27


இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

MadhuSanty

பாசமும் காற்றை போல் தான் உணரத்தானே முடியும். உணர்கின்ற பாசம் வெளிக்காட்டாமல் எப்படி தெரியும்.

இணையில்லா ஒரு சொந்தம் நீ.

எனக்கு கிடைத்த ஒரு பந்தம் நீ.

மெய்சிலிர்க்கும் உன் பாசம்.

உன்னால் என்னுள் ஒரு புது வாசம்.

இன்றும் அந்த ஏக்கம் உண்டு.

நீ என்னுடன் பிறவா தோழி என்று

கனவில் கூட வந்து நிற்கும் அந்த ஏக்கம்.

இறைவனை தினமும் வேண்டிகொள்கின்றேன்

பிறப்புக்கு இன்னொரு வாய்ப்பிருந்தால்

அத்தனை பிறப்பிலும் நீ என்

கருவறை காதலியாக வேண்டும் என்று வேண்டும் என்று, இன்று உனக்கு பிறந்தநாள் எத்தனையோ பிறந்த நாள்கள் என்னை
அறியாமல் சென்று விட்டன நான் உனக்கு வாழ்த்து சொல்லும் முதல் பிறந்தநாள்

இது, உனது குழந்தை பருவத்திலும் உனது இந்த பள்ளி பருவத்திலும் நான்
உன்னுடன் இருந்த நாட்கள் அதை எண்ணிவிட முடியும் இருந்தும் சில
மறக்கமுடியாத நினைவுகள் என்னுள் புதைந்து கிடக்கின்றது.

படிப்பதற்கு பட்டணம் வந்ததால் வாய்ப்பு இல்லாமல் போனது நம் இருவருக்கும் கிராமம் செல்ல, உனக்கு நினைவு இருகின்றதா திண்ணையில் நீ தவழையில் குவளையில் நீர் கொண்டுகுளம் கட்டி நாம் குளித்தது.

கதையல்ல நிஜம்.

பனைஓலையில் கருவேலம் முள் குற்றி காத்தடி செய்து விளையாடியது. நம் கிராமத்து மண்ணில் ஆலமரத்தடில் ஆக்கிய கூட்டான் சொறு, ஊஞ்சல் ஆடி விழுந்த ஆலமரத்தடி எபோதாவது ஊருக்குள் வந்து போகும் வாகனத்தின் பின்னல் ஓடியது.

கவலைகள் மறந்து ஆர்பாட்டம் செய்த
அந்த அழகான நாட்கள் எங்கே, காலம் வேகமாக ஓடிவிட்டது காலம் அது
யார் சொன்னாலும் கேட்பதில்லை
காத்துக்கொண்டு நிற்பதில்லை.

ஓடிக்கொண்டே இருக்கிறது
ஒரு முடிவில்லா உயரத்தை நோக்கி
நம் அன்பின் அடர்த்தி போல.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வருடங்கள் சில கடந்து நாம் சந்தித்து கொண்டபோது நீ சொன்னாய் உன்னை எனக்கு தெரியவில்லை என்று ஆம் உன் முகம் என் நினைவில் இல்லை அனல் உன் நினைவுகள் என்னை விட்டு என்றும் நிங்கியது இல்லை.

எங்கே நான் என்று தேடாதே நான் இன்று
உனக்கு முதலில் வாழ்த்துச்
சொல்ல முடியாமல் அழுதுகொண்டே
தேய்ந்து போகும் நிலவாய் நான்.

இன்றைய முதல் புன்னகையை
உனக்களித்துக் கொண்டே
எழும் சூரியனாய் நான்.
கண் திறந்ததும் நீ பார்க்கும் முதல் காட்சியாய் நான். கைகள் பிணைத்து
நீ முறிக்கும் எழில் சோம்பலாய் நான்.
கண்ணாடி முன் நின்று நீ பார்க்கும் நீயாய் நான்.

கடவுள் முன் உன்கை சுடும்
கற்பூரத்தின் கதகதப்பாய் நான். உன் சின்னக்கையில் கசங்கிய மகிழ்ச்சியில்
கைக்குட்டையாய் நான். நீ குடை தொடுமுன்பே உன் விரல் தொடும்
முதல் துளி மழையாய் நான்.

நீ புரட்டிய புத்தகத்தின் மழுங்கிய பக்கங்களின் மடங்கிய முனைகளாய் நான்.

மொத்தத்தில் ஒரு உருவம் இல்லா
உருவம் போல் இருப்பேன் நான்.

எங்கும், எதிலும், எப்பொழுதும், உன்னுடன்,
நான்.

என் அன்பு தங்கைக்கு இல்லை என் ஆசை தோழிக்கு இந்த அண்ணனின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இந்தநாள் உனக்கு மீண்டும் மீண்டும் வர இறைவனை வேண்டுகின்றேன்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance