22


சிவ-பார்வதி கோபமும் காதலும்.


கோபத்தை எப்பொழுதும்
உச்சந்தலையில்
ஒய்யாரமா அமர்த்தி
எனை வஞ்சிக்க
நான் ஒன்றும்
வேரு ஒருத்தியில்லை
உம்மில் பாதியென்று
மறந்து போகும் உமக்கு
நினைவூட்டும் பார்வதி நான்

எனை காதலிக்க
பாற்கடல் விஷம்
தயங்காதவர்
தடுக்கிவிழுந்ததுக்கும்
என் மேல் கோப கணையை
அவ்வளவு எளிதாக
வீசுகின்றீரே
வலிப்பது உமக்குமென்று
தெரிந்தா தெரியாமலா

கவிதைகள் என்ன
கட்டுரைகள் என்ன
பாடல்கள் என்ன
பாராட்டு என்ன
புகழ்ச்சி என்ன
பாதி ராத்திரிக்கும்
பகலவனுக்கும் தெரியும்
புன்னகையை சிதறவிட்டு
என் பின்னல் வந்தாரென்று

எல்லாம் எங்கு சென்றது
எல்லாத்திலும் காதலை
எல்லையில்லா கண்டநாள்
எட்டநின்னாலே தவிக்கும்
என் காதல் இதயம்
எங்கே போனது
என் ஒரு பகுதி வேதனையில்
உமது கண்ணருகில் கருகும்
உஷ்ணம் உமக்கு சுடவில்லையா

ஏன் இந்த ஊடல்
ஏன் இந்த தினப்போராட்டம்
ஏன் இந்த மனகசப்பு
கைலாயமும் உருகுவது
கண்ணிருந்தும் காட்சியை
அலட்சியம் செய்து விலக்குவது
எத்தனை பெரிய வலியென்று
எல்லாம் தெரிந்த உமக்கு தெரியாதோ
இந்த தொடரை முடித்துக்கொள்ளும்

நீர் கோபத்தில் எரித்தாலும்
உமக்கு சாம்பலாவேன்
உம்மை விட்டு நீங்காத சக்தி நானே
என் காதல் பவித்தரமே
என் கவிதை அழகே
என் உயிரின் உயிரே
நீ நான் வேறில்லை
நீங்காத வாழ்வு உன்னோடு வேண்டும்
என் சக்தி நீயென்று காதலோடு
என் மன்னிப்பை முத்தத்தால் சமர்ப்பிக்கிறேன்....!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance