60 முதல் பகல்

60 முதல் பகல்

இனியவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டு அழுதாள் ஆழ்வி. அவள் இனியவனின் வாரிசு. அது அவ்வளவு சாதாரண விஷயமா? அவன் அவளை தனது வாரிசாகியதற்கு காரணம் அவள் தன் மனைவி என்பதற்காக மட்டுமல்ல. அவள் மீது அவன் கொண்டுள்ள காதலும், நம்பிக்கையும் தான் அதற்கு காரணம். சிறிது நேரத்திற்கு முன்பு வரை தங்கள் உறவில்  நிலையற்ற தன்மையுடன் இருந்த அவள், இப்பொழுது அவனுக்கு வாரிசு. இப்படிப்பட்ட சிக்ஸ்சரை எல்லாம் இனியவனால் தான் அடிக்க முடியும்.

"ஆழ்வி இதுல அழறதுக்கு என்ன இருக்கு?" என்று அவளை பின்னால் இழுத்தான் இனியவன்.

"என்னை ஏன் உங்க வாரிசா ஆக்குனீங்க?"

"ஏன்னா, நீ தான் என்னோட வாரிசு. என்னோட வைஃப்..."

"அப்போ கவியும், அக்காவும் என்ன ஆவாங்க?"

"அவங்க என்னோட சிஸ்டர்ஸ். என்னோட வாரிசு இல்ல"

"ஆனா, இவ்வளவு அவசரமா உயில் எழுத வேண்டிய அவசியம் என்ன வந்தது?" என்றாள் தொண்டை அடைக்க.

"ஆழ்வி, என்னை சுத்தி ஆபத்து இருக்கு. உன்னை விட அது வேற யாருக்கு நல்லா தெரியும்? எனக்கு எப்ப வேணா, என்ன வேணா நடக்கலாம். அப்படி ஏதாவது நடந்தா, நீ யாருமில்லாம தனியாக விடப்படுறதை நான் விரும்பல"

"ஏன் இப்படி எல்லாம் பேசி என்னை கஷ்டப்படுத்துறீங்க?" என்று அவனை பிடித்து தள்ளினாள் ஆழ்வி ள்.

"ஆழ்வி, இதுல கஷ்டப்பட என்ன இருக்கு? நான் உண்மையை தான் பேசுறேன். போன தடவை என்னை அட்டாக் பண்ணும் போது, நான் சாவை கிட்ட போய் பாத்துட்டு வந்தேன். என்னோட நல்ல நேரம், நான் சாகாம உன் கையில வந்து சேர்ந்தேன். அப்படி ஒரு மோசமான இன்சிடென்ட் பிறகு, நான் எப்படி கேர்லஸ்ஸா இருக்க முடியும்? இதுக்கு பின்னாடி இருக்கிறது யாருன்னு கூட நம்ம இன்னும் கண்டுபிடிக்கல. அதோட மட்டும் இல்லாம, எந்த அளவுக்கும் போகத் துணிஞ்ச ஒரு மோசமான எதிரி நம்ம வீட்டிலேயே இருக்கான்"

"உங்க சொத்து, என்னை சந்தோஷப்படுத்தணும்னு நினைக்கிறீங்களா?"

"நிச்சயமா இல்ல. என்னோட சொத்துக்கு ஒரு நேர்மையான வாரிசு வேணும்னு நான் நினைக்கிறேன். எனக்கு பின்னாடி, நீ என்னோட அக்காவையும் தங்கச்சியும் விட்டுட மாட்டேன் எனக்கு தெரியும். ஆனா அதை நான் எங்க சிஸ்டர் கிட்ட எதிர்பார்க்க முடியாது. ஏன்னா, நான் எல்லார் மேல இருந்த நம்பிக்கையையும் இழந்துட்டேன். யார், எப்போ, எனக்கு எதிரா திரும்புவாங்கன்னு எனக்கு தெரியல"

"அக்காவும் கவியும் அப்படிப்பட்டவங்க இல்ல"

"இப்ப அவங்க அப்படி இல்லாம இருக்கலாம். ஒருவேளை எதிர் காலத்துல அவங்க மாறிட்டா?"

"நான் மாறமாட்டேனா?"

"உனக்கு பணம் மட்டுமே முக்கியமா இருந்திருந்தா, உன்னை நீ ஆபத்துல நிறுத்தி, எனக்கு ட்ரீட்மென்ட் கொடுத்திருக்க மாட்ட. எனக்கு பொண்டாட்டிங்கற அந்த ஒரு உறவை வச்சுக்கிட்டு, நீ எப்படிப்பட்ட வாழ்க்கை வேண்டுமானாலும் வாழ்ந்திருக்கலாம். அக்கா உங்க அம்மாவுக்கு கொடுத்த ஒரு கோடி ரூபாய்ல, நீ ஒரு ரூபா கூட எடுத்துக்கல. எல்லாத்துக்கும் மேல, சித்திரவேலையும் நாங்க ஆரம்பத்துல ரொம்ப நல்லவன்னு தான் நினைச்சுக்கிட்டு இருந்தோம். ஆனா அவன் இவ்வளவு மோசமானவனா இருப்பான்னு நாங்க எதிர்பார்க்கலயே..." என்றான் தன் கோபத்தை கட்டுப்படுத்தியபடி.

"உங்களுக்கு அவர் மேல இவ்வளவு கோவம் இருந்தா, அவருக்கு எதிரா ஏன் எதுவுமே செய்யாம அமைதியா இருக்கீங்க?"

"அவன் மட்டும் எங்க அக்கா புருஷனா இல்லாம இருந்திருந்தா, அவனை நான் கண்டதுண்டமா வெட்டிப் போட்டு இருப்பேன். அவனோட நல்ல நேரம், அவன் எங்க அக்கா புருஷனாயிட்டான்"

"உங்க அக்காவுக்கு புருஷனா இருக்கிறதால, அவர் என்ன வேணா செய்யலாமா?"

"இது ரெண்டு பக்கமும் கூர்மையுள்ள ஒரு கத்தியை கையாளுறதுக்கு சமம். கொஞ்சம் ஏமாந்தா அது என்னை பதம் பார்த்துடும்"

"நீங்க அக்கா மேல கோவமா இருக்கீங்களா?"

"துரதிஷ்டவசமா, ஆமாம் அவங்க இவ்வளவு முட்டாளா இருப்பாங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. தன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு எப்படி அவங்க கவனிக்காம விட்டாங்க? ஒரு தரங்கெட்ட பொம்பளையை வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்னு சித்திரவேல் சொன்னப்ப, அவங்களுக்கு எப்படி அவன் மேல சந்தேகம் வராம போச்சு?"

"ஆனா, அக்கா அதுக்கு ஒத்துக்கலயே..."

"அவங்க ஒத்துக்கிட்டாங்களா இல்லையாங்கறத பத்தி நான் பேசல. அவ்வளவு கீழ்த்தரமான ஒரு ஐடியாவை கொடுத்த மனுஷனை பத்தி தான் பேசுறேன். அவனால தான் நம்ம குடும்பத்துல எல்லா பிரச்சனையும். ஒருவேளை, நீ அவனும் டாக்டரும் பேசினதை கேட்காம போயிருந்தா? என்ன ஆகி இருக்கும்? இன்னமும் அவன் அந்த மருந்தை எனக்கு கொடுத்துக்கிட்டு தான் இருந்திருப்பான். அப்படின்னா உன்னோட நிலைமையும் என்னோட நிலமையும் என்னவாகி இருக்கும்?"

"அவரை தண்டிக்க வேண்டாம்னு நினைக்கிறது நீங்க தான்..."

"ஆனா, எனக்கு மனசு கேட்கல"

"நீங்க என்ன செய்யப் போறீங்க?"

தெரியவில்லை என்பது போல் தலையசைத்தபடி கட்டிலில் அமர்ந்தான் இனியவன்.

"நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. அவரை மன்னிச்சிட நினைக்கிற உங்க எண்ணத்துல எனக்கு சுத்தமா உடன்பாடு இல்ல" என்ற அவளை தன் தலையை திருப்பி பார்த்தான் இனியவன்.

"நீங்க என் புருஷன் அப்படிங்கிறதுக்காக நான் இதை சொல்லல. ஒவ்வொரு பொம்பளைக்கும், தான் எப்படிப்பட்டவன் கூட வாழறோம்னு தெரியணும். அக்காவுக்கும் அவங்க புருஷனை பத்தி தெரியணும். நீங்க அவரை தண்டிக்கிறீங்களோ இல்ல மன்னிக்கிறீர்களோ... இதை அக்கா கிட்ட விட்டுடுங்க. அவங்களுக்கு என்ன வேணும்னு அவங்க முடிவு பண்ணட்டும். அவங்க புருஷனை பத்தி அவங்ககிட்ட மறைச்சு வைக்கிறது நல்லதில்ல. சித்திரவேல் இதையெல்லாம் அன்பால தான் செஞ்சாருன்னு நீங்க நினைக்கிறீங்க. இது அன்பு கிடையாது. அன்பு சுயநலம் இல்லாதது . அது மத்தவங்களை சந்தோஷப்படுத்தி தான் பார்க்கும். நமக்கு பிடிச்சவங்க சந்தோஷப்படும் போது, அதுவும் சந்தோஷப்படும். அந்த சந்தோஷத்தை பறிக்காது, அவங்களை கதற விட்டு வேடிக்கை பார்க்காது, அவங்களோட இயலாமையை பார்த்து சந்தோஷ படாது. இப்படிப்பட்ட அன்பு ரொம்ப ஆபத்தானது. வரப்போற நாள்ல அவர் இதுக்கு மேல எதுவும் செய்ய மாட்டார்னு உங்களால் சொல்ல முடியுமா? அன்புங்குற பேர்ல, அவர் அக்காவை காயப்படுத்தினா என்ன செய்வீங்க? அப்பவும் நீங்க அவரை மன்னிக்கத்தான் செய்வீங்களா?"

பதில் கூற முடியாமல் நின்றான் இனியவன்.

"அவருக்கு தெரியாம உங்களுக்கு டிரீட்மென்ட் கொடுக்க நான் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டேன்னு எனக்கு தான் தெரியும். உங்களுக்கு நான் டிரீட்மென்ட் கொடுத்த விஷயம் அவருக்கு தெரிஞ்சிருந்தா, அவர் என்னை உயிரோட விட்டு வச்சிருப்பாருன்னு நினைக்கிறீங்களா? நிச்சயம் என்னை உயிரோட விட்டிருக்க மாட்டார். அந்த நேரத்துல நான் எவ்வளவு பயத்தோடவும் பதட்டத்தோடவும் இருந்தேன்னு உங்களுக்கு தெரியுமா? முத்து கூட, நீங்க சீக்கிரமா குணமாயிடணும்னு நினைச்சாரு. அவர் ஒருத்தர் தான் நம்ம வீட்ல எனக்கு துணையா இருந்தது. அவர் கூட அக்காவுக்காக  வருத்தப்பட்டார். ஆனா, சித்திரவேலுக்கு அக்காவை பத்தின எண்ணம் கொஞ்சம் கூட இல்ல. அக்கா உங்க மேல உயிரையே வச்சிருக்காங்கன்னு அவருக்கு தெரியாதா? அவர் செஞ்ச இந்த கேவலமான வேலை எல்லாம் அக்காவுக்கு தெரிஞ்சா, அவங்க உடஞ்சி போயிடுவாங்கன்னு அவருக்கு தெரியாதா? அவருக்கு தெரியும். ஆனாலும் அவர் அதை செஞ்சாரு. விளைவை பத்தி எல்லாம் அவர் கவலப்படவே இல்ல. என்ன மாதிரியான அன்பு இது?"

சிறிது நேரம் நிறுத்திவிட்டு கண்களை மூடி மென்று விழுங்கிய ஆழ்வி,

"எல்லாத்தையும் விடுங்க, ஒருவேளை, அன்னைக்கு என்னால உங்ககிட்ட இருந்து கவியை காப்பாத்த முடியாம போயிருந்தா என்ன ஆகி இருக்கும்?"

அதிர்ச்சியோடு அவளை ஏறிட்டான் இனியவன்.

"என்னை காப்பாத்திக்கிட்டா போதும்னு, நான் அங்கிருந்து ஓடிப் போயிருந்தா என்ன ஆகி இருக்கும்?  உங்களை நீங்களே மன்னிச்சிருப்பீங்களா? உங்களுக்கு சுயநினைவே இல்லாம இருந்திருந்தாலும், அதுல என்ன வித்தியாசம் இருந்திருக்க போகுது? அந்த பாதிப்பிலிருந்து பார்கவி வெளியில வந்திருப்பாளா? ஜென்மத்துக்கும் அவளால் அது முடிஞ்சி இருக்காது...!"

வேதனையோடு கண்களை மூடினான் இனியவன்.

"நான் உங்களை காயப்படுத்தணும்னு இதை எல்லாம் சொல்லல"

"இல்ல, ஆழ்வி, நீ சொல்றது எல்லாமே உண்மை தான்... மனசை ரணப்படுத்துற உண்மை"

"இந்த உண்மையால உங்களை ரணப்படுத்துனதுக்காக என்னை மன்னிச்சிடுங்க. ஆனா, நம்ம உண்மையை ஏத்துக்கிட்டு தான் ஆகணும். அதை யாராலும் மாத்த முடியாது. ஏன்னா அது உண்மை"

அவளது கரத்தை நேசமாய் பற்றிய இனியவன்,

"என்னோட குழப்பத்தை கிளியர் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ் ஆழ்வி" என்றான்.

"நீங்க எனக்கு ஒரு வாக்கு கொடுக்கணும்"

"என்ன வாக்கு?"

"நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். நாலா பக்கமும் கண்ணு வச்சுக்கிட்டு இருங்க. உங்களுக்கு யார் மேல எல்லாம் சந்தேகம் வருதோ, அத்தனை பேரையும் ஃபாலோ பண்ணுங்க... கண்காணிங்க... நம்ம ஜாக்கிரதையா இருக்கணும்"

"நம்ம (என்பதை அழுத்தி) ஜாக்கிரதையா இருப்போம்" என்றான் இனியவன்.

"நம்ம முகத்துக்கு நேரா நின்னு சண்டை போடுற எதிரியா இருந்தா தான் நம்மளால தைரியமா அவங்க கிட்ட சண்டை போட முடியும்... நம்ம எதிரி எவ்வளவு திறமைசாலியா இருந்தாலும் சமாளிக்க முடியும். ஆனா இங்க, நம்ம எதிரி யாருனே தெரியல"

ஆம் என்று தலையசைத்தான் இனியவன்.

"என்னங்க, ரீனா ஒரு தடவை உங்களை கிண்டல் பண்ணி பேசினதா குரு அண்ணா சொன்னாரு. அவங்களுக்கு இந்த விஷயம் எப்படி தெரிஞ்சதுன்னு நம்ம கண்டுபிடிக்கணும்"

"நீ சித்திரவேலை சந்தேகப்படுறியா?"

"இல்ல. டாக்டரை சந்தேகப்படுகிறேன். இதுக்கெல்லாம் காரணமா இருக்கிறது யாருன்னு அவருக்கு தெரிஞ்சு இருக்கணும்"

யோசனையில் ஆழ்ந்தான் இனியவன்.

"கவலைப்படாதீங்க சீக்கிரமாவே இந்த பிரச்சனைக்கு ஒரு சொல்யூஷனை கண்டுபிடிக்கலாம்"

"நான் ஏன் கவலைப்பட போறேன்? எனக்கு தான் இவ்வளவு புத்திசாலியான ஒய்ஃப் இருக்காளே"

அழகான வெட்கத்தோடு புன்னகை புரிந்தாள் ஆழ்வி. அவளது கரத்தை அன்பாய் முத்தமிட்டான் இனியவன்.

"என்னை உங்க வாரிசா ஏத்துக்கிட்டதை பத்தி நீங்க மறுபடியும் ஒரு தடவை யோசிக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன்"

அவள் உதட்டில் தன் ஆள்காட்டி விரலை வைத்த இனியவன்,

"அதைப்பத்தி பேச வேண்டிய அவசியம் இல்ல. ஏன்னா, நான் எடுத்திருக்கிறது, ரொம்ப நல்ல முடிவுன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு" என்றான்.

ஆழ்வி இமைகள் படபடத்தது. தன் விரலால் அவள் இதழ்களை மெல்ல வருடினான். அவள் முகத்தில் ஒரு பதற்றம் படர்ந்தது.

"பாஸ்ட்ல என்கிட்ட நீ அவ்வளவு நெருக்கமா இருந்தியே, அப்படி இருக்கும் போது, இப்போ எதுக்கு இவ்வளவு அன்னிஸியா ஃபீல் பண்ற?"

அதைக் கேட்டு சிரித்த ஆழ்வி,

"அந்த இனியவன் ரொம்ப க்யூட்.. குழந்தை மாதிரி" என்றாள். 

"அப்போ நான்?"

"நீங்க ஒரு டிபிக்கல் அடல்ட்"

"நானும் குழந்தை மாதிரி இருக்கணுமா?"

"அது உங்களால முடியாது. அவருக்கு பாசாங்கு செய்ய தெரியாது. ரொம்ப ஓபன்... ரொம்ப இன்னசென்ட்..."

"நான் உன்னை ரொம்ப தொந்தரவு பண்ணி இருக்கேன் இல்ல?"

"நான் அப்படி நினைக்கல. உங்களோட சேட்டையை எல்லாம் நான் ரொம்ப ரசிச்சேன். அதெல்லாம் எனக்கு தொந்தரவாவே தெரியல"

"அப்படின்னா இப்போ என்னோட சேட்டையும் உனக்கு தொந்தரவா தெரியாதுன்னு நினைக்கிறேன்" என்றான் சன்னமான குரலில்.

லேசாய் புன்னகைத்தாள் ஆழ்வி. அவள் முகத்தை உயர்த்தி அவள் முகவாய்க்கட்டில் முத்தமிட்டான் இனியவன்.

"இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் பகல்" என்றான் அவள் காதில்.

வெட்கத்தோடு உதடு கடித்து அவன் தோளில் சாய்ந்தாள்.

"இதுக்கு முன்னாடி உன்கிட்ட காட்டுத்தனமா நடந்துக்கிட்ட மாதிரி இல்லாம இருக்க முயற்சி பண்றேன்"

"நானும் உங்களை கடிக்காம இருக்க முயற்சி பண்றேன்" என்றாள் ஆழ்வி தன்னை தயார் படுத்திக்கொண்டு.

அதைக் கேட்டு சிரித்த இனியவன்,

"நீ என்னை கடிச்சாலும் நான் கவலைப்பட மாட்டேன்" என்றான்.

அதற்குப் பிறகு, காலத்தை பேசிக் கடக்க அவன் விரும்பவில்லை. அவன் உடலில் இருந்த ஹார்மோன்கள் தன்னிலை இழந்தன. தன் கட்டுப்பாட்டை முழுமையாய் இழந்த இனியவன் ஆழ்வியை முழுவதும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தான்.

அரை மயக்க நிலையில் இருந்த இனியவனும், அவனது காதலில் கட்டுண்டுவிட்ட ஆழ்வியும் தங்களையும், தான் இருக்கும் இடத்தையும் மறந்தார்கள். அவளது நெருக்கம் அவனது நரம்புகளை முறுக்கேற்றியது. அவனது மென்மையான தொடுதல் அவளுக்கு மயிர்கூச்செறியும் உணர்வை ஏற்படுத்தியது. அவளது வழுவழுப்பான தோலில் ஏற்பட்ட மாற்றம் அதை வெட்ட வெளிச்சமாக்கியது.

காட்டுத்தனமாய் இருக்க மாட்டேன் என்று, தான் உதிர்த்த வார்த்தைகளை காப்பாற்ற, தன்னால் முடிந்த அளவிற்கு முயன்றான் இனியவன்.

அவர்களது ஒருமைப்பாட்டால், அவர்களது திருமணம் முழுமை அடைந்தது. கட்டிலில் விழுந்த இனியவன் அவளை தன்னை நோக்கி இழுத்து இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top