76 திருப்பங்கள்

76 திருப்பங்கள்

செய்தியை பார்க்க ஆழ்வி அதிர்ச்சி அடைந்தாள். இனியவனும் அதிர்ச்சி அடைந்தான் தான்! ஆனால் வேறு கோணத்தில்...! அந்த இருவரில் ஒருவர் தான் குற்றவாளியாக இருப்பார்கள் என்று அவன் எண்ணியிருந்தான். அவன் தானே அவர்கள் இருவர் மீதும் கண் வைக்க சொல்லி கேட்டுக் கொண்டது! கமிஷனர் தான் அவர்களது கைபேசி எங்களை ட்ராக் செய்திருக்க வேண்டும். ராஜா சர்மாவும் ரீனா சர்மாவும் எப்படி இதை இணைந்து செய்தார்கள் என்று அவனுக்கு புரியவில்லை. அவனுக்கு தெரிந்தவரை அவர்கள் இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இல்லை. அப்படி இருக்க, இது எப்படி நடந்தது? உண்மையை தெரிந்து கொள்ள அவன் சற்று நேரம் காத்திருக்க வேண்டும். இப்பொழுது அவன் கமிஷனரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணினான். ஏனென்றால் அவர் இந்த வழக்கு விஷயமாக சற்று பரபரப்புடன் காணப்படலாம்.

"என்னங்க இது, அவங்களுக்கு தான் டைவர்ஸ் ஆயிடுச்சே! அப்படி இருக்கும்போது இது எப்படி நடந்தது? அவங்க ஒன்னு சேர்ந்துட்டாங்களா?" என்றால் ஆழ்வி.

இல்லை என்று தலையசைத்தான் இனியவன்.

"இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் தான் இதை செஞ்சிருப்பாங்கன்னு நம்ம நினைச்சோம். ஆனா அவங்க ரெண்டு பேருமே இதுல எப்படி ஒன்னு சேர்ந்தாங்க? ராஜா சர்மா இதை செஞ்சிருப்பார்னா, ரீனா உங்களுக்காக அவரை டைவர்ஸ் பண்ணாங்க. அதே நேரம், ரீனாவை நீங்க கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதால ரீனா இதை செஞ்சுருப்பாங்களோன்னு நெனச்சேன். ரெண்டுமே வேற வேற காரணங்கள். ஆனா உண்மை வேறயா இருக்கே!"

"இப்போதைக்கு என்னாலையும் எதுவும் சொல்ல முடியல"

"போலீஸ் எப்படி அவங்களை இவ்வளவு சீக்கிரம் புடிச்சாங்க?"

"சீக்கிரம்னு நீ எதை சொல்ற?"

"நீங்க தானே சொன்னீங்க, இந்த கேஸ்ல சித்திரவேல் தான் துருப்பு சீட்டுன்னு?"

"இல்ல, இந்த கைது சித்திரவேலால நடந்திருக்காது. நான் ஏற்கனவே இவங்க ரெண்டு பேர் மேலையும் எனக்கு சந்தேகம் இருக்கிறதா கமிஷனர்கிட்ட சொல்லி இருந்தேன். அவர் தான் இது சம்பந்தமா ஏதாவது செஞ்சிருப்பார்னு நினைக்கிறேன்"

"ஓஹோ"

"காரணத்தை தெரிஞ்சுக்க நம்ம கொஞ்சம் பொறுத்திருந்து தான் ஆகணும்"

சிறிது நேரத்திற்கு பிறகு கமிஷனரிடமிருந்து இனியவனுக்கு அழைப்பு வந்தது.

"நான் உங்க காலுக்காக தான் சார் காத்திருக்கேன்"

"எனக்கு தெரியும். நான் கொஞ்சம் பிஸியா இருந்தேன். அதனால தான் ஃபோன் பண்ண முடியல"

"பரவாயில்ல, சார். என்ன சார் நடக்குது? நீங்க எப்படி ராஜா சர்மாவையும் ரீனாவையும் ஒண்ணா அரெஸ்ட் பண்ணீங்க? அவங்க ரெண்டு பேரும் ஒன்னாவா இதுல ஈடுபட்டு இருந்தாங்க?"

"உங்களுக்கு குழப்பம் ஏற்படுறது சகஜம் தான். நானும் கூட அவங்கள்ல ஒருத்தர் தான் கல்பிரிட்டா இருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா ஒருத்தருக்கு தெரியாம மத்தவர் இந்த கேஸ்ல இன்வால்வ் ஆகி இருக்காங்க"

"நிஜமாவா?"

