55 நீ தான் வேண்டும்

55 நீ தான் வேண்டும்

இனியவன் கூறியதை கேட்டு, ஆழ்வியின் கரங்கள் தன் சேலையை முறுக்குவதை நிறுத்தின.

"ஆழ்வி, இதுல தயங்க எதுவுமே இல்ல. சித்திரவேல் நம்ம நினைச்சதை விட ரொம்ப ஆபத்தான ஆளா இருக்கான். நம்ம நமக்குள்ள தெளிவா இருக்கணும். அப்பதான் நம்மளால அவனை ஹேண்டில் பண்ண முடியும். அவனோட மோசமான நடவடிக்கைக்கு காரணம் என்னன்னு நீங்க கெஸ் பண்ணி இருந்தா தயவு செஞ்சு சொல்லுங்க" என்றான் குருபரன்.

ஆழ்வி இனியவனை பார்க்க, அவன், கூறு என்பது போல் சைகை செய்தான்.

"நீங்க சொல்றது சரி தான். ஒருவேளை நீங்க உங்க வைஃப் கூட சேர்ந்துட்டா, நீங்க உங்க வைஃபோட உங்க வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிடுவீங்க. சித்திரவேல் அண்ணனுக்கும் அக்காவோட நிறைய நேரம் கிடைக்கும். ஆனா உங்க மனசுல இருக்குற அக்காவோட இமேஜ் அப்படியே தான் இருக்கும். இந்த கல்யாணத்தை நீங்க காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டா, உங்க வைஃபோட சந்தோஷமா வாழ ஆரம்பிச்சிடுவீங்க. அவர் அது நடக்கக்கூடாதுன்னு நினைக்கிறாரு. உங்களுக்கும் அக்காவுக்கும் நடுவுல ஒரு பிளவு ஏற்படணும், நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் வெறுக்கணும் அப்படிங்கிறது தான் அவருடைய எண்ணம்.  அப்போ தான் அக்கா தன்னுடைய முழுமையான நிம்மதியை தேடி அண்ணன் கிட்ட போவாங்க. நீங்க ஒரு பணக்கார வீட்டு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்னு விருப்பப்பட்டா, அது அக்காவை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும். உங்களுக்கு லோகிளாஸ் பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சதுக்காக அக்கா மேல உங்களுக்கு கோபம் வரும். அது அக்காவுக்கு உங்க மேல வருத்தத்தை ஏற்படுத்தும். அது தான் நடக்கணும்னு சித்திரவேல் அண்ணன் நினைக்கிறாரு"

"இது மேல மேல சிக்கல் ஆகிகிட்டே போகுது" என்ற குருபரன்,

"நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும், இனியா"  என்றான்.

கண்களை மூடி ஆழமாய் யோசித்தான் இனியவன். அவனை தொந்தரவு செய்யாமல்  ஆழ்வியும் குருபரனும் அமைதியாய் இருந்தார்கள். அவன் நித்திலாவை குறித்து கலக்கமடைந்திருக்கிறான் என்று அவர்களுக்கு தெரியும். ஏன் இருக்காது? அவள் அவனது அக்காவாயிற்றே. அவன் சித்திரவேலை தண்டித்தால் அது நிச்சயம் நித்திலாவை புண்படுத்தும். அவனை தண்டிக்கவில்லை என்றால், அவன் அனைத்தையும் சீரழித்து விடுவான். இது வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தால், முடிவெடுக்க இனியவனுக்கு வெகு சில நிமிடங்கள் தான் தேவைப்பட்டிருக்கும். ஆனால் இது குடும்பம். இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலையை அவன் எதிர்கொண்டதே இல்லை. இது இரு முனையும் கூர்மையுள்ள கத்தி.
அவன் எச்சரிக்கையாய் இல்லாவிட்டால் அந்த கத்தி அவனை மட்டும் அல்லாமல் அவனை சேர்ந்தவர்களையும் காயப்படுத்தும்.

"என்ன நினைக்கிற, இனியா?"

"இது ரொம்ப சீரியசான விஷயம்னு எனக்கு தெரியும். இதை நினைச்சு வருத்தப்படுறதுனால பிரச்சனை தீர்ந்திட போறது இல்ல. இது, என் குடும்பமும் அதோட சந்தோஷமும் சார்ந்த விஷயம். அது தான் என்னை ரொம்ப டென்ஷன் பண்ணுது. அக்காவை நினைச்சா ரொம்ப கவலையா இருக்கு. நான் பைத்தியமா இருந்த காரணம் அவங்களுக்கு தெரிஞ்சா, நிச்சயம் அவங்க நொறுங்கிப் போவாங்க. ஆனா அதே நேரம், நான் சித்திரவேலை போலிஸ்ல பிடிச்சு கொடுத்தா அவங்க ஒடஞ்சு போவாங்க. இது ரொம்ப பெரிய சீக்கலான விஷயம்"

இனியவனுக்காக வருத்தப்பட்டான் குருபரன். அவன் இது போல் இருந்து அவன் பார்த்ததில்லை.

"கவலைப்படாத இனியா. நமக்கு சீக்கிரமாகவே ஒரு சொல்யூஷன் கிடைக்கும்"

"நீங்க சித்திரவேல் அண்ணனை தண்டிக்க போறது இல்லையா?" என்று கேள்வி எழுப்பிய ஆழ்வியை இருவரும் வியப்போடு பார்த்தார்கள்.

"இது வெறும் தண்டனை மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் இல்ல ஆழ்வி. அவன் எங்க அக்காவோட வீட்டுக்காரன். அவனோட தண்டனை, அவனோட மட்டும் போகாது. அது என் குடும்பத்தையும் பாதிக்கும். எல்லாரையும் விட அதிகமா பாதிக்கப்பட போறவன் நான் தான்"

"அப்படின்னா நீங்க என்ன செய்யப் போறீங்க?"

"அவசரப்பட்டு எதையும் செய்யாம, நிதானமா யோசிச்சி செய்ய நினைக்கிறேன். அவசர அடியில பிரச்சனைகயை ஏற்படுத்தி யாரையும் காயப்படுத்த கூடாதுன்னு நினைக்கிறேன். நான் குணமானதுனால அவங்க இப்ப தான் சந்தோஷமா இருக்க ஆரம்பிச்சிருக்காங்க. மறுபடியும் அவங்களை நான் காயப்படுத்த வேண்டாம்னு நினைக்கிறேன்"

"அப்படின்னா நீ சித்திரவேலை மன்னிச்சிட போறியா?" என்றான் குருபரன் அதிர்ச்சியோடு.

"நிச்சயமா இல்ல. ஆனா அதே நேரத்துல அவனை என்னால் தண்டிக்கவும் முடியாது"

குருபரன் ஏதோ சொல்ல முயன்ற போது அவனை அமைதியாய் இருக்கும்படி சைகை செய்தாள் ஆழ்வி. அது குருபரனுக்கு வியப்பை அளித்தது. அவளது கண் ஜாடைக்கு என்ன அர்த்தம்? என்ன செய்ய வேண்டும் என்பதை அவள் ஏற்கனவே முடிவு செய்து விட்டாளா?

தன்னை சமாளித்துக் கொண்ட இனியவன்,

"இப்போ ரீனா எங்க இருக்கா. மறுபடியும் அவ புருஷனோட சேர்ந்துட்டாளா?" என்றான்.

"இல்ல, அவ தனக்கு ஒரு புது பார்ட்னரை தேடிக்கிட்டா, சித்தார்த்..."

"யு மீன், லக்கி டிராவல்ஸ் ஓனர் சித்தார்த்தா?"

"அவனே தான். இப்போ ரீனா அவன் கூட, அவனோட புது வீட்ல தான் இருக்கா"  

"ஷர்மா என்ன ஆனார்?"

"அவர் இப்பவும் தனியா தான் இருக்காரு"

"அவங்க ரெண்டு பேர் மேலயும் ஒரு கண் இருக்கட்டும்"

"ஏன் இரண்டு பேரையும் வாட்ச் பண்ண சொல்ற?"

"ஏன்னா நான் எதையும் மிஸ் பண்ண வேண்டாம்ன்னு நினைக்கிறேன். ஏன்னா, நம்மளுடைய நிழல்ல கூட எதிரி ஒளிஞ்சிகிட்டு இருக்க முடியும்... சித்திரவேலை மாதிரி...!"

