60 தேன்நிலவு

60 தேன்நிலவு

இந்தியாவில் காலடி எடுத்து வைத்த நேரம், குமரேசன் கைது செய்யப்பட்ட விஷயத்தை தெரிந்து கொண்டார் மணிமாறன். அவரை கைது செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் மலரவன் செய்து கொண்டிருக்கிறான் என்று அவருக்கு தெரியும். ஆனால் அவன் அதை இவ்வளவு நேர்த்தியாய் செய்வான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அதோடு மட்டும் அல்லாது, அவர்களை குடும்பத்தோடு  சிறைக்கு அனுப்புவான் என்றும் அவர் நினைக்கவில்லை. ரஞ்சித்தும் ராகேஷும் எப்படி அப்ரூவர்களாக மாறினார்கள் என்று அவருக்கு புரியவே இல்லை. அதை மலரவன் விவரித்த போது, அவரின் வியப்புக்கு அளவில்லை. அதைவிட அவருக்கு வியப்பளித்த விஷயம், மலரவனுக்கு மகிழன் உதவினான் என்பது தான்.

மகிழனின் கரத்தை பற்றிய மணிமாறன்,

"ஐ அம் சாரி நான் உன் வாழ்க்கையை நரகமா மாத்திட்டேன்" மனமார மன்னிப்பு கோரினார்.

"அதை விடுங்க பா. உங்களுக்கு உண்மை தெரிஞ்சிருச்சு. எனக்கு அதுவே போதும்"

"இதுக்கு அப்பறம் நீ என்ன செய்றதா இருக்க?"

"நான் என்ன செய்யணும்னு நீங்க நினைக்கிறீங்க பா?"

"உனக்கு எதோ பிளான் பண்ணி வச்சிருக்கிறதா மலரவன் சொன்னான்"

அவர்கள் இருவரும் மலரவனை பார்த்தார்கள்.

"ஆமாம், மகிழன் லண்டன் பிரான்ச்சோட பொறுப்பை கொஞ்ச நாளைக்கு ஏத்துக்கணும்னு நான் நினைக்கிறேன்" என்றான் மலரவன்.

"நானா?" என்று அதிர்ந்தான் மகிழன்.

"ஆமாம். உனக்கு அதை செய்ய ஸ்டீவ் ஹெல்ப் பண்ணுவான்"

"என்னால அதை செய்ய முடியும்னு நீ நினைக்கிறியா?"

"ஏன் முடியாது? நிச்சயம் உன்னால அதை செய்ய முடியும். ஒரு பிரான்ச்சை தனியா நின்னு லீட் பண்ணும் போது, அது உனக்கு பல அனுபவங்களை கொடுக்கும். அந்த அனுபவம், உன்னோட நம்பிக்கையை வளர்க்கும்"

"நீ என்ன சொல்ற, மகிழா?" என்றார் மணிமாறன்.

"என்னால செய்ய முடியும்னு மலரவன் நினைக்கிறதால, நான் நிச்சயம் அதை செஞ்சு பார்க்கிறேன்" என்றான் மகிழன்.

"சரி, எப்போ கல்யாணம் பண்ணிக்க போற??" என்று எதிர்பாராத கேள்வியை கேட்டார் மணிமாறன்.

"அப்பா, இப்ப தான் நான் ஒரு மோசமான கூட்டத்துக்கு கிட்ட இருந்து தப்பச்சிருக்கேன். நான் கொஞ்ச நாள் நிம்மதியா மூச்சுவிட்டுக்கிறேன்"

"நீ மோசமான பொண்ணை கல்யாணம் பண்ணதால தான் உனக்கு மூச்சு விட கஷ்டமா இருந்தது. இந்த தடவை நிச்சயம் அப்படி நடக்காது" என்றான் மலரவன்.

அவன் அதற்கும் ஏதோ ஏற்பாடு செய்து வைத்திருக்கிறானோ என்பது போல் கேள்விக்குறியுடன் இருவரும் அவனை ஏறிட்டார்கள்.

"நீங்க என்னை இப்படி பார்க்க வேண்டிய அவசியம் இல்ல. என்கிட்ட மகிழனோட கல்யாணத்த பத்தி எந்த திட்டமும் இல்ல. நான் என் மனசுல என்ன தோணுச்சோ அதைத்தான் சொன்னேன்" என்று சிரித்தான்.

"எனக்கு பணக்கார பொண்ணு எல்லாம் வேண்டாம். நடுத்தர குடும்பத்து பொண்ணா இருந்தா போதும்" என்றான் மகிழன்.

மணிமாறனும் மலரவனும் அவனை ஆச்சரியமாய் ஏறிட்டார்கள். தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணிடம் பணம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அவளை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறிய அதே மகிழன், இன்று, அதற்கு முற்றிலும் மாறுபட்டவனாய் காணப்பட்டான். இதைத்தான் விதி என்கிறார்கள். செவிட்டில் அறைந்தது போன்ற அனுபவங்களை தந்து, அனைத்தையும் தலைகீழாய் மாற்றி விடக்கூடிய வல்லமை படைத்தது *காலம்*.

ஒரு வாரத்திற்கு பிறகு,

லண்டனின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இடமிருந்து மலரவனுக்கு மின்னஞ்சல் வந்தது. அவர்களது நிகழ்ச்சிக்கான புது தேதியை தாங்கி வந்தது அந்த மின்னஞ்சல். அதை பூங்குழலியிடம் காட்டினான் மலரவன்.

"நம்ம அடுத்த வாரம் லண்டன் போகணும்" என்றான்.

"நம்ம நிச்சயம் லண்டனுக்கு போய் தான் ஆகணுமா?" என்றாள் பூங்குழலி தயக்கத்துடன்.

"ஏன்? நீ லண்டனுக்கு போக விருப்பப்படலையா?" என்றான் மலரவன் குழப்பத்துடன்.

"லண்டன் பிரான்ச்சை தொடர்ந்து நடத்துற பொறுப்பை நீங்க தான் மகிழன் கிட்ட குடுத்துட்டீங்களே...! அப்புறம் எதுக்கு இதை நம்ம செய்யணும்? அவரே செய்யட்டுமே"

"இவ்வளவு பெரிய ப்ரோக்ராமை அவனால தனியா ஹேண்டில் பண்ணவே முடியாது. அவனுக்கு அதை பத்தி ஒன்னுமே தெரியாது. நமக்கு இதுக்கான தயாரிப்பு வேலைகளை செய்ய ரெண்டு மாசம் தேவைப்பட்டிருக்கு. ப்ரோக்ராமுக்கு  இன்னும் ஒரே வாரம் தான் இருக்கு. இந்த ஷார்ட் பீரியட்ல, நம்ம அதுக்காக என்ன செஞ்சிருக்கோம்னு அவனால புரிஞ்சிக்கவே முடியாது"

"இந்த ப்ரோக்ராமை நடத்துறது இவ்வளவு கஷ்டம்னு தெரிஞ்ச நீங்க, கொஞ்சம் கூட அனுபவமே இல்லாத என்னை எப்படி இந்த ப்ரோக்ராம்குள்ள கொண்டு வந்தீங்க?"

"ஏன்னா, நான் உன் கூட  இருந்தேன். அதே மாதிரி மகிழனுக்கும் ஒருத்தர் தேவை. ஆரம்பத்தில் இருந்து அவன் இதுக்காக வேலை செஞ்சிருந்தா மட்டும் தான் அதுல இருக்கிற எல்லாத்தையும் அவனால புரிஞ்சிக்க முடியும். அதை இப்போ அவன் செய்யறது ரொம்ப கஷ்டம்"

"ம்ம்ம்"

"எல்லாத்துக்கும் மேல நம்ம தான் இந்த ப்ரோக்ராமை பிளான் பண்ணி, அதுக்காக கடினமா உழைச்சிருக்கோம். அதனால இதை முடிக்க வேண்டிய பொறுப்பும் நம்மளுடையது தான். நம்ம ரெண்டு பேரும் லண்டன் போறோம். அவ்வளவு தான். அதுக்கு மேல அதுல பேச எதுவும் இல்ல"

"ம்ம்ம்"

"அதைப்பத்தி இப்போ எதுக்கு இவ்வளவு கேள்வி கேட்டுகிட்டு இருக்க? உனக்கு லண்டனுக்கு போகணும்னு தோணலையா?"

"இப்போ தான் கைலாசம், குமரேசன் விஷயத்தை நீங்க முடிச்சிருக்கீங்க. கொஞ்ச நாளாவது நீங்க ரிலாக்ஸாக இருங்களேன்"

"என்ன நினைச்சுகிட்டு இருக்க? நம்ம எதுக்காக லண்டனுக்கு போறோம்?"

