4 பிடிக்குள்...

4 பிடிக்குள்...

திகில் அடைந்த பார்கவி பின்னோக்கி நகரத் துவங்கினாள். அங்கே ஓடி வந்த முத்து, இனியவனை பிடிக்க முயன்றான். அவனை ஒரே தள்ளில், பத்தடி தள்ளி விழச் செய்தான், கட்டுப்படுத்த முடியாத பலத்தோடு இருந்த இனியவன். ஒரு நொடியும் தாமதமின்றி பார்கவியை துரத்த தொடங்கினான். கண்ணீர் சிந்திய படி ஓடினாள், எந்த ஒரு தங்கையும் எதிர்கொள்ள கூடாத மோசமான சூழ்நிலையில் இருந்த பார்கவி. அவள் தன் கூடப்பிறந்த அண்ணனால் துரத்தப்பட்டுக் கொண்டிருந்தாள். அவன் கையில் அகப்பட்டால், அவன் என்ன செய்வான் என்று அவளுக்கு தெரியும்.

காடு போன்ற தலைமுடியுடனும், புதர் போன்ற தாடியுடனும் கூடிய காட்டுமிராண்டி போல் தோற்றமளித்த ஒருவன் பார்கவியை துரத்துவதை பார்த்து குழம்பி நின்றாள் ஆழ்வி. அவளை துரத்துவது யார் என்ற முடிவுக்கு அவளால் வர முடியவில்லை. ஏனென்றால், அது பார்கவியின் வீடு. அவளது வீட்டிலேயே அவளை யார் துரத்துவது? ஆனால் அழுதபடி இருந்த பார்கவியின் முகம், அவள் இருப்பது ஒரு மோசமான சூழ்நிலை என்பதை அவளுக்கு விளக்கி கூறியது. 

"கவி, யாரது? எதுக்காக அவன் உன்னை துரத்துறான்?" என்றாள்.

"அவர் என்னோட அண்ணன்... மனநிலை சரியில்லாதவர். பொம்பளைங்க மேல அவருக்கு ஈர்ப்பு. இப்போ அவர் என்னை தொட முயற்சி பண்றாரு. தயவு செய்து இங்கிருந்து போயிடு, ஆழ்வி" என்றபடி ஓடினாள்.

அதிர்ச்சியில் உறைந்தாள் ஆழ்வி. பார்கவின் அண்ணன் மனநிலை சரியில்லாதவரா? கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒரு விஷயத்திற்காகவா அவர் இப்பொழுது அவளை துரத்திக் கொண்டிருக்கிறார்? திகில் அடைந்தாள் ஆழ்வி. எதைப் பற்றியும் யோசிக்காமல் அங்கிருந்து ஓடிவிட வேண்டும் என்று தான் அவள் நினைத்தாள். ஆனால் அதே நேரம், பார்கவியின் மீது பாய்ந்த இனியவன், அவளது பாவாடையை பற்றினான்.

"அண்ணா ப்ளீஸ், என்னை விடுண்ணா நான் உன் தங்கச்சிணா..." என்றாள் அவன் பிடியில் இருந்து தனது பாவாடையை விடுவிக்க போராடியபடி.

அதிர்ச்சியுடன் அதைப் பார்த்துக் கொண்டு நின்ற ஆழ்வி,

*ஒருவேளை அவர் பார்கவியை ஏதாவது செஞ்சுட்டா என்ன ஆகும்? பார்கவியை  இப்படியே விட்டுட்டு இங்கிருந்து ஓடி போறது ஞாயமா? என்னோட ஃபிரண்டுக்கு உதவ வேண்டியது என் பொறுப்பு இல்லையா? ஒருவேளை அவர் என்னை அட்டாக் பண்ணா என்ன ஆகும்? இல்ல, இது எதைப் பத்தியும் யோசிக்கிற நேரமில்ல. எது எப்படி இருந்தாலும் பார்கவியை நான் காப்பாத்தியே தீரணும். கூடப்பிறந்த அண்ணனால தொடப்படுறது ரொம்ப கொடுமையான விஷயம். அந்தக் கொடுமை என் ஃப்ரெண்டுக்கு நடக்க விடக்கூடாது* விஷயத்தை ஆலோசித்து சட்டென்று முடிவுக்கு வந்தாள் ஆழ்வி.

இனியவனை தாக்க ஏதாவது கிடைக்கிறதா என்று இங்கும் அங்கும் தேடினாள். இனியவன் தூக்கி எறிந்த உலோகத்தால் ஆன பூஜாடி கீழே கிடந்தது. அதை எடுத்துக்கொண்டு அவனை நோக்கி ஓடினாள். பார்கவியின் முடியை இனியவன் பற்றிய அதே நேரம், அந்த பூ ஜாடியால் அவனை அடித்தாள் ஆழ்வி. 

உறுமியபடி அவளை நோக்கி திரும்பிய இனியவனின் முகபாவம் மாறியது. அவனது கண்களில் தீப்பொறி பறந்தது. புடவை கட்டிய அழகான பெண்ணை விட ஒரு ஆணை எது அதிகமாய் ஈர்த்து விட முடியும்? புதியவைகளை பார்த்தால் ஆர்வம் கொள்ளும் அவனது கண்களுக்கு, ஆழ்வி மிக புதிதாய் தெரிந்தாள்.

அந்த சிறு இடைவெளியை பயன்படுத்தி தன் முடியை அவன் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டாள் பார்கவி. தன் கவனம் முழுவதையும் ஆழ்வியின் மீது குவித்துவிட்ட இனியவன், அதைப் பற்றி கவலைப்படுவதாய் தெரியவில்லை. புடவை என்னும் புதுவிதமான உடையில், தன்னிடமிருந்து முற்றிலும் வேறுபட்டு காணப்பட்ட உடலமைப்புடன் இருந்த ஆழ்வியின் மீதே அவனது கவனம் இருந்தது.

அவனை நோக்கி ஓடிவந்த முத்து, பின்னாலிருந்து இனியவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டு,

"மேடம், ஓடிடுங்க..." என்றான்.

"ஆழ்வி, ஓடு..." என்றாள் பார்கவி கத்திக்கொண்டே ஓடியபடி.

தனது முழு பலத்தையும் கொண்டு முத்துவை தூக்கி வீசினான் இனியவன். தூணில் மோதி, நெற்றியில் அடிபட்ட முத்து, ரத்தம் வழிய தன் நினைவிழந்து சரிந்தான். ஆழ்வியின் கெட்ட நேரமோ, அல்லது இனியவனின் நல்ல நேரமோ, முத்துவின் நெற்றியில் இருந்து வழிந்த ரத்தத்தை இனியவன் பார்க்கவில்லை.

இனியவனுக்கு பின்னால் இருந்த வீட்டின் தலைவாசலை பார்த்தாள் ஆழ்வி. இனியவனை கடந்து சென்று, அவளால் தலைவாசலை நெருங்க முடியாது என்பது பார்கவிக்கு புரிந்து போனது.

"ஆழ்வி, ஏதாவது ஒரு ரூமுக்குள்ள போய் லாக் பண்ணிக்கோ" என்றாள் பார்கவி.

பின்னோக்கி நகரத் துவங்கினாள் ஆழ்வி. தன்னை காத்துக் கொள்ள ஒரு அறையை தேடியபடி ஓடினாள். இனியவன் அவளை துரத்துவதை பார்த்து பயத்தில் நடுங்கினாள் பார்கவி.

அவளை துரத்திய இனியவன், பாய்ந்து அவளது புடவையின் தலைப்பை பற்றி இழுத்தான். தடுமாறிய ஆழ்வி, கீழே விழுந்து உருண்டாள். அவள் கட்டியிருந்த புடவை இனியவனின் கைக்குச் சென்றது. புடவையின்றி நின்ற ஆழ்வியை பார்த்த இனியவன் உரத்த குரலில் உறுமினான். அவளது பெண்மையின் அடையாளங்கள் என்றும் இல்லாத அளவிற்கு அவனது ஆர்வத்தை தூண்டி விட்டன. தரையிலிருந்து எழுந்து ஓடிய ஆழ்வி, கிரில் கதவுடன் கூடிய அறையை கண்டாள். அதனுள் சென்று பூட்டிக் கொள்ள முயன்றாள். ஆனால் அவள் அதை செய்வதற்கு முன், அந்த இழுவை கதவை பின்னால் இழுத்து உள்ளே நுழைந்தான் இனியவன். உள்ளே நுழைந்த அவன், கோபத்துடன் அந்த கதவை தள்ள அது பூட்டிக் கொண்டது. அது ஆட்டோ லாக் பொருத்தப்பட்ட கதவு. ஏன் என்றால் அது இனியவனின் அறை. இவை அனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்துவிட்டது. ஆழ்வியின் பெயரை கூறி அலறியபடி அங்கு ஓடி வந்தாள் பார்கவி. அந்த கதவை திறக்க அவள் முயன்று அது நடக்கவில்லை.

அந்த இரு தோழிகளின் முகத்தையும் திகில் ஆட்கொண்டது. ஆழ்வியின் உதவியற்ற நிலை அவர்களுக்கு புரிந்தது. இருந்தாலும் நம்பிக்கையை கைவிட ஆழ்வி தயாராக இல்லை. அந்த அறைக்குள் இப்படியும் அப்படியும் ஓடி, தன்னை எவ்வளவு தூரம் காத்துக் கொள்ள முடியுமோ, அவ்வளவு முயன்று கொண்டிருந்தாள்.

"பார்கவி... அவரை எது கட்டுப்படுத்தும்??" என்றாள் தன்னை சமாளித்துக் கொண்ட அவள்.

"ஆங்...?" என்றாள் பார்கவி. அவள் மூளை வேலை செய்யவில்லை.

"ஏதாவது அவரை கண்ட்ரோல் பண்ணுமா?"

"இன்ஜெக்ஷன் போட்டா தான் அவர் கண்ட்ரோல் ஆவாரு"

"அவருக்கு எது மேலையாவது பயம் இருக்கா?"

"பயமா?"

"ஆமாம் நெருப்பு... ஷார்ப் லைட்... ஏதாவது?"

சில நொடி யோசித்த பார்கவி,

"ஆமாம் அவருக்கு ரத்தத்தை பார்த்தா பயம்..." என்றாள்.

"ரத்தமா?"

அந்தக் கதவை திறக்க முடியாமல் தவித்தாள் பார்கவி. அந்த கதவை சித்திரவேலின் கைரேகையை கொண்டுதான் திறக்க முடியும். அதனால் உடனே அவனுக்கு ஃபோன் செய்தாள். அந்த அழைப்பை ஏற்றான் சித்திரவேல்.

"மாமா..." என்று அழுதாள்

அவள் குரலை கேட்டு பதற்றம் அடைந்தான் சித்திரவேல்.

"மாமா, அண்ணன் என் ஃப்ரெண்ட்டை துரத்திகிட்டு இருக்காரு. அவரோட ரூம்ல அவர்கிட்ட அவ மாட்டிக்கிட்டா. ப்ளீஸ் சீக்கிரமா வாங்க எனக்கு ரொம்ப பயமாயிருக்கு..." என்று கதறினாள்.

சித்திரவேல் பீதி அடைந்தான். மேற்கொண்டு எதுவும் கேட்காமல்,

"இதோ வந்துட்டேன்..." என்று வண்டியை முடுக்கினான், அப்பொழுது தான் போக்குவரத்து நெரிசலில் இருந்து வெளிவந்த சித்திரவேல்.

இனியவனை தாக்க ஏதாவது கிடைக்கிறதா என்று இங்கும் அங்கும் தேடினாள் ஆழ்வி. ஆனால் அந்த அறை காலியாய் கிடந்தது. அவளது எண்ணத்தைப் புரிந்து கொண்ட பார்கவி,

"ஆழ்வி நகத்தை வச்சு அவரை காயப்படுத்து. நான் வேற ஏதாவது கிடைக்குதான்னு பாக்குறேன்" என்று அங்கிருந்து ஓடினாள், அவளை இனியவனிடம் இருந்து காத்துக் கொள்ளக்கூடிய பொருள் ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்க. ஆனால் முத்து அனைத்தையும் பத்திரமாய் பூட்டி வைத்து விட்டதால் அவள் கைக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.

எவ்வளவு நேரம் தான் தன் கட்டுப்பாட்டை முழுவதும் இழந்துவிட்ட ஒருவனிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள ஆழ்வியால் முடியும்? அவள் மீது தாவிய இனியவன், அவள் காலை பற்றினான். நிலை தடுமாறி கீழே விழுந்த ஆழ்வி, தன் முழு பலத்தால் அவனை எட்டி உதைத்தாள். அடுத்த காலையும் பற்றிய அவன், அவளை தன்னை நோக்கி இழுத்து, அவள் மீது பாய்ந்தான். அவனது ஆர்வத்தை தூண்டிவிட்ட அவளது உடல் அவனது கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

"கவிஇஇஇ..." என்று கத்தியபடி அவனை அடிக்க துவங்கினாள்.

அவளது அடி அவனை ஒன்றும் செய்யவில்லை. அவனது செய்கைகள் அவளுக்கு அருவருப்பைத் தந்தது. அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அவனது தோள் பட்டையில்  முடிந்தவரை அழுத்தமாய் கடித்தாள். ஊஹும்... அதுவும் வேலை செய்யவில்லை, அந்த கடி அவனுக்கு வலியை தந்த போதிலும். அது அவனை மேலும் மூர்க்கமாய் தான் மாற்றியது. அவனது கவனம் முழுவதும், அவளை தன்னிடம் இருந்து வேறுபடுத்தி காட்டிய அவளது அங்கத்தின் மீதே இருந்தது. அதை அவளால் சகிக்க இயலவில்லை. ஏதாவது கிடைக்கிறதா என்று அவளது கை தேடிக் கொண்டே இருந்தது, அந்த அறையில் ஒன்றும் இல்லை என்ற போதிலும். அவளது முகம் சட்டென்று மாறியது, அவளது கை அவள் தலையில்  இருந்த க்ளிப்பை தொட்ட போது.

எதைப் பற்றியும் யோசிக்காமல், அதை தன் முடியிலிருந்து இழுத்த அவள், அதன் கூர்மையான முனையைக் கொண்டு, தன் முழங்கையில் ஒரு இழுப்பு இழுத்தாள். அவள் கையில் இருந்து குபுகுபுவென ரத்தம் வழிந்தது. ரத்தத்தை கண்ட இனியவன், பயத்துடன் அலறியபடி பின்னோக்கி  நகர துவங்கினான். அந்த அறையின் மூளைக்கு ஓடிச் சென்று தன் முழங்கால்களை கட்டிக்கொண்டு தன் முகத்தை புதைத்துக் கொண்டு ஓலமிட்டான்.

தரையில் கிடந்த ஆழ்வி, அந்த காட்சியை மூச்சு வாங்கிய படி பார்த்தாள். மிகவும் சோர்வுடன் காணப்பட்ட அவளுக்கு மயக்கம் வந்தது. வெறிபிடித்த  இனியவனுடன் ஏற்பட்ட போராட்டத்தில் தனது சக்தியை முழுவதுமாய் இழந்து விட்டிருந்தாள் அவள். அவளால் நகரக்கூட முடியவில்லை.

அப்பொழுது, நித்திலா மற்றும் பாட்டியுடன் ஓடி வந்தான் சித்திரவேல், பார்கவியின் பெயரை கூறி அழைத்தபடி. அழுதபடி அவர்களை நோக்கி ஓடினாள் பார்கவி.

சுயநினைவின்றி கிடந்த முத்துவிடம் ஓடினார் பாட்டி. அவன் முகத்தில் தண்ணீர் தெளிக்க, அவன் மெல்ல கண்களை திறந்து, ஓவென்று அழுதான்.

"என்னை மன்னிச்சிடுங்க, பாட்டி. தங்கச்சி சீக்கிரம் வீட்டுக்கு வருவாங்கன்னு எனக்கு தெரியாது"

ஒன்றும் கூறாமல் கண்ணீர் சிந்தினார் பாட்டி.

"மாமா..." என்று அழுதாள் பார்கவி.

"பயப்படாத நாங்க வந்துட்டோம்"

கீழே கிடந்த புடவையை திகிலுடன் கையில் எடுத்தாள் நித்திலா.

"இது என் ஃபிரண்ட் ஆழ்வியோட புடவை" மேலும் அழுதாள் பார்கவி.

இனியவனின் அறையை நோக்கி ஓடினான் சித்திரவேல். நித்திலாவும் பார்கவியும் அவனை பின்தொடர்ந்தார்கள்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆழ்வியை பார்த்து, அவர்கள் திகில் அடைந்தார்கள். இயலாமையுடன் தன் தலையில் அடித்துக் கொண்ட சித்திரவேல், தன் கைரேகையை வைத்து அந்த அறையின் கதவை திறந்தான்.

"நீங்க உள்ள வராதீங்க இங்கேயே இருங்க" என்று அவர்களுக்கு கட்டளையிட்டான்.

ஆழ்வின் புடவையை அவனிடம் கொடுத்தாள் பார்கவி. அதைப் பெற்றுக் கொண்டு உள்ளே சென்றான் சித்திரவேல். அந்த புடவையால் ஆழ்வியின் உடலை சுற்றி, அவளை தூக்கிக் கொண்டு வெளியே வந்த அவன், மீண்டும் தன் கைரேகையை வைத்து அந்த கதவை பூட்டினான். ஆழ்வியின் நிலையை கண்ட பார்கவி, தன் வாயை மூடி அழுதாள். அவளது கைகள் நடுங்கின. நித்திலாவோ, அந்த அறையின் மூலையில்,  பயத்துடன் ஒடுங்கி அமர்ந்திருந்த இனியவனை பார்த்தபடி சிலை என நின்றாள்.

"அக்கா, வா போகலாம்" என்று பார்கவி கத்திய போது தான் அவள் சுயநினைவுக்கு வந்தாள்.

ஆழ்வியுடன் அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்தார்கள்.

தொடரும்...




Bạn đang đọc truyện trên: AzTruyen.Top