73 நித்திலாவின் முடிவு

73 நித்திலாவின் முடிவு

பாட்டியையும் சித்திரவேலையும் தவிர அனைவரும் நித்திலா கருவுற்றிருந்த விஷயம் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்கள். அனைவரைவிடவும் அதிகமாய் அதிர்ச்சி அடைந்திருந்த நித்திலாவை மகிழ்ச்சியோடு தழுவிக் கொண்டான் சித்திரவேல்.

"தேங்க்யூ சோ மச், நித்தி. நம்ம குழந்தை சீக்கிரமே இந்த உலகத்துக்கு வரப்போறா... நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு உனக்கு தெரியாது..." என்ற போது அவன் தொண்டையை அடைத்தது.

திடமான முக பாவத்துடன் இருந்த நித்திலாவை நெற்றியில் முத்தமிட்டு,

"உன் குழந்தைக்கு அப்பாவா இருக்கிற பெருமையை எனக்கு கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்" என்றான்.

அப்பொழுதும் அவள் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

"என்ன ஆச்சு நித்தி? உனக்கு சந்தோஷமா இல்லயா?"

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல"

இதற்கிடையில்...

அதிர்ச்சியோடு நின்றிருந்த இனியவனின் கரத்தை பற்றினாள் ஆழ்வி.

"இப்போ நம்ம என்ன பண்ண போறோம் அண்ணா?" என்றாள் பார்கவி.

"அதைப்பத்தி நம்ம அப்புறம் யோசிக்கலாம். இப்போ, நம்ம ரொம்ப நாளா காத்திருந்த இந்த நொடியை கொண்டாடலாம்" என்று நித்திலாவின் அறைக்குள் நுழைந்தான் இனியவன். அவர்கள் இருவரும் அவனை பின்தொடர்ந்து சென்றார்கள்

நித்திலாவின் முன் அமர்ந்த இனியவன், அவளை அணைத்துக் கொண்டு,

"கங்ராஜுலேஷன்ஸ் கா. நீங்க ஜாக்கிரதையா இருக்கணும். இங்கேயும் அதையும் சுத்தாதீங்க. ஹெல்தியா சாப்பிடுங்க" என்றான்.

சரி என்று தலை அசைத்தாள்.

"நாளைக்கு நீங்க செக்கப்புக்கு போகணும்" என்று சித்திரைவேலை பார்த்தான்.

"நான் அவளை கூட்டிக்கிட்டு போறேன்" என்றான் சித்திரவேல்.

"அக்கா உங்களுக்கு ஒன்னும் இல்லையே...? ஏன் வித்தியாசமா நடந்துக்குறீங்க?"

"தலை சுத்துற மாதிரி இருக்கு"

"அப்படின்னா படுத்துக்கோங்க" என்று அவளை படுக்க வைத்தான்.

"அக்காவை யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க. அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்" என்று அங்கிருந்து சென்றான்.

அவன் தன் அறைக்கு வர, ஆழ்வியும், பார்கவியும் அவனை பின் தொடர்ந்து வந்தார்கள். தன் கைவிரல்களை கோர்த்துக்கொண்டு அமர்ந்தான் இனியவன். அவனை தொந்தரவு செய்யாமல் தூரமாய் நின்றாள் ஆழ்வி. அவனிடம் சென்ற பார்கவி, அவன் முன் முழங்காலிட்டு அமர்ந்து,

"அண்ணா, நீ என்ன யோசிக்கிறேன்னு எனக்கு தெரியும். தயவுசெஞ்சி அப்படி எதுவும் செய்யாத. அக்காகிட்ட உண்மையை சொல்லிடு"

"அவங்க பிரக்னண்டா இருக்காங்க. இப்போ அவங்களுக்கு நிம்மதியான மனநிலை தான் தேவை. நம்ம அவங்களுக்கு பிரியமானவங்களா இருந்துகிட்டு அதைக் கூட புரிஞ்சுக்கலைன்னா எப்படி? அவங்க எவ்வளவு ஆழமா அவனை காதலிக்கிறாங்கன்னு உனக்கு தெரியாதா? இந்த உண்மையை அவங்க எப்படி தாங்குவாங்கன்னு நினைக்கிற?"

"நம்ம அவங்களுக்கு தைரியம் கொடுக்கலாம்"

"அது அவ்வளவு சாதாரண விஷயம் இல்ல. மன அழுத்தம் கொடுக்கிறது அவங்களுக்கும் அவங்க குழந்தைக்கு நல்லது இல்ல"

"எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கல. அந்த ஆளை பார்க்கவே எனக்கு பிடிக்கல. அந்த ஆள் நம்ம மேல காட்டுற பொய்யான அக்கறையை என்னால பொறுத்துக்க முடியல"

"நம்ம அக்காகிட்ட உண்மையை சொல்ல போறது இல்ல அப்படிங்கிறதுக்காக அந்த ஆளை நாம் சகிச்சுக்கணும்னு அர்த்தம் இல்ல"

"அதுக்கு என்ன அர்த்தம்?"

"என்ன செய்யணும்னு நான் உனக்கு சொல்றேன்"

சரி என்று தலையசைத்தாள். 

"கவலைப்படாதே எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்"

சரி என்று அங்கிருந்து சென்றாள் பார்கவி.

கவலையே வடிவாய் நின்றிருந்த ஆழ்வியை பார்த்து புன்னகைத்தான். அதேநேரம் கமிஷனரிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்றான்.

"ஹலோ சார்"

"உங்க ஃபேமிலி மெம்பர்ஸை என்கொயரி பண்ண நாங்க நாளைக்கு உங்க வீட்டுக்கு வரலாமா?"

சில நொடி திகைத்த இனியவன்,

"எல்லாரும் எப்ப வீட்ல இருப்பாங்கன்னு நான் உங்களுக்கு சொல்றேன் சார்" என்றான்.

"எவ்வளவு சீக்கிரம் செய்ய முடியுமோ செய்ங்க" என்றார்.

"சரிங்க சார். நீங்களும் மெயின் கல்ப்ரிட்டை சீக்கிரம் பிடிக்க ட்ரை பண்ணுங்க"

"நிச்சயமா"

அழைப்பை துண்டித்தான் இனியவன். அவன் மனம் சஞ்சல பட்டிருந்தது. ஏன் இருக்காது? தான் வகுத்த திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலையில் அல்லவா அவன் இருக்கிறான்!

மறுபுறம் குருவுக்கு ஃபோன் செய்தாள் பார்கவி. மூன்றாவது மணியில் அந்த அழைப்பை ஏற்றான் குரு

"ஹாய் பேபி..."

"வாயை மூடு. எவ்வளவு தைரியம் இருந்தா, என்கிட்ட நீ உண்மையை மறைப்ப? இது தான் நீ என் மேல வச்சிருந்த லவ்வா? இது தான் உன்னோட லாயல்டியா? நீ என்கிட்ட எதையுமே மறக்க மாட்டேன்னு நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா நான் நினைச்சது தப்புன்னு நீ புரிய வெச்சிட்ட. இதை நான் உன்கிட்ட எதிர்பார்க்கல"

"முதல்ல விஷயத்தை சொல்லிட்டு அதுக்கப்புறம் என்ன திட்டு. அப்ப தானே நீ எதுக்காக திட்றன்னு என்னால புரிஞ்சுக்க முடியும்?"

"எனக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சு போச்சு. அந்த விஷயம் எல்லாம் உனக்கு தெரியும்னு தெரிஞ்சு போச்சு"

குரு துணுக்குற்றான்.

"எல்லாம்னு எதை சொல்ற?"

"நீ என்கிட்ட எதை மறச்சு வச்சியோ அதைத்தான் சொல்றேன்..."

திடுக்கிட்டான் குரு. அவளுக்கு இதைப்பற்றி எப்படி தெரிந்தது? அவளிடம் யார் கூறியிருப்பார்? இனியவன் இல்லத்தில் என்னதான் நடக்கிறது?

"எதுக்காக அமைதியாகிட்ட? உன் வாயை திறந்து இப்பவாவது பேச"

"உனக்கு தான் எல்லாம் தெரிஞ்சு போச்சே! இதுக்கு அப்புறம் அதுல பேச என்ன இருக்கு? போய் உங்க அண்ணன்கிட்ட கேளு"

"நான் அதை ஏற்கனவே செஞ்சிட்டேன்"

"ரொம்ப நல்லதா போச்சு. அவன் சொல்றத கேட்டு நட"

"நீ என்ன பேசிக்கிட்டு போற... நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லல. எதுக்காக என்கிட்ட இருந்து உண்மையை மறைச்ச?"

"முடிவெடுக்கிற நிலைமையில் நான் இல்ல. ஆழ்வி சொன்னதை நான் செஞ்சேன். மிஸ்ஸ இனியவனோட வார்த்தையை கேட்டு நடக்க வேண்டியது என் கடமை. அவங்க விருப்பமில்லாம நான் எதுவும் செய்ய முடியாது"

"இப்போ நாம் நம்ம எப்படிப்பட்ட பிரச்சனையில சிக்கிக்கிட்டு இருக்கோம் தெரியுமா?"

"எதுவா இருந்தா என்ன? இனியா இஸ் பேக்...! அவன் எல்லாத்தையும் பாத்துக்குவான். நீ எதைப் பத்தியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்ல"

"அக்கா பிரக்னண்டா இருக்காங்க"

பேச்சிழந்து போனான் குரு.

