63 இனியவனின் கோபம்
63 இனியவனின் கோபம்
"நீ என் மனைவியா?" என்று கேள்வியை எழுப்பி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தான் இனியவன்.
தனது சேலை முந்தானையை பயத்தோடு இறுக பற்றினாள் நித்திலா. இனியவனின் இந்த திடீர் நடவடிக்கைக்கு என்ன காரணம் என்று ஆழ்விக்கு புரியவில்லை. அன்று அலுவலகத்தில் அவர்களுக்கு இடையில் நடந்த உரையாடலை அவள் எண்ணிப் பார்த்தாலள். தேவைப்படாத வரை அவள் எதுவும் பேசுவதில்லை என்று முடிவுக்கு வந்தாள். ஏனென்றால் இந்த சூழ்நிலையை கையாள வேண்டியவர்கள் இனியவன் குடும்பத்தினர் தான். அவள் அதில் தலையிடுவதை இனியவன் விரும்ப மாட்டான்.
"கேக்குறதுக்கு பதில் சொல்லு, ஆழ்வி" என்று வீடு அதிரும்படி கத்தினான் இனியவன்.
"நான் என்ன சொல்றேன்னா" என்று ஓரடி முன்னாள் வந்தான் சித்திரவேல். இனியவனின் கோபப்பார்வை அவன் வாயை மூடச் செய்தது.
"செல்வம்..." என்று குரல் எழுப்பினான் இனியவன்.
அனைவது பார்வையும் கதவின் பக்கம் திரும்பியது. ஆழ்வியின் அண்ணனான சொல்லின்செல்வன் தலைகுனிந்தபடி உள்ளே நுழைந்தான். அவன் அப்பொழுதும் குடித்திருந்தான் தான். ஆனால் தள்ளாட்டம் போட்டும் அளவிற்கல்ல. அங்கு எதிர்பாராத அந்த நபரை பார்த்த அனைவரும் திடுக்கிட்டார்கள். என்ன நடந்திருக்கக்கூடும் என்பதை கணிப்பதில் அவர்களுக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. இந்த குடிகாரன் அனைத்தையும் உளறிவிட்டு இருப்பான்.
"என்கிட்ட என்ன சொன்னியோ அதை இவங்ககிட்ட சொல்லு" என்றான் இனியவன்.
"நான் ஆழ்வியோட அண்ணன். ஆழ்வியும் உங்க தங்கச்சியும் ஃபிரண்ட்ஸ். நீங்க என் தங்கச்சியோட ஹஸ்பெண்ட். உங்களுக்கு பைத்தியம் பிடிச்சிருந்தப்ப என் தங்கச்சியோட உங்களுக்கு கல்யாணம் ஆச்சு. ஏன்னா, அவ உங்க வீட்டுக்கு வந்தப்ப நீங்க அவளை ரேப் பண்ணிட்டீங்க"
"நான் ரேப் பண்ணதுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்க நினைச்சாளா ஆழ்வி?"
"இல்ல, உங்க அக்கா தான் ஆழ்வி உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சாங்க. அவங்களுக்கு ஆழ்வியை ரொம்ப பிடிச்சிருந்தது"
இனியவன் நித்திலாவை நோக்கி திரும்ப, அவள் தலை குனிந்து கொண்டாள்.
"இவன் சொல்றது உண்மையா கா?" என்று நித்திலாவை நோக்கி நடந்தான் இனியவன்.
அவனது குரல் என்னவோ சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால் அதில் அருவருப்பு தெரிந்தது.
"நான் பைத்தியமா இருந்தேனா?" என்று அவன் கேட்க, திடுக்கிட்டு அவனை ஏறிட்டாள் நித்திலா. அவளது கண்கள் கலங்கியிருந்தன.
"நான் கோமாவில் இருந்ததா தானே எல்லாரும் சொன்னீங்க?"
"உங்களை காயப்படுத்த வேண்டாம்னு தான் நாங்க அந்த உண்மையை உங்ககிட்ட மறைச்சோம்" என்றான் சித்திரவேல்.
