61 ஆலோசனை

61 ஆலோசனை

ஆழ்வியை அணைத்துக் கொண்டிருந்த இனியவன்,

"ஆழ்வி..." என்றான்.

"ம்ம்ம்...?"

"இதுக்கு அப்புறம் நான் உன்கிட்ட இருந்து எப்படி விலகி இருக்கிறது? எனக்கு நம்ம கல்யாணத்தை பத்தி தெரிஞ்சுருச்சுன்னு சொல்லிடலாமா?"

அவனை நோக்கி தன் தலையை உயர்த்திய ஆழ்வி,

"உங்க விருப்பம்" என்றாள்.

"இல்லன்னா, என்கிட்ட இன்னொரு ஐடியாவும் இருக்கு" என்றான் குறும்புக்கார சிரிப்புடன்.

"என்ன ஐடியா?"

"மறுபடியும் எனக்கு பைத்தியம் பிடிச்சிட்ட மாதிரி நான் ஆக்ட் பண்ணா எப்படி இருக்கும்?"

அதைக் கேட்டு அவள் அதிர்ச்சியோடு வாயை பிளந்தாள்.

"மத்தவங்க முன்னாடி கூட நான் உனக்கு முத்தம் கொடுக்க முடியும்... என்னை யாரும் ஒன்னும் கேட்க முடியாது" என்றான்.

"போதும், சும்மா இருங்க. விளையாட்டுக்காக கூட இப்படி பேசாதீங்க" என்றாள் முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு.

"ஏன்? என்னை அப்படி பார்க்க உனக்கு பிடிக்கலயா?"

"நான் ஏன் உங்களை அப்படி பார்க்க விரும்பணும்? இது என்ன விளையாட்டா. நான் உங்களை குணப்படுத்த எவ்வளவு பாடுபட்டேன்னு எனக்கு தான் தெரியும்"

"சரி, சரி, நான் பைத்தியமாக வேண்டாம். ஆனா, உனக்கு ஒரு விஷயம் தெரியுமா???? நீ என்னை பைத்தியம் பிடிக்க செஞ்சுகிட்டு இருக்க..." என்றான்.

கண்களை மூடி உதடு கடித்தாள் ஆழ்வி.

"நீ எனக்கு ஒரு ஐடியா குடு. நான் எப்படி உன் கூட இருக்கிறது?"

"நான் உங்க கூட தான் இருக்கேன். உங்களுக்கு எப்போ தேவையோ, அப்ப நான் உங்க முன்னாடி வருவேன்"

"என் பொண்டாட்டி அவ வார்த்தையை எந்த அளவுக்கு காப்பாத்துறான்னு பாக்கலாம்" குனிந்து அவளோடு லேசாய் இதழ் ஒற்றி, மீண்டும் அவளை அணைத்துக் கொண்டான்.

"நீங்க ஆஃபீஸ் போக வேண்டாமா?"

"இல்ல, இப்ப போக போறதில்ல. கொஞ்சம் நேரம் உன் கூட இருந்துட்டு அப்புறமா போறேன். "

"குரு அண்ணா உங்களுக்காக காத்திருக்க மாட்டாரா?"

"காத்திருக்க மாட்டான். ஏன்னா நான் ஆஃபீஸ் வரப்போறேன்னு அவன் கிட்ட சொல்லவே இல்ல"

"ஒருவேளை கவி அவருக்கு போன் பண்ணிட்டா?"

"கவி எதுக்காக அவனுக்கு ஃபோன் பண்ண போறா?" என்று அவன் கேட்க, தான் தவறு செய்துவிட்டதை உணர்ந்து உதட்டை கடித்தாள் ஆழ்வி.

"இல்ல... நம்ம ரெண்டு பேரும் ஃபோனை எடுக்கலன்னா, அவ குரு அண்ணனுக்கு தானே ஃபோன் பண்ணவா?" என்று சமாளித்தாள். 

"அவன் ஏதாவது பதில் சொல்லி சமாளிச்சுக்குவான். அவன் என்னோட மேனேஜர் ஆச்சே!" என்று சிரித்தான் இனியவன்.

"என்னங்க, நீங்க குரு அண்ணாவை பத்தி என்ன நினைக்கிறீங்க?"

"நல்லவன்... நம்பத் தகுந்தவன்..."

"உங்களுக்கு பிடிக்காத எதையாவது அவர் செஞ்சா, அவர் மேல நீங்க கோபப்படுவீங்களா?"

"கோபப்படுவேன்... அது ஆஃபீஸ் சம்பந்தப்பட்ட விஷயமா இருந்தா"

"ஒருவேளை, அது பர்சனல் விஷயமா இருந்தா?"

"அவனோட பர்சனல் விஷயத்துல நான் ஏன் தலையிடணும்?"

"நீங்க எப்பவுமே அவரோட பர்சனல் விஷயத்தை பத்தி பேசுனது இல்லயா?"

"அதுல நான் சம்பந்தப்படாத வரைக்கும், நான் செஞ்சது இல்ல. எதுக்காக நீ குருவை பத்தி பேசுற?"

"அவர் எனக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணாரு. உங்களை மாமல்லபுரம் கூட்டிக்கிட்டு போக கூட ஹெல்ப் பண்ணாரு. டாக்டரை அரெஸ்ட் பண்ண வச்சாரு. அண்ணா மட்டும் எனக்கு ஹெல்ப் பண்ணலன்னா, நான் ரொம்பவே கஷ்டப்பட்டு இருப்பேன்"

"அது சரி, என்னை எதுக்காக மாமல்லபுரம் கூட்டிகிட்டு போன?"

"சுவாமிஜி தான் உங்களை கூட்டிட்டு போக சொன்னாரு. நீங்க வெளி உலகத்தை பார்க்க ஆரம்பிச்சா நீங்களாவே நிறைய விஷயத்தை கத்துக்குவீங்கன்னு சொன்னாரு"

"கத்துக்கிட்டேனா?"

"நீங்க ஒரு கொஸ்டின் பேங்க். என்னை விடாம கேள்வி கேட்டுகிட்டே இருந்தீங்க"

"எப்படிப்பட்ட கேள்வி கேட்டேன்?"

"அதை மட்டும் கேட்காதீங்க... உங்களை மாதிரி கேள்வி கேட்டு யாருமே என்னை சங்கடப்படுத்தினதில்ல"

"அப்படின்னா நான் கேட்டது எல்லாம் அடல்ட் ஒன்லி கேள்வியா தான் இருக்கணும்"

"எல்லாமே அப்படின்னு சொல்ல முடியாது... ஆனா அப்படித்தான்..." என்று சிரித்தாள்.

"நீ என் ஆர்வத்தை அதிகமாகுற. உன்னால எல்லாத்தையும் சொல்ல முடியாதுன்னு நான் ஒத்துக்கிறேன். ஆனால் சிலதையாவது சொல்லலாம் இல்ல?"

"நீங்க நான் சொன்ன பேச்சை கேட்டீங்க. ஆனா, உங்களுக்கு என்ன வேணுமோ, அதை என்னையும் செய்ய வச்சீங்க"

"ம்ம்ம்?"

"நம்ம கோவிலுக்கு போனப்போ என்ன ஆச்சு தெரியுமா?"

"என்னது? நான் கோவிலுக்கு போனேனா? வெரி ஃபன்னி..."

"ஆமாம், ஒரு பிரக்னன்ட் உமன், அவங்க அம்மா கூட கோவிலுக்கு வந்திருந்தாங்க. அவங்க பொண்ணோட நார்மல் டெலிவரிக்காக அவங்க பிரார்த்தனை பண்ணிக்கிட்டாங்க"

"அப்புறம்?"

"அந்த பொண்ணு வயித்துக்குள்ள பாப்பா எப்படி போச்சுன்னு நீங்க கேட்டீங்க"

அதைக் கேட்டு கலகலவென சிரித்தான் இனியவன்.

"கடவுள் தான் அவங்க வயித்துல வச்சாருன்னு சொன்னேன்"

"கடவுளா? நீ ஒரு சின்ன பையனை எக்கச்சக்கமா ஏமாத்தி இருக்க போல இருக்கே..." என்று கூறி மீண்டும் சிரித்தான்.

"அப்போ, நீங்க கடவுளை நம்புனீங்க"

"நம்பித்தான் இருப்பேன். நான் தான் பைத்தியம் ஆச்சே!" என அவன் கூற, உதடு சுழித்தாள் ஆழ்வி.

"நான் அப்படி எல்லாமமா இருந்தேன்?"

ஆம் என்று தலையசைத்தாள்.

" சோ ஃபன்னி"

"என்னைத் தவிர, வேற யார் எது சொன்னாலும் நீங்க கேட்கவே மாட்டீங்க. ஆனா அதை பத்தி யாரும் ஃபீல் பண்ணதே இல்ல. அவங்க உங்க இம்ப்ரூவ்மென்ட்டை பார்த்து சந்தோஷம் தான் பட்டாங்க"

"என்னோட சேஞ்ச் பத்தி அவங்க எந்த கேள்வியும் கேட்கலயா?"

"நான் உங்களை உடல் ரீதியா அவங்க சந்தோஷப்படுத்தினதா நினைச்சாங்க. அதனால தான் நீங்க என்கிட்ட அவ்வளவு நெருக்கமா இருந்தீங்கன்னு நினைச்சாங்க"

"என்ன முட்டாள்தனம் இது?"

"அவங்க மேல எந்த தப்பும் இல்ல. நீங்க அப்படித்தான் இருந்தீங்க. அதனால தான் சித்திரவேல் அப்படிப்பட்ட ஒரு பொம்பளையை வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்னு சொன்னாரு. அவர் அதை எதுக்காக செய்யணும்னு நினைச்சாருன்னு எனக்கு தெரியாது. ஆனால் எல்லார் மனசுலையும் அப்படிப்பட்ட ஒரு எண்ணம் ஏற்பட அவர் தான் காரணமா இருந்தார். நான் அதை எனக்கு சாதகமாக பயன்படுத்திகிட்டேன்"

"என்னால உனக்கு ஒரு மோசமான அனுபவம் ஏற்பாட்டிருந்தது. அப்படி இருக்கும் போது, என்கூட தனியா இருக்க உனக்கு பயமா இல்லயா?"

"உங்களுக்கு பத்து நாளைக்கு மருந்து கொடுத்ததுக்கு பிறகு தான் நான் உங்க ரூமுக்குள்ள வந்தேன். எனக்கு பயமா தான் இருந்தது... ஆனா எனக்கு வேற வழி இருக்கல"

"உனக்கு வேற வழி இருந்தது. நீ நினைச்சிருந்தா என்னை ட்ரீட் பண்ணாம விட்டுருக்கலாம்"

"சித்திரவேல் டாக்டர் கிட்ட பேசினதை நான் கேட்காம போயிருந்தா, உங்களை ட்ரீட் பண்ணற எண்ணம் எனக்கு ஏற்படாம இருந்திருக்கலாம். ஆனா, அதைக் கேட்டதுக்கு பிறகு எனக்கு உங்களை பார்க்க ரொம்ப பாவமா இருந்தது. உங்களை அப்படியே விட்டுட எனக்கு மனசு வரல"

அவள் கையைப் பிடித்து முத்தமிட்ட அவன்,

"என் குடும்பத்துல இருக்குறவங்க, எனக்கு என்ன நடந்ததுன்னே தெரியாம அறியாமையோட இருந்தாங்கன்னு என்னால நம்பவே முடியல"

"ஆனா, அவங்க நீங்க குணமாகணும்னு நினைச்சாங்க. அவங்களுக்கு என்ன செய்யணும்னு தெரியல. அவங்க ஹெல்ப்லஸ்சா இருந்தாங்க"

"அவங்க இடத்துல நீ இருந்திருந்தாலும் அதையேத்தான் செஞ்சிருப்பியா?"

"இருந்திருக்கலாம்... ஏன்னா அவங்க சித்திரவேலை நம்புனாங்க. இந்த உலகத்துலயே ரொம்ப மதிப்பு வாய்ந்தது நம்பிக்கை ஒன்னு தான். என்னைப் பத்தி யாராவது உங்ககிட்ட தப்பா சொன்னா நீங்க நம்புவீங்களா?"

அவளுக்கு பதில் கூறாமல் கண்களை மூடினான் இனியவன்.

"அது தான் அவங்களுக்கும் நடந்தது. சித்திரவேல் அவங்களுடைய நம்பிக்கையை பரிபூரணமா சம்பாதிச்சி வச்சிருந்தார். அப்படி இருக்கும் போது, அவர் மேல எப்படி அவங்களுக்கு சந்தேகம் வரும்? ஒரு டாக்டரை அப்பாயிண்ட் பண்ணி உங்களுக்கு டிரீட்மென்ட் கொடுத்துக்கிட்டு இருந்தாரு. அதனால அவங்களுக்கு அவர் மேல சந்தேகம் ஏற்படல"

"நீ என்ன சொல்ல வர, ஆழ்வி?"

"அக்கா மேல கோவப்படாதீங்க. அவங்க என்னை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சது, உங்க நல்லதுக்காக மட்டும் தான்"

அவன் ஏதோ சொல்ல நினைத்த போது, அவனை தடுத்த ஆழ்வி,

"உங்க வாழ்க்கையில, ஏதாவது ஒரு பொண்ணு கிட்ட நீங்க சகஜமாக பழகியிருக்கீங்களா?" என்றாள்.

அவன் இல்லை என்று தலையசைத்தான்.

"அந்த கேரக்டரை வச்சு தான் அக்கா உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சிருப்பாங்க. உங்களுக்கு எந்த ஒரு பொண்ணையும் பிடிக்க வாய்ப்பில்லன்னு அவங்க நினைச்சி இருக்கணும். அவங்க எண்ணத்தை நீங்க புரிஞ்சிக்குவீங்கன்னு அவங்க நம்பி இருக்கணும்"

அமைதியாய் இருந்தான் இனியவன்.

"நீங்க எல்லார் மேலேயும் நம்பிக்கை இழந்துட்டதால என்னை உங்க வாரிசா ஆக்கிட்டீங்க. ஆனா, உங்க கம்பெனியோட சிஇஓ சேர்ல உக்காந்து, அவ்வளவு சொத்தையும் ஆளக்கூடிய சந்தர்ப்பம் அக்காவுக்கு இருந்தது. ஆனாலும் அவங்க உங்க பணத்தை தொடல. அவங்க உங்க பணத்தைப் பத்தி கவலைப்படல. நீங்க குணமாகணும்னு மட்டும் தான் கவலைப்பட்டாங்க. அதனால தான் என்னை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க..."

அவள் பேச்சை வெட்டி,

"உன்னை விலை கொடுத்து வாங்கினாங்க..." என்றான்.

"இல்ல, அவங்க எங்களுக்கு சாய்ஸ் கொடுத்தாங்க. எங்க அம்மா தான் என்னை வித்தாங்க. எங்க அம்மா மட்டும் முடியாதுன்னு சொல்லி இருந்தா, இப்படி எல்லாம் நடந்திருக்காது. ஆனா எங்க அம்மா சொல்லல. எங்க அம்மா தான் குற்றவாளி... அக்கா இல்ல. அவங்க உங்களுக்காகத்தான் இறங்கிப் போனாங்க. உங்களை கடைசி வரைக்கும் பைத்தியமாவே வச்சிருந்து அவங்க சந்தோஷமா இருந்திருக்கலாம். ஆனா அவங்க அப்படி செய்யல. உங்களுக்காக என் காலை பிடிச்சிக்கிட்டு அழுதாங்க. உங்க மேல அவங்களுக்கு அக்கறை இல்லனா அவங்க அதை செஞ்சிருக்க வேண்டிய அவசியம் இல்லையே... அவங்களை வெறுக்காதீங்க. அவங்க யாருக்கும் கிடைக்க முடியாத ஒரு அக்கா..."

அவளை அணைத்துக் கொண்ட இனியவன்,

"எனக்கு தெரியும், ஆழ்வி" என்ற அவனை ஆச்சரியமாய் பார்த்தாள் ஆழ்வி.

"எங்க அக்காவை பத்தி எனக்கு தெரியும். ஆனா, இதை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு தான் எனக்கு தெரியல. எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு"

"உங்களுக்கு ஏன் குழப்பமா இருக்குன்னா, அக்கா மாதிரியே நீங்களும் அவங்க மேல அன்பு வச்சிருக்கீங்க. நீங்க தான் அக்காவுக்காக நிக்கணும். ஏன்னா, இன்னும் கொஞ்சம் நாள்ல சித்திரவேலை பத்தின உண்மை அக்காவுக்கு தெரிய வரும். அப்போ அவங்க உடைஞ்சு போவாங்க. அந்த நேரத்துல நீங்க அவங்களுக்காக இருக்கணும். அவங்க தனக்குன்னு யாருமே இல்லன்னு நினைக்க கூடாது"

"நான் எப்பவுமே அவங்க கூட தான் இருப்பேன். ஆனா அதுக்காக நான் அமைதியா இருக்கணும்னு அவசியமில்ல. அக்கா இந்த விஷயத்துல என்ன நினைக்கிறாங்கன்னு அவங்க வாயால கேட்கணும். ஏன்னா நீ நல்ல பொண்ணு. அதனால உன்னோட பாயிண்ட் ஆஃப் வியூவும் பாசிட்டிவா இருக்கு. நீ எல்லாத்தையும் நல்லதாவே பாக்குற. ஆனா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கு. அக்காகிட்ட நான் இதைப் பத்தி பேசணும்... கவலைப்படாத... அவங்களை நான் காயப்படுத்த மாட்டேன்"

சரி என்று புன்னகை புரிந்தாள் ஆழ்வி.

"கிளம்பலாமா?"

சரி என்று, ஆழ்வி குளியலறைக்கு சென்றாள். நித்திலாவை பற்றி யோசித்தபடி அமர்ந்திருந்தான் இனியவன். ஆழ்வி கூறுவது உண்மை தான். ஆனாலும் அவன் நித்திலாவை சில சோதனைக்கு உட்படுத்தி தான் தீர வேண்டும்.

அப்பொழுது அவனுக்கு குருவிடம் இருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்று,

"நாங்க ஆஃபிஸ் வரோம்" என்றான்.

"நான் அதுக்காக ஃபோன் பண்ணல" என்ற அவனது குரலில் பதற்றம் தெரிந்தது.

"வேற எதுக்கு?"

"ரீனாவோட லேட்டஸ்ட் பாய் ஃப்ரெண்ட் சித்தார்த்க்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு"

"என்ன சொல்ற?"

"ஆமாம், அவனை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்காங்க. பொழைக்கிறது கஷ்டம்னு சொல்லிட்டாங்களாம்"

"ஆனா எப்படி?"

"அவனோட காரை ஒரு லாரி மோதிடுச்சாம்"

"ராஜா சர்மா எங்க இருக்காரு?"

"அவர் மும்பை போயிருக்காராம். அவர் மேலையும் ரீனா மேலையும் ஒரு கண் வை"

சரி என்று அழைப்பை துண்டித்தான் குரு. ஏதோ தவறாக தோன்றியது இனியவனுக்கு.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top