18


ஆசைகள் ஆழியளவு


அன்பே உனை யாரென்று நான் அறியேன்
ஆனால் அன்பின் உன் மனம் அறிவேன் - உன்
அகத்தின் நேசம் தாக்கியே
அமிழ்ந்து போகிறேன் அலை கடல்தனிலே !

கடலே என் கையளவு மனதை
களவு செய்தாயடா !
கண்டும் கைக்கோர்த்தும் காதல் செய்யும் உலகில்
காணாதே கரைந்தேன் காதலில்
காத்திருப்பின் சுகம் கண்டேன் நெஞ்சத்தில்,
கரைத்தாண்டும் அலையினை
கடல் மீண்டும் உள் இழுப்பதுபோல்
காதலென்று வார்த்தை கூற முயன்றும்
கனமான மனம் இழுத்து புதைக்கிறதே !
கண்ணாளனே,
கண் இமைப்போல உனை காப்பேனடா !
காத்திருக்கிறேன் நீயும் காத்திருக்கிறாய் என்று
கள்ளமில்லா உள்ளம் சொல்கிறது,
காற்றோடு மடல் தொடுகிறேன்
கடமையினை முடித்து கைக்கோர்த்து விரைந்து வா !

ஆசையது என்ன என்று அறிவாயா ?
ஆசை நாயகனே காணாத என் கண்கள்
அன்பின் உன் முகம் காண வேண்டும் !
அமைதியில் உறைந்திருக்கும் என் இதயம்
அலையென பாய்ந்து உன்னை கொள்ளையிட வேண்டும் !
அசைந்தாடும் என் கைகள் - உன்
அரவணைப்பில் கரம்பற்ற வேண்டும் !
அனைத்தும் திருமணம் என்னும் நாளில்
அரங்கேற வேண்டும் !
அள்ளிவிழி முழுதும் மகிழ்ச்சியில் ஒளிவீச
அன்னையும் தந்தையுமென இருவீட்டார்,
அரங்கமே அக்களிப்பில் துள்ளிக்குதிக்க,
அத்தை மாமன் ,சித்தா சித்தப்பன்,
அண்ணி அண்ணன்,கொழுந்தன் கொழுந்தியா என
அவ்விடமே உறவுகள் நிறைந்திருக்க,

சேலையதை சீராக கட்டி,
சோலை பூக்கள் பின்னலில் சூடி,
சில்லென்று காற்றுக்கு சலங்கள் போல
சிறு மெல்லிசையோடு நடந்து வர
சிரம் நிமிராது மலர்ந்த
சின்ன புன்னகையோடு அமர்ந்தேன் மேடையிலே,
சீண்டும் விறல் தீண்டியது தென்றல்போல,
சிலிர்ப்பில் சிரம் தூக்கினேன்

அதுவே என்னவனின் முதல் சந்திப்பு,
அயராது காத்திருந்த கண்ணாளன்,
அலைப்பாயும் அவர் இழைச் சுருள் வில்
ஆண் வீரம் பறைசாற்றும்
அழகிய மீசை,
அன்பின் முழுமையான அவர் அகத்தின் முகம் கண்டேன்,
அருவியதில் விளையாடும் பட்டாம்பூச்சிபோல்
அகம் முழுதும் அக்களிப்பு,
அரங்கம் மறைந்து அவர் மட்டுமே கண்முன் ,
ஆனந்தம் எனை உறைய வைக்க
அதிர்ந்தபடி அமர்ந்திருந்தேன்,
அவரோ முதல்கணம் பார்க்கிறாயே
அன்பே பிடித்திருக்கிறதா என்று வினவ,
அசைவில் கண் நிமிர்த்தினேன்,
அட ! கண்ணாலே பேசும் என் அழகே
அமுதம் தரும் உன் பார்வைபோதுமடி
அகிலமே எனக்கு அடிபணியும் என்றார்.
அரங்கத்தில் அமர்ந்திருந்த உறவுகள்
அயராதே காதலே நாங்கள் முன்னிருப்பது
அறியவில்லையா என்றனர் ,
அடுத்தநொடி இருவரும் பார்த்து சிரித்தபடி
அறியாத உணர்வினால் அசைவு கொண்டோம் !

மனமது மன்றத்தில் முடித்து
மங்கையின் வீடு வந்தோம் !
மன்னவனே உன்னிடம்
மன்றாட்டுக்கள் பல உண்டு என்றேன் ,
மான்விழியே தயங்காது உரை என்றார்,
மாமி என்றோ மாமன் என்றோ அல்ல - மாறாக
மறு அன்னையென்றும் தந்தையென்றும் வேண்டும்
முதிரா பருவம் மட்டுமல்ல முதிர்ந்த பின்னரும்
மழலை பேசும் பிள்ளையாக வேண்டும் !
மனம் கொண்டு நேசித்த நீர்
மறுவீடு பார்ப்போம் ? என்றால் நான்
மறுத்திடுவேன் எனவே மன்னிக்க வேண்டும் !
மறுவீடு வாசமெனும் தென்றல்போல
மன பாசமெனும் தென்றல் வீச ஆசை !
மாலையும் காலையும்
மங்காத அன்பு என் மறு அன்னையிடமும்
மாறாத அரவணைப்பு என் மறு தந்தையிடமும் பெற வேண்டும் !
மன்னவனே பொக்கிஷத்தை யாரும் தருவாரோ ?
பொலிவுறும் என் முத்தே உம்மை மடிப்பிச்சையாக எனக்களித்த
மாமி அல்ல என் மறு அன்னை அவரை
மாறும் காலத்திலும் மாறாது காத்திட வேண்டும் !
மணவாளனே மண்ணை பாண்டமும்
மதிப்பில்லா கல்லை சிற்பபும் போல
முதிரா உம்மை முதிர்ப்பும் மதிப்பும் பெற செய்த
மாமன் அல்ல என் மறு தந்தை அவரை
மனம் நோகாது பார்த்திட வேண்டும் !
மறந்து மன கலக்கம் எதும் நேர்ந்தால்
மண்டையில் தட்டி திருத்தி
மன்னித்து பொறுத்துக்கொண்டு உடனிருப்பாயா ?

நானும் என் அன்னையும் குறும்பும் சண்டையுமெனவும்
நானும் என் தந்தையும் அன்பின் சண்டையில்
நகர்வோம் நாள்தோறும் அதைக்கண்டு
நலமில்லையென்று நினைத்து கஷ்டம்க்கொள்ளாது,
நீரும் இணைந்து வாழ்வை வண்ண ஓவியம் அமைத்திட வேண்டும் !

பிறந்த இடம் விட்டு வந்த எனக்கு
புகுந்த வீட்டின் தாய்தந்தை அவர்கள் தானே !
பாசமும் நேசமும் சண்டையும் கோபமும்
படைத்திடும் நம் நன்மைக்காக எனவே
பாசத்தினால் வரும் சில கசப்புகளை பொறுத்து
பாதையதை என் வாழக்கை பாதை முடியும்வரை
பயணம் செய்யவேண்டும் நம் உறவுகளோடு !

ஆசைகள் பல உண்டு
அதில் சிலவற்றையே மடலென
அளித்திட முடிந்தது என்னால்
அரங்கேறா பல ஆசைகள்
ஆழியில் ஆடும் படகுபோல
அலைகொண்ட அகத்தில் அமிழ்ந்திருக்கிறது ..........!   

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance