70 நித்திலாவின் சந்தேகம்

70 நித்திலாவின் சந்தேகம்

இனியவன் அறைக்குச் செல்ல ஆர்வமாய் காத்திருந்தான். இன்று அவனுக்கு முதலிரவு. அவனுடைய அறை, அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருந்ததால், அவன் விருந்தினர் அறையிலும், ஆழ்வி அறையிலும் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள்.

அப்பொழுது அவனுக்கு குருவிடம் இருந்து கைபேசி அழைப்பு வந்தது.

"ஹலோ குரு..."

"இது உண்மையா?"

"எது?"

"இன்னைக்கு உனக்கு ஃபர்ஸ்ட் நைட்டா?"

"அதனால?"

"ஒன்னும் இல்ல. சும்மா தான் கேட்டேன்"

இனியவனின் மனதில் ஒரு கேள்வி உதித்தது.

"உனக்கு எப்படி தெரியும்? உனக்கு யார் சொன்னது?"

அதைக் கேட்ட குரு திகைப்படைந்தான். அவர்களது முதலிரவை பற்றி தனக்கு கூறியது பார்க்கவே என்று எப்படி அவன் கூறுவான்? முதலிரவை பற்றி பேசும் அளவிற்கு அவனும் பார்கவியும் நெருக்கமானவர்களாக என்ற கேள்வி அதன் மனதில் எழுமே!

"அப்படின்னா இன்னைக்கு உண்மையாவே உனக்கு ஃபர்ஸ்ட் நைட் தானா?" என்று சமாளித்தான்.

இனியவன் அமைதியாய் இருந்தான்.

"நீ எல்லார் முன்னாடியும் ஆழ்வியை உன்னோட ஒய்ஃப்பா ஏத்துக்கிட்ட. அதனால இன்னிக்கு உங்க வீட்ல உனக்கு ஃபர்ஸ்ட் நைட் அரேஞ்ச் பண்ணி இருப்பாங்கன்னு கெஸ் பண்ணினேன்"

"ம்ம்ம்..."

"நெஜமாவா?"

"நெஜமா தான்..."

"ஹேவ் எ நைஸ் டே... பை..."

"பை" என்று அழைப்பை துண்டித்தான் இனியவன்.

அப்பொழுது அங்கு வந்த நித்திலா,

"இன்னு, நீ உன் ரூமுக்கு போகலாம்" என்றாள்.

தன் அறைக்கு வந்த இனியவன், ஆழ்வி தன் கட்டிலில் அமர்ந்திருக்க கண்டான். கதவை சாத்தி தழிட்டுவிட்டு, அவளை பார்த்த படி நின்றான். மெல்ல தன் கண்களை உயர்த்தி அவனை பார்த்த ஆழ்வி, அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து மீண்டும் தலை குனிந்து கொண்டாள்.
அவளை நோக்கி மெல்ல நகர்ந்தான் இனியவன். தங்களுக்கு இடையில் இருந்த இடைவெளியை கொன்று, அவளுக்கு முன்னாள் அமர்ந்தான்.

"நீ ரெடியா?" என்று அவன் கேட்ட தொனி, அவளை மயக்கும் விதத்தில் இருந்தது.

அவனுக்குள் அறாத ஆர்வம் பொங்கி பெருகியது. ஆழ்வி அவனுக்குள் ஏற்படுத்தி இருந்த தாக்கம் உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெரிந்தது.

இன்பம் இழையும் முத்தத்தை அவள் தோளில் பதித்து, அவளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான் இனியவன். அதன் பின் அங்கு பேச்சுக்கு இடமில்லை.

அதே நேரம், குருவுக்கு வந்த ஒரு குறுந்தகவல் அவனை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சிறையில் இருந்த மருத்துவன் தற்கொலை செய்து கொண்டான் என்பது தான் அது.

அது இனியவனின் முதலிரவு என்பதால், குரு அவனிடம் விஷயத்தை கூறி தொந்தரவு செய்யவில்லை. அவன் துணை ஆணையரை தொடர்பு கொள்ள முயன்றான். ஆனால் அவனது அழைப்பு ஏற்கப்படவில்லை. காவல்துறை, சிறைச்சாலையில் நிகழ்ந்த தற்கொலையால் நெருப்பின் மேல் இருந்தது. வேறு வழியின்றி இரவு முழுதும் தூங்காமல் காத்திருந்தாள்.