"இந்த விஷயத்தை நித்திலாவோட கவனத்துக்கு கொண்டு போகாமலேயே நம்மால சித்திரவேலை தண்டிக்க முடியும்"

"எப்படி? அவனை கொல்ல போறியா?"

"அவனை கொன்னா கூட தப்பில்ல" என்றான் கோபமாய்.

இனியவன் அமைதி காத்தான்.

"நீ என்ன தான் நினைக்கிற இனியா?"

"சித்திரவேலுக்கு சைக்கலாஜிக்கல் ட்ரீட்மென்ட் வேணும்னு நினைக்கிறேன்"

குருபரன் முகத்தை சுருக்க, ஆழ்வி விழி விரித்தாள்.

"சித்திரவேல் செஞ்சது தப்பு தான். ஆனா, அக்கா மேலையும் தப்பு இருக்குல்ல? சித்திரவேல் ஒரு அனாதை. அவனுக்குன்னு யாருமே இருந்ததில்லை. தன் மனைவிகிட்ட அதை எதிர்பார்க்கிறதுல என்ன தப்பு இருக்கு? அவனுக்கும் ஃபீலிங்ஸ் இருக்குல்ல? அவன் செஞ்சது மன்னிக்க முடியாத தப்பு தான். நான் ஒத்துக்குறேன். ஆனா அதுக்கு அடித்தளம் என்ன? பேசிக்கா அவன் கெட்டவன் கிடையாது. அக்காவுடைய தவிர்ப்பு தான் அவனை இப்படி மாத்தி இருக்கு. அவனுடைய இடத்துல இருந்து யோசிச்சு பாரு.  அக்கா அவனுக்காக மட்டுமே இருக்கணும்னு அவன் நினைக்கிறான். அவனுக்கு வேண்டியது அவனுக்கு கிடைச்சிருந்தா, அவன் நல்லவனா தான் இருந்திருப்பான்"

"நீ என்ன சொல்ல வர இனியா? அவனை ராமநாதபுரத்துக்கு நீ ட்ரீட்மென்ட் கூட்டிகிட்டு போக போறியா?"

"அவனை மருந்தால குணப்படுத்த முடியாது... டிரீட்மென்ட்டால தான் குணப்படுத்த முடியும்" என்று ஆழ்வியை பார்த்த அவன்,

"எனக்கு உன்னோட ஹெல்ப் வேணும் ஆழ்வி" என்றான்.

அவள் சரி என்று தலையசைத்தாள்.

"பாட்டியும் பார்கவியும் கூட எனக்கு ஹெல்ப் பண்ணா நல்லா இருக்கும்"

"உனக்கு அவங்க நிச்சயம் ஹெல்ப் பண்ணுவாங்க. அதே நேரம், உங்க வீட்ல உனக்கு ஹெல்ப் பண்ணக்கூடிய இன்னொரு ஆளும் இருக்கான்"

"முத்துவா?" என்று புன்னகைத்தான் இனியவன்.

"ஆமாம் உனக்கு ஆழ்வி மருந்து கொடுக்கிறதை நிறுத்திட்டாங்கன்னு கண்டுபிடிச்சது அவன் தான்"

"அவனுக்கு நீ எப்படி புரிய வச்சிங்க?"

"அவனாவே அதை புரிஞ்சுகிட்டன். ஏன்னா, உன் கல்யாணத்துக்கு பிறகு உன்கிட்ட ரொம்ப பெரிய மாறுதல் தெரிஞ்சிது. ஆழ்வி உன்னை எப்படி எல்லாம் கவனிச்சுக்கிட்டாங்கன்னு அவன் பாத்தான்"

ஆழ்வியை பார்த்து அன்பாய் புன்னகைத்தான் இனியவன்.

அப்பொழுது இனியவனுக்கு நிகத்திலாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்ற இனியவன்,

"சொல்லுங்கக்கா" என்றான்.

"இன்னு, சித்ரா திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாரு. நாங்க அவரை ஹாஸ்பிடலுக்கு கூட்டிகிட்டு போறோம்" என்றாள் பதற்றத்தோடு.

"மயங்கிட்டாரா? ஏன்?"

