51 இனியவனின் வருத்தம்

51 இனியவனின் வருத்தம்

இனியவன் கூறியதோடு மட்டுமல்லாமல், அவனது எல்லா சந்தேகங்களையும் தீர்க்கக்கூடிய  மேலும் சில கேள்விகளை தன் மனதிற்குள் தயார் செய்துக்கொண்டு ஆழ்விக்கு ஃபோன் செய்தார் தமிழரசி. இருட்டில் தவித்துக் கொண்டிருக்கும் இனியவனுக்கு வெளிச்சத்தை காட்ட வேண்டும் என்பது அவரது எண்ணம். அவர் ஒரு வழக்கறிஞர் ஆயிற்றே...! கேள்வி கேட்க அவருக்கு ஒருவர் சொல்லியா கொடுக்க வேண்டும்?

அவரது அழைப்பை ஏற்றாள் ஆவி.

"எப்படி இருக்கீங்க ஆன்ட்டி?" இப்ப தான் என் ஞாபகம் உங்களுக்கு வந்துதா? நான் உங்களுக்கு ஃபோன் பண்ணப்போ நீங்க ஏன் என்னோட காலை அட்டென்ட் பண்ணல? " என்றாள் அவள் உரிமையோடு.

"நான் என் கேசில் கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன்டா கண்ணா. அதனால தான் உனக்கு மறுபடி என்னால ஃபோன் பண்ண முடியல. ரொம்ப சாரி" என்று மன்னிப்பு கூறினார் தமிழரசி.

"பரவாயில்லை விடுங்க ஆன்ட்டி"

"நீ எப்படி இருக்க? உன் வீட்டுக்காரர் எப்படி இருக்காரு?" என்றார் தமிழரசி, தான் பேசுவதை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த ஆழ்வியின் வீட்டுக்காரனை பார்த்தபடி.

"நான் நல்லா இருக்கேன்... இனியவரும் நல்லா இருக்கார்!"

முதன்முறையாக தன்னை அவளது வீட்டுக்காரன் என்று ஒப்புக்கொண்டதை கேட்ட இனியவனின் முகத்தில் புன்னகை துளிர்த்தது.

"நல்லா இருக்காருன்னா? அவர் குணமாயிட்டாரா?"

"கம்ப்ளிட்டா குணமாயிட்டாரு, ஆன்ட்டி"

"நெஜமாவா சொல்ற? ஒரு நாள் நீயும் அவரும் என் வீட்டுக்கு வாங்க"

"ம்ம்ம்..."

"ஏன் உன் குரல் இப்படி உள்ள போகுது?"

"எங்க கல்யாணத்தைப் பத்தி இனியவருக்கு எதுவுமே தெரியாது. அவர்... அவர் என்னை மறந்துட்டார், ஆன்ட்டி"

"என்ன்னனது?" தன் குரலில் அதிர்ச்சி காட்டினார் தமிழரசி, அவர் அவளுக்கு தற்செயலாக தான் ஃபோன் செய்தார் என்று ஆழ்வியை நம்ப வைக்க.

"ஆமாம், ஆன்ட்டி"

"இதைத்தான் நான் கல்யாணத்துக்கு முன்னாடியே சொன்னேன். ஆனா உங்க அம்மா நான் சொன்னத காது கொடுத்து கேட்கவே இல்ல...! ஆனா எப்படி அவருக்கு நினைவு திரும்ப வந்தது?"

"படிக்கட்டுல இருந்து தவறி கீழே விழுந்து, தலையில அடிபட்டு, அவர் ஞாபகம் திரும்ப வந்துடுச்சு"

"உன்னை பத்தி அவருக்கு எதுவுமே ஞாபகம் இல்லயா? கல்யாணத்துக்கு முன்னாடி அவர் உன்னை பார்த்து பயந்தாரே, அதனால தானே அவங்க அக்கா உனக்கு அவரை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சாங்க?"

"அதெல்லாம் அவருக்கு ஞாபகம் இல்ல. அவர் என்னை சுத்தமா மறந்துட்டாரு" என்றாள் தொண்டை அடைக்க.

"நீ தான் அவருடைய வைஃப்ன்னு நீ அவர்கிட்ட சொல்லலையா?"

"இல்ல" என்றாள் மெல்லிய குரலில்.

"ஏன், ஆழ்வி?"

"ஒருவேளை அவருக்கு என்னை பிடிக்கலைன்னா...?"

பெருமூச்சு விட்டு கண்களை மூடினான் இனியவன்.

"நீ ஏன் அப்படி நினைக்கிற?"

"அவர் இனியவன் பாலகுமாரன்...! அவருக்குன்னு ஒரு ஸ்டாண்டர்ட் இருக்கு. அவரோட ஒரு பார்வைக்காக பொண்ணுங்க சாகவும் தயாரா இருக்காங்க. ஆனா நான்? அவரை என் புருஷன்னு உரிமை கொண்டாட எனக்கு என்ன தகுதி இருக்கு? அவரு ஒரு பணக்கார வீட்டு பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும்னு விருப்பப்படலாம்... நான் அவர் மனைவின்னு தெரிஞ்சு அவர் என்னை வெறுத்துட்டா என்ன ஆகும்? இந்த உலகத்துல என்னால தாங்க முடியாத ஒரு விஷயம் இருக்குன்னா அது அவருடைய வெறுப்பு தான், ஆன்ட்டி"

இனியவன் சங்கடத்தில் நெளிவதை கவனித்தார் தமிழரசி.

"நீ இந்த உண்மையை எத்தனை நாளைக்கு அவர்கிட்ட இருந்து மறைச்சி வச்சிட முடியும்?"

"எனக்கும் அவர்கிட்ட எல்லாத்தையும் சொல்லணும்னு தான் விருப்பம். ஆனா அவர் எப்படி ரியாக்ட் பண்ணுவாருன்னு எனக்கு தெரியல. நீங்களும் முன்னாடியே சொன்னீங்க, எங்களோட கல்யாணம் சட்டப்படி செல்லாதுன்னு. அப்புறம் என்னை என்ன செய்ய சொல்றீங்க?" என்றாள் விரக்தியுடன்.

"உன் மனசை தொட்டு சொல்லு, நீ அவரை காதலிக்கல?" என்றார் தமிழரசி இனியவனை பார்த்தவாறு

அதற்கு பதில் கூறாமல் மென்று விழுங்கினாள் ஆழ்வி.

"உன்னை எனக்கு நல்லா தெரியும்... அவர் உன் கழுத்துல தாலி கட்டின அடுத்த நிமிஷத்துல இருந்து நீ அவரை காதலிக்க ஆரம்பிச்சிருப்ப..."

"ஆமாம், நான் இந்த உலகத்துல எல்லாரையும் விட அதிகமா அவரை காதலிக்கிறேன். இந்த உலகமே அவர் கிட்ட நெருங்க பயந்த போதே நான் அவரை காதலிச்சேன். அவர் குடும்பமே அவர்கிட்ட இருந்து எட்டி நின்ன போது அவரோட ரூம்ல தைரியமா நான் நுழைஞ்சேன். அவரு காட்டுதனமா நடந்துகிட்டப்போ கூட எனக்கு அவரை ஃபேஸ் பண்ண எந்த பயமும் இருக்கல. ஆனா இப்போ, அவரை ஃபேஸ் பண்றதை நினைச்சாலே என் உடம்பெல்லாம் நடுங்குது ஆன்ட்டி"

"அவர் உன்னை ரேப் பண்ணி இருக்காரு..." இனியவன் கேட்க நினைக்காத அந்த கேள்வியையும் கேட்டார் தமிழரசி, அவன் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக.

"ஆன்ட்டி, ப்ளீஸ், நீங்களும் எங்க அம்மா மாதிரியே பேசாதீங்க. அவர் என்னை ரேப் பண்ணல. அவர் என்னைத் தொட்டாரு தான்... அவர் அப்போ சுயநினைவிலேயே இல்ல. நான் எத்தனை தடவை தான் இதை சொல்றது?"

நிம்மதியுடன் கண்களை மூடினான் இனியவன்.

"சரி, அவர்கிட்ட நான் பேசட்டுமா?" என்றார் தமிழரசி.

