1.ரமா

1. Rama

எத்தனை முறை கண்டாலும்

         மீண்டும் கானத் துடிக்கும்.....

         உன்னவளை காண அவ்வளவு

         அவசரமோ என் ஆதவனே......       

         மாலை மயங்கும் நேரத்தில் ஆதவன் தன்னை முழுமதிக்குள் முழுவதுமாய் ஒளித்துக் கொண்டான்..... அதன் அழகை ரசித்துக்   கொண்டே  ஆர்ப்பரிக்கும் கடலலையையும் ரசித்தாள் மிருணாளினி....
இருபத்தி நான்கே வயதான பருவ மங்கை.... குழந்தைகள் நல மருத்துவம் பயின்றுள்ளாள்.... குழந்தைகளின் மேல் கொண்ட தீராத காதலால் அவர்களின் நலனுக்காகவும் வாழ்வின் பாதி நாள் அவர்களோடு உறவாடும் நேரத்திற்கு தன்னை அர்பணிக்கவே குழந்தை மருத்துவம் எடுத்தாள்.

      அவளுக்கு குடும்பம் என்ற வரத்தை கடவுள் தரவில்லை... யாரோ செய்த தவறுக்கு அவளை பாவ சுமையாய்  கருதி அனாதை இல்லத்தில் இறைவனின் மகளாய் வளர்ந்தவள்....  அவளுக்கு படிப்பின் மேல் பிடித்தம் அதிகம்... இயல்பிலேயே பொறுமையான குணம் கொண்டவள்.... தன் வாழ்விற்கு  மட்டுமல்லாமல் தன்னைப் போல் இருக்கும் குழந்தைகளுக்காக அவள் படிப்பினை பிடித்து கொண்டாள்....

   
     தான் நன்றாக படித்து நல்ல  நிலைக்கு வந்தால் இல்லத்தில் இருக்கும் குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்ள முடியும்... பள்ளி படிக்கும் காலத்திலிருந்தே பள்ளியை விட்டு வந்தால் அங்கிருக்கும் குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து விட்டு படிக்க அமர்ந்து விடுவாள்.... கல்லூரி சேர்ந்த பின்பு பகுதி நேர வேலைக்கு சென்று அதில் வரும் வருமானத்தில் தனது தேவை போக மீதத்தை இல்ல நிர்வாகியிடம் கொடுத்து விடுவாள்.

   பணிரெண்டாம் வகுப்பு முடிந்தவுடன் அவளுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது...  அவளின் படிப்பிற்கு  தேவையான உதவி எம் வி டிரஸ்ட் பொறுப்பெடுத்து கொண்டது..... சேவை மனப்பான்மையுடன் தொடங்கியது எம் வி  டிரஸ்ட்.... எத்தனையோ இல்லங்களுக்கு தனது டிரஸ்ட் மூலம் சேவை செய்து வருகிறது....

    மிருணாளினியின் இல்ல நிர்வாகி தான் அந்த அமைப்புடன் பேசி அவளுக்கு உதவியை தேடிதந்தார்... தன் மகளைப் போல வளர்ந்தவள்....அவள் நல்ல நிலைக்கு வந்தாள் அவளின் வாழ்வு நன்றாக அமையும்.... அதை மையமிட்டே அவளுக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்தினார் இல்ல நிர்வாகியான கமலேஷ்வரன்.

   தனது படிப்பை முடித்தவுடன் அவளை தன்னுடைய மருத்துவமனையிலே  சேர்த்து கொண்டார் எம் வி டிரஸ்ட் ஓனர் ராஜேந்திர வர்மன்.  இப்பொழுது அங்கேதான் மிருணாளினி தனது மருத்துவ தொழிலை செய்கிறாள்... அவள் படிப்பு முடிந்தவுடன் ஆசிரமத்தில் இருந்து வெளிவந்து விட்டாள்.... ஆனால் வாரத்தில் இருமுறை சென்று எல்லோரையும் பார்த்துவிடுவாள்... இப்பொழுது மருத்துவமனை  விடுதியில் தங்கி உள்ளாள்....

      விடுதி என்றால்  அது தனித்தனியாக கட்டப்பட்ட வீடு போல அமைப்பு கொண்டது....அங்குள்ளவர்கள் பாதுகாப்பிற்கு ராஜேந்திர வர்மனின் பொறுப்பு.... அங்கே அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சமைத்து கொள்ளலாம்....சுதந்திரமாக இருக்கலாம்.....

    அவள் மருத்துவமனையிலிருந்து இன்று ஆசிரமம் சென்றுவிட்டு கடற்கரைக்கு வந்துவிட்டாள்.... அவளின்  ஆதவன் மறைவதை காண.....

        மகேந்திர பவனம் என்ற எழுத்துக்களில் மின்னியது அந்த பங்களா.... அதை பங்களா என்று சொல்லுவதை விட அரண்மனை என்றே சொல்ல வேண்டும். பின்னே ராஜவம்சா வழியினர் அல்லவே..... அரண்மனை என்று தானே கூற வேண்டும்....  அக்குடும்பத்தின் ஆணிவேர்  ராஜேந்திர வர்மன்..... அவரின் சரிபாதி  அவரின் கண்ணசைவை வைத்தே அவர் சொல்ல வருவதை புரிந்து கொண்டு செயல்படும் மனைவி கயல்விழி....அதே போல் தன் வாழ்வின் எத்தனை முடிவு எடுத்தாலும் தனது மனையாளை கலந்து செய்பவர்.... அவரிடம் கண்களாலே அனுமதி பெற்று செய்பவர் இராஜேந்திர வர்மன். இவர்களின் காதலில் உருபெற்றவன் தான் மகேந்திர வர்மன்.

    மகேந்திர வர்மன் பெயரிற்கு ஏற்றவாறு கம்பீரமானவன்... அத்தனை சொத்திற்கும் ஒரே வாரிசு அத்தனை சொத்தையும் கட்டி காப்பது போதாதென்று தனது நாட்டிற்கு தன்னால் ஆன சேவையை செய்ய வேண்டும்... தனது மக்களை இன்னலிலிருந்து காப்பதற்கும் குற்றவாளிகளை வேட்டையாடுவும் தான் ஒரு உயர் பதவியில் அமர வேண்டும் என்ற எண்ணத்துடன் படித்து இன்று      மகேந்திர வர்மன் I P S....

     அவனின்  வசதிக்கு பணம் கொடுத்தும் பதவியை வாங்கலாம்... ஆனால் அவனுக்கு துளியும் அதில் விருப்பமில்லை..... பரம்பரை சொத்தில் இல்லாமல் தனது  சுய முன்னேற்றத்தில் அதிகாரி ஆனவன்....  அவன் வாழ்வில் பெண்களுக்கு இடமில்லை.... தாயைத் தவிர வேறு எந்த பெண்ணையும் தன்னை நெருங்க விடாதவன்.... அவன் வசதியை பார்த்து வந்த பெண்களை தனது பார்வையால் எரித்துவிடுவான்..... எவராலும் நெருங்க முடியாத எஃகு தன்மை கொண்டவன்.... தந்தை தாயை மதிப்பவன்.... மொத்தத்தில் ஆறடி ஆண்மகன் அவன்....

     அந்த ஆறடி ஆண்மகனையும்  தன் காதலால் கரைய வைக்கவும்.... மெழுகாய் உருக வைக்கவும் வருவாளா.... அவனின் தேவதை...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top