56 கணிக்க முடியாத...
56 கணிக்க முடியாத...
பழச்சாறுடன் இனியவனின் அறைக்கு வந்த ஆழ்வி, அதை அவனிடம் நீட்டினாள். அதை அவளிடம் இருந்து பெற்றுக் கொள்ளாமல் நின்றான் இனியவன்.
"ஆழ்வி, எனக்கு ஒரு விஷயத்துல தெளிவு வேணும்"
"எந்த விஷயத்துல?"
"நம்ம ரெண்டு பேரும் மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறியா?"
முகம் சுளித்தபடி இல்லை என்று தலையசைத்தாள்.
"நல்லதா போச்சு. அப்படின்னா நம்ம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி அப்படிங்கறதுல உனக்கு எந்த சந்தேகமும் இல்லயே?"
"நான் ஏன் சந்தேகப்படணும்?"
"நமக்கு கல்யாணம் ஆகும்போது நான் சுயநினைவுல இல்ல. அதனால என் சுயநினைவோட மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நீ விரும்புவியோன்னு நெனச்சேன்"
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல"
"ஏன் அப்படி?"
"அது அவசியம்னு நான் நினைக்கல"
"நெஜமாத் தான் சொல்றியா?"
"ஆமாம். உங்களுக்கு மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுதா?"
"நிச்சயமா இல்ல. உண்மையை சொல்லப்போனா, எனக்கு இந்த சடங்கு சம்பிரதாயத்தில் எல்லாம் நம்பிக்கையே இல்ல. நல்ல காலம், என் கல்யாணம் எனக்கே தெரியாம நடந்துடுச்சு" என்று சிரித்தான்.
"ஆனா நமக்கு கல்யாணம் நடந்தது உங்களுக்கு தெரியாதே..."
"யார் சொன்னது? நான் வேட்டி சட்டைல, எல்கேஜி பிள்ளை மாதிரி அழுத்தமா தலையை வாரிக்கிட்டு, அரை மயக்கத்தில் இருந்தேன். சரியா?"
"இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்? என் அண்ணன் சொன்னானா?" என்றாள் ஆச்சரியமாய்.
"இல்ல, நம்ம கல்யாண ஃபோட்டோவுல பார்த்தேன்"
"கல்யாண ஃபோட்டோவா? ஆனா நம்ம கல்யாணத்துல தான் யாருமே ஃபோட்டோ எடுக்கலையே..."
தனது கைபேசியை எடுத்து தமிழரசி அவனுக்கு அனுப்பிய புகைப்படத்தை அவளிடம் காட்டினான். அதை கண்ட ஆழ்வி ஆர்வம் மேலோங்கிய வியப்படைந்தாள். அவனிடமிருந்து அவனது கைபேசியை பெற்று அந்த புகைப்படத்தை ரசித்து பார்த்தாள்.
"இந்த ஃபோட்டோ உங்களுக்கு எப்படி கிடைச்சது?"
"சஸ்பென்ஸ்" என்று அவள் கையில் இருந்து தன் கைபேசியை வாங்கி தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.
அவர்களது திருமணத்தில் இருந்தவர்கள் வெகு சிலரே. இனியவன் குடும்பத்தை சேர்ந்த யாரும் அந்த புகைப்படத்தை எடுக்கவில்லை. ஏனென்றால், நித்திலா, பார்கவி, சித்திரவேல் மூவரும் அவளுடன் மேடையில் இருந்தார்கள். பாட்டி அவர்களுக்கு எதிரே தான் நின்று கொண்டிருந்தார். அதனால் அவன் குடும்பத்தை சேர்ந்த யாரும் அதை எடுத்திருக்க முடியாது. அந்த திருமணம் ரகசியமாய் இருக்க வேண்டும் என்று சித்திரவேல் விரும்பினான். அதனால் அவளது அம்மாவும் அண்ணனும் புகைப்படம் எடுக்க முயற்சி செய்யவில்லை. அப்படி என்றால், இந்த புகைப்படத்தை எடுத்தது தமிழரசியா? என்று தன் கண்ணை யோசனையுடன் சுருக்கினாள் ஆழ்வி. அப்படி என்றால், தமிழரசி இனியவனை சந்தித்தாரா? ஆனால் அவர் அன்று காலையில் அவளுடன் பேசிய போது கூட அதைப்பற்றி ஒன்றும் கூறவில்லையே!