மறுநாள் காலை

இரவு முழுதும் காத்திருந்த குரு, இனியவனுக்கு ஃபோன் செய்தான். அந்த அழைப்பை ஏற்ற இனியவன்,

"இனியா" என்ற குருவின் பதற்றமான குரலை கேட்டு கட்டிலில் எழுந்தமர்ந்தான்.

"என்ன குரு? எதுவும் பிரச்சனை இல்லயே?"

"எல்லாமே பிரச்சனை தான். டாக்டர் லாக்கப்ல சூசைட் பண்ணிக்கிட்டான்"

"என்ன சொல்ற? சூசைட் பண்ணிக்கிட்டாரனா? போலீஸ் கஸ்டடியில இருக்கும் போது எப்படி அதை செஞ்சிருக்க முடியும்?" என்றான் கோபமாய்.

"எனக்கும் ஒன்னும் புரியல இனியா. ஏசி என் காலை அட்டென்ட் பண்ணவே இல்ல. அவங்க எல்லாரும் ரொம்ப டென்ஷனா இருப்பாங்கன்னு நினைக்கிறேன். ஏன்னா இந்த விஷயம் அவ்வளவு சாதாரணமானது இல்ல"

"சரி, அவர்கிட்ட நான் பேசுறேன்" அழைப்பை துண்டித்து விட்டு நேரடியாக ஆணையருக்கு ஃபோன் செய்தான் இனியவன். அவர் அந்த அழைப்பை ஏற்றார்.

"நான் கேள்விப்பட்டது உண்மையா சார்?"

"ஆமாம். டாக்டர் சூசைட் பண்ணிக்கிட்டான்"

"இது எப்படி சார் நடந்தது?"

"தட்டை உடைச்சி கழுத்தை வெட்டிக்கிட்டான்"

"தட்டையா?"

"ஆமாம். ராத்திரி அவனுக்கு சாப்பாடு கொடுத்திருக்காங்க. சாப்பாட்டை தரையில கொட்டிட்டு, தட்டுக்கு மேல கால வெச்சி அழுத்தி உடச்சி கழுத்தை வெட்டிக்கிட்டான்"

எரிச்சலில் கண்களை மூடினான் இனியவன். கோபமாய் தன் தொடையில் தானே குத்திக் கொண்டான்

"சார், நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. டூட்டியில இருந்த உங்க ஆளுங்க எல்லாரும் நம்பிக்கையானவங்க தானே?"

"நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு புரியுது. நான் அவங்களை பேக்செக் பண்றேன். ஏன்னா, இந்த விஷயம் ரொம்ப சீரியஸா மாறிடுச்சு. உங்களுக்கு அந்த மருந்தை கொடுத்தவன் ரொம்ப பவர்ஃபுல்லானவனா இருக்கணும்னு நினைக்கிறேன். இது எங்க டிபார்ட்மெண்டுக்கு ஒரு சேலஞ்ச். இந்த விஷயத்தை நான் சும்மா விட போறதில்ல"

"தேங்க்யூ சார். இந்த விஷயத்தைப் பத்தி நான் உங்ககிட்ட தனியா பேசணும்னு நினைக்கிறேன். எனக்கு சிலர் மேல சந்தேகம் இருக்கு. இதுக்கு முன்னாடி நான் அதைப் பத்தி உங்க கிட்ட சொல்லல. ஏன்னா டாக்டர் ஸ்டேட்மென்ட்டுக்காக காத்துக்கிட்டு இருந்தேன்"

"ஒன்னும் பிரச்சனை இல்ல. இந்த கேஸ் சம்பந்தமா நீங்க எப்ப வேணாலும் என்னை மீட் பண்ணலாம்"

"தேங்க்யூ சோ மச் சார். இன்னைக்கு நான் ஆஃபீசுக்கு வரட்டுமா?"

"வேண்டாம். நீங்க என்னை ஆஃபீஸ்ல சந்திக்கிறது நல்லதில்ல. எங்க வீட்டுக்கு வந்துடுங்க"

ஆணையர் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாய் செயல்படுவதை புரிந்து கொண்டான் இனியவன்.

"ஓகே சார்" என்று அழைப்பை துண்டித்தான். ஆழ்வியை பார்த்து,

"டாக்டர் செத்துட்டான்" என்றான்.

"நீங்க யாரை சந்தேகப்படுறீங்க?"

"சீக்கிரமாவே உனக்கு நான் சொல்றேன்"

சரி என்று தலையசைத்தாள் ஆழ்வி.

"உனக்கே தெரியும், நம்ம வீட்ல இருக்கிற சுவருக்கு கூட காது இருக்கு. நம்ம ஜாக்கிரதையா இருக்கணும். நீ அதை புரிஞ்சிக்குவேன்னு நினைக்கிறேன்"

ஆம் என்று தலையசைத்தாள் ஆழ்வி.