"ஆமாம். உங்களுக்கு தான் நன்றி சொல்லணும். உங்க சந்தேகம் தான் அவங்க ஃபோனை ட்ராக் பண்ண உதவியா இருந்துச்சு. அப்போ தான், உங்களை அட்டாக் பண்ணது ராஜா சர்மான்னு எங்களுக்கு தெரிய வந்துச்சு. உண்மைய சொல்லப் போனா, அவர் உங்களை கொல்லத் தான் முடிவெடுத்திருக்கிறார். ஆனா, உங்க ஃபிரண்டு குரு அங்க வந்ததனால, அவங்க உங்களை கொல்லாம விட்டுட்டு போயிட்டாங்க. உங்களை தாக்குன விஷயம் சிட்டி ஃபுல்லா பரவுனதுனால எல்லாரும் உங்களை ஹாஸ்பிடலுக்கு வந்து பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க, ராஜா சர்மாவையும் சேர்த்து. உங்களுக்கு இடையில எந்த பிரச்சனையும் இல்லாததால, அவர் மேல யாருக்கும் சந்தேகம் வரல. அவரும் தான் தப்பிச்சிட்டதா முழு மனசா நினைச்சிருக்காரு"

"ரீனா இந்த கேஸ்ல எப்படி வந்தாங்க?"

"நீங்க கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதால அவளும் உங்க மேல கோவமா இருந்திருக்கா. உங்களால தான் அவ தன் புருஷனை டைவர்ஸ் பண்ணியிருக்கா. அவளை அசிங்கப்படுத்தினதுக்காக உங்களை பழிவாங்க நினைச்சிருக்கா. நீங்க தான், 'ஒரு பைத்தியக்காரன் கூட உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டான்னு' சொன்னீங்களாமே...!"

"ஆமாம் சார், என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி அவ நச்சரிச்சு ரொம்ப தொல்லை பண்ணப்போ நான் அப்படி சொன்னேன்"

"அது தான் அவளுக்கு உங்க மேல கோவத்தை ஏற்படுத்தி இருக்கு. நீங்க மெண்டலி இல்லா இருக்கீங்கன்னு தெரிஞ்சி, உங்களை வாழ்க்கை பூரா பைத்தியமாவே வச்சிருக்க முடிவு பண்ணியிருக்கா. உங்களை அட்டாக் பண்ணவங்க மேல அந்த பழி போய் விழுந்துடும்னு பிளான் பண்ணியிருக்கா. உங்களை ட்ரீட் பண்ண டாக்டரை தொடர்பு கொண்டு இதை செய்ய சொல்லி கேட்டிருக்கா. இதுல இன்ட்ரஸ்டிங்கான இன்னொரு விஷயமும் இருக்கு!"

"என்ன சார் அது?"

"சித்திரவேலும் டாக்டரும் ஒரே அனாதை ஆசிரமத்தை சேர்ந்தவங்க"

"அப்படியா?"

"ஆமாம். அதனால தான் சித்திரவேல் அந்த டாக்டரை உங்க ட்ரீட்மென்ட்காக கூட்டிக்கிட்டு வந்திருக்கான். ஆரம்பத்துல டாக்டர் உங்களை நல்லா தான் ட்ரீட் பண்ணி இருக்கான். ரீனா சொன்னதை கேட்டு, அவன் அதிர்ச்சி அடைஞ்சிருக்கான். இந்த விஷயத்தை பத்தி சித்திரவேல் கிட்ட சொல்லி இருக்கான். அதை செய்ய சொல்லி அவனுக்கு தைரியம் கொடுத்ததே சித்திரவேல் தான். அதுமட்டுமில்ல, தான் பிடிபட்டிட கூடாதுன்னு ரீனாகிட்ட டாக்டரை ஜெயில்ல வச்சு தீர்த்து கட்ட சொன்னதும் சித்திரவேல் தான்."

"அவங்க அதை எப்படி சார் செஞ்சாங்க?"

"சொல்லவே வெட்கமா இருக்கு. எங்க டிபார்ட்மெண்ட்டை சேர்ந்த ஒரு ஆள் தான் அதை செஞ்சிருக்கான். ரீனா அவனை வெறும் அம்பதாயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கிட்டா. இன்னொரு விஷயம், நீங்க இம்ப்ரூவ் ஆனதை பார்த்து, உங்களை மறுபடியும் பைத்தியக்காரனா வச்சிருக்க, உங்களுக்கு ஊசி போட முயற்சி பண்ணி இருக்காங்க..."

"ஓ..."

"நீங்க கோவில்ல, உங்க வைஃப் கூட ரொம்ப சகஜமா இருந்ததை ரீனா பார்த்திருக்கா. மதுரை போயிருந்த சித்திரவேலுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்லி இருக்கா. அவங்க எதுவும் செய்யறதுக்கு முன்னாடி, உங்க மனைவி முந்திக்கிட்டாங்க. அவங்க டாக்டரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிட்டாங்க. அவனுடைய உண்மையான குணம் என்னன்னு எல்லாத்துக்கும் புரிய வச்சாங்க. நீங்க மறுபடியும் காப்பாத்தப்பட்டீங்க..." தான் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ஆழ்வியை பார்த்து சிநேகமாய் புன்னகைத்தான் தூயவன்.

"நாங்க சித்திரவேலை தேடிக்கிட்டு இருக்கோம். சீக்கிரமே அவனையும் பிடிச்சிடுவோம்"

"தேங்க்யூ சார்"

"வெல்கம்" என்று அழைப்பை துண்டித்தார் கமிஷனர்.

கமிஷனர் கூறிய விவரங்களை ஆழ்வியிடம் கூறினான் இனியவன்.

"சித்திரவேல் தான் டாக்டரை இதை செய்ய சொல்லி சொன்னதுன்னு என்னால நம்ப முடியல"

"டாக்டரை கொல்ல சொல்லி ரீனாகிட்ட சொன்னதும் அவன் தான்"

"அவரை மாதிரி ஒரு சுயநலவாதியை நான் பார்த்ததே இல்ல" என்றாள் ஆழ்வி.

"அன்புங்குற பேர்ல தன் சுயநலத்தை அவன் மறைக்க முயற்சி பண்ணி இருக்கான்" என்றான் கோபமாய்.

"நல்ல காலம், அக்காவே அவரைப் பத்தின உண்மையை கண்டுபிடிச்சி அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டாங்க. தனக்கு வேண்டியதை அடைய, அவர் என்ன வேணாலும் செய்வார் போல இருக்கு"

"அதனால தான் அவனை மன்னிக்கவே கூடாதுன்னு எனக்கு தோணுது. அக்கா பிரக்னண்டா இருக்காங்கன்னு தெரிஞ்சப்ப நான் ரொம்பவே குழம்பி போயிட்டேன்"

"நம்ம அவங்க கிட்ட உண்மையை சொல்லாம இருக்க முடியாது. ஏன்னா, இன்னைக்கு இல்லனாலும், ஒரு நாள் அவங்களுக்கு உண்மை தெரிய வரும்"

"அவங்க மறுபடியும் எதுவும் தப்பு செய்யாம நம்ம பார்த்துக்கணும்"

"அவங்க செய்ய மாட்டாங்க. அவங்க சித்திரவேல் மேல கோவமா இருந்தாங்க. அந்த கோவத்தில் தான் குழந்தையை கலைக்கணும்னு அவங்களுக்கு தோணியிருக்கு. ஆனா இப்போ, மறுபடியும் அதை செய்ய நினைக்க மாட்டாங்க. அதோட வலி எப்படி இருக்கும்னு அவங்களுக்கு தெரிஞ்சிருச்சு"

"புரிஞ்சா சரி"

"நம்ம குரு அண்ணாவுக்கு பர்சனலா தேங்க்ஸ் சொல்லணும்" என்றபடி அவன் முகத்தை கவனித்தாள் ஆழ்வி.

"ஆமாம், அவன் தன் செயலால என்னை பல முறை நன்றியுள்ளவனா ஆக்கியிருக்கான்.  அவன் மட்டும் அந்த இடத்துக்கு சரியான நேரத்துக்கு வராம போயிருந்தா, நான் அப்பவே செத்து இருப்பேன்"

"நீங்க எப்படி உங்க நன்றியை அவருக்கு சொல்லப் போறீங்க?"

"அவனால மறக்க முடியாத ஏதாவது ஒன்னை செய்யணும்னு நினைக்கிறேன்"

"அதைப்பத்தி எப்பவாவது யோசிச்சு இருக்கீங்களா?"

"ஏன், நீ அதை பத்தி யோசிச்சியா?"

ஆம் என்று தலையசைத்தாள்.

"நெஜமாவா? என்ன அது?"

"அவருக்கு கவியை கல்யாணம் பண்ணி வச்சிடுங்க" என்று அவள் கூற, முகத்தை சுருக்கிய அவன்,

"நீ என்ன பேசுற, ஆழ்வி? நம்ம எப்படி அதை செய்ய முடியும்? அது ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லையா? அது அவங்க சொந்த விருப்பு வெறுப்பு சார்ந்தது. அதுல நம்ம எப்படி முடிவெடுக்க முடியும்?"

அவனுக்கு பதில் கூறாமல் அவனையே ஆழமாய் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் ஆழ்வி.

"நான் எதையாவது புரிஞ்சுக்காம போயிட்டேனா?"

"இது ரெண்டு பேருடைய விருப்பம் சம்பந்தப்பட்ட விஷயம்னு எனக்கு தெரியாதா?"