"இப்ப தான் டாக்டர் கன்ஃபார்ம் பண்ணாங்க. நம்ம நிலைமை ரொம்ப மோசமாயிடுச்சி. நீ மட்டும் என்கிட்ட உண்மையை சொல்லி இருந்தா, நான் அக்காகிட்ட இதை பத்தி பேசி இருப்பேன். இப்போ அண்ணனும் அக்காகிட்ட இதை பத்தி பேச தயங்குறாரு"

"விஷயம் இப்படி மாறும்னு யார் எதிர்பார்த்தது? உண்மையை சொல்லப் போனா, இனியவன் சீக்கிரம் குணமாவான்னு கூட நம்ம யாரும் எதிர்பார்க்கல. நாங்க உண்மையை மறைச்சதுக்கு காரணமே இனியாவோட உயிருக்கு ஆபத்து வரக்கூடாதுன்னு தான்"

"இந்த பிரச்சனை நம்மள எங்கே கொண்டு போகுதுன்னு எனக்கு புரியல" என்று அழைப்பை துண்டித்தாள்.

பெருமூச்சு விட்டான் குரு. அவனுக்கு இனியவனை எண்ணி
கவலையாய் இருந்தது. எதற்காக வாழ்க்கை அவனோடு இப்படிப்பட்ட விளையாட்டு விளையாடுகிறது? ஒரே ஒரு தவறானவன் அவர்களது வாழ்க்கையில் புகுந்து அனைத்தையும் கொடூரமாய் மாற்றி விட்டான்! பார்கவி கூறியது உண்மை தான். இந்த பிரச்சனை அவர்களை எங்கு கொண்டு செல்கிறது என்று அவனுக்கு புரியவில்லை.

இரவு

இனியவன் அவன் பக்கத்தில் வந்தமர்ந்த ஆழ்வி,

"என்ன யோசிக்கிறீங்க?" என்றாள்.

"என்னை சுத்தி இருந்த எல்லா கதவும் மூடின மாதிரி இருக்கு. என்ன செய்யறதுன்னு எனக்கு புரியல. நான் இவ்வளவு கையாலாகாம இருந்ததே இல்ல" என்றான்.

"எல்லாம் சரியாயிடும். ஆரம்பத்தில் இருந்தே நம்ம என்ன நினைச்சமோ அதுபடி எதுவுமே நடக்கல. எல்லாமே அது போக்குல தான் போய்க்கிட்டு இருக்கு. அதே மாதிரி இந்த விஷயமும் ஒரு முடிவுக்கு வரும்"

"எப்படி வரும்? அக்கா பிரக்னண்டா இருக்காங்க அவங்களோட புருஷன் ஒரு கிரிமினல். அக்காவுக்கு தெரியாம இந்த விஷயத்துல நம்மளால எதுவும் செய்ய முடியாது. அவங்களுக்கு தெரியப்படுத்தவும் முடியாது. ஏன்னா, அவங்க பிரக்னண்டா இருக்காங்க. இந்த பிரச்சனை எப்படி முடிவுக்கு வரப்போகுதுன்னு தெரியல"

"உங்களுக்கு எந்த யோசனையும் தோணலயா?"

"முக்கிய குற்றவாளி எப்போ அரெஸ்ட் ஆகுறானோ அப்போ தான் இந்த விஷயம் ஒரு முடிவுக்கு வரும்"

"இந்த பிரச்சனையில ஒரு நல்ல தீர்வு உங்களுக்கு கிடைக்கணும்னா, நிம்மதியா தூங்குங்க" என்ற அவளை விசித்திரமாய் பார்த்தான் இனியவன்.

"தூங்குறதா? இப்படிப்பட்ட நிலைமையில எப்படி நிம்மதியா தூங்க முடியும்?"

"நமக்கு கல்யாணமான புதுசுல, நீங்க தூங்காம இருந்ததை நான் கவனிச்சேன். ஒரு நிமிஷம் கூட நீங்க தூங்கவே மாட்டீங்க. அப்ப தான் உங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த சுவாமிஜி உங்களோட தூக்க நேரத்தை என்னை கவனிக்க சொன்னாரு. நீங்க தூங்கல அப்படிங்கிற விஷயத்தை நான் அவருக்கு சொன்னேன். நீங்க தூங்குறதுக்கு அவர் மருந்து கொடுத்தார். ஏன்னா மனுஷனோட மூளை தெளிவா வேலை செய்யணும்னா தூக்கம் ரொம்ப அவசியமாம். நிம்மதியா தூங்குற ஒரு மனுஷனால தான் எதையுமே சரியா யோசிக்க முடியும்னு சொன்னார். அதுக்காகத்தான் சொல்றேன், நிம்மதியா தூங்குங்க"

"மனுசனோட வாழ்க்கையில தூக்கத்தோடு பார்ட் இவ்வளவு பெருசா?"

