25
எதிர்வரும் எதிர்காலமே...!
கால்கள் அடியை எடுத்து வைப்பதில் ஏதோ தயக்கம் காட்டுகிறது.
மனதில் இனம்புரியாத பதற்றம் ஒன்று நிகழ்கிறது.
இதயத்தின் துடிப்பு இருமடங்காக அதிகரிக்கிறது.
பூக்காத இந்த மரங்களும் பூக்கள் தூவுகிறது என்மேல்.
மேகமில்லா இந்தவானம் என்மீது மட்டும் மழை பொழிகிறது.
உன்சுவாச பாதையில் சுற்றாலா சென்ற
வாசனை வருகிறது எதிர்வரும் இந்த தென்றலில்.
ஆம்
"நீ வரும் எதிர்த்திசையில் நடந்து வருகிறேன் நான்".
என் ஆசைகளில் மிகச் சிறிய துண்டை எழுத்துக்களால் மொழிபெயர்த்து
ஒரு கடிதத்தை நீட்டுகிறேன் உன்னிடம்.
கோவம்,அதிர்ச்சி இரண்டையும் முகத்தில் கலந்து இழிவாக பார்த்து விலகிச் செல்கிறாய்.
ஒரு பெண்ணிடம் காதலை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என அறியாத மூடனாய் நகர்கிறேன் நான்.
"வீதியில் வரும் வெண்ணிலவை வெறும் காகிதத்தில் சிறைபிடிக்க நினைத்த" வெள்ளந்தியான என்னை எண்ணி,சிரித்தபடி விலகிச் செல்கிறேன் நான்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top