"வேண்டாம் ஆன்ட்டி, ப்ளீஸ், அப்படி செய்யாதீங்க"

"நீ என்ன தான் செய்யப் போற? உண்மையை அவர்கிட்ட மறைக்கிறது நல்லதில்ல"

"எல்லாம் விதிப்படி நடக்கட்டும்"

"ஒருவேளை அவருக்கு உன்னை பிடிக்கலைன்னா நீ அவரை விட்டுட்டு போயிடுவியா?" இதுவும் தமிழரசியின் சொந்த கேள்வி தான்.

அமைதியாய் இருந்தாள் ஆழ்வி.

"அப்ப என்ன செய்வ?"

"அவருக்கு என்னை பிடிக்கலன்னா நான் அவர் வாழ்க்கையில இருந்து போயிடுவேன்"

"உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு? எதுக்காக இப்படி நெருப்புல உருகுற?"

"நான் அவருக்காகத் தான் உருகிகிட்டு இருக்கேன்... அவரோட உயிருக்கு ஆபத்து இருக்கு, ஆன்ட்டி"

அதைக் கேட்டு இனியவனும் தமிழரசியும் அதிர்ச்சியோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"நீ என்ன சொல்ற ஆழ்வி? உயிருக்கு ஆபத்தா? அதை பத்தி உனக்கு எப்படி தெரியும்?"

"ஆமாம் ஆன்ட்டி. அவருக்கு தலையில அடிபட்டதால மட்டும் அவர் பைத்தியமா இருக்கல... ஒரு மோசமான மருந்தை அவருக்கு கொடுத்து அவரை பைத்தியமா வச்சிருந்தாங்க. எங்களுக்கு கல்யாணமான அடுத்த நாளே நான் அதை கண்டுபிடிச்சிட்டேன். அந்த சதிக்கு பின்னாடி இருக்கிறது யாருன்னு கண்டுபிடிக்க நினைச்சேன். என்னோட இனியவர் அவர் வாழ்க்கையில் நிம்மதியா இருக்கணும். எனக்கு அவ்வளவு தான் வேணும்"

ஏதோ ஒரு கனமான வஸ்து தன் தொண்டையை அடைப்பதை உணர்ந்தான் இனியவன். என்ன பெண் அவள்...! அவன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறாளே... அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை தனக்கு அளிப்பதற்காக அவள் நெருப்பில் வெந்து கொண்டிருக்கிறாளா! இப்படி ஒரு மனைவியை அடையும் அளவிற்கு அவன் அவ்வளவு கொடுப்பினை செய்தவனா?

"உங்க குடும்பத்துல யாருக்கும் இதைப் பத்தி தெரியாதா?"

"அவங்களோட கண்கள் கட்டப்பட்டிருக்கு. அவங்களுக்கு எதுவும் தெரியாது"

"நீ சொல்றது எனக்கு புரியல. எப்படி அவங்களுக்கு இதெல்லாம் தெரியாம இருக்கு?"

"நான் இன்னொரு விஷயம் சொன்னா உங்களால நம்ப முடியாது. அவங்க யாருக்குமே தெரியாம நான் இனியவருக்கு ட்ரீட்மென்ட் கொடுத்தேன்னு சொன்னா உங்களால நம்ப முடியுதா? என் ஃப்ரெண்ட் மீனாவோட ஹெல்ப்போட ராமநாதபுரத்தில் இருக்கிற ஒரு ஆயுர்வேத சாலையில் இருந்து அவருக்கு மருந்து வர வச்சு நான் கொடுத்துக்கிட்டு இருந்தேன். அவர் எவ்வளவு வேகமா இம்ப்ரூவ் ஆனார் தெரியுமா? நான் தான் உலகம்னு என் கூடவே இருந்தாரு. என் மேல பிரியமா இருந்தாரு. அந்த ட்ரீட்மென்ட் படி அவருக்கு நினைவு திரும்பி வந்தா, அவர் என்னை மறக்க மாட்டார்னு டாக்டர் சொன்னப்போ நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா? அவரை அந்த ஆயுர்வேதசாலைக்கு கூட்டிக்கிட்டு போய் ட்ரீட்மென்ட் கொடுக்கணும்னு நாங்க பிளான் பண்ணி வச்சிருந்தோம். சரியா அதுக்கு முதல் நாள் அவர் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து அவருக்கு நினைவு திரும்ப வந்துடுச்சு. அதோட எல்லாமே மாறிடுச்சு...!"

இனியவன் எதையோ எழுதுவதை கவனித்தார் தமிழரசி. அதை அவரிடம் நீட்டினான் இனியவன். அதை படித்துவிட்டு சரி என்று தலையசைத்த தமிழரசி,

"எதுக்காக அவங்க குடும்பத்துல இருக்கிற யார்கிட்டயும் இந்த ட்ரீட்மெண்ட் பத்தி நீ சொல்லல?" என்றார்.

"ஆன்ட்டி, அதை பத்தி பேசுற நிலைமையில நான் இல்ல"

"ஆழ்வி, நீ கேர்லெஸ்ஸா இருக்காத. எதையும் மறைச்சி வைக்கிறது நல்லதில்ல. எதுக்காக நீ அவங்க கிட்ட இந்த விஷயத்தை சொல்லலன்னு என்கிட்ட சொல்லு"

ஆழ்வி அமைதி காத்தாள்.

"நீ என்னை நம்பலையா?"

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல ஆன்ட்டி" என்று பெருமூச்சு விட்டாள் ஆழ்வி.

"அப்படின்னா என்கிட்ட உண்மையை சொல்லு. தயவு செஞ்சி சொல்லு ஆழ்வி"

"ஏன்னா, இந்த சதி வேலைக்கு பின்னாடி இருக்கிறது வேற யாரும் இல்ல, அவங்க மாமா தான்"

அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றான் இனியவன். அந்த உண்மை அவனை அடித்து போட்டது என்று தான் கூற வேண்டும். அவனுக்கு சித்திரவேலின் மீது சந்தேகம் இருந்தது உண்மை தான். ஆனால் அவன் தான் முதல் குற்றவாளியாய் இருப்பான் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை.

"நீ என்ன சொல்ற ஆழ்வி? இதுக்கெல்லாம் காரணம் சித்திரவேலா?" என்றார் தமிழரசி அதிர்ச்சியுடன்.

"ஆமாம் ஆன்ட்டி. இதைப்பத்தி எனக்கும், குரு அண்ணனுக்கும், எங்க வீட்டு வேலைக்காரன் முத்துவுக்கு மட்டும் தான் தெரியும். அவர் இதை யாருக்காக செஞ்சாருன்னு எங்களுக்கு தெரியாது. குரு அண்ணன் சித்திரவேலை வீட்டுக்கு வெளியிலயும், நானும் முத்துவும் வீட்டுக்குள்ளேயும் அவரை கண்காணிச்சுக்கிட்டு இருக்கோம்"

"உனக்கு ஏதாவது துப்பு கிடைச்சுதா?"

"கிடைச்சது. ஆனா, அதுக்கு எந்த ஆதாரமும் இல்ல. ஆனா என்னுடைய யூகம் நிச்சயம் உண்மையா தான் இருக்கும்னு எனக்கு தெரியும். இனியவரை பைத்தியமா வச்சிருக்க  அவருக்கு உதவியா இருந்த டாக்டரை நாங்க போலீஸ்ல புடிச்சு கொடுத்துட்டோம்"

"அந்த டாக்டர் கூடவே நீங்க சித்திரவேலையும் புடிச்சு கொடுக்க வேண்டியது தானே?"

"அதை எங்களால செய்ய முடியல. ஏன்னா, அந்த டாக்டர் ஆள்காட்டி கிடையாது. அவர் சித்திரவேலுக்கு எதிரா வாயே திறக்கல. தப்பை தானே செஞ்சதா ஏத்துக்கிட்டாரு. எல்லாத்துக்கும் மேல, சித்திரவேல் நித்திலா அக்காவோட வீட்டுக்காரர். எப்படி அவங்க மனசை உடைக்க முடியும்?"

"ஆனா சித்திரவேல் ரொம்ப ஆபத்தானவனா இருக்கானே..."

"நான் உயிரோட இருக்கிற வரைக்கும் அவரால இனியவரை ஒன்னும் செய்ய முடியாது" என்றாள் ஆழ்வி உறுதியோடு.