"நீ போய் குளிச்சிட்டு வா. நான் கமிஷனரை மீட் பண்ண போகணும்"

"உங்களுக்கு அவசரமா இருந்தா, நீங்க போய் குளிச்சிட்டு வாங்க"

"இல்ல, பரவாயில்ல நீ போ"

சரி என்று தலையசைத்துவிட்டு குளியல் அறைக்குச் சென்ற ஆழ்வி, வழக்கமாய் எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட குறைந்த நேரம் எடுத்துக் கொண்டு குளித்து முடித்தாள். அவள் வெளியே வந்தவுடன் குளியலறைக்கு ஓடினான் இனியவன்.

தரைதளம் வரவில்லை ஆழ்வி. நித்திலாவும் பார்கவியும் அவர்களது முதல் இரவை வைத்து  அவளை கிண்டல் செய்வார்கள். இப்பொழுது அவள் அதையெல்லாம் ரசிக்கும் நிலையில் இல்லை. அதனால் இனியவன் வரும் வரை அவனுக்காக காத்திருந்தாள். ஆனால் அவளுக்கு தெரியாது, குரு ஏற்கனவே ஃபோன் செய்து பார்கவிக்கு விஷயத்தை கூறி விட்டான் என்பது.

இருவரும் இணைந்து தரைதளம் வந்தார்கள். அதே நேரம், பார்கவி டிவியை ஆன் செய்து, வேண்டுமென்றே செய்தி சேனலை மாற்றினாள், சிறையில் மருத்துவம் இறந்த செய்தியை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று. மருத்துவன் சிறையில் இறந்தது தான் அன்றைய சூடான செய்தி. அந்த செய்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

சித்திரவேலுடன் அமர்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்த நித்திலாபம் பாட்டியும் அந்த செய்தியை பார்த்து பேரெதிர்ச்சிக்கு உள்ளானார்கள். சித்திரவேலை நோக்கி பிஸ்கட்டுகள் வைக்கப்பட்டிருந்த தட்டை நீட்டிய நித்திலாவின் கரங்கள், அந்த செய்தியை பார்த்து அப்படியே நின்றது.

முதல் நாள் சித்திரவேலுக்கு வந்த அழைப்பை அவளால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

*டாக்டர் வாயை திறக்க மாட்டான்*

அவளது பார்வை அனைச்சையாய் சித்திரவேலின் பக்கம் திரும்பியது. அவன் முகத்தில் எள்ளளவும் அதிர்ச்சி காணப்படவில்லை. மாற்றமில்லாத அவனது முகம், நித்திலாவின் முகத்தை யோசனையுடன் சுருங்கச் செய்தது. இனியவனும் ஆழ்வியும் கூட சந்தேகமில்லாமல் அவனைத்தான் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

இனம் புரியாத பதற்றம் நித்திலாவின் மனதை ஆட்கொண்டது. முதல் நாள் கைபேசியில் பேசிய மனிதன் கூறியது அவளுக்கு நன்றாக நினைவிருந்தது. அதில் அவளுக்கு துளியும் சந்தேகமில்லை.

*டாக்டர் வாயை திறக்க மாட்டான்.*

அவளது குரலை கேட்ட பிறகு, ராங் நம்பர் என்று கூறி அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது.

எதிரில் இருப்பது யார் என்றே தெரியாமல் அப்படி ஒரு விஷயத்தை எப்படி ஒருவனால் கூற முடியும்? அது தற்செயலாக நிகழ்ந்ததாக இருந்தாலும், அடுத்த நாளே எப்படி மருத்துவன் சிறைச்சாலையில் இறக்க முடியும்? இங்கு என்ன நடக்கிறது? புள்ளிகளை இணைத்த அவளது இதயம் நடுங்கியது. ஆனால் அவளால் என்ன செய்து விட முடியும்? அவள் எந்த முயற்சியும் மேற்கொள்ளாமலேயே அனைத்துப் புள்ளிகளும் தானாய் இணைந்தன. அவளுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது. உடல் வியர்த்துக் கொட்டியது. அவள் சந்தேகப்படுவது உண்மையாக இருக்கக் கூடாது என்று இறைவனை வேண்டினாள் நித்திலா.

"இன்னு, இந்த நியூஸை பாரு" என்றார் பாட்டி.

"நான் ஏற்கனவே கமிஷனர் கிட்ட பேசிட்டேன் பாட்டி. அவரைப் பார்க்கத்தான் போய்க்கிட்டு இருக்கேன்" என்றான் இனியவன்.