"காலையில இருந்து அவர் எதுவுமே சாப்பிடாம இருந்திருக்காரு"

"நீங்க முதல்ல அவர ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க. நம்ம அப்புறம் பேசலாம்"

"பாட்டியும் என்னோட ஹாஸ்பிடலுக்கு வராங்க. வீட்ல கவி தனியா தூங்கிக்கிட்டு இருக்கா. கொஞ்சம் சீக்கிரம் வர ட்ரை பண்ணுங்க" என்று அவசரமாய் கூறினாள். 

"சரிங்கக்கா, நாங்க வறோம்" அழைப்பை துண்டித்த இனியவன் பெருமூச்சு விட்டான்.

"யாரு மயக்கம் போட்டது?" என்றான்  குருபரன்.

"சித்திரவேல்"

"ஏன்?"

"தெரியல" என்றான் இனியவன், நித்திலாவின் கவனத்தை மொத்தமாய் தன் பக்கம் திருப்பத்தான் அவன் அப்படி செய்திருப்பான் என்பதை ஊகித்துவிட்ட பிறகும் கூட"

"ஆழ்வி, கவி வீட்ல தனியா இருக்கா. நம்ம வீட்டுக்கு போகணும்.

சரி என்று தலையசைத்தாள் ஆழ்வி.
அவர்கள் இருவரும் அலுவலகம் விட்டு கிளம்பினார்கள். ஆழ்வி அமைதியாய் வருவதை கண்ட இனியவன்,

"என்ன யோசிக்கிற, ஆழ்வி?" என்றான்.

அவள் ஒன்றும் இல்லை என்று செயற்கையான புன்னகை சிந்தினாள் 

"சித்திரவேல் நடிக்கிறான்னு நினைக்கிறியா?"

ஒரு கணம் திகைத்த அவள் பெருமூச்சு விட்டாள்.

"ஆழ்வி ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோ. இதுல நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல ஒளிச்சு மறைச்சு பேச எதுவுமே இல்ல. நீ என்ன நினைக்கிறியோ அதை என்கிட்ட சொல்லு. ஏன்னா, இந்த விஷயம் நம்ம நெனச்சதை விட ரொம்ப கடுமையா இருக்கு"

"உங்களால சித்திரவேல் அண்ணனை மன்னிக்க முடியுமா?"

"நிச்சயமா முடியாது. ஆனா எனக்கு வேற வழியும் இல்ல. ஏன்னா, அக்காவோட வாழ்க்கையை என்னால பாழாக்க முடியாது. அவன் ஒரு பொசசிவ் ஹஸ்பண்ட்... ஃஅப்கோர்ஸ், நானும் தான்..."

"ஆனா அவர் செஞ்சதை எல்லாம் செய்ற துணிச்சல் உங்களுக்கு வருமா?"

"வராது, ஏன்னா நான் இனியவன், சித்திரவேல் இல்ல. ஒவ்வொருத்தரும் பிரச்சனையை கையாள்ற விதம் மாறுபடும். இது சித்திரவேலோட விதம்...! அக்காவை நேரடியா எதிர்க்க அவனால முடியல. அவங்ககிட்ட அவன் தேடி வச்சிருந்த நல்லவன் இமேஜை கெடுக்க அவன் விரும்பல. அதனால கிடைச்ச சந்தர்ப்பத்தை அவன் பயன்படுத்திக்கிட்டான். யோசிச்சு பாரு, அவனுக்கு என் மேல எந்த அளவுக்கு வெறுப்பு இருந்தா, இப்படி ஈவு இரக்கமில்லாம என்னை பழி தீத்திருப்பான்?" என்று வலியோடு புன்னகைத்தான்.

"எப்படி உங்களால சிரிக்க முடியுது?"

"நான் அழணும்னு நினைக்கிறியா?" என்று அதற்கும் சிரித்தான் இனியவன்.

.......

அவர்கள் இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள். முத்து கதவை திறந்தான்.

"கவி எப்படி இருக்கா? ஏதாவது சாப்பிட்டாளா?" என்றான் இனியவன்.

"ஜூஸ் மட்டும் தான் சாப்பிட்டாங்க. இப்போ தூங்குறாங்க. எழுப்ப வேண்டாம்னு சொன்னாங்க"

பார்கவின் அறைக்கு ஆழ்வியுடன்  சென்றான் இனியவன். பார்க்கவியின் கன்னத்தை தட்டி அவளை எழுப்ப முயன்றாள் ஆழ்வி.

