில் வைத்திருந்த சிறுவன் சின்னா அறையை திறந்து உள் நுழைந்த தந்தையை கேள்வியாக மகன் பார்க்க அவரோ வில்லதனமாக புன்னகைத்து விட்டு, "நம்ம யாருன்னு அந்த மகேந்திரனுக்கு காட்றோம்" என்று கூறி அடியாட்களை அழைத்தார்.
அடியாட்கள் வந்ததும், "இந்த பையன அவன் ஆசிரம வாசல்ல போட்டு வாங்க." என்று ஆறுமுகம் கூற ஆறுமுகத்தின் மகன் அதிர்ந்தான்.
மகேந்திரனின் திட்டத்திற்கு எதிரான ஆறுமுகத்தின் திட்டம் என்ன?...
Wattpad id ; kadharasigai
prathilipi : kadharasigai
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top