நித்திவை பார்த்த இனியவனுக்கு அவள் ஏதோ அவஸ்தையில் இருப்பது புரிந்தது.

"கவலைப்படாதீங்க கா, நான் சீக்கிரமாவே அந்த கிரிமினலை கண்டுபிடிச்சிடுவேன். இந்த டாக்டர் வெறும் அம்பு தான். அதை எய்தவன் எங்கேயோ ஒளிஞ்சுகிட்டு இருக்கான். சீக்கிரமாவே அவன் பிடிப்படுவான்" என்றான்.

மெல்ல தலையசைத்தாள் நித்திலா.

"ஏதாவது சாப்பிட்டுட்டு போ இன்னு" என்றார் பாட்டி.

"இல்ல பாட்டி, கமிஷனர் வீட்ல இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி நான் போய் அவரை மீட் பண்ணணும். அவரைப் பார்த்ததுக்கு பிறகு, வழியில  ஏதாவது சாப்பிட்டுக்குறேன்"

பாட்டி சரி என்று தலையசைத்தபின், இனியவன் அங்கிருந்து கிளம்ப எத்தனித்த போது, அவனை நிறுத்தினாள் நித்திலா.

"இன்னு..."

"சொல்லுங்க அக்கா"

"ஜாக்கிரதையா இரு. இந்த விஷயம் ரொம்ப ஆபத்தானதா தெரியுது. ஒருத்தன் போலீஸ் கஸ்டடியில் இருக்கும் போது இறந்து இருக்கான். இது சாதாரண விஷயம் இல்ல. அவங்க எதையும் செய்ய துணிஞ்சவங்க போல தெரியுது. இதுக்கு முன்னாடி இருந்ததைவிட நீ ஜாக்கிரதையா இருக்கணும்" என்றாள் நித்திலா, சித்திரவேலின் முகபாவத்தை கவனித்தவாறு. அவன் பொய்யான அக்கறையோடு ஆம் என்று தலையசைத்தான்.

"சரிக்கா" என்று அங்கிருந்து கிளம்பினான் இனியவன்.

அவர்களுடன் அமர்ந்து கொண்ட ஆழ்வி, நித்திலாவின் முகத்தில் இருந்த பதற்றத்தை கவனித்தாள். அது மருத்துவரின் மரணத்தால் ஏற்பட்ட பதற்றமாக இருக்கும் என்று அவள் எண்ணினாள். ஆனால் அதன் பிறகு நித்திலா யாரிடமும் எதுவும் பேசவில்லை. அது ஆழ்வியை குழப்பியது.

"நித்தி, நான் கோர்ட்டுக்கு கிளம்பணும். எனக்கு இன்னைக்கு ஒரு இம்பார்டன்ட் ஹியரிங் இருக்கு" என்றான் சித்திரவேல்.

சரி என்று தலையசைத்தாள் நித்திலா. அவன் அங்கிருந்து செல்லும்வரை காத்திருந்த அவள், 

"பாட்டி, எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. நான் என் ரூமுக்கு போறேன்" என்றாள்.

பாட்டி தலையசைக்கவும், தன் அறைக்கு சென்று கதவை சாத்தி தாழிட்டுக் கொண்டாள்.  சித்திரவேலின் டைரியை எடுத்து எந்த பதற்றமும் இல்லாமல் பொறுமையாய் அதை சோதித்தாள். அதில் சந்தேகப்படும் அளவிற்கு எதுவும் இல்லை. நிம்மதி பெருமூச்சு விட்டாள். அவனது பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாக சோதித்து பார்த்தாள். அவனது அலமாரியில் இருந்த அவனது வங்கி கணக்கு புத்தகம் அவள் கண்ணில் பட்டது. அதில் இருந்தது வெறும் மூன்று லட்சம் மட்டுமே. கட்டிலில் அமர்ந்து தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்ட அவள், தன் இதயம் பலமாய் துடிப்பதை கேட்டாள். ஏனோ தெரியவில்லை, அவள் மனதில் அமைதி இல்லை. சித்திரவேலுக்கு வந்த அந்த கைபேசி அழைப்பிலேயே அவளது மனம் மூழ்கி இருந்தது. எவ்வளவு முயன்றும் அவளது மனம் அமைதி அடையவில்லை. இறுதியாய், சித்திரவேலின் கைபேசியை சோதித்துப் பார்ப்பது என்ற முடிவுக்கு வந்தாள் நித்திலா.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top