"ஆமாம். நிம்மதியா தூங்குங்க. உங்களுக்கு நிச்சயம் தெளிவு கிடைக்கும்"

மறுநாள் காலை

குளித்து முடித்துவிட்டு வந்து சோபாவில் அமர்ந்த இனியவன், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி ஆலோசித்தான்.

அப்பொழுது யாரோ அவர்கள் அறையின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. அந்த தட்டு கொஞ்சம் பலமான தட்டாக இருந்ததால், இனியவனும் ஆழ்வியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

கதவை திறந்த இனியவன் பார்கவி நின்றிருப்பது பார்த்து,

"என்ன விஷயம்? என்றான்.

"அக்கா வீட்ல இல்ல. எங்க தேடிப் பார்த்தும் அவங்க கிடைக்கல. நாங்க எல்லாரும் நல்லா தேடிட்டோம்" என்றாள்.

"ஏன் என்னை எழுப்பல?"

"இங்க தான் இருப்பாங்கன்னு நினைச்சோம்"

"அக்கா நம்பருக்கு ஃபோன் பண்ணி பாத்தியா?"

"அவங்க ஃபோன் அவங்க ரூம்ல தான் இருக்கு"

"எங்க போயிருப்பாங்க?" என்றபடி செக்யூரிட்டியை நோக்கி ஓடினான்.

அங்கு ஏற்கனவே அவளைப் பற்றி சித்திரவேல் விசாரித்துக் கொண்டிருந்தான்.

"அவங்க ஒரு ஆட்டோவில் ஏறி போனாங்க, சார்" என்றான் காவலாளி.

"இதைப் பத்தி ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல?"

"உங்களுக்கு தெரிச்சிருக்கும்னு நினைச்சேன், சார்"

"அக்கா எங்க போனாங்கன்னு தெரியுமா?" என்றான் இனியவன்.

"ஆட்டோ டிரைவர் கிட்ட ஏதோ ஒரு ஹாஸ்பிட்டல் பேரை சொன்னாங்க"

"ஹாஸ்பிடலுக்கா?"

"செக்கப்புக்கு போயிருப்பான்னு நினைக்கிறேன்" என்றான் சித்திரவேல்.

"எதுக்காக தனியா போனாங்க? உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனையா?" என்றான் இனியவன்.

"நான் எதுக்காக அவகிட்ட சண்டை போட போறேன்? அதுவும் அவ பிரக்னண்டா இருக்கும் போது...? நான் அவளை எவ்வளவு நேசிக்கிறேன்னு உங்களுக்கு தெரியாதா?"

எரிச்சலுடன் தன் கண்களை சுழற்றி விட்டு, தன் கைபேசியை எடுத்து மருத்துவருக்கு ஃபோன் செய்தான் இனியவன்.

"சொல்லுங்க இனியவன்"

"அக்காவோட செக்கப் முடிஞ்சிடுச்சா டாக்டர்?" என்றான்.

"நித்திலா இங்க வரலையே"

இன்னுமா அவள் மருத்துவமனையை சென்று அடையவில்லை? அப்படி என்றால் அவள் எங்கு சென்றாள்?

"கவி, என் கார் சாவியை எடு" என்றான் இனியவன்.

அவள் உள்ளே செல்ல முயன்ற போது, அங்கு ஒரு டாக்ஸி வந்து நின்றது. சோர்வாய் இருந்த நித்திலா அதிலிருந்து இறங்கினாள்.

"அக்கா, நீங்க எங்கே போனீங்க?"

சோர்ந்து போய் இருந்த நித்திலா ஒன்றும் பேசவில்லை. தன் தலையை அழுத்தினாள். ஓடி சென்று அவளை பிடித்துக் கொண்டான் இனியவன். அவளை தூக்கிக்கொண்டு வந்து அவள் அறையில் படுக்க வைத்தான் இனியவன்.

"அக்கா, எங்க போனீங்க? ஏன் தனியா போனீங்க? ஏன் யார்கிட்டயும் எதுவுமே சொல்லல? நாங்க எதுக்கு இருக்கோம்? என்னக்கா ஆச்சு உங்களுக்கு? ஏன் இப்படி இருக்கீங்க?" என்று கேள்விகளை அடிக்கினான் இனியவனு.

அவள் கூறிய பதில், அங்கிருந்த அனைவரையும் அடியோடு ஆட்டம் காண செய்தது.

"அபார்ஷன் பண்ண போயிருந்தேன்"

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top