தன் புருவம் உயர்த்தினான் இனியவன்.

"அவங்க ரெண்டு பேரும் விரும்புறாங்களா?"

ஆம் என்று தலையசைத்தாள்.

"எப்போதிலிருந்து?"

"அது எனக்கு தெரியாது. நாங்க மாமல்லபுரம் போயிருந்தப்ப தான் அதை தெரிஞ்சுக்கிட்டேன்"

"ம்ம்ம்..."

"அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க"

"ம்ம்ம்..."

"குரு அண்ணா ஒரு நல்ல ஃப்ரெண்ட். அவங்க நிச்சயம் சந்தோஷமா இருப்பாங்க"

"ம்ம்ம்..."

"எதுக்காக எல்லாத்துக்கும் உம் கொட்டிக்கிட்டு இருக்கீங்க?"

"நான் என்ன சொல்லணும்னு நினைக்கிற?"

"ஒரு அண்ணனா ஏதாவது சொல்லுங்க"

"இதுல சொல்றதுக்கு எதுவுமே இல்ல. அவங்க ரெண்டு பேரும் விரும்புறாங்க. அங்கேயே எல்லாம் முடிஞ்சு போச்சு"

"இதுக்கு என்ன அர்த்தம்? உங்களுக்கு இதுல சம்மதம் இல்லையா?"

"அது விஷயமே இல்ல. என் சம்மதத்தை கேட்டா அவங்க காதலிச்சாங்க?"

"எந்த லவ்வர் அண்ணனோட பர்மிஷனை வாங்கிட்டு காதலிப்பா? நமக்கே தெரியாம நம்ம மனசுல ஏற்படும் காதல்..."

"அப்படியா?"

"எனக்கும் உங்க மேல அப்படித்தான் காதல் வந்தது!"

"இந்த உலகத்திலேயே பைத்தியக்காரனை காதலிச்சவ நீயா தான் இருப்ப" என்றான் கிண்டலாய்.

"இங்க பாருங்க" மறுபடி மறுபடி இதே மாதிரி சொன்னீங்க, எனக்கு கெட்ட கோவம் வரும்" என்று தன் விரலை அவனை நோக்கி நீட்டினாள்.

"என்ன செய்வ?" என்று தன் கைகளை கட்டிக் கொண்டான்.

"நான்... நான்..." என்று தடுமாறினாள்.

"நான் உன்னை என்னமோ கேட்டேன், ஆழ்வி"

"என்னை யோசிக்க விடுங்க"

"இப்பதான் யோசிக்கவே போறியா?"

"என்ன செய்றது? நீங்க என் புருஷன் ஆச்சே..."

"அப்படின்னா என்ன செய்யறதுன்னு உனக்கே தெரியலயா...? பாவம் நீ" என்று சிரித்தான்.

அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள் ஆழ்வி.

"நான் என உனக்கு ஹெல்ப் பண்ணட்டுமா?" என்று தன் நெஞ்சில் இருந்த அவள் கடித்தத் தழும்பை காட்டினான். அதை பார்த்து அவள் விழிகள் விரிவடைந்தன.

"இப்போ எதுக்கு இதை காட்டுறீங்க?"

"இந்த தழும்பு மறஞ்சிகிட்டே வருது. மறுபடியும் என்னை கடிச்சிடேன்"

"என்ன்னனது...?"

"எப்பெல்லாம் நான் மெண்டல் அப்படிங்கற வார்த்தையை யூஸ் பண்றேனோ, என்னை கடிச்சிடு. என்ன சொல்ற?"

"உங்களுக்கு கிறுக்கா பிடிச்சிருக்கு?"

"இல்ல பைத்தியம்"

"நான் உங்ககிட்ட பேச மாட்டேன். போங்க"

"நெஜமாவா?"

"என்னால உங்க கிட்ட பேசாம இருக்க முடியாதுன்னு நினைக்கிறீங்களா?"

"நான் பெட்டு கட்டுவேன். உன்னால என்கிட்ட பேசாம ஒரு நாள் கூட இருக்க முடியாது"

"எனக்கு பிடிக்காத வார்த்தையை பேசாம உங்களால இருக்க முடியாதா?"

"இதுல வருத்தப்பட என்ன இருக்கு? நான் பைத்தியமா தானே இருந்தேன்?"

தன் காலை தரையில் உதைத்த ஆழ்வி,

"நான் உண்மையிலேயே உங்ககிட்ட பேசவே மாட்டேன்" என்று அங்கிருந்து நடந்தாள்.

"ஆழ்வி, நில்லு... நான் சொல்றதை கேளு"

ஆழ்வி நிற்கவில்லை. இனியவன் வாய்விட்டு சிரித்தான்.

தொடரும்....

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top