20


காதலில் ஏன் இந்த தீண்டாமை


காதலில்
நீ ஏன்?
இளம் தீண்டாமையை கையாளுகிறாய்.

கட்டித்தழுவும் கனவுகளுக்கு
கிக்காமல் எட்டித்தூரம் போய்...
நீ ஏன் ? ஏளன சவுக்கு வீசுகிறாய் ..

தொலை தூரத்தில் இருந்தபடியே
நம் காதலுக்கு தொப்புள் கொடி
பொருத்திக்கொள்ள முடிவு செய்துவிட்டாயா ?

உன் பக்கத்தில் என்னக்கு பக்கவாதத்தை பொருத்தி
வெக்கத்தை, என்னிடம் வெளிச்சம் போட்டு காட்டுகிறாய். 

முத்தமிட வந்தால் முகம் சுளிக்கிறாய்,
அக்கம் பக்கம் ஆளைக்காட்டி அளக்களிக்கிறாய்.

எட்டி தூரமிருந்தே என்னை எச்சரிக்கிறாய்
தொட்டு தூரம் வருபவனை துரத்தியடிக்கிறாய்.

விக்கல் வரும் போதெல்லாம்,  நான் உன்னை நினைக்கிறேன்
விட்டு விலகும் தூரத்திலே நீ என்னை நினைக்கிறாய்.

நீ........
காதலிலே காப்புரிமை அமைத்துக் கொள்கிறாய்
நான் காலமெல்லாம் உன்னை காக்குரிமை
எடுத்துக்கொள்கிறேன்.

தொட்டால் சினிக்கியாய் நீ 
காதலை கற்பு படுத்திகொண்டு என் காமத்திற்கு கருப்பு மை பூசுகிறாய்.

அருகிலே தொலைபேசியாய் என்னை எப்போதும் நீ
கவனமாக கதை பேசுகிறாய்.

நீ எச்சில் துப்பியதும் ஓடிவரும் எறும்புகளிடம் கேள்,  
தேனருந்தாமல் தேம்புவதன் வேதனையை.........!  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance