54 ஏன்?
54 ஏன்?
"ஆழ்வி எனக்கு தங்கச்சி மாதிரி" என்றான் குருபரன் அவசரமாய்.
"அப்படியா? ஆனா நீ பேசினத பாத்தா அப்படி தெரியலையே!"
"நான்... வந்து..."
"என்னை பொறாமை பட வைக்கனும்னு நெனச்சியா?" என்றான் கள்ள புன்னகையுடன்.
குருபரன் திகைத்தான்.
"அவ உனக்கு தங்கச்சி மாதிரி தான்னு எனக்கு ஏற்கனவே தெரியும்"
"ஆனா உனக்கு எப்படி...?"
"உன்னோட பேரை அவ ஃபோன்ல குரு அண்ணான்னு அவர் ஸேவ் பண்ணி வச்சிருந்தா"
"அவங்க ஃபோனை நீ பார்த்தியா? ஆனா எப்படி? எப்போ?"
"ரெண்டு நாளைக்கு முன்னாடி உனக்கு ஆழ்விகிட்ட இருந்து ஃபோன் வந்தது... ஞாபகம் இருக்கா?"
"ஆமாம்"
"ஆழ்வி ஒரு வார்த்தை கூட பேசல. ஏன்னா உனக்கு கால் பண்ணுது ஆழ்வி இல்ல... நான் தான். உன்கிட்ட பேசுறது ஆழ்வின்னு நினைச்சுகிட்டு, நீ எல்லாத்தையும் உளறி கொட்டிட்ட"
தான் பேசியது ஆழ்வியிடம் அல்ல, இனியவனிடம் என்பதை குருவால் நம்பவே முடியவில்லை. அவன் அன்று என்ன கூறினான் என்று அவனுக்கு நன்றாகவே நினைவிருந்தது.
*ஆழ்வி, நீங்க உங்க புருஷன் கூட ஆஃபீசுக்கு வர போறதா கேள்விப்பட்டேன். என்ன ஒரு எபிக் மொமெண்ட்...! பாருங்க, இனியாவே உங்களை ஆஃபீசுக்கு கூட்டிகிட்டு வரப் போறான். நம்ம ரொம்ப நாளா அவனை இருட்டுல வச்சிருக்க கூடாது. தயவுசெய்து அவன்கிட்ட உண்மையை சொல்லிடுங்க, ஆழ்வி. அவன் கோவத்தை பத்தி உங்களுக்கு தெரியாது. அவனுக்கு உண்மை தெரிஞ்சா அவன் ரொம்ப கோபப்படுவான். நீங்க தான் அவனோட ஒய்ஃப் அப்படிங்கற உண்மையை அவனுக்கு சொல்லிடுங்க*
உடல் முழுவதும் வியர்த்து கொட்ட இனியவனை பார்த்துக்கொண்டு நின்ற குருபரன்,
"இனியா..."
"நான் உன் நம்பரை ஆழ்வியோட ஃபோன்ல பிளாக் பண்ணிட்டேன். ஏன்னா, அந்த ஃபோன் காலை பத்தி நீங்க ரெண்டு பேரும் பேசிக்க வேண்டாம்னு தான்"
அதிர்ச்சியில் தன் விழிகளை விரித்தான் குருபரன்.
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, ஆழ்விகிட்ட பேசிகிட்டு இருக்க மாதிரி நீ ரொம்ப நல்லாவே நடிச்ச!"
"இல்ல, இனியா... நான் வந்து..."
தன் பாக்கெட்டில் இருந்த ஆழ்வியின் கைபேசியை எடுத்த இனியவன்,
"ஆழ்வியோட ஃபோன் என்கிட்ட தான் இருக்கு" என்று மேலும் அவனுக்கு அதிர்ச்சி அளித்தான்.
"நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்ல கம்பானியன். உங்களுக்குள்ள நல்ல புரிதல் இருக்கு... அவ என்னோட வைஃப் ஆச்சே!" என்றான் இனியவன்.
அப்படி ஒரு வார்த்தையை இனியவனிடம் இருந்து கேட்ட குருபரன் மகிழ்ச்சி கடலில் மூழ்கினான். அவனை ஆற தழுவிக் கொண்டு,
"ஐ அம் சாரி இனியா...! ஐ அம் ரியலி சாரி" என்றான்.