"நீ உன்னோட வாழ்க்கையை ரிஸ்க்ல போடுற... ஐபிகேவோட திறமை என்னன்னு தெரிஞ்சுக்கோ. அவர் எல்லாத்தையும் சரி கட்ட கூடியவர்"

"எனக்கு தெரியும். ஆனா தன் சொந்த அக்கா புருஷனுக்கு எதிரா நடவடிக்கை எடுக்க வேண்டிய மோசமான கட்டத்துல அவரை நிறுத்த நான் விரும்பல. அவர் அவங்க அக்கா மேல உயிரையே வச்சிருக்கார்.  அவங்க கண்ணுல கண்ணீர் வந்தா அவரால அதை தாங்க முடியாது"

"தயவு செஞ்சி இந்த விஷயத்தை நீ அவர்கிட்ட விட்டுடு. என்ன செய்யணும்னு அவர் முடிவு பண்ணட்டும்"

"நான் அவர்கிட்ட சொல்ல முயற்சி பண்றேன்"

"உன் புருஷன் நீ கூட சந்தோஷமா வாழுறத நான் பாக்கணும் ஆழ்வி"

"ம்ம்ம்... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ஆன்ட்டி. நான் உங்ககிட்ட அப்புறம் பேசுறேன்" என்று அழைப்பை துண்டித்தாள் ஆழ்வி.

உணர்வுகளின் குவியலாய் காட்சியளித்த இனியவனை பார்த்தார் தமிழரசி.

"உங்க பிரச்சனையை தீர்க்க என்னால ஆன எல்லா உதவியும் நான் செய்ய தயாரா இருக்கேன். உங்களுக்கு ரகசியமான நடவடிக்கை ஏதாவது எடுக்கணும்னா எனக்கு கால் பண்ணுங்க" என்றார் தமிழரசி.

"நிச்சயமா எனக்கு உங்களுடைய ஹெல்ப் வேணும். ஏன்னா, நான் நினைச்சதை விட இந்த விஷயம் ரொம்ப சென்சிடிவ்வா இருக்கு" என்றான் இனியவன்.

"நிச்சயமா செய்றேன்"

"சித்திரவேல் தான் கல்ப்ரிட். ஆனா அவன் எங்க ஆஃபீசுக்குள்ள வரவே இல்ல. என்னோட பிசினஸ்லையும் எந்த தலையிடும் செய்யல. என்னோட சேவிங்ஸ்ல இருந்து ஒரு பைசாவை கூட அவர் எடுக்கல. அவரோட இன்டென்ஷன் என்னன்னு என்னால புரிஞ்சுக்க முடியல. நீங்க ஒரு லாயரா இருக்கிறதால உங்களால ஏதாவது புரிஞ்சுக்க முடியுதான்னு முயற்சி பண்ணி பாருங்க. சித்திரவேல் என்ன செஞ்சிருக்க முடியும்னு கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க"

"நிச்சயம் செய்றேன். இந்த விஷயத்தை நான் அனலைஸ் பண்ணி உங்களுக்கு கால் பண்றேன்"

"தேங்க்யூ சோ மச்"

"எனக்கு உங்க நம்பர் கிடைக்குமா?"

"ஷுயூர்" என்று தன் எண்ணை அவரிடம் கூறினான்.

அவனது எண்ணை அவர் தன் கைபேசியில் சேகரித்துக் கொண்ட அடுத்த நிமிடம், இனியவனின் கைபேசிக்கு ஒரு தகவல் வந்தது. தமிழரசியிடம் இருந்து வந்ததால், அவரை ஏறிட்டான் இனியவன்.

"அதை ஓபன் பண்ணி பாருங்க" என்றார் தமிழரசி.

அதை திறந்து பார்த்த இனியவன் திகைத்தான். அவர் அனுப்பி இருந்தது அவர்களுடைய திருமண புகைப்படம். வெள்ளை வேட்டி சட்டையில், வழித்து வாரிய தலையுடனும், பாதி மூடிய கண்களுடனும் மேடையில் அமர்ந்திருந்தான் இனியவன். நித்திலாவும் பார்கவியும் அவனை இரண்டு புறமும் பற்றிக்கொண்டு நின்றார்கள். சித்திரவேல் அவர்களுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தான். ஆழ்வி தலை குனிந்தவாறு அவன் அருகில் அமர்ந்து இருந்தாள். அந்த புகைப்படத்தை பார்த்து புன்னகைத்தான் இனியவன்.

"ஒரு லாயரா இருந்ததால, உங்களுக்கு நடந்த கல்யாணத்துக்கு ஒரு ப்ரூஃப் வேணும்னு யாருக்கும் தெரியாம இந்த போட்டோவை நான் எடுத்தேன்"

"ரொம்ப தேங்க்ஸ் மேடம்" என்று புன்னகைத்தான் இனியவன்.

தமிழரசி காரை விட்டு கீழே இறங்க முனைந்த போது,

"நீங்க எனக்கு பண்ண ஹெல்ப்புக்கு ரொம்ப நன்றி. நீங்க எனக்கு எந்த அளவுக்கு ஹெல்ப் பண்ணி இருக்கீங்கன்னு உங்களுக்கு தெரியாது" என்றான்.

"ஆழ்வி யாருக்கும் கிடைக்க முடியாத ஒரு பொக்கிஷம்! அவ உங்களை எந்த அளவுக்கு காதலிக்கிறாள்னு அவ பேசினதிலிருந்து உங்களுக்கு புரிஞ்சிருக்கும். அவளை பார்த்துக்கோங்க" என்றார் தமிழரசி.

"0எனக்கு இப்படிப்பட்ட ஒரு வைஃப் கிடைச்சிருக்கான்னு நினைச்சு நான் ரொம்ப பெருமையும் சந்தோஷம் தான் படுறேன். எக்காரணத்தைக் கொண்டும் நான் அவளை விட்டுக் கொடுக்க மாட்டேன். சீக்கிரமே நானும் அவளும் உங்க வீட்டுக்கு வருவோம்"  என்றான் இனியவன். 

திருப்திகரமான புன்னகையோடு அங்கிருந்து சென்றார் தமிழரசி.

கண்களை மூடி  இருக்கையில் சாய்ந்தான் இனியவன். யாருக்கும் தெரியாமல் அவனுக்கு சிகிச்சை அளித்திருக்கிறாள் ஆழ்வி. அதை செய்தது அவனது குடும்பத்தார் என்று அவன் எவ்வளவு முட்டாள்தனமாய் எண்ணி இருந்தான்...! அவனது குடும்பத்தார் ஒரு மோசமானவனால் பொம்மைகள் போல் ஆட்டி வைக்கப்பட்டு கொண்டிருந்த அதே நேரம், அவனது மனநோயிலிருந்து அவனை மீட்டெடுக்க படாத பாடு பட்டிருக்கிறாள் ஆழ்வி. அவள் மட்டும் அதை செய்யாமல் இருந்திருந்தால், இன்றும் கூட அவன் ஒரு மிருகத்தை போல் அந்த கிரில் அறையில் அடைக்கப்பட்டு இருந்திருப்பான்.

எவ்வளவு தன்னலமற்ற பெண் அவனது மனைவி...! அவள் தன் மீது கொண்ட காதல் தான் எவ்வளவு ஆழமானது...! அந்த காதலுக்கு கைமாறாய் அவன் என்ன செய்யப் போகிறான்? செய்யத்தான் முடியுமா? நிச்சயம் முடியாது...! தனக்காக நெருப்பின் மேல் நின்ற ஒருத்தியின் தியாகத்தை பற்றி யோசிக்காமல், அவன் கற்பழித்ததாய் பொய் கூறிவிட்டாள் என்று எவ்வளவு முட்டாள்தனமாய் அவன் யோசித்துக் கொண்டிருந்தான்...! அவன் அவளை கற்பழிக்காமல் இருந்திருக்கலாம்...! ஆனால் அவன் அவளை தொட்டது உண்மை. கற்பழிப்புக்கு அது ஒன்றும் குறைந்தது இல்லையே...! அது அவளை எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கும்? அவன் அவளை என்ன செய்தான் என்று அவனுக்கு தெரியவில்லை. பாவம் அவள், இப்பொழுதும் தன்னந்தனியாய் தவித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவனோ, அவளது உணர்வுகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான்...! அவனுக்கு அவளை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றியது...! காரை ஸ்டார்ட் செய்து, கியரை மாற்றி வீட்டை நோக்கி கிளம்பினான்... அவள் சாய்ந்து கொள்ள தோள் கொடுக்க... எவ்வளவு முடியுமோ அவ்வளவு இறுக்கமாய் அவளை அணைத்துக் கொள்ள...!

தொடரும்...


Bạn đang đọc truyện trên: AzTruyen.Top