"எதுக்கு?"

"ரிலாக்ஸா இருக்கத் தான்"

"ஓஹோ..."

அவளது கன்னத்தை தட்டினான் மலரவன்.

"அது சரி, நீங்க எதுக்காக மகிழன் லண்டன் பிரான்ச்சுக்கு போகணும்னு நினைக்கிறீங்க?"

"அதை நம்ம டேக் ஓவர் பண்ணனும்னு நீ நினைக்கிறியா?"

"உண்மையை சொல்லப்போனா, நான் அதைத் தான் எதிர்பார்த்தேன். ஏன்னா, நீங்க தான் அதை கஷ்டப்பட்டு உருவாக்கினவரு"

"ஃபாரின்ல போய் செட்டில் ஆகிறது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்ல. பேச்சிலரா இருந்தா அது சாதாரண விஷயம் தான். ஆனால் பேமிலி மேனுக்கு அது அவ்வளவு ஈஸியா இருக்காது. நம்ம லண்டன்ல செட்டில் ஆனா உங்க அம்மா இங்க தனியா விடப்படுவாங்க. நம்ம ரெண்டு பேருக்கும் நம்ம பேரன்ட்ஸை பத்தின பொறுப்பு இருக்கு. மகிழனுடைய நிலைமை இன்னும் *மதில் மேல் பூனை* தான். அவன் இப்போ பொறுப்போட நடந்துக்கிட்டாலும், அது எந்த அளவுக்கு நிலையானதுன்னு என்னால புரிஞ்சுக்க முடியல. எங்க அம்மா அப்பாவை அவனை நம்பி இந்தியாவில தனியா விட எனக்கு விருப்பமில்ல. அவங்களுக்கு வயசாகுது. இப்போ தான் அவங்களுக்கு சப்போர்ட் தேவை. அதை அவரங்களுக்கு கொடுக்க வேண்டியது என்னுடைய கடமைன்னு நினைக்கிறேன். அதை என் தம்பி கிட்ட விட நான் விரும்பல. அதுமட்டுமில்ல, தனியா ஒரு நிறுவனத்தை நடத்துறது எவ்வளவு கஷ்டமான விஷயம்னு மகிழனும் புரிஞ்சிக்கணும்னு நான் நினைக்கிறேன். செஞ்சு தான் தீரனும்னு ஒரு பொறுப்பு அவன் கையில கொடுக்கப் பட்டா தான், அவனுக்கு பொறுப்பு வரும்"

ஆம் என்று தலையசைத்தாள் பூங்குழலி.

ஒரு வாரத்திற்கு பிறகு,

மலரவனும் பூங்குழலியும் லண்டன் சென்று அடைந்தார்கள். அவளை தன்னுடைய குடியிருப்புக்கு அழைத்து வந்தான் மலரவன். லண்டனில் இருக்கும் வீடு என்றால் கேட்கவா வேண்டும்? பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும் விதத்திலும், காற்றோட்டமாகவும், அழகாய் இருந்தது அவனது வீடு. பூங்குழலிக்கு அந்த வீடு ரொம்பவே பிடித்துப் போனது. ஒவ்வொரு அறையாய் பார்த்துக் கொண்டு வந்தாள். இறுதியாய் மலரவனின் படுக்கை அறைக்கு வந்த அவள், திகைத்து நின்றாள். பாதி சுவரை அடைத்தபடி அவளது மிகப் பெரிய புகைப்படத்தை சுவரில் மாட்டி வைத்திருந்தான் மலரவன். அது அவனது பெற்றோரின் திருமண ஆண்டு விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை, அதில் அவள் அணிந்திருந்த உடையை வைத்து அவள் புரிந்து கொண்டாள். அங்கு வந்த மலரவன், பின்னால் இருந்து அவளை அணைத்துக் கொண்டான்.

"அங்கிள் ஆன்ட்டியோட ஆனிவர்சரி ஃபங்ஷன்ல தானே இந்த போட்டோவை நீங்க எடுத்தீங்க?"

ஆம் என்று தலையசைத்தான்.