அவனது முதுகை தட்டிக் கொடுத்த இனியவன்,
"எதுக்காக ஆழ்வி என்னோட வைஃப்ங்கிற உண்மையை நீங்க என்கிட்ட சொல்லல?"
"ஏன்னா, நீ இனியவன் பாலகுமாரன்...!" என்று ஆழ்வி கூறிய அதே பதிலை அவனும் கூறினான்.
"இனியா, உன் வாழ்க்கை எப்படி இருக்கணும்னு வகுத்து வாழறவன் நீ. ஆனா உன்னோட கல்யாணம் உனக்கே தெரியாம நடந்துடுச்சு. அதை சொல்ற தைரியம் எங்களுக்கு எப்படி வரும்?"
"வந்திருக்கணும்... ஏன்னா அது உண்மை!"
"இனியா, எல்லா உண்மையும் அப்படி ஒடச்சி போட்டு சொல்லிட முடியாது. சில உண்மைகளை உன்னால தாங்க முடியாம போகலாம்..."
"நீ சொல்ற உண்மை சித்திரவேலை பத்தியதா இருந்தா, நான் அதை தாங்கிக்க தயாராக இருக்கேன்"
"உனக்கு சித்திரவேலை பத்தி தெரியுமா?" என்று தடுமாறினான் குருபரன்.
"சித்திரவேலை பத்தி மட்டுமில்ல. எல்லா உண்மையும் எனக்கு தெரியும்"
"எல்லா உண்மையும்னா?" என்றான் குருபரன், அவனுக்கு எதைப் பற்றி தெரியும் என்று தெரியாமல் வாய்விட்டு விடக்கூடாது என்பதற்காக.
"நான் கோமா ஸ்டேஜ்ல இல்ல. பைத்தியமா இருந்தேன், கட்டுப்படுத்த முடியாத செக்ஸ் பீலிங்ஸ்ஸோட. ஒரு மோசமான மருந்தை எனக்கு கொடுத்து என்னை அப்படி வைத்திருந்தது சித்திரவேல் தான். நான் ஆழ்வியை ஃபிசிக்கலா அட்டாக் பண்ணேன். அவளோட டைமிங் சென்சை யூஸ் பண்ணி என்கிட்ட இருந்து அவ தப்பிச்சுக்கிட்டா. அதனால அவளோட அம்மாவுக்கு ஒரு கோடி ரூபா குடுத்து அக்கா எனக்கு அவளை கல்யாணம் பண்ணி வச்சாங்க"
"உனக்கு எல்லாம் தெரியுமா?"
"தெரியும். ஆனா சித்திரவேல் ஏன் இதையெல்லாம் செஞ்சான்னு தான் எனக்கு தெரியல"
"பொறாமையிலயும் பொசசிவ்னஸ்லயும் தான் அவன் இதை செஞ்சான்"
"நீ என்ன சொல்றன்னு எனக்கு புரியல" என்றான் யோசனையுடன்.
"நித்திலா அவனைவிட அதிகமா உனக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது அவனுக்கு பிடிக்கல. நித்திலாவோட ஃபர்ஸ்ட் பிரையாரிட்டியா அவன் இருக்கணும்னு நினைக்கிறான். அதனால உன்னை நித்திலாகிட்ட இருந்து விலக்கி வைக்கணும்னு நினைச்சான். அக்காவுக்கும் தங்கச்சிக்கும் வித்தியாசம் தெரியாம நீ காட்டுதனமா நடந்துக்கிட்டா, நித்திலா உன்கிட்ட நெருங்கவே பயப்படுவாங்க. அதனால, உன்னோட செக்ஸுவல் ஹார்மோன்சை அவன் காட்டுதனமா மாத்தினான். அவனோட பிளான் வேலை செஞ்சிது. அதுமட்டுமில்ல, உன்னோட புத்தியை கம்ப்ளிட்டா வேற பக்கம் திசை திருப்ப, பணத்துக்காக எதையும் செய்ற பொம்பளையை கூட அவன் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வர நினைச்சான்"
"என்ன சொல்ற நீ?"
"ஆமாம், நீ செக்ஸுவல் ஃபீலிங்ஸ்ல ரொம்ப கட்டுக்கடங்காம இருந்த. அதை சரிகட்ட அப்படிப்பட்ட ஒரு பொம்பளையை உங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வரணும்னு நினைச்சான் சித்திரவேல். ஆனா, நித்திலாவும் பாட்டியும் அதுக்கு ஒத்துக்கல. அப்ப தான் நீ ஆழ்வியை அட்டாக் பண்ண. ஆழ்வியை உனக்கு கல்யாணம் பண்ணி வச்சி நித்திலா சித்திரவேலுக்கு ரொம்ப பெரிய ஏமாற்றத்தை கொடுத்தாங்க"
"சித்திரவேல் பொறாமைல தான் இதை செய்றான்னு உனக்கு எப்படி தெரியும்?"
"அதை கண்டுபிடிச்சது நான் இல்ல. ஆழ்வி தான். அதை அவங்க எப்படி செஞ்சாங்கன்னு தெரியுமா?"
தெரியாது என்று தலையசைத்தான் இனியவன்.
"நேத்து நித்திலாவுக்கு ஃபயர் ஆக்சிடென்ட் ஆச்சு"
ஆம் என்று தலையசைத்தான்.
"அது உண்மையிலேயே ஆக்சிடென்ட் இல்ல"
"நீ சொல்றதுக்கு என்ன அர்த்தம்?"
"அவங்க புடவையை பத்த வச்சது சித்திரவேல் தான்"
"என்னது? ஆனா எதுக்கு?" என்றான் அதிர்ச்சியோடு இனியவன்.
"ஏன்னா, நித்திலா சித்திரவேல் வாங்கி கொடுத்த புடவையை விட்டுட்டு, நீ வாங்கி கொடுத்த புடவையை பூஜையில கட்டிக்கிட்டு இருந்தாங்க"
விரத்தியுடன் முகம் சுருக்கினான் இனியவன்.
"அவனுக்கு நித்திலா மேல அவ்வளவு பொசசிவ்னஸ் இருக்கு. இதுக்கு ஏதாவது செஞ்சாகணும், இனியா. இல்லன்னா சித்திரவேல் பைத்தியம் ஆயிடுவான்"
"அவன் ஏற்கனவே அப்படித்தானே இருக்கான்?" என்றான் இனியவன் கோபமாய்.
"ஆமாம், நீ ஜாக்கிரதையா இரு"
"என்னை யார் அடிச்சு போட்டதுன்னு உனக்கு ஏதாவது தெரிஞ்சுதா?"
"எனக்கு ரீனா மேல தான் சந்தேகமா இருக்கு"
"ரீனாவா? அவ ஏன் செய்யணும்?"
"நீ பைத்தியமா இருந்த விஷயத்தை உலகத்துக்கு தெரியாம ரொம்ப ரகசியமா வச்சிருந்தான் சித்திரவேல். ஆனா ரீனா ஒரு தடவை உன்னோட பைத்தியக்காரத்தனத்தை சொல்லி என்னை வெறுப்பேத்தினா. அவளுக்கு அந்த ரகசியம் எப்படி தெரிஞ்சது?"
இனியவன் யோசனையில் ஆழ்ந்தான்.
"சித்திரவேலைப் பத்தி இன்னும் தெளிவா உனக்கு தெரியனும்னா, அதைப்பத்தி நீ ஆழ்வி கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம்" என்று சற்று நிறுத்திய குருபரன்,
"ஆழ்வி ரொம்ப நல்ல பொண்ணு, இனியா" என்றான்.
"ஆனா அவ சித்திரவேலை பத்தி என்கிட்ட பேச தயங்குறா"
"தயங்குறாங்கன்னா என்ன அர்த்தம்? நீ அவங்க கிட்ட ஏற்கனவே பேசிட்டியா?" என்றான் நம்ப முடியாமல்.
"நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க?"
"உனக்கு உண்மை தெரியும்ங்குற விஷயம் அவர்களுக்கு தெரியுமா?"
"தெரியும்"
"அவங்க என்ன சொன்னாங்க?"
"எக்ஸ்க்யூஸ் மீ... அது எனக்கும் என் பொண்டாட்டிக்கும் நடுவுல இருக்கிற பர்சனலான விஷயம்!"
அதைக் கேட்டு வாயை பிளந்தான் குருபரன்.