அவள் ஆழ்ந்து யோசிப்பதை பார்த்த இனியவன், அவளது முக பாவத்தை வைத்து அந்த புகைப்படத்தை யார் எடுத்திருக்க முடியும் என்பதை அவள் கணித்துவிட்டாள் என்பதை அவன் ஊகித்துக் கொண்டான். அவளது கூர்மையான மதியூகம் அவனை வியப்பில் ஆழ்த்தியது. அவளுக்கு சமயோசித புத்தி இருப்பதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை என்று எண்ணிய அவன், பேச்சை மாற்றினான்.
"ஓகே, கம் டு த பாயிண்ட். மறுபடியும் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னு நீ சொல்லிட்டதால, நம்ம மத்த விஷயத்தைப் பத்தி யோசிக்கலாமா?" என்றான்.
"மத்த விஷயமா?"
"நான் பேசிக்கிட்டு இருக்கிறது நம்ம ஃபர்ஸ்ட் நைட்டை பத்தி தான்" என்றான் தன் இதழ்களில் புன்னகைத் தவழ.
தான் கொண்டு வந்த பழச்சாறை மேஜையின் மீது வைத்து விட்டு அங்கிருந்து ஓட முயன்றாள் ஆழ்வி.
"ஆழ்வி..." என்று மயக்கும் குரலில் அவளை அழைத்த அவன், அவளை மேலும் ஓடாமல் தடுத்து நிறுத்தினான்.
அவள் அவனை நோக்கி மெல்ல திரும்ப, தன் கைகளை விரித்து அவளை தன்னிடம் வருமாறு அழைத்தான். அவள் தயக்கத்துடன் அங்கேயே நின்றாள்.
"ஒரு பைத்தியக்காரனுக்கு கொடுத்த மரியாதை கூட எனக்கு இல்லயா?" என்று தன் உதடுகளை அழுத்தினான்.
"மனநிலை சரியில்லாதவரை கண்ட்ரோல் பண்றது ரொம்ப ஈஸியா இருந்தது. அவர் என்னோட கண்ட்ரோல்ல இருந்தார் தெரியுமா?" என்றாள் அவனை புன்னகைக்கச் செய்து.
"அப்போ நான் உன் கண்ட்ரோல்ல இருக்கணும்னு சொல்றியா?" என்றான் கிண்டலாய்.
இல்லை என்று அவசரமாய் தலையசைத்தாள்.
"நீ நெனச்சா என்னை உன் கண்ட்ரோல்ல வச்சுக்க முடியும் தெரியுமா?" என்று இரட்டை அர்த்தத்தில் கூறினான்.
தன் தொண்டையை ஏதோ அடைப்பதுப் போல் உணர்ந்தாள் ஆழ்வி. இனியவன் தன்னை நோக்கி வருவதைப் பார்த்த அவள் திடுக்கிட்டாள். அவள் அருகில் வந்து தன் கைகளைக் கட்டிக் கொண்டு நின்ற அவன்,
"எல்லாத்துக்கும் இவ்வளவு தயக்கம் காட்டுற ஒரு பொண்ணு, எப்படி ஒரு பைத்தியக்காரனை அவ்வளவு தைரியமா கையாண்டாள்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு"
ஆம், ஒரு மன நோயாளியை கூட கையாண்டு விட முடியும். ஆனால் தன் சுயநினைவோடு இருக்கும் இனியவனை கையாள்வது அவ்வளவு சுலபம் இல்லையே! அந்த மனநோயாளி, இனியவனை போல் அவளுடன் சரசமாட வேண்டும் என்று நினைக்கவில்லையே...!
அவள் கையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்த இனியவன், தன் விரலால் அவள் கன்னத்தை வருடினான். மென்று விழுங்கி கண்களை மூடினாள் ஆழ்வி. அழுத்தமாய் அவள் நெற்றியில் இதழ் பதித்தான். சற்று நேரம் அவளை ரசித்த அவன், தன் கண்ணத்தால் அவள் கன்னத்தை உரசி, அவளை தன்னிலை மறக்க செய்தான். அடுத்த நொடி ஆசையாய் அவள் இதழ்களில் முத்தமிட்டான். தாளாத உள்ளுணர்வால் ஆழ்வியின் கண்கள் கலங்கின. அவள் கன்னத்தில் ஈரத்தை உணர்ந்த அவன் பதறினான்.
"ஆழ்வி, எதுக்கு அழற? உனக்கு இதெல்லாம் பிடிக்கலயா...?"
ஆழ்வி அவன் கழுத்தை கட்டிக்கொண்டு மேலும் அழுதாள்.
அவள் என்ன நினைக்கிறாள் என்று புரிந்து கொள்ள முடியாத இனியவன், அப்படியே நின்றான். மெல்ல அவள் முதுகை வருடி,
"என்ன ஆச்சு, ஆழ்வி?" என்றான்.
"நீங்க என்னை உங்க வைஃபா ஏத்துக்கிட்டீங்கன்னு என்னால நம்பவே முடியல" என்றாள் உணர்ச்சிவசப்பட்டு.
அவளை தன் கரங்களில் ஆதரவாய் சுற்றி வளைத்துக் கொண்டு அப்படியே நின்றான் இனியவன். அவள் ஆசுவாசப்பட்டுவிட்டாள் என்று புரிந்து கொண்டு அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.
"உன்னோட தைரியத்தை பத்தி கேள்விப்பட்டப்போ நான் அசந்து போயிட்டேன். வெறிபிடிச்ச ஒரு பைத்தியக்காரனை கையாள்றது உனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்னு நீ என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது. ஆழ்வி, நீ ஒரு போராளி... தைரியமா இரு. இனியவன் உன் கூட இருக்கான்"
கண்களை துடைத்துக்கொண்டாள் ஆழ்வி.
"வா, நம்ம ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்" என்றான் புன்னகையோடு.
அவனை திகைப்போடு ஏறிட்டாள் ஆழ்வி. செல்ஃபியா?
"பைத்தியக்காரன் கூட நீ எடுத்துக்கிட்டியே அதே மாதிரி"
ஆழ்விக்கு வயிற்றை கலக்கியது. அந்த புகைப்படத்தில், அவள் இனியவனின் மடியில் அமர்ந்து, அவனுக்கு முத்தமிடுவது போல் அல்லவா பாவனை காட்டி இருப்பாள்.
வேண்டாம் என்று சங்கடத்துடன் தலையசைத்து, அவள் அங்கிருந்து செல்ல நினைத்தபோது, அவள் இடையை சுற்றி வளைத்து தன்னை நோக்கி இழுத்தான். சோபாவில் அமர்ந்து அவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டான். அவள் எழாத வண்ணம் அவள் இடையே இறுக்கிப்பிடித்துக் கொண்டு, தன் பாக்கெட்டில் இருந்த கைபேசியை எடுத்து அதை அவளை நோக்கி நீட்டினான்.
"கமான்... டூ இட்..." அது நிச்சயம் கட்டளை தான்.
முகத்தை சோகமாய் வைத்துக்கொண்டு அவனைப் பார்க்க, ஆகட்டும் என்பது போல் சைகை செய்தான்.
அவன் கைபேசியை பெற்று, அவர்களது புகைப்படங்களை அதில் பதிவு செய்தாள் ஆழ்வி. முதல் இரண்டு புகைப்படங்களுக்கு புன்னகைத்தான் இனியவன். ஆழ்வியின் முகபாவம் மாறியது, அவன் கேமராவை பார்க்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த போது. தன் மீது இருந்த அவனது சக்தி வாய்ந்த பார்வை அவளுக்கு நடுக்கத்தை தந்தது.
"என்னை கிஸ் பண்ற மாதிரி ஃபோட்டோ எடு... பைத்தியக்காரனோட எடுத்த மாதிரி..." என்றான் குழைவாக.
மெல்ல அவனை நோக்கி முகத்தை திருப்பினாள் ஆழ்வி.
"இன்னொரு தடவை அந்த வார்த்தையை சொல்லாதீங்க" என்றாள். அது கெஞ்சலா அல்லது கட்டளையா என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
"எந்த வார்த்தை?" என்றான் புன்னகையோடு.
"உங்களுக்கே தெரியும்"
"நான் பைத்தியக்காரனா தானே இருந்தேன்?"
அவன் வாயை பொத்தினாள். அவள் கையில் முத்தமிட்டு, மெல்ல கையை எடுத்தான்.
"நீ கிஸ் பண்ற மாதிரி எடுத்த அந்த ஃபோட்டோ என் மொபைல்ல எனக்கு வேணும்"
தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்ட ஆழ்வி, அவன் கன்னத்தை நோக்கி திரும்பினாள். அவள் எதிர்பாராத விதமாய் அவளை நோக்கி இனியவனும் திரும்ப, அவன் இதழில் அவள் இதழ் பதித்தான். அவள் சங்கடத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்க, அவள் கழுத்தில் மயக்கமாய் முத்தமிட்டான். உணர்ச்சிகளின் கலவையாய் அவளை ஆற தழுவினான்.
அவளை தன் கையில் தூக்கிக் கொண்டு கட்டிலை நோக்கி நடந்தான் அவன் என்ன செய்ய விழைகிறான் என்று அவளுக்கு புரிந்தது. அவனை தடுத்து நிறுத்த முடியும் என்றும் அவளுக்கு தோன்றவில்லை. திகைப்போடு தன்னை பார்த்துக் கொண்டிருந்த ஆழ்வியை கட்டிலில் கிடத்தி அவளை பார்த்த அவன்,
"இப்படிப்பட்ட எக்ஸ்பீரியன்ஸை நான் ஏற்கனவே உனக்கு கொடுத்து இருக்கேன்... ஆனா நான் அதை இப்ப தான் எக்ஸ்பீரியன்ஸ் பண்ண போறேன்" என்றான்.
"என்னங்க, யாராவது வந்துட்டா..."
அவள் பேச்சை தடுத்து,
"வந்தா என்ன? நீயும் நானும் புருஷன் பொண்டாட்டி தானே?" என்றான்.
"ஆனா, யாருக்கும் அது தெரியாதே"
"தெரிஞ்சா தெரிச்சிக்கட்டும்"
"நெஜமாத் தான் சொல்றீங்களா?" என்றாள் நம்ப முடியாமல்.
"ஆமாம்"
"ஆனா, யாருக்கும் தெரிய வேண்டாம்னு சொன்னிங்களே!"
"சித்திரவேலை பத்தி தெரியாதப்போ அப்படி சொன்னேன். ஆனா இப்போ, இதை மறைக்க வேண்டாம்னு நினைக்கிறேன்"
"உங்க மனசுல என்ன தான் இருக்கு?"
"இப்போதைக்கு நிறைய ரொமான்டிக் ஐடியாசும், அதை எப்படி செயல்படுத்துறதுன்னு யோசனையும் இருக்கு"
ஆழ்வி ஏதோ சொல்ல முயல, தன் விரலை அவள் உதடுகளின் மீது வைத்து,
"என் பொண்டாட்டி கூட இருக்குற உரிமை எனக்கு இருக்கு" என்றான்.
"இருக்கு... ஆனா அதுக்கான நேரம் இது இல்ல. மயக்கம் போட்டு விழுந்ததா ஒரு நாடகத்தை நடத்திக்கிட்டு இருக்காரு சித்திரவேல். அவங்க எப்ப வேணா வருவாங்க"
பெருமூச்சுவிட்ட இனியவன்,
"சரி, அவங்க வர்ற வரைக்கும்..." என்று கூறிவிட்டு, அவள் நெஞ்சில் தலை சாய்த்து கண்களை மூடிக்கொண்டான்.
அவன் கழுத்தை தன் கைகளால் சுற்றி வளைத்து அவனை புன்னகைக்கு செய்தாள் ஆழ்வி.
அவர்கள் எதிர்பார்த்தது போலவே அழைப்பு மணியின் ஓசை எழுந்தது. மீண்டும் பெருமூச்சு விட்டு ஆழ்வியை பார்த்த அவன், கட்டிலில் எழுந்து அமர்ந்தான். ஆழ்வி அங்கிருந்து ஓட்டமாய் ஓடிச் சென்றாள். கதவை திறக்காமல் அவளுக்காக காத்திருந்தான் முத்து. அவள் பார்கவியின் அறைக்கு சென்ற பின் கதவை திறந்தான் அவன். சித்திரவேல், நித்திலா மாற்றும் பாட்டியுடன் உள்ளே நுழைந்தான்.
"கவி எப்படி இருக்கா?" என்றார் பாட்டி.
"நல்லா இருக்காங்க. ஆழ்வி அண்ணி அவங்க கூட இருக்காங்க" என்றான் முத்து.
"இன்னு என்ன செய்றான்?" என்றாள் நித்திலா.
"அவரோட ரூம்ல இருக்காரு"
"ஏதாவது சாப்பிட்டானா?"
"ஜூஸ் கேட்டாரு, கொடுத்தேன்"
அப்பொழுது இனியவன் அங்கு வந்தான்.
"என்ன ஆச்சு பாட்டி?" என்றான் இனியவன், நித்திலாவிடம் பேசுவதை தவிர்த்து.
ஆனால் பாட்டியை முந்திக்கொண்டு நித்திலா பதில் கூறினாள்.
"அவரு தன்னை கவனிச்சிக்கிறதே இல்ல, இன்னு. எதுவுமே சாப்பிடாம இன்னைக்கு காலையில ஒரு கிளையன்ட்டை பார்க்கப் போயிருக்காரு. வீக்னஸ்ல மயக்கம் வந்துடுச்சு"
இனியவன் நித்திலாவை கேட்ட கேள்வி, சித்திரவேலை வாயடைக்கச் செய்தது.
"அவரை கவனிக்காம நீங்க என்ன கா செஞ்சுகிட்டு இருக்கீங்க?"
"நானா? நான் என்ன செய்ய முடியும், இன்னு? அவர் என்ன சின்ன குழந்தையா?"
"அவர் குழந்தையா இல்லாம இருக்கலாம். ஆனா அவர் உங்க புருஷன். அவருடைய ஹெல்த்தை கவனிக்க வேண்டியது உங்க பொறுப்பு. நீங்க அவரை கவனிக்கலன்னா வேற யாரு கவனிப்பா? அவரு சாப்பிட்டாரா இல்லயான்னு கூட உங்களால கவனிக்க முடியாதா? அவர் எதுவும் சாப்பிடலன்னா, நீங்க தானே அவரை சாப்பிட வைக்கணும்?"
நித்திலா அதிர்ச்சி அடைந்தாள். சித்திரவேலின் உடல்நலனுக்காக அவன் அவளை எப்பொழுதும் கடிந்து கொண்டதில்லை. இனியவனின் அடுத்த வார்த்தைகள் சித்திரவேலையும் அதிர்ச்சி அடைய செய்தது.
"ஜாக்கிரதையா இருங்க கா. உங்க வாழ்க்கையில முதல்ல கவனம் செலுத்துங்க. அதை நீங்க ஆரம்பத்துல இருந்தே செஞ்சிருந்தா நிறைய பிரச்சனைகளை தவிர்த்து இருக்கலாம்" என்று ஊடுருவும் பார்வையோடு சித்திரவேலை பார்த்தபடி கூறினான் இனியவன்.
அவன் அதை எந்த அர்த்தத்தில் கூறினான் என்று சித்திரவேலுக்கு புரியவில்லை. அவனது பைத்தியக்கார மருந்தை பற்றி ஏதாவது தெரிந்து கொண்டு விட்டானா இனியவன்? அவனது கூரிய பார்வை தன் மேல் இருந்ததை உணர்ந்தான் சித்திரவேல். அது அவனுக்கு உள்ளுக்குள் உதறலை தந்தது.
நித்திலாவின் நிலையோ வேறாய் இருந்தது. ஏனென்றால், இதே போன்ற எச்சரிக்கையைத் தான் ஜோசியரும் அவளிடம் கூறினார்.
நித்திலாவையும் சித்திரவேலையும் விட அதிகமாய் அதிர்ச்சி அடைந்தது ஆழ்வி தான். இனியவன் செய்ய முயல்வது என்ன? அவருக்கு என்ன வேண்டும்? சித்திரவேலை மன்னிக்கப் போவதாய் அவன் கூறவில்லையா? அப்படி இருக்கும் பொழுது, எதற்காக இப்பொழுது அவனை கிள்ளி விட்டு வேடிக்கை பார்க்கிறான்? அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. இனியவன் அவளது கணிப்புகளுக்குள் பொருந்தவில்லையே...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top