"ஆழ்வி, எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. என்னை தூங்க விடு, ப்ளீஸ்" என முணுமுணுத்தாள்  பார்கவி.

"அவ தூங்கட்டும். அவளுக்கு ரெஸ்ட் வேணும். வா போகலாம்" என்று நடந்தான் இனியவன்.

அவனை பின் தொடர்ந்தாள் ஆழ்வி.

"என்னங்க, உங்களுக்கு என்ன வேணும்?" என்றாள் ஆழ்வி.

அவளை நோக்கி திரும்பிய அவன்,

"நீ தான்" என்றான் நமட்டு புன்னகையோடு.

அதிர்ச்சியில் விழி விரித்த ஆழ்வி மென்று விழுங்கினாள். மெல்ல இமை உயர்த்தி அவனை பார்க்க அவன் தன் புருவம் உயர்த்தி என்ன? என்பது போல், ஆளைக் கொல்லும் புன்னகையோடு சைகை செய்தான். ஆழ்வியின் இதயம் துடிப்பதையே நிறுத்தியது போல் இருந்தது.

"சாப்பிட என்ன வேணும்னு கேட்டேன்..." என்றாள் தடுமாற்றத்துடன்.

"ஓஹோ, நான் வேற என்னமோ நெனச்சேன்" என்று புன்னகைத்தபடி தன் அறையை நோக்கி சென்றான்.

அவனை பின்தொடர்ந்து செல்வதா, வேண்டாமா என்று புரியாமல் நகத்தைக் கடித்த படி நின்றாள் ஆழ்வி.

"இப்போதைக்கு எனக்கு ஜூஸ் மட்டும் போதும்" என்றான் அவளை திரும்பி பார்க்காமல்.

அதிரும் இதயத்துடிப்புடன் சமையல் அறைக்கு சென்றாள் ஆழ்வி. முத்து அவளை பார்த்து புன்னகைத்தான்.

"அவர் ஜூஸ் கேட்டாரு" என்றாள்.

"நான் நித்திலா அக்காவுக்காக ஜூஸ் போட்டு வச்சேன். ஆனா அவங்க சாப்பிடல. அது பிரிட்ஜ்ல தான் இருக்கு. எடுத்துக்கங்க அண்ணி" என்றான்.

சரி என்று, அதை எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றினாள் ஆழ்வி.

"குரு சார் ஃபோன் பண்ணி அண்ணனுக்கு உண்மை தெரிஞ்சிடுச்சின்னு சொன்னாரு" என்று குதூகலத்துடன் கூறினான் முத்து.

ஆம் என்று செயற்கையான புன்னகையோடு தலையசைத்தாள் வேறொரு பதற்றத்தில் இருந்த ஆழ்வி.

"எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, அண்ணி"

"எனக்கும் தான்...! இந்த ஜூஸை கொஞ்சம் அவர்கிட்ட குடுக்குறீங்களா?" என்று அந்த டம்ளரை அவனை நோக்கி நீட்டினாள்.

"அய்யய்யோ... நீங்க தான் அவரோட ஒய்ஃப்ன்னு தெரியாதப்பவே அவர் என்னை வாங்கு வாங்குன்னு வாங்குனாரு. இப்போ நான் இதை கொண்டு போனா, என் கதி அதோ கதி தான். தயவு செஞ்சு நீங்களே எடுத்துக்கிட்டு போயிடுங்க, அண்ணி"

"கவி தூங்கிகிட்டு இருக்கா. நான் அவ கூட போய் இருக்கணும்"

"நான் சமையலை முடிச்சிட்டேன், அண்ணி. நான் போய் அவங்க ரூமுக்கு வெளியில காத்திருக்கேன். அவங்க எழுந்தா உங்களை கூப்பிடுறேன்" என்று அங்கிருந்து ஓடி போனான் முத்து.

தன் கையில் இருந்த பழச்சாறு டம்ளரை  நடுக்கத்துடன் பார்த்த ஆழ்வி,

"அம்மா தாயே! என் கை எப்படி நடுங்குதுன்னு பாருங்க.  தயவு செஞ்சு ஏதாவது செஞ்சி அவரோட கவனத்தை திசை திருப்பி, அவரை பிசியா ஆக்கிடுங்க" என்று வேண்டிய படியே இனியவனின் அழைத்துச் சென்றாள் ஆழ்வி. 

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top