"எனக்கு உன்னோட இருக்கணும்னு ரொம்ப ஆசை. நீ என்கூட இல்ல அப்படிங்கற குறையை இந்த போட்டோ தான் தீர்த்து வச்சது"

முகத்தை திருப்பி அவனை பார்த்தாள் பூங்குழலி.

"அதை கழட்டிடனும்னு நான் பல தடவை யோசிச்சேன். ஆனா ஏனோ என்னால முடியவே இல்ல"

"உங்க தலையெழுத்து உங்களை அதை செய்ய விட்டிருக்காது. ஏன்னா, உங்க தலையில எழுதி இருக்கிறது என்னோட பேரு தான்"

அவள் கூறியதை ஏற்றுக் கொண்டு புன்னகைத்தான் மலரவன்.

"இந்த ஃபோட்டோவுல நான் ரொம்ப அழகா இருக்கேன்" என்று சிரித்தாள் பூங்குழலி.

"நீ எப்பவுமே அழகு தான்" பின்னாலிருந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

அவனை நோக்கி திரும்பிய அவள்,

"நீங்க எப்பவுமே என்னை ரொம்ப ஸ்பெஷலா ஃபீல் பண்ண வைக்கிறீங்க" என்றாள் உணர்ச்சிகளின் கலவையாய்.

"நீ நெனச்சா என்னையும் ஸ்பெஷலா ஃபீல் பண்ண வைக்கலாம்" என்றான் தன் விரலால் அவள் உதட்டை வருடியவாறு.

"முதல்ல நான் ஃப்ரெஷ் ஆயிட்டு வரேன். அதுக்கப்புறம் உங்களை ஸ்பெஷலா ஃபீல் பண்ண வைக்கிறேன்"

"அப்படியே என்னையும் ஃப்ரெஷ் ஆக்கி என்னை ஸ்பெஷலா ஃபீல் பண்ண வைக்கலாமே...!"

விழி விரித்து அவனை ஏறிட்டாள் பூங்குழலி.

"உங்க மனசுல இப்படிப்பட்ட எண்ணமெல்லாம் கூட இருக்கா?" என்றாள் நம்ப முடியாமல்.

"ஏன்? நான் மனுஷன் இல்லையா? எனக்கு மட்டும் என் வைஃபோட என்னோட வாழ்க்கையை அனுபவிக்கணும்னு ஆசை இருக்காதா?" என்று தன் நெற்றியை அவள் நெற்றியோடு செல்லமாய் முட்டினான்.

"ஆனா இதைப் பத்தி எல்லாம் நீங்க இதுக்கு முன்னாடி என்கிட்ட சொன்னதே இல்லையே?"

"முன்னாடியே சொல்லி இருந்தா, அதை நிறைவேத்தி வச்சிருப்பியா?"

"நான் தான் உங்ககிட்ட ஏற்கனவே சொன்னேனே, நம்ம ரூமுக்கும் லண்டனுக்கும் எந்த வித்தியாசமும் இல்ல, இரண்டும் ஒன்னு தான்னு..."

"அப்படின்னா, நம்ம இந்தியாவுக்கு போன பிறகும் நம்ம ஹனிமூனை தொடரலாம்..." என்று சிரித்தான்.

"நீங்க கலகலன்னு சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கீங்க" என்றாள் அவன் முகத்தை பார்த்தபடி. அவனது சிரிப்பு, அழகிய புன்னகையாய் மாறியது.

"என்னை ஃபிரெஷ் ஆக்குறேன்னு சொன்ன இல்ல? வா போகலாம்"

"நான் உங்களை ஃபிரஷ் ஆக்கணும்னா, என்னை தூக்கிகிட்டு போங்க"

அடுத்த நொடி, எதையும் யோசிக்காமல் அவளை தன் கைகளில் அள்ளிக் கொண்டான் மலரவன். அவர்களது நிகழ்ச்சி முடியும் முன்பே, அவர்களது தேனிலவு ஆரம்பமானது. பூங்குழலி கூறியது போல் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. சந்தோஷம் என்பது நாம் இருக்கும் இடத்தை பொறுத்து அமைவதல்ல. அது நம் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். வீட்டில் இருந்தபடியே கூட நம் வாழ்க்கையை சந்தோஷமாய் அனுபவிக்க முடியும் தானே?

தொடரும்...

குறிப்பு: அடுத்த பாகத்தோடு *நான் என்பதே நீ தானடி!* நிறைவு பெறுகிறது.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top