17 ஆழ்வி தயார்
17 ஆழ்வி தயார் (நீண்ட அத்தியாயம்)
இனியவனின் அறையின் கட்டுப்பாடு, ஆழ்வியின் கைக்கு வந்தது. அவளுக்கு தெரியும், இனியவனின் சிகிச்சை துவங்கி விட்டால், அவள் நிச்சயம் இனியவனின் அறைக்குள் செல்ல வேண்டி வரும். அவன் அறைக்குள் செல்லாமல் அவனுக்கு சிகிச்சை செய்ய முடியாது. அதற்கு சித்திரவேலின் உதவி தேவைப்படும். நிச்சயம் அவன் அந்த உதவியை செய்ய மாட்டான். ஆனால் இப்பொழுது, அவளுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை.
"ஆழ்வி, அண்ணனோட ரூம் கதவை திறக்கும் போது ஜாக்கிரதையா இரு" என்றாள் பார்கவி எச்சரிக்கையுடன்.
ஆழ்வி சரி என்று தலையசைக்க, அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாய் அங்கிருந்து நகர்ந்தார்கள். அவர்கள் அனைவரும் செல்லும் வரை காத்திருந்த ஆழ்வி, மெல்ல அந்த அறைக்குள் எட்டிப் பார்த்தாள். சுவரில் சாய்ந்தபடி நின்றிருந்தான் இனியவன்.
"என்னங்க..." என்று மெல்லிய குரலில் அழைத்தாள்.
தன் தலையை சாய்த்து அவளை பார்த்தான் இனியவன்.
"இங்கே வா" என்பது போல் அவள் கையசைக்க, அவளுக்கு எதிர்ப்புறம் திரும்பி நின்று கொண்டான்.
பெருமூச்சு விட்டாள் ஆழ்வி.
இப்பொழுது அவன் அறைக்குள் நுழையும் ஆபத்தான முடிவை அவள் எடுக்கக் கூடாது. மருத்துவரிடம் பேசிய பிறகு எதையும் முடிவெடுத்துக் கொள்ளலாம். அதுவரை காத்திருப்பது என்று முடிவெடுத்த அவள், தன் அறைக்கு வந்தாள். அப்பொழுது அவளது கைபேசி ஒலித்தது. அதில் மீனாவின் எண்ணை பார்த்து அவள் முகம் மலர்ந்தது. அந்த அழைப்பை அவள் ஏற்றாள்.
"மீனா..."
"ஆழ்வி, சுவாமி, அதாவது மருத்துவர் உன்கிட்ட பேச ஒத்துக்கிட்டாரு. உன்னோட ஃபோன்ல ஜூம் ஆப்பை டவுன்லோடு பண்ணி வச்சுக்கோ. நான் உனக்கு லிங்க் அனுப்புறேன். நான் சொல்லும் போது அந்த லிங்க்குள்ள வந்து, அவர்கிட்ட எல்லாத்தையும் சொல்லு"
"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மீனா"
"எதுக்கு தேங்க்ஸ்னு எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க? ரெடியா இரு" என்று அழைப்பை துண்டித்தாள்.
தன் கைபேசியில் ஜூம் ஆப்பை டவுன்லோடு செய்துவிட்டு, நித்திலாவிடம் வந்த ஆழ்வி,
"நான் நேத்து ராத்திரி சரியா தூங்கல. எனக்கு ரொம்ப தூக்கமா வருது" என்றாள்.
"அப்படின்னா போய் தூங்குங்க, ஆழ்வி" என்றாள் நித்திலா.
"ஆமாம், அதை சொல்லத்தான் வந்தேன்"
"கவலைப்படாதீங்க. உங்களை யாரும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க" என்றாள் நித்திலா.
"ரொம்ப தேங்க்ஸ்" என்று தன் அறைக்கு வந்து, கதவை சாத்தி தாழிட்டுக் கொண்டாள்.
அவள் மருத்துவரிடம் பேசும்போது யாரும் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தான் அவள் அப்படி கூறினாள்.
மீனாவின் அழைப்புக்காக காத்திருந்தாள். மீனா கைபேசியின் திரையில் தோன்றினாள்.
"ஆழிவி, டாக்டர் கிட்ட பேசு. உன்னோட எல்லா பிரச்சனையும் ஒன்னும் விடாம சொல்லு" என்றாள்.
சரி என்று தலையசைத்தாள் ஆழ்வி. தன் கைபேசியை மருத்துவரிடம் கொடுத்தாள் மீனா. அறுபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் அந்த திரையில் தோன்றினார்.
"வணக்கம் சுவாமி..."
"வணக்கம். உங்க பிரச்சனையை என்கிட்ட சொல்லுங்கம்மா" என்றார் மருத்துவர்.
"என் புருஷன் மனநிலை சரியில்லாதவர். அவரோட எதிரிங்க, இரும்பு கம்பியால அவர் தலையில அடிச்சிட்டாங்க. அவர் மொத்தமா தன் நினைவை இழந்துட்டார். அவருக்கு எதுவுமே ஞாபகம் இல்ல... தன்னையும் சேர்த்து. அவர் ரொம்ப காட்டுமிராண்டிதனமா நடந்துக்குறார். இதுக்கெல்லாம் காரணம், அவருக்கு தலையில அடிபட்டது தான்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா ரெண்டு நாளுக்கு முன்னாடி தான் எனக்கு ஒரு உண்மை தெரிய வந்தது. அவருடைய மாமா தான் அவருடைய இப்போதைய நிலைமைக்கு காரணம். ஏதோ ஒரு மருந்தை அவருக்கு கொடுத்து, அவர் தான் அவரை பைத்தியமா வச்சிருக்காரு. இந்த குடும்பத்துல இருக்கிற எல்லாரும் அவரை கடவுள் மாதிரி நம்பிகிட்டு இருக்காங்க. நான் இந்த உண்மையை அவங்ககிட்ட சொன்னா, அவங்க என்னை நம்புவாங்களான்னு எனக்கு தெரியல. அவரை பகைச்சிக்கிட்டு என் புருஷனை என்னால காப்பாத்த முடியும்னு எனக்கு தோணல. என்ன செய்யறதுன்னு எனக்கு தெரியல. எப்படியாவது என் புருஷனை காப்பாத்துங்க, சுவாமி" என்று கெஞ்சினாள் ஆழ்வி.
"அப்படின்னா உங்களால அவரை இங்க கூட்டிட்டு வர முடியாது. அப்படித்தானே?"
"நிச்சயமா முடியாது. அவங்க மாமா என்னை அப்படி செய்ய விடவே மாட்டார்"
"அவரு உங்க புருஷனுக்கு குடுத்துக்கிட்டு வர்ற அந்த மருந்தை எனக்கு நீங்க அனுப்பி வைக்க முடியுமா?"
"நிச்சயம் முடியும். அதோட சாம்பிள் என்கிட்ட இருக்கு"
"ரொம்ப நல்லது. அதை எனக்கு அனுப்பி வைங்க. அந்த மருந்தை நான் பரிசோதிச்சி பாத்து, என்ன செய்றதுன்னு சொல்றேன்"
"இன்னைக்கே அனுப்பி வச்சுடுறேன், சுவாமி"
"என்னோட ஃபோன் நம்பரை எழுதிக்கோங்க. நீங்க எப்ப வேணாலும் எனக்கு கால் பண்ணலாம்"
"ரொம்ப ரொம்ப நன்றி, சுவாமி"
"இப்போ உங்க புருஷனை பத்தி எனக்கு சொல்லுங்க"
"அவரை கிரில் கேட் போட்ட ரூம்ல தனியா வச்சிருக்காங்க. அவருக்கு ரத்தத்தை பார்த்தா பயம். சமீபத்தில் அவர் என்னையும் பார்த்து பயப்படுறார்"
"உங்களை பார்த்து பயப்படுறாரா?"
"ஆமா, அவர் என் மேல பாஞ்சபோது நான் என்னை அவர்கிட்ட இருந்து காப்பாத்திக்க, என் கையை வெட்டிக்கிட்டேன். என் கையிலயிருந்து வழிஞ்சு ஓடின ரத்தத்தை பார்த்து அவர் பயந்தாரு. என்னை விட்டு விலகி ஓடிப்போய் தூரத்துல நின்னுக்கிட்டாரு. அதுக்கப்புறம் எப்போ என்னை பார்த்தாலும், அவர் ஒளிஞ்சிக்கிறாரு"
"அப்படின்னா அவர் உங்களை எதிர்கொள்ள பயப்படுறார். அப்படியா?"
"அப்படியும் சொல்லலாம்"
"அவர் செக்ஸ் உணர்ச்சிக்கு ஆளாகுறவரா இருந்தாலும், உங்ககிட்ட மட்டும் வித்தியாசமா நடந்துக்கிறார். அப்படியா?"
"ஆமாம் சுவாமி"
"அவர்கிட்ட நீங்க வேற என்ன எல்லாம் கவனிச்சிங்க?"
"எதை கேக்குறீங்க?"
"அவர் நல்லா தூங்குறாரா?"
இல்லை என்று யோசனையுடன் தலையசைத்த அவள்,
"நேத்து ராத்திரி கூட நான் அவரை கவனிச்சேன். அவர் சுத்தமா தூங்கவே இல்ல. அவரோட ஃப்ரெண்ட், அவர் தூங்குறதே இல்லன்னு சொல்றார்"
"ஓ..."
"எதுக்காக தூக்கத்தை பத்தி அவ்வளவு பர்டிகுலரா கேக்குறீங்க?" என்றாள் ஆழ்வி.
"ஒவ்வொரு மனுஷனுக்கும் தூக்கம் இன்றியமையாது. அது தான் நம்மளுடைய மனசையும் புத்தியையும் அமைதிப்படுத்தக் கூடியது. தூக்கம் இல்லாம யாரையுமே நார்மலா மாத்த முடியாது. தூக்கம் தான் நம்ம மூளையை சுத்தப்படுத்தும். நம்ம தூங்கும் போது, நம்ம மூளையில அதிக அளவு செரோப்ரோஸ்பைனல் அப்படிங்கிற ஒரு வித திரவம் சுரந்து , பகல் நேரத்துல நம்ம மூலையில தோன்றின, கெடுதலை விளைவிக்கிற நஞ்சு பொருட்களை எல்லாம் கழுவி விட்டுடும். மூளையோட சுறுசுறுப்பான செயல்பாட்டுக்கு தூக்கம் ரொம்ப அவசியம். அப்படி நம்ம நிம்மதியா தூங்கும் போது, மூளையால புதுப்புது விஷயங்களை தெளிவா கவனிக்க முடியும். நமக்கு தேவையான ஓய்வு கிடைச்சிட்டா, எந்த ஒரு விஷயத்திலும் நம்மளுடைய கவனத்தை அழுத்தமா நம்மளால பதிக்க முடியும். நல்ல தூக்கம் இருந்தா மட்டும் தான், அன்றாட வாழ்க்கையில் நம்ம பார்க்கிற விஷயங்கள் நம்ம மனசுல பதியும்"
ஆழ்வியின் விழிகள் பெரிதாயின. நம் வாழ்க்கையில் தூக்கத்தின் பாத்திரம் இவ்வளவு முக்கியமானதா?
"உங்க வீட்டுக்காரர் தூங்க ஆரம்பிச்சதுக்கு பிறகு, அவர்கிட்ட ஏற்பட போற மாற்றத்தை நீங்களே பாப்பீங்க"
"ஓ..."
"அவர் வேற என்னெல்லாம் செய்றார்?"
"அவர் நோ அப்படின்னு சொன்ன ஒரே ஒரு வார்த்தையை தான் நான் கேட்டேன். பெரும்பாலும் விசித்திரமான சத்தம் எழுப்பிகிட்டே இருக்காரு. பொம்பளைங்கள பாத்தா, கேட்டு மேல ஏறி நின்னு அதை உலுக்கி சத்தம் போடுறார். அவரோட சாப்பாட்டை கீழயும் மேலயும் சிந்தி, அவரே சாப்பிடுறார். எல்லா நேரமும் ரொம்ப அமைதியா இருக்காரு. ஆனா, அவருக்கு செக்ஸ் ஃபீலிங் வரும் போது, தன்னோட கட்டுப்பாட்டை மொத்தமா இழந்திடுறாரு"
"அவர் பேசாம இருக்கறதுக்கு காரணம், அவர்கிட்ட யாருமே பேசாம இருக்குறது தான். இப்போ அவர் நிலைமை ஒரு குழந்தை மாதிரி தான். நம்ம என்ன செய்றமோ அதை அவர் திருப்பி செய்வார். அப்படி செய்ய யாரும் இல்லாததால, அவருக்கு என்ன செய்றதுன்னு தெரியல"
"ஓஹோ..."
"சரி, அந்த மருந்தை எனக்கு உடனடியா அனுப்பி வைங்க. இந்த பிரச்சனைக்கான தீர்வை சீக்கிரம் கண்டுபிடிச்சி உங்க புருஷனை இந்த மோசமான நிலையில இருந்து காப்பாத்திடலாம்"
"நம்மால அது முடியுமா, சுவாமி?"
"நீங்க டெடிகேட்டடா இருந்தா முடியும்"
"நீங்க சொல்றது எனக்கு புரியல"
"நான் சொல்றபடி நீங்க தான் உங்க புருஷனை ட்ரீட் பண்ணணும். நான் இங்கிருந்து, என்ன செய்யணும்னு சொல்ல மட்டும் தான் முடியும். அதை செயல்படுத்த வேண்டியது நீங்க தான்"
"நிச்சயம் செய்றேன், சுவாமி"
"அப்போ நமக்கு அது ஒன்னும் கஷ்டமா இருக்காது"
"ரொம்ப நன்றி ஐயா"
அந்த சந்திப்பு முடிந்தது. மீனா தன் முகவரியை ஆழ்விக்கு அனுப்பி வைத்தாள். தான் சேகரித்து வைத்திருந்த அந்த மருந்தை எடுத்துக்கொண்டு மெல்ல வெளியே வந்தாள் ஆழ்வி. வரவேற்பறையில் ஒருவரும் இல்லை. அந்த மருந்தை மீனாவிற்கு அனுப்புவதற்காக, சத்தம் செய்யாமல் அங்கிருந்து பூனை போல் நழுவி வெளியே சென்றாள். அவளது நல்ல நேரம், அவள் வெளியே சென்று வந்ததை யாரும் பார்க்கவில்லை.
இரண்டு நாட்களுக்குப் பிறகு
சித்த மருத்துவரிடமிருந்து ஆழ்விக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை உடனடியாக ஏற்றாள் அவள். அவள் அனுப்பி வைத்திருந்த மருந்தை உடனடியாக அவரிடம் ஒப்படைத்து விட்டிருந்தாள் மீனா.
"சொல்லுங்க, சுவாமி"
"நான் பேசுறது எல்லாத்தையும் ரெகார்ட் பண்ணி வச்சுக்கோங்க. அப்போ தான் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டா, நீங்க மறுபடி எனக்கு ஃபோன் பண்ணி கேட்காம, அதை போட்டு கேட்டு தெரிஞ்சுக்க முடியும்"
அவர் கூறுவது சரி என்று பட்டது அவளுக்கு. மறுபடி மறுபடி அவருக்கு ஃபோன் செய்யாமல், இதை கேட்டு தானாகவே தெளிவு படுத்திக்கொள்ள முடியும்.
"நீங்க அனுப்பின மருந்து கிடைச்சது. அதை நாங்க டெஸ்ட்டுக்கு அனுப்பினோம். அதை உங்க புருஷனுக்கு கொடுதவங்க இதயமே இல்லாதவங்களா இருக்கணும்"
ஆழ்வி மென்று விழுங்கினாள்.
"இவ்வளவு ஆபத்தான ஒரு மருந்தை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்ல. இதைப்பத்தி உங்ககிட்ட சொல்ல கூடாது தான். ஆனா விஷயத்தோட வீரியம் உங்களுக்கு தெரியணும் அப்படிங்கிறதுனால இதை நான் உன்கிட்ட சொல்லியே தீரணும் மா. இந்த மருந்தால தான் உங்க புருஷன் தூங்காம இருக்காரு. அவருக்கு ஏற்படுற செக்ஸ் உணர்வுக்கும் இந்த மருந்து தான் காரணம். இப்படிப்பட்ட மருந்தை அவருக்கு கொடுக்கணும்னு நினைக்கிறவங்க ரொம்ப கொடூரமானவங்களா இருக்கணும். தனக்குள்ள என்ன நிகழுது? அதை எப்படி தணிக்கணும்னு கூட தெரியாத ஒருத்தருக்கு இப்படிப்பட்ட ஒரு கொடூரமான மருந்தை கொடுத்து, அப்படிப்பட்ட உணர்ச்சியை தூண்டிவிடுறாங்கன்னா அவங்க எவ்வளவு மோசமானவங்களா இருக்கணும்? உன் புருஷன் ரொம்ப பாவம் மா"
ஆழ்வியின் கண்கள் கலங்கின.
"நம்மால அவரை குணப்படுத்த முடியாதா, சுவாமி?"
"நிச்சயம் முடியும். இப்போ இது உங்க பிரச்சனை மட்டுமில்ல. என்னோட பிரச்சனையும் கூட... இந்த விஷயம் எனக்கு ஒரு சவால். உங்க ஃபிரண்டு மீனா, இன்னைக்கு ராத்திரி இங்கிருந்து கிளம்புறாங்க. நான் உங்க புருஷனுக்கு தேவையான எல்லா மருந்தையும் அவங்க கிட்ட கொடுத்து அனுப்புறேன். அது கூடவே, அதை எப்படி பயன்படுத்தணும் அப்படின்னு தெளிவா எழுதி அனுப்புறேன். நீங்க அதுபடி செஞ்சா போதும்"
"நன்றிங்க சுவாமி"
"நான் இப்படி சொல்றேன்னு வருத்தப்படாதிங்க மா. நீ உன் புருஷன் குணமாகணும்னு நினைச்சா, நீ உன்னை தியாகம் பண்ணணும்"
"நீங்க சொல்றது எனக்கு புரியல"
"நீங்க அவரு ரொம்ப காட்டுதனமா நடந்துக்கிறார்னு சொன்னீங்க. இருந்தாலும் நீங்க அவர்கிட்ட நெருங்கி போய் தான் ஆகணும். நமக்கு வேற வழியில்ல. அவரோட ரத்தத்தோட வேகத்தை குறைக்க தேவையான மருந்தை நான் உங்களுக்கு அனுப்பத்தான் போறேன். ஆனாலும் அது எந்த அளவுக்கு நமக்கு சாதகமா வேலை செய்யப் போகுதுன்னு தெரியல. அவருடைய உண்மை நிலை என்னன்னு நான் நேர்ல பாக்கல இல்லயா? நான் அனுப்புற மருந்தை கொடுக்க தொடங்குங்க. அவர் முதல்ல நல்லா தூங்கட்டும். முதல் ஒரு பத்து நாளுக்கு அவரோட ரூமுக்குள்ள நீங்க போக வேண்டாம். ஆனா பதினோராவது நாள், நீங்க அவரோட ரூமுக்கு போய், அவர் நடவடிக்கைகளை பத்தின ரிபோட்டை எனக்கு அனுப்பணும். உங்களைத் தவிர வேற யாரும் அதை செய்ய முடியாது"
"நான் நிச்சயம் அதை செய்றேன் சுவாமி"
"ஒருவேளை அவர் ரொம்ப முரட்டுத்தனமா நடந்துக்கிட்டா, உடனே அவர் அறையை விட்டு வெளியில வந்துடுங்க. அதுக்கப்புறம் அவருக்கு கொடுக்குற மருந்தோட பவரை நம்ம இன்னும் கொஞ்சம் அதிகபடுத்தி கொடுக்கலாம்"
"அந்த மருந்தோட பவரை நம்ம இப்பவே அதிகப்படுத்தி கொடுக்க முடியாதா?"
"இப்பவே அது போதுமான அளவுக்கு பவர்ஃபுல்லா தான் இருக்கு. அவர் மெட்டபாலிசத்துக்கு தகுந்த மாதிரி தான் நம்ம அதை அதிக படுத்தணும். இல்லன்னா அது ஓவர் டோஸ் ஆயிடும். இப்போ நான் கொடுக்கிற மருந்தே அவருக்கு போதுமானதா இருக்கும்னு தான் நினைக்கிறேன்"
"சரிங்க சுவாமி"
"நீங்க என்னை எப்ப வேணா ஃபோன் பண்ணி கூப்பிடலாம். எதுக்காகவும் தயங்க வேண்டாம். கவலைப்படாதீங்க, நம்ம அவரை கொஞ்சம் கொஞ்சமா பழைய நிலமைக்கு கொண்டு வந்துடலாம்,
"ரொம்ப நன்றி சுவாமி"
"இன்னொரு விஷயம், நான் உங்களுக்கு கொடுத்திருக்கிற மருந்து, படிப்படியான முன்னேற்றத்தை கொண்டு வரும் அப்படிங்கிறதால, அவர் தன் சுயநினைவை அடையும் போது, உங்களை மறக்க மாட்டார்"
"உண்மையாவா? உங்களை என் வாழ்க்கையில நான் எப்பவும் மறக்க மாட்டேன்" என்றாள் சந்தோஷமாக.
"நீங்க நல்லா இருப்பீங்க..." அவர் அழைப்பை துண்டித்தார்.
மறுநாள்
மருத்துவர் கொடுத்து அனுப்பிய மருந்துகளுடன் வந்தாள் மீனா. அவளைப் பார்த்தவுடன்,
"ஹாய் மீனு..." என்று சந்தோஷமாய் அவளை நோக்கி ஓடினாள் பார்கவி.
"எப்படி இருக்க?"
"நான் நல்லா இருக்கேன். ஆழ்வி எங்க?"
"அவ ரூம்ல இருக்கா. வா" என்று அவளை ஆழ்வியின் அறைக்கு அழைத்துச் சென்றாள் பார்கவி.
"ஹாய் மீனா. எப்படி இருக்க?" என்றாள் ஆழ்வி.
"நான் நல்லா இருக்கேன்"
"இரு, நான் உனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்"
"நீ உட்காரு ஆழ்வி. நான் போய் கொண்டு வரேன்" என்று அங்கிருந்து சென்றாள் பார்கவி.
தன் பையில் வைத்திருந்த மருந்துகளை எடுத்து ஆழ்வியிடம் கொடுத்த மீனா,
"ஜாக்கிரதையா அதுல எழுதி இருக்கிற இன்ஸ்ட்ரெக்ஷன்சை படிச்சி பார்த்துட்டு இதை அண்ணனுக்கு கொடுக்க ஆரம்பி" என்றாள்.
"சரி"
"அந்த பழைய மருந்தை என்ன செஞ்ச? அந்த சித்திரவேலுக்கு எந்த சந்தேகமும் வரலையா?"
"ஒவ்வொரு டோசையும் நான் கிச்சன் சிங்கில் போட்டு தண்ணியை ஊத்திடுறேன். அவருக்கு வெறும் சாப்பாடு மட்டும் தான் தரேன். இன்னைல இருந்து அவருக்கு இந்த மருந்தை கொடுக்க ஆரம்பிச்சிடுவேன்"
"நல்ல வேலை செஞ்ச. மருந்து காலியாகுறதுக்கு முன்னாடி, சுவாமிகிட்ட சொல்லிடு. அப்போ தான் அது காலியாகுறதுக்கு முன்னாடி அவர் அனுப்ப முடியும்"
"ரொம்ப தேங்க்ஸ் மீனா. நீ மட்டும் இல்லன்னா, நான் என்ன செஞ்சு இருப்பேன்னு எனக்கு ஒன்னும் புரியல"
"டேய், நம்ம ஃபிரண்ட்ஸ் டா. கவி வரதுக்கு முன்னாடி இந்த மருந்தை எடுத்து பத்திரமா ஒளிச்சு வை"
அவள் கூறியது போலவே, அந்த மருந்தை பத்திரப்படுத்தி கொண்டாள் ஆழ்வி. சிறிது நேரம் அவர்களுடன் பேசியிருந்து விட்டு அங்கிருந்து விடை பெற்று சென்றாள் மீனா.
அந்த மருந்தை கொடுக்க வேண்டிய விதத்தை படித்து தெரிந்து கொண்டாள் ஆழ்வி. அதில் காலையிலும் மாலையிலும் கொடுக்கப்பட வேண்டிய மருந்து இருந்தது. இன்று முதல் அவள் கொடுக்க துவங்க வேண்டும்.
அன்று இரவு அந்த மருந்தை உட்கொண்ட இனியவன், ஆழ்ந்து உறங்கினான். அது அவளுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தந்தது. அடுத்த பத்து நாட்களுக்கு மருந்தை தொடர்ந்து கொடுத்து வந்தாள். இனியவனிடம் படிப்படியாக மாறுதல்கள் தெரிந்தது. அவன் விசித்திரமான ஒலிகளை எழுப்புவதை நிறுத்திக் கொண்டான். பகலில் கூட நன்றாக உறங்கினான். அது அவனிடம் தெரிந்த மிகப்பெரிய மாறுதல்.
பதினோறாவது நாள் இரவு
இன்று ஆழ்வி இனியவனின் அறைக்கு செல்ல வேண்டும். அவள் அதற்குத் தயார். அவள் மனதில் உறுதி இருந்தாலும், பதற்றமும் அவளை ஆட்கொண்டது.
*நான் அவரு ரூமுக்கு போனா என்ன ஆகும்? அவர் என்ன செய்வாரோ... எந்த அளவுக்கு போவாரோ... அவர் என்ன செய்வார்னு எனக்கு தெரியாதா? என் மேல பாய்வாரு... அதுல யோசிக்க என்ன இருக்கு? அவர் என் புருஷன் தானே ? அவரை எப்படி கட்டுப்படுத்தணும்னு எனக்கு தெரியும். அவர் ரூமோட சென்சார் கண்ட்ரோலும் என்கிட்ட தானே இருக்கு? அப்புறம் ஏன் நான் பயப்படணும்?*
அப்போது அவளது கிளிப்பின் மீது அவள் பார்வை சென்றது. அதைப் பார்த்து அவன் பயந்தது அவள் நினைவுக்கு வந்தது. அவனது அறைக்கு அவள் சென்றால், அவன் என்ன செய்வான் என்று அவளுக்கு தெரியும். அவள் இந்த கிளிப்பை அணிந்து கொண்டு சென்றாலும், அவன் அதையே தான் செய்வானா? அந்த கிளிப்பை தன் தலையில் அணிந்து கொண்டாள். அனைவரும் உறங்கி விட்டார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, அவன் அறைக்குச் சென்றாள்.
கிரில் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு, திரும்பி பார்த்தான் இனியவன். ஆழ்வி உள்ளே நுழைவதை பார்த்த அவன், சுவரின் அருகே ஓடு சென்று, அதில் ஒட்டிக்கொண்டு நின்றான். மெல்ல பின்னால் திரும்பி பார்த்தவன், அவள் தன்னை நோக்கி வருவதை கண்டு, மீண்டும் திரும்பிக் கொண்டான். அவள் அவன் தோளை தொட்ட போது திடுக்கிட்டான். அவளை நோக்கி திரும்பிய அவன், அவளை உச்சி முதல் பாதம் வரை கூர்ந்து நோக்கினார். அடுத்த நொடி, அவளால் அவன் கவரப்பட்டான். அவளை இறுக்கமாய் கட்டியணைத்து அவள் தாடையை உறிஞ்சினான். அசைவின்றி நின்ற ஆழ்வி, அவன் தொடுதலில் இருந்த மிகப்பெரிய வித்தியாசத்தை உணர்ந்தாள். அது முன்பு இருந்ததைப் போல் அவ்வளவு காட்டுதனமாய் இல்லை.
அவள் தலையில் இருந்த கிளிப்பை தொட்ட அவன் திடுக்கிட்டான். அவள் கூந்தலை முன்னால் இழுத்து விட்டு அந்த கிளிப்பை கண்டதும், திகிலுடன் பின்னோக்கி நகர துவங்கினான். தன் தலையில் இருந்த கிளிப்பை அவிழ்த்து வீசி எறிந்த ஆழ்வி, தன் கரங்களை விரித்து அவனை தன்னிடம் வருமாறு அழைத்தாள்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top