"ஓஹோ... நீங்க என்னை காயப்படுத்த வேண்டாம்னு நினைச்சிங்க. அப்போ, ஆழ்வியை மட்டும் காயப்படுத்தலாமா? எப்படி அவளை ஒரு பைத்தியக்காரனுக்கு நீங்க கல்யாணம் பண்ணி வச்சீங்க? அது அவளை காயப்படுத்தாதா? உங்க கையில பணம் இருக்கு. அதுக்காக, உங்க பைத்தியக்கார தம்பிக்காக, நீங்க அந்த பொண்ண ஒரு கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கினீங்களா?"
அதைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்ற சொல்லில் செல்வனை ஏறிட்டாள் ஆழ்வி. நித்திலா அவர்களுக்கு கொடுத்தது வெறும் இருபது லட்சம் என்று தானே அவனது அம்மா கற்பகம் கூறியிருந்தார்? அதை பற்றி தெரியாத இனியவன், உண்மையை போட்டு உடைத்து விட்டான். அப்படி என்றால், அவனது அம்மா அவனிடம் பொய் கூறினாரா? ஒரு கோடியை பெற்றுக் கொண்டு, வெறும் இருபது லட்சம் என்று தன்னிடம் பொய் உரைத்த அவனது அம்மா, எவ்வளவு பெரிய கைக்காரி...!
"எங்களுக்கு வேற வழி இல்லாம தான் உனக்கு கல்யாணம் பண்ணி வச்சோம்" என்றாள் நித்திலா.
"எனக்கு ஆச்சரியமா இருக்குக்கா... என்னை அட்வான்ஸ் ட்ரீட்மென்ட்க்கு கூட்டிகிட்டு போறத விட்டுட்டு, எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு உங்களுக்கு எப்படி தோணுச்சு? கேட்கவே காமெடியா இருக்கு... நான் இந்த சென்னையில இருக்கிற பணக்காரங்கள்ல ஒருத்தன். பணத்தை செலவு பண்ணி எனக்கு நல்ல ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்க முடியும். ஆனா நீங்க எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்க. கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லயே"
"உங்க கௌரவம் கெட்டுப் போயிடும்னு நாங்க பயந்தோம். அதனால் தான் உங்களை வீட்டை விட்டு எங்கேயும் கூட்டிகிட்டு போகல" என்றான் சித்திரவேல்.
"கௌரவமா? மண்ணாங்கட்டி... நான் பைத்தியமா இருக்கிறதை பத்தி உங்களுக்கு கவலை இல்ல. ஆனா என் கௌரவத்தை பத்தி ரொம்ப கவலை பட்டீங்களா?" சீறினான் இனியவன்.
இப்படி ஒரு நேரடியான தாக்குதலை ஒருநாள் இனியவனிடமிருந்து எதிர்கொள்வோம் என்பதை சித்திரவேல் நிச்சயம் எதிர்பார்த்து இருக்க மாட்டான். அவன் தன் திருமணத்தைப் பற்றி தெரிந்து கொண்டதற்கே இவ்வளவு கோபப்படுகிறான் என்றால், அவனுக்கு தவறான சிகிச்சை அளித்தது தெரிந்தால் அவன் என்ன செய்வான் என்று எண்ணிய சித்திர வேலைக்கு வியர்த்துக் கொட்டியது.
"எந்த நம்பிக்கையில கா இதை நீங்க செஞ்சீங்க? ஒருவேளை நான் குணமாகாமலே போயிருந்தா ஆழ்வியோட நிலைமை என்ன ஆகியிருக்கும்? ஒரு பைத்தியத்துக்கு காலம் பூரா அவ சேவை செஞ்சிகிட்டே இருக்கட்டும்னு நினைச்சீங்களா?"
"இல்ல இன்னு, ஆழ்வி வந்ததுக்கு பிறகு நீ எந்த அளவுக்கு வேகமா இம்ப்ரூவ் ஆனேன்னு உனக்கு தெரியாது. ஒவ்வொரு நாளும் உன்கிட்ட ஏராளமான மாற்றங்கள் தெரிஞ்சுகிட்டே இருந்தது. உன் கல்யாணத்துக்கு முன்னாடி பொம்பளைங்கள பார்த்தாலே அவங்க மேல பாய்ஞ்சுக்கிட்டு இருந்த நீ, ஆழ்வி வந்ததுக்கு அப்புறம் அப்படி செய்றத அடியோட நிறுத்திட்ட. நீ ஆழ்வியை தவிர வேற யாரையும் திரும்பி கூட பாக்கல"
"ஆமாம் அண்ணா, நாங்க உன் காட்டுத்தனமான நடவடிக்கையை பார்த்து, உன் ரூமுக்கு பக்கத்துல வரவே பயந்தோம். ஆனா உன் கல்யாணத்துக்கு பிறகு, உன் ரூமுக்கு போக சொல்லி ஆழ்வி என்கிட்ட கேட்டா. நான் பயந்துக்கிட்டே தான் உன் ரூமுக்கு வந்தேன். ஆனா நீ என்னை திரும்பி கூட பாக்கல. ஆழ்வியைத்தான் பெயர் சொல்லிக் கூப்பிட்ட"
"நீங்க எல்லாரும் என் ரூமுக்கு வர பயந்திருக்கீங்க. ஆனா ஆழ்வியை பத்தி உங்களுக்கெல்லாம் கவலை இல்ல. அவ என்ன பலிகடாவா? அவளை விலை கொடுத்து வாங்குற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது? நீங்க அவங்க அம்மாவுக்கு ஒரு கோடி ரூபா கொடுத்திருக்கீங்க. பேராசை புடிச்ச அவங்க அம்மாவும் பணத்துக்காக அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. உங்க பைத்தியக்கார தம்பிக்கு ஒரு பொண்ணு கிடைச்சிட்டா. அவங்க அம்மாவுக்கு பணம் கிடைச்சிது. ஆனா ஆழ்விக்கு கிடைத்தது என்ன? இதையே நீங்க பார்கவிக்கு செய்வீங்களா? நான் அடிச்சு சொல்லுவேன், நிச்சயமா உங்களால் செய்ய முடியாது. ஏன்னா, அவ உங்க தங்கச்சி"
"அப்படி சொல்லாத இன்னு. நான் எப்பவுமே பார்கவியையும் ஆழ்வியையும் சமமா தான் பார்த்திருக்கேன். உண்மையை சொல்லப் போனா, ஆழ்வி தான் எனக்கு எல்லாரையும் விட முக்கியம். ஏன்னா, இந்த குடும்பத்துக்காக அவங்க என்ன கொடுத்திருக்காங்கன்னு எனக்கு தெரியும். எல்லாத்தையும் விட, நான் உன்னை நம்பினேன். உனக்கு ஆழ்வியை பிடிக்கும்னு எனக்கு நம்பிக்கை இருந்தது"
"எதை வச்சு நீங்க நம்புனீங்க? ஒருவேளை நான் ஏற்கனவே ஒரு பொண்ணை காதலிச்சு இருந்தா நீங்க என்ன செஞ்சிருப்பீங்க?"
"இன்னு, உன் கோவம் நியாயமானது தான். ஆமாம், நான் தப்பு செஞ்சேன். ஏன்னா, உன்னை அந்த மாதிரி ஒரு நிலைமையில என்னால பார்க்க முடியல. உன்னை எப்படியாவது குணப்படுத்தணும்னு நினைச்சேன். அதுக்காக என்ன வேணாலும் செய்ய தயாரா இருந்தேன். தப்பு, சரி, எதைப் பத்தியும் யோசிக்கிற நிலைமையில நான் இல்ல. நீ என்னை ஏமாத்த மாட்டேன்னு நினைச்சேன்"
"அக்கா, நீங்க எதார்த்தத்தை புரிஞ்சுக்கலன்னு நினைக்கிறேன். ஒருவேளை எனக்கு ஆழ்வியை பிடிக்கலைன்னா என்ன ஆகும்? எங்க வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்?"
"நான் மட்டும் அப்படி செய்யாம இருந்திருந்தா, நீ வாழ்நாள் முழுக்க பைத்தியமா இருந்திருப்ப. அப்படி பைத்தியமா இருக்கிறதை விட, விருப்பமில்லாத மனைவியோட வாழுறது மேலுன்னு தோணுச்சு. இன்னு, நீ ரொம்ப புத்திசாலி. நீ நல்லா இருக்கணும்னு, உனக்காக பாடுபட்ட ஒரு பொண்ணை நீ கைவிட மாட்டேன்னு நான் நம்பினேன். நீ அவளுக்கு நன்றி உள்ளவனா இருப்பேன்னு நினைச்சேன். அதனால தான் நான் ஆழ்வியை நெருப்புல தூக்கி போட்டேன். உன் வாழ்க்கையில முடிவெடுக்கிற உரிமை எனக்கு இல்லன்னு சொன்னா, தயவுசெஞ்சி என்னை மன்னிச்சிடு. நான் இதை உன்கிட்ட எதிர்பார்க்கல"
"நானும் இதை உங்ககிட்ட எதிர்பார்க்கல கா. என் வாழ்க்கையில முடிவெடுக்குற உரிமை உங்களுக்கு இருக்கு. ஆனா ஒரு பொண்ணோட வாழ்க்கையை நெருப்புல போடுற உரிமை உங்களுக்கு இல்ல. நான் காட்டுத்தனமாக இருந்திருக்கேன். பார்க்கிற பொம்பளைங்க மேல பாய்ஞ்சிருக்கேன். அப்படிப்பட்ட என்கிட்ட ஒரு பொண்ண அனுப்ப உங்களுக்கு எப்படிக்கா மனசு வந்தது? அந்த பொண்ண நினைச்சு உங்களுக்கு கவலை இல்லயா? அவளுக்கு என்னை பிடிச்சிருந்துதுன்னு உங்களால சொல்ல முடியுமா?"
"கல்யாணத்துக்கு முன்னாடி உன்னை அவங்களுக்கு பிடிக்காம இருந்திருக்கலாம். ஆனால் கல்யாணத்துக்கு பிறகு அவங்க உன்னை நேசிக்க ஆரம்பிச்சாங்க"
"அவளுக்கு வேற வழி இல்ல" என்றான் கோபமாய்.
"இல்ல, அவங்களுக்கு வேற வழி இருந்தது. உன்னை பார்த்துக்க சொல்ற தைரியம் கூட எங்க யாருக்கும் இல்லாம இருந்தது. ஆனா அவங்க தான் உன்னை கவனிச்சிக்க ஆரம்பிச்சாங்க"
"அவ எதுக்குக்கா என்னை பாத்துக்கணும்? என் குடும்பத்தை சேர்ந்தவங்களே பல காரணங்களுக்காக என்கிட்ட இருந்து விலகி இருந்தப்போ, அவ என்கிட்ட வரணும்னு என்னக்கா அவசியம் இருக்கு? அவ யாரு எனக்கு?"
"அவ உனக்கு யாரும் இல்ல. அதனால தான் அவளை உனக்கு கல்யாணம் பண்ணி வச்சு உன்னோட மனைவியாக்கினேன்"
"கட்டாயப்படுத்தி மனைவியாக்குனிங்க. கட்டாயப்படுத்தி எனக்காக விஷயங்களை செய்ய வச்சீங்க. கட்டாயப்படுத்தி என்னை காதலிக்க வச்சிங்க"
நித்திலா பெருமூச்சு விட்டாள். அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று புரியவில்லை.
"உங்களை காதலிக்க சொல்லிசொல்லி யாரும் என்னை கட்டாயப்படுத்தல . கட்டாயப்படுத்தி யாரையும் காதலிக்க வைக்க முடியாது" என்றாள் ஆழ்வி.
உள்ளுக்குள் சிரித்தான் இனியவன். அவர்களது பேச்சுக்குள் ஆழ்வி வரவேண்டும் என்று எண்ணினான் அவன். அப்பொழுது தான் அவள் கூற வேண்டியதை அவள் கூற முடியும். அதே நேரம், தன் குடும்பத்தை சார்ந்த யாரும் ஆழ்வி அமைதியாய் இருப்பதை பார்த்து சந்தேகம் கொள்ளக்கூடாது என்றும் எண்ணினான். மேலும், சொல்லின் செல்வன் அந்த விஷயத்தின் தீவிரத்தை உணர வேண்டும் என்று நினைத்தான்.
"ஆமாம், ஆரம்பத்தில் உங்களை கல்யாணம் பண்ணிக்க நான் விருப்பம் இல்லாம தான் இருந்தேன். ஆனா கல்யாணத்துக்கு பிறகு, என்னோட கடமையை நான் முழு மனசோட செஞ்சேன். நான் உன்கிட்ட நெருங்கி வந்ததுக்கு பிறகு உங்ககிட்ட நல்ல முன்னேற்றம் தெரிஞ்சிது"
"நான் உன்னை என் வைஃபா ஏத்துக்கலன்னா நீ என்ன செய்வ?" என்று வேண்டுமென்றே அந்த கேள்வியை கேட்டான் இனியவன்.
"நீங்க எனக்கு கொடுத்த எல்லாத்தையும் உங்ககிட்ட திருப்பி கொடுத்துட்டு நான் இங்கிருந்து போயிடுவேன்" என்றாள் ஆழ்வி திடமாய்.
அவளுக்கு அளித்த சொத்தைப்பற்றி பேசுகிறாள் என்று இனியவனுக்கு புரிந்தது.
"இங்கிருந்து போனதுக்கு அப்புறம் என்ன செய்வ?"
"அதைப் பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம்" என்று சொல்லில் செல்வனை நோக்கி நடந்த ஆழ்வி,
"இங்க நடந்ததை உங்க அம்மாகிட்ட போய் சொல்லு. அவங்களோட பேராசையோட விளைவு என்னன்னு அவங்களுக்கு சொல்லு. நான் அவங்க வீட்டுக்கு வந்துடுவேன்னு பயப்பட வேண்டாம்னு சொல்லு" என்றாள்.
இனியவனை ஏறிட்டான் சொல்லின் செல்வன்.
"நீ அவரை பார்க்க வேண்டிய அவசியம் இல்ல. நமக்கே நல்லா தெரியும், இந்த கல்யாணம் சட்டப்படி செல்லாதுன்னு. அதனால நம்ம அவரை குறை சொல்ல முடியாது" என்றாள்.
இனியவன் நித்திலாவை பார்க்க, அவள் இயலாமையோடு கண்களை மூடினாள்.
"நீ கெளம்பு" என்று ஆழ்வி கூறியவுடன் அங்கிருந்து சென்றான் சொல்லின் செல்வன். அவனது மனம் தன் தங்கையின் கையாலாகாத நிலையை பற்றி யோசிக்காமல், ஒரு கோடி ரூபாயை பற்றிய யோசித்துக் கொண்டிருந்தது. தன் அம்மாவை சந்திக்க நேரடியாக தன் வீட்டை நோக்கி பயணமானான் சொல்லின் செல்வன்.
"உங்ககிட்ட நான் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லணும். ஏன்னா நீங்க அதைப்பத்தி தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்" என்றாள் ஆழ்வி.
இனியவன் நிம்மதி பெருமூச்சு விட்டான். ஆழ்வி சரியான பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கிறாள். தன் கைகளை கட்டிக் கொண்டு அவளை பார்த்தபடி நின்றான்.
"நீங்க என்கூட இருந்ததால மட்டும் இம்ப்ரூவ் ஆகல"
"வேற?"
"உங்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்த டாக்டர், உங்களுக்கு ஒரு மோசமான மருந்தை கொடுத்து உங்களுக்கு வெறி பிடிக்க வச்சிக்கிட்டிருந்தார். அந்த மருந்து தான் நீங்க வெறித்தனமா நடந்துக்கிட்டதுக்கு காரணம். நமக்கு கல்யாணம் ஆனதுக்கு பிறகு அந்த மருந்தை நான் உங்களுக்கு கொடுக்கறதை நிறுத்திட்டேன். அதனால் தான் உங்ககிட்ட ஒரு முன்னேற்றம் தெரிஞ்சிது"
"என்ன சொல்ற நீ?" என்றான் அதிர்ச்சியோடு.
"ஆமாம், குரு அண்ணா அந்த டாக்டரை போலீஸ்ல ஒப்படைச்சாரு. ஆனா கொஞ்ச நாளிலேயே அவர் ரிலீஸ் ஆயிட்டாரு"
"ஆனா ஏன்?"
"அவரை போலீஸ் லீகலா அரெஸ்ட் பண்ணல"
"ஏன் அப்படி செஞ்சாங்க?"
"ஏன்னா சித்திரவேல் அண்ணன் இந்த விஷயத்தை ஃபைல் பண்றதுக்கு விரும்பல. ஏன்னா, நீங்க பைத்தியமா இருக்கீங்கன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடும்னு அவர் அப்படி செய்யாம விட்டுட்டாரு"
"வாட் த ஹெல்?" என்று தன் கண்களை சுழற்றினான் இனியவன் எரிச்சலோடு.
"எனக்கு ஒரு விஷயம் புரியல. ஒரு லாயரா இருந்துகிட்டு எப்படி இவ்வளவு மோசமான ஒரு கிரிமினலை எஸ்கேப் ஆக விட்டிங்க? அதுவும் அவன் எவ்வளவு மோசமான ஆளுன்னு தெரிஞ்ச பிறகு...?"
நித்திலாவை பார்த்த இனியவன்,
"இவர் கேசை ஃபைல் பண்ண வேண்டாம்னு நினைச்சார்... நீங்க எல்லாரும் அதுக்கு ஒத்துக்கிட்டீங்க. என்னால இதை நம்ப முடியல. என் குடும்பத்துல இருக்கிறவங்க எல்லாம் ரொம்ப புத்திசாலின்னு நினைச்சேன் ஆனா நான் நினைச்சது ரொம்ப பெரிய தப்பு" அவனுடைய குரல் கிண்டலாய் ஒலித்தாலும் அதில் ஏமாற்றம் தெரிந்தது.
சித்திரவேல் அமைதியாய் நிற்க, அனைவரும் அவனைப் பார்த்து முறைத்தார்கள்.
ஆழ்வியோ, இப்பொழுது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்பது போல் இனியவனை பார்த்துக் கொண்டு நின்றாள்.
அனைவரும் அவனையே பதட்டத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் என்ன சொல்லப் போகிறான் என்று புரியாமல்.
தன் கைபேசியை எடுத்து குருவுக்கு ஃபோன் செய்த இனியவன்,
"அந்த டாக்டர் உடனே அரெஸ்ட் ஆகணும்" என்றான்.
"எந்த டாக்டர்?" என்றான் குரு.
"உனக்கு எதுவுமே தெரியாத மாதிரி நடிக்காத குரு. எனக்கு எல்லாமே தெரிஞ்சு போச்சு. நான் பைத்தியமா இருந்ததும் தெரியும், எனக்கு ஆழ்வியோட கல்யாணம் நடந்ததும் தெரியும்" என்று கத்தினான்.
தான் அமர்ந்திருந்த நாற்காலியை விட்டு திடுக்கிட்டு எழுந்தான் குரு. அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? இதற்காகத்தான் தன் வீட்டிற்கு யாரையோ வரச் சொல்லி அழைத்தானா இனியவன்? யாரது? அவர் தமிழரசியாக இருக்குமோ? இல்லை, இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், அந்த நபரிடம் அவன் மரியாதையாக பேசவில்லை. அப்படி இருக்கும் பொழுது, அது யாராக இருக்கும்?
"ரெடியாகு, நான் வரேன். அந்த டாக்டருக்கு ரியல் டார்ச்சர்னா என்னன்னு நான் காட்டுறேன். அதோடு மட்டுமில்லாம, இதுக்கு பின்னாடி இருக்கிறவன் யாருன்னு எனக்கு தெரிஞ்சாகணும்" என்று சித்திரவேலின் மீது தன் கண்களை ஓட்டினான். அவன் கொட்டிய வியர்வையை துடைத்துக் கொண்டிருந்தான்.
அழைப்பை துண்டித்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினான் இனியவன், தன் வீட்டை புயல் அடித்து ஓய்ந்த காடு போல் மாற்றி...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top