62 யார் நீ?
62 யார் நீ?
ஆழ்வியுடன் ஐந்து நட்சத்திர ஓட்டலை விட்டு கிளம்பினான் இனியவன். அவன் ஏதோ ஒரு சிந்தனையுடன் கார் ஓட்டுவதை கவனித்த ஆழ்வி,
"எதுவும் பிரச்சனை இல்லயே?" என்றாள்.
"அப்படித்தான் நினைக்கிறேன்"
அப்பொழுது அவனுக்கு மீண்டும் குருவிடமிருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று,
"சொல்லு குரு" என்றான்.
"இனியா, ராஜா சர்மா சிங்கப்பூர்ல இருக்காரு"
"ஆனா நீ அவர் மும்பைல இருக்கிறதா சொன்னியே?"
"அவரு போன வாரம் மும்பைக்கு போனாரு. அதனால அவர் அங்க இருப்பார்னு நினைச்சேன். ஆனா அங்கிருந்து அவர் சிங்கப்பூருக்கு ரெண்டு நாளுக்கு முன்னாடி கிளம்பி போனாராம்"
"எதுக்காக அங்க போனாரு? "
"அவங்க அக்கா அங்க தானே செட்டில் ஆகி இருக்காங்க? அவங்க பையனோட கல்யாணம் மூணு நாள்ல நடக்க போகுதாம். அதுக்காக போயிருக்காரு"
"ரீனா என்ன ஆனா?"
"அவ சித்தார்த்தை பார்க்க ஹாஸ்பிடலுக்கு ஓடியிருக்கா"
"நம்ம ஆளுங்க அவளை ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்காங்களா?"
"ஆமாம் ராஜா சர்மாவையும் கவனிக்க ஒரு ஆளை ஏற்பாடு பண்ணி இருக்கேன்."
"நாங்க ஆஃபீசுக்கு வறோம்"
"அப்போ நம்ம நேரில பேசிக்கலாம்"
"சரி" என்று அழைப்பை துண்டித்தார்கள்.
"சித்தார்த்துக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு" என்றான் இனியவன்.
"ஐயையோ" என்று விழி விரித்தாள் ஆழ்வி.
"அவன் ஹோப்லெஸ் கண்டிஷன்ல இருக்கான்"
"அட கடவுளே..." என்று எதையோ யோசித்த ஆழ்வி,
"இது உண்மையிலேயே ஆக்சிடென்ட்டா இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்களா?"
"இல்லாம இருக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு"
"என்ன வாய்ப்பு?"
"அவன் ரீனாவோட பாய் ஃப்ரெண்ட்"
"நீங்க ராஜா ஷர்மா இதை செஞ்சுருபாருன்னு நினைக்கிறீங்களா?"
"இருக்கலாம்"
"ஏன் அப்படி நினைக்கிறீங்க?"
"ரீனாவ அவர் கல்யாணம் பண்ணிக்கும் போது அவருக்கு 47 வயசு. பிசினஸ்ல ரொம்ப இன்ட்ரஸ்ட் இருந்ததால, அவர் கல்யாணம் பண்ணிக்கணும் அப்படிங்கற எண்ணமே இல்லாம இருந்தாரு. யங்ஸ்டர்ஸ்க்கு ஐடியலா இருக்கணும்னு அவர் நினைச்சாரு. அதை அவரே ஒரு கான்ஃபரன்ஸ்ல சொன்னாரு. எனக்கு கூட அவர் தான் இன்ஸ்பிரேஷன். அப்போ தான் ரீனா அவரோட கம்பெனியில வேலைக்கு சேர்ந்தா. அவ அழகுல மயங்கி அவ மேல காதல் வயப்பட்டார். ரீனா நிறைய கனவுகளோடு இருந்த ஒரு மிடில் கிளாஸ் பொண்ணு. அவ ஒரு தனக்கு பொருத்தமான ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு வசதியா வாழணும்னு ஆசைப்பட்டா. ராஜா சர்மாவுக்கு அவ எந்த முக்கியத்துவமும் கொடுக்கல. அவளுக்கு ஒரு வயசானவனை கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பம் இல்ல. அவ நம்ம கம்பெனில, என்னோட பிஏ வா சேரணும்னு முயற்சி பண்ணி, இன்டர்வியூல கூட கலந்துகிட்டா. அவ அதுல செலக்ட்டும் ஆனா..."
"நெஜமாவா?"
"ஆமாம், அவள் உண்மைவே திறமைசாலி தான்"
"அப்புறம் என்ன ஆச்சு?"
"அவ வேலையை விட்டு போக போறான்னு தெரிஞ்சு, ராஜா ஷர்மா நேரடியா அவங்க பேரென்ட்ஸ் கிட்ட போய் பேசி அவளை விலை கொடுத்து வாங்கிட்டாரு... எங்க அக்கா உன்னை வாங்கின மாதிரி..."
ஆழ்வியின் முகம் உம்மென்று ஆனது.
"வேற வழி இல்லாம ராஜா சர்மாவை அவ கல்யாணம் பண்ணிக்கிட்டா. தன் கிட்ட இருக்கிற பணத்தால அவளை சமாதானப்படுத்திட முடியும்னு நினைச்சார் ராஜா சர்மா. தன் கம்பெனியோட போர்ட் ஆஃப் டைரக்டரா அவளை ஆக்கி, பெரிய ஷேர்ஸையும் அவ பேர்ல டிரான்ஸ்ஃபர் பண்ணாரு. அப்போ தான், நான் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு கான்ஃபரன்ஸ் அட்டென்ட் பண்ண போனேன். அப்போ அவளும் அங்க வந்திருந்தா. அங்க தான் அவ என் மேல ஃபீலிங்ஸோட இருக்கான்னு நான் தெரிஞ்சுகிட்டேன். அவ என் கம்பெனியில இன்டர்வியூ அட்டென்ட் பண்ணதுக்கு காரணமே, என்கிட்ட நெருக்கமாக தான்னு சொன்னா"
"அவங்க அதை உங்க கிட்ட நேரடியாவே சொன்னாங்களா?" என்றாள் அதிர்ச்சியாக.
"ஆமாம். அவ கல்யாணத்துக்கு முன்னாடியே அவ என்னை காதலிக்கிறதா சொன்னா. அன்னைக்கு, எனக்காக ராஜா சர்மாவை டைவர்ஸ் பண்ண கூட தயாராக இருக்கிறதா சொன்னா"
"நீங்க என்ன சொன்னீங்க?"
"நான் என்ன சொல்லுவேன்? ராஜா சர்மா ஒரு கௌரவமான மனுஷன். அவருக்கு நல்ல பொண்டாட்டியா இருன்னு அட்வைஸ் பண்ணேன்" ஆனா அவ தன்னோட ஆசையை விட்டுக் கொடுக்கிறதா இல்ல. என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லிக் டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சா. அப்போ தான், ஒரு நாள், ஒரு பைத்தியக்காரன் கூட உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டான்னு நான் சொன்னேன்"
"அதை எல்லார் முன்னாடியும் சொன்னீங்களா?"
"இல்ல. ஆனா நிச்சயம் அந்த விஷயம் ராஜா சர்மாவுக்கு தெரிஞ்சிருக்கும். ஏன்னா, அவர் அவளை கண்காணிக்க ஆட்களை வச்சிருந்தார்னு கேள்விப்பட்டேன். அப்புறம் ராஜா சர்மாவை டைவர்ஸ் பண்ணிட்டா. ராஜா சர்மாவுக்காக தான் நான் அவளை ஏத்துக்க தயங்குகிறேன்னு அவளுக்கு ஒரு நினைப்பு"
"அப்படின்னா சர்மா உங்க மேல ரொம்ப அப்செட்டா இருந்திருக்கணுமே?"
"அவர் என்கிட்ட பேசுறதையே நிறுத்திட்டாரு. நான் குணமானதுக்கு பிறகு, சமீபத்தில் தான் என்கிட்ட பேசினாரு"
"அப்படியா?"
"ஆமாம். அதனால என்னோட, சித்தார்த்தோட ஆக்சிடென்ட்க்கு பின்னாடி, ராஜா சர்மா தான் இருப்பார்னு எனக்கு சந்தேகம் இருக்கு"
"அதை நீங்க எப்படி நிரூபிக்க போறீங்க?"
"ஏதாவது ஒரு வழியை தேடி கண்டுபிடிக்கணும்"
அவர்கள் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தார்கள். ஆழ்வியுடன் தன் அறைக்கு சென்றான் இனியவன். சில நிமிடங்களில் அங்கு வந்த குரு,
"இனியா, சித்தார்த் இறந்துட்டான்" என்றான்.
"எப்போ?" என்றான் அதிர்ச்சியோடு
"பத்து நிமிஷத்துக்கு முன்னாடி தான்"
"சித்தார்த் கூட ரீனா எவ்வளவு நாளா ரிலேஷன்ஷிப்ல இருக்கா?"
"அது எவ்வளவு நாளான்னு எனக்கு தெரியாது. ஆனா, நாலு நாளைக்கு முன்னாடி தான் அவனோட வீட்டுக்கு ஷிஃப்ட் ஆனா..."
"நீ என்ன நினைக்கிற?"
"ராஜா ஷர்மா..."
"ம்ம்ம்"
"நம்ம அவனோட இறுதி சடங்குகளை கலந்துக்கணும்"
"ஆமாம்"
"நான் ஒரு டாக்ஸி பிடிச்சி வீட்டுக்கு போறேன். நீங்க போங்க" என்றாள் ஆழ்வி.
"இல்ல, நாங்க வீட்டை தாண்டி தான் அந்த சடங்குக்கு கலந்துக்க போகணும்" என்றான் குரு.
"அவங்க கெஸ்ட் ஹவுஸ் நம்ம வீட்டு பக்கத்துல தான் இருக்கா?"
"இல்ல, அவனோட பாடியை கெஸ்ட் ஹவுஸுக்கு கொண்டு போக போறது இல்ல. அவங்க அம்மா அப்பா இருக்கிற வீட்டுக்கு தான் கொண்டு போக போறாங்க"
"ஓஹோ"
"நாங்க உன்னை வீட்ல விட்டுட்டு அதுக்கப்புறம் போறோம்" என்றான் இனியவன்.
"குரு அவனோட பாடி எப்ப வீட்டுக்கு வருதுன்னு கன்ஃபார்ம் பண்ணு"
"அதுக்கு எப்படியும் நேரம் ஆகும். போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சு தான் பாடியை கொடுப்பாங்க"
"நம்ம செயலை துரிதப்படுத்தணும்னு நினைக்கிறேன். ஏன்னா விஷயம் ரொம்ப சிவியர் ஆகிக்கிட்டே போகுது"
"ஆமாம் இனியா"
"என்னை ட்ரீட் பண்ண டாக்டர் எங்க இருக்கான்?"
"அவன் சென்னையில் தான் இருக்கான்"
"மறுபடியும் அவன் பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சிட்டானா?"
"அவனால பண்ண முடியாது. ஏன்னா அவனை நல்லா வார்ன் பண்ணி அனுப்ப சொல்லி இருந்தேன்"
"எதுக்காக அவனுக்கு எதிரா நீங்க கேஸ் ஃபைல் பண்ணாம விட்டீங்க?"
"நமக்கு அதுக்கு ஆதாரம் வேணும். நம்மகிட்ட அது இல்ல"
"நான் தான் ப்ரூஃப் அவன் என் வாழ்க்கையோட விளையாடு இருக்கான். அதைவிட வேற என்ன ப்ரூஃப் வேணும்?"
"அப்படின்னா நீ பைத்தியமா இருந்த விஷயம் வெளியில தெரிஞ்சுடுமே..." என்றான் தயக்கத்தோடு.
"தெரிஞ்சா என்ன?"
"நான் உன் கவுரவத்தை பத்தி பேசிக்கிட்டு இருக்கேன் இனியா"
"பொல்லாத கௌரவம்... இப்படித்தான் நம்ம உண்மையை மூடி வெச்சிடுறோம். எல்லாத்தையும் உடைச்சிட்டு வெளிய வர வேண்டியது அவசியம்"
"நீ என்ன சொல்ற இனியா?"
"எனக்கு கல்யாணம் ஆகாம இருந்தா தானே என்னோட எதிர்காலத்தை பத்தி நான் கவலைப்படணும்? ஏன்னா யாரும் எனக்கு பொண்ணு கொடுக்க மாட்டாங்க... ஆனா, என் கதை தான் அப்படியே தலைகீழா மாறி போச்சே... எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு. என் ஒய்ஃப்க்கு என்னோட கண்டிஷன் என்னன்னு நல்லாவே தெரியும். அப்படி இருக்கும் போது, நான் ஏன் கவலைப்படணும்?" என்றான் கிண்டலாய்.
"என்னங்க, இது கிண்டல் இல்ல" என்றாள் ஆழ்வி.
"நான் நிச்சயமா சீரியஸா தான் பேசுறேன்"
"அப்படின்னா எல்லா உண்மையும் வெளியில வந்துடுமே" என்றாள் ஆழ்வி.
"ஒரு பைத்தியக்காரனுக்கு பொண்டாட்டின்னு சொல்ல உனக்கு கஷ்டமா இருக்குமா?"
"ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க?"
"ஆமாவா, இல்லயா? பதில் சொல்லு"
"இல்ல" என்றாள்.
"அப்புறம் எதுக்காக நம்ம கவலைப்படணும்? விஷயத்தை போட்டு உடைச்சிடலாம்.
"நீ இப்ப என்ன பண்ண போற? அவசரப்பட்டு எதுவும் செஞ்சிடாத இனியா. யோசிச்சி செய். ஏன்னா..."
அவன் பேச்சை வெட்டி,
"சித்திரவேலோட உண்மையான நிறம் எல்லாருக்கும் தெரிஞ்சிடும். அது அக்கா மனசை உடைக்கும். அத்தனை பேருடைய சந்தோஷத்தையும் கெடுக்கும். எக்ஸட்ரா, எக்ஸட்ரா, கரெக்டா?"
"ஆமாம்" என்றான் குரு ஆழ்வியை பார்த்தவாறு.
"ஆனா இனியா, அந்த டாக்டர் எதையுமே வாயைத் திறந்து பேசல"
"ஏன்னா அவனை தேர்டு டிகிரி ட்ரீட்மென்ட்க்கு உள்ளாக்கி இருக்க மாட்டாங்க. ஏன்னா, அவனை அவங்க இல்லீகளா அரெஸ்ட் பண்ணாங்க. இந்த தடவை அப்படி நடக்காது. இந்த விஷயத்துல இனியவன் நேரடியாக இறங்கப் போறான்" என்றான் தன் கண்களில் நெருப்பை உமிழ்ந்தவாறு.
அதை பார்த்த ஆழ்வி மென்று விழுங்கினாள். அவளது முகம் போன போக்கை பார்த்து புன்னகை புரிந்தான் குரு. அவள் இனியவனின் உண்மை முகத்தை பார்ப்பது இது தானே முதல் முறை.
அவர்கள் அதைப்பற்றி நீண்ட நேரம் ஆலோசித்த வண்ணம் இருந்தார்கள். அப்பொழுது குருவுக்கு ஃபோன் வந்தது. அதை ஏற்று பேசிய குரு, அழைப்பை துண்டித்து விட்டு,
"இனியா, சித்தார்த்தோட பாடி வீட்டுக்கு வந்துடுச்சு" என்றான்.
"சரி, அப்ப நம்ம கிளம்பலாம்" என்று மூவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
ஆழ்வியை வீட்டில் விட்டுவிட்டு அவர்கள் இருவரும் கிளம்பி சென்றார்கள்.
பாட்டியும் நித்திலாவும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தார்கள். ஆழ்வி அவர்களை பார்த்து புன்னகை புரிந்தாள். சரியாக அதே நேரம் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தான் சித்திரவேல்.
"ஆழ்வி, இன்னு எங்க போனான்?"
"அவரும் குரு அண்ணாவும் ஒரு இறுதி சடங்குல கலந்துக்க போயிருக்காங்க"
அதைக் கேட்டு முகம் சுருக்கிய சித்திரவேல்,
"யாரோட இறுதி சடங்கு?" என்றான்.
"யாரோ சித்தார்த்தாம்" என்றாள்.
"என்னது சித்தார்த்தா?" என்று அதிர்ச்சி அடைந்தான் சித்திரவேல்.
"ஆனா எப்படி அவருக்கு ஆக்சிடென்ட் ஆச்சி?"
"உங்களுக்கு அவர் யாருன்னு தெரியுமா?" என்றாள் நித்திலா.
"அவன் ரீனாவோட லிவ்விங் ரிலேஷன்ஷிப்ல இருந்தான்"
"ஓஹோ"
"அக்கா, நான் போய் முகத்தை கழுவிட்டு வரேன்" என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்றாள் ஆழ்வி.
"ரீனாவை மாதிரி ஒரு கீழ்த்தரமான பொம்பளையை நான் பார்த்ததே இல்ல" என்றாள் நித்திலா.
"ஏன் அப்படி சொல்ற, நித்தி?" என்றார் பாட்டி.
"அவ கல்யாணத்துக்கு பிறகு அவங்க புருஷனை விட்டுட்டு, நம்ம இன்னு பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தா. நம்ம இன்னுவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆன பிறகு, சித்தார்த்தை பிடிச்சிக்கிட்டு அவன் கூட வாழ்ந்துகிட்டு இருக்கா"
"அப்படின்னா, இப்போ அவ எங்க போவா?"
"யாருக்கு தெரியும்?" இன்னொருத்தனை பிடிப்பாளோ என்னவோ... " என்றாள்.
அவர்களது பேச்சில் புகாமல் இருந்த சித்திரவேல், அமைதியாய் அவர்கள் பேசுவது கேட்டுக் கொண்டிருந்தான்.
.....
வழியில் இருந்த ஒரு பூக்கடையில் மாலை வாங்கிக் கொண்டு இனியவனும் குருவும் சித்தார்த்தின் இறுதி சடங்கு நடக்கும் அவனது வீட்டிற்கு வந்தார்கள்.
"இனியா நான் காரை பார்க் பண்ணிட்டு வரேன். நீ போ" என்றான்.
மாலையுடன் இறங்கி நடந்தான் இனியவன். காரை பார்க் செய்துவிட்டு வந்த குரு, இனியவனிடம் ஏதோ ஒரு மாற்றம் தெரிவதை உணர்ந்தான். அவன் சற்று நேரத்திற்கு முன்பு இருந்தது போல் இயல்பாய் இருக்கவில்லை. அவன் மனதை ஏதோ அறித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான். திடீரென்று அவனுக்கு என்ன ஆனது என்று குருவால் கணிக்க முடியவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு அங்கு இருந்து வெளியே நடந்தான் இனியவன். குரு அவனை பின்தொடர்ந்தான்.
"இனியா, நான் ஒரு டாக்ஸி பிடிச்சி போறேன்" என்றான்.
"இல்ல, நான் இப்ப வீட்டுக்கு போக போறதில்ல. நான் உன் வீட்டுக்கு தான் வரப்போறேன்"
"என் வீட்டுக்கா?"
"ஆமாம், உன் வீட்ல குளிச்சிட்டு நான் ஒரு முக்கியமான ஆளை பாக்கணும்"
"அதை நீ உன் வீட்ல குளிச்சிட்டு கூட செய்யலாமே"
"இல்ல, அந்த ஆள் எங்க வீட்டுக்கு தான் வரப் போறான். எனக்கு உன்னோட டிரெஸ்ஸை கொடுக்க முடியுமா?"
"டேய், வாடா போகலாம்" என்று கூற,
தன் கைபேசியை எடுத்து யாருக்கோ ஃபோன் செய்த இனியவன்,
"இன்னும் ஒரு மணி நேரத்துல நீ என் வீட்டு வாசல்ல இருக்கணும்" என்று அழைப்பை துண்டித்தான்.
அது குறித்து இனியவனை எந்த கேள்வியும் கேட்கவில்லை குரு. அது குருவுக்கு தெரிய வேண்டிய விஷயமாக இருந்தால், அதை இனியவனே கூறுவான் என்று அவனுக்கு தெரியும். ஆனால், யாரை இப்பொழுது அவன் தன் வீட்டிற்கு வரச் சொல்லி அழைக்கிறான்? குளித்து முடித்துவிட்டு குருவின் உடையை மாற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான் இனியவன். ஒன்றும் புரியாமல் நின்றான் குரு.
வீட்டுக்கு வந்த இனியவன், அனைவரும் வரவேற்பு அறையில் இருப்பதைக் கண்டான். ஆழ்வி ஒருத்தி தான் அங்கு இல்லை. நித்திலா அவனிடம் ஏதோ கேட்க நினைக்க,
"ஆழ்வி..." என்று வீடே அதிரும்படி அவளை அழைத்தான் இனியவன்.
"இன்னு..." என்று நித்திலா ஏதோ சொல்ல நினைக்க, தன் கையை காட்டி அவளை நிறுத்தினான்.
அதே நேரம் அவன் குரலைக் கேட்டு மாடியில் இருந்து தபதபவென ஓடி வந்தாள் ஆழ்வி. வேக நடை நடந்து அவளை அணுகிய இனியவன், அவள் மேற்கரங்களை இருக்கமாய் பிடித்தான். அதை கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
"நீ யாரு, ஆழ்வி?" என்றான்.
அவன் என்ன கேட்கிறான் என்பது அவளுக்கு புரியவில்லை. அங்கிருந்தவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"நீ என் வைஃபா?" என்று கேட்டு, அனைவரையும் அதிரச்செய்தான் இனியவன்!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top