அப்பொழுது குருபரனின் அறையின் கதவை யாரோ தட்டினார்கள். கதவை திறந்த குருபரன், உதவி மேலாளர் ஜாஃபர் அங்கு நிற்பதை கண்டான். அவன் அறையில் இனியவன் இருப்பதை பார்த்த ஜாஃபர், தன்னை சுதாகரித்துக் கொள்ள சற்று திணறி,
"குட் மார்னிங், ஐபிகே" என்றான்.
தன் தலையசைத்தான் இனியவன்.
குருபரனை பார்த்த ஜாஃபர்,
"சார், மீட்டிங்குக்கு எல்லாம் ரெடியா இருக்கு" என்றான்.
"எல்லாரும் வந்துட்டாங்களா?" என்றான் குருபரன்.
"ஆமாம் சார்"
"நீங்க போங்க. நான் வரேன்"
சரி என்று தலையசைத்து விட்டு அங்கிருந்து சென்றான் ஜாஃபர். அது, ஒவ்வொரு வாரமும், அந்த நிறுவனத்தில் இருக்கும் ஒவ்வொரு துறையை சேர்ந்த தலைவர்களுக்கான கூட்டம் என்று இனியவனுக்கு தெரியும்.
"மீட்டிங்கை முடிச்சிட்டு என்னோட கேபினுக்கு வா" என்றான் இனியவன்.
"சரி, மீட்டிங்கை முடிச்சுட்டு வந்துடுறேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான் குருபரன்.
பார்க்கிங் லாட்டுக்கு சென்ற இனியவன், காரின் கதவை திறந்து,
"வா ஆழ்வி" என்றான்.
அவள் காரை விட்டு கீழே இறங்க, அவளை தன் அறைக்கு அழைத்து வந்து,
"இது தான் என்னோட கேபின்" என்றான்.
புன்னகையுடன் அவனது அறையில் தன் கண்களை ஓட விட்ட ஆழ்வி
"நைஸ்" என்றாள்.
தனது நாற்காலியில் அமராமல் மேஜையின் மீது சாய்ந்து தன் கைகளை கட்டிக் கொண்டான் இனியவன்.
"இந்த கேபினுக்கு எதுவும் மாடிஃபிகேஷன் தேவை இல்லையா?"
இல்லை என்ற தலையசைத்தாள் ஆழ்வி.
"ஏன்?"
"இது ஏற்கனவே பார்க்க ரொம்ப நல்லா தானே இருக்கு. இதுக்கு எந்த மாடிஃபிகேஷனும் தேவையில்லன்னு நினைக்கிறேன்"
"ஆறு மாசத்துக்கு முன்னாடி, இது எப்படி இருந்துதோ, அப்படித்தான் இப்பவும் இருக்கு... ஆனா இந்த கேபினோட ஓனர் மட்டும், சிங்கிளா இருந்து இப்போ ஃபேமிலி மேனா மாறிட்டான். அப்படின்னா இந்த கேபினும் மாறனும் தானே?"
அவன் எதற்காக அப்படி கேட்கிறான் என்று புரியாத ஆழ்வி அவனுக்கு பதில் கூறாமல் நின்றாள். பெரிய காரணம் ஒன்று அல்ல. அவளுடன் எதையாவது பேச வேண்டும் என்று தான் பேசிக் கொண்டிருந்தான் இனியவன்.
"பை தி வே, ஆழ்வி, நீ எப்பவும் புடவை தான் கட்டுவியா?"
"காலேஜ்ல படிச்சப்போ சுடிதார் போட்டுக்கிட்டு இருந்தேன்"
"கல்யாணத்துக்கு அப்புறம் எதுக்காக உன்னோட ட்ரெஸ்ஸிங் ஹாபிட்டை மாத்திக்கிட்ட?"
"இது நம்ம ட்ரெடிஷனல் டிரஸ் இல்லையா..."
"ட்ரெடிஷனல் ட்ரெஸ்ஸா? சீரியஸாவா சொல்ற?" என்றான் புன்னகையோடு.
*இது ட்ரெடிஷனல் உடை இல்லையா?* என்பது போல் அவனை பார்த்து முகம் சுருக்கினாள் ஆழ்வி.
"நான் கூட புடவையை ட்ரெடிஷனல் டிரஸ்ன்னு தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்... (என்று சற்று நிறுத்தியவன்) உன்னை புடவைல பார்க்கிற வரைக்கும்...!" என்றான்.
மருட்ச்சியோடு அவனை ஏறிட்டாள் ஆழ்வி.
"ஆனா இப்போ, என்னோட கருத்தை நான் மாத்திக்கிட்டேன்... புடவை தான் உலகத்திலேயே ரொம்ப செக்ஸியான டிரஸ்...!" என்றான் தன் விழிகளை அவள் மீது படர விட்டு. அது அவளது வயிற்றில் பூகம்பத்தை ஏற்படுத்தியது.
"லோ ஹிப் ஸாரி மனுஷன டெம்ப்ட் மாதிரி பிக்கினி கூட செய்ய முடியாது"
ஆழ்வியின் கரங்கள் அனுச்சையாய் அவளது புடவையை இழுத்து விட்டு இடையை மறைத்துக் கொண்டன.
அவளை நோக்கி நகர்ந்த இனியவன், அவளது முகத்தைப் பார்த்தபடி நின்றான். மெல்ல தன் கண் இமையை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.
"நீ என்னை ரொம்ப டெம்ப்ட் பண்ற ஆழ்வி..." என்று ரகசியமாய் கூறி அவளை வியர்க்கச் செய்தான்.
அவன் மெல்ல அவள் கண்ணம் தொட, அவள் தன் சேலையை இறுக பற்றினாள். இனியவன் ஆழ்வியின் நெற்றியில் இதழ் பதித்தான்.
திடீரென்று அவனது அறையை ஒரு காலடி சத்தம் நெருங்குவதை அவர்கள் கேட்டார்கள். ஆழ்வியை விட்டு ஓரடி பின்னால் நகர்ந்தான் இனியவன். கதவை தட்டாமல் திறந்த குருபரன், அங்கு ஆழ்வி இருந்ததை பார்த்து திகைத்தான். கதவை தட்டாமல் உள்ளே நுழைந்ததை எண்ணி சங்கடமடைந்தான்.
"ஐ அம் சாரி... நான் எதிர்பார்க்கல..."
"உள்ள வா" என்றான் இனியவன்.
சங்கடத்துடன் உள்ளே நுழைந்தான் குருபரன்.
"மீட் மிஸஸ் ஆழ்வி இனியவன்!" என்று அவளை குருபரனுக்கு அறிமுகம் செய்து வைத்தான் இனியவன்.
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள்.
"ஆழ்வியை நீ உன்னோட கூட்டிகிட்டு வந்தியா?"
ஆம் என்று தலையசைத்தான் இனியவன்.
"உங்க ரெண்டு பேரையும் ஒன்னா சேர்த்து பார்க்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு"
"இப்போதைக்கு எனக்கு உண்மை தெரிஞ்ச விஷயம் வேற யாருக்கும் தெரிய வேண்டாம்"
சரி என்று தலையசைத்த குருபரன்,
"உனக்கு உண்மை எப்படி தெரிஞ்சது, இனியா?" என்றான்.
"முதல்ல, முன்ன பின்ன தெரியாத ஒருத்தன் என்னை மாமல்லபுரத்தில் என் வைஃப் கூட பார்த்ததா சொன்னான்!"
ஆழ்வி அதிர்ச்சியில் விழி விரித்தாள்.
"அதுக்கு முதல் நாள் தான், நீ ஆழ்வியையும் பார்கவியையும் மாமல்லபுரத்துக்கு கூட்டிகிட்டு போனதா என்கிட்ட சொன்ன. அதனால நான் ஹாஸ்பிடலுக்கு போயி என்னோட கோமா ஸ்டேட் பத்தி டாக்டர்கிட்ட விசாரிச்சேன். ஆனா அவர், நான் ரெண்டு நாளைக்கு முன்னாடி படிக்கட்டிலிருந்து தவறி விழுந்ததுக்காக அட்மிட் ஆனதா சொன்னாரு"
இனியவனையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த ஆழ்வியை பார்த்தான் குருபரன். எவ்வளவு அழகாய் அவன் அனைத்தையும் இணைத்து பார்த்திருக்கிறான்!
"அதுக்கப்புறம் ஒரு இன்ட்ரஸ்டிங் பர்சனை மீட் பண்ணேன்... ஆழ்வியோட அண்ணன் சொல்லின் செல்வன்"
குருபரனும் ஆழ்வியும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
"நீ ஆழ்வியோட அண்ணனை மீட் பண்ணியா?"
ஆம் என்றான் இனியவன்.
"அவன் தங்கச்சிகிட்ட பணம் வாங்க வந்திருந்தான். அவன் அப்போ குடிச்சிருந்தான். என்னை பைத்தியம்னு சொன்னான்"
தன் கண்களை இயலாமையுடன் மூடினாள் ஆழ்வி.
"நான் குணமாயிட்டேன்னு அவனுக்கு தெரியாதுல்ல? அவன்கிட்ட இருந்து தான் நான் எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுகிட்டேன்"
"ஆனா நீ ஏன் ரியாக் பண்ணல?"
"நீங்க எல்லாரும் எதுக்காக என்கிட்ட உண்மையை மறைக்கிறீங்கன்னு எனக்குப் புரியல. என்னோட அனுமதி இல்லாம என் வாழ்க்கை பத்தின முடிவை எடுத்ததுக்காகத் தான் என்னோட ஃபேமிலியில இருக்கவங்க பயப்படுறாங்கன்னு நினைச்சேன். ஆனா என்னோட கல்யாணத்தை பத்தி பேசி, சித்திரவேல் தான் என்னுடைய பார்வையை வேற பக்கமா திருப்பினான். நான் ஒரு பணக்கார வீட்டு பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னான். அது தான் என்னை வித்தியாசமா யோசிக்க வச்சது. அவன்கிட்ட ஏதோ தப்பு இருக்குன்னு நினைச்சேன். என்னால எதையுமே புரிஞ்சுக்க முடியல. ஏன்னா, அவன் என்னை வெறுப்பான்னு நான் எதிர் பாக்கல"
அவனை அதிர்ச்சியோடு பார்த்தாள் ஆழ்வி, அவனுக்கு எப்படி அனைத்தும் தெரிந்தது என்பது போல. அதை கவனித்த இனியவன் பதில் அளித்தான்,
"இப்ப தான் குருகிட்ட சித்திரவேலை பத்தி பேசிக்கிட்டு இருந்தேன். அவன் என்னை ஏன் வெறுக்கிறான்னு குரு தான் சொன்னான்"
"ஆமாம் ஆழ்வி. ஃபயர் ஆக்சிடென்ட் பத்தியும், அதுக்கான காரணத்தை பத்தியும் இனியாகிட்ட சொல்லிட்டேன்"
"அவன் அக்கா மேல ரொம்ப பொசசிவ்வா இருக்கான். அவங்களோட கவனம் மொத்தமும் தன் மேல இருக்கணும்னு நினைக்கிறான். அவனுக்கு தான் அவங்க எல்லாத்துலயும் முன்னுரிமை கொடுக்கணும்னு நினைக்கிறான்... எல்லாம் சரி தான். ஆனா, நான் என் வைஃப் கூட சேரக்கூடாதுன்னு அவன் ஏன் நினைக்கிறான்? நான் ஒரு பணக்கார வீட்டு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்னு அவன் ஏன் சொன்னான்? நான் என் வைஃப் கூட சேர்ந்துட்டா, அதுக்கப்புறம், அவனோட ஒய்ஃபோட அட்டென்ஷன் அவனுக்கு தானே கிடைக்கும்? அக்காவோட அவனுக்கு நிறைய நேரம் கிடைக்குமே! ஏன்னா, நான் என் வைஃப் கூட பிஸியா இருப்பேன் இல்ல? அப்படி இருக்கும் போது, எதுக்காக சித்திரவேல் என்கிட்ட இப்படி ஒரு டர்ட்டி கேம் ஆடுறான்?" என்றான் இனியவன்
"எனக்கும் அது தான் புரிய மாட்டேங்குது" என்றான் குருபரன்.
அவர்கள் இருவரும் தனது முந்தானியை முறுக்கியபடி சங்கடத்தில் நெளிந்த ஆழ்வியை பார்த்து, பொருள் பொதிந்த பார்வை பரிமாறிக் கொண்டார்கள்.
"நான் கேட்ட எல்லா கேள்விக்கும் ஆழ்விகிட்ட பதில் இருக்குன்னு நினைக்கிறேன்!" என்றான் இனியவன்.
புடவையை முறுக்குவதை ஆழ்வியின் கைகள் அணிச்சையாய் நிறுத்தின. தலை நிமிர்த்தி இனியவனை திகைப்போடு ஏறிட்டாள்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top