56 அடுத்த கட்டம்

56 அடுத்த கட்டம்

ரஞ்சித்தின் மூலமாக குமரேசனின் திட்டத்தை தெரிந்து கொண்ட மகிழன்,

"இப்போ நம்ம என்ன செய்யறது மலரா?" என்றான்.

"ரஞ்சித் சாரும், ராகேஷும், அவங்க தண்டிக்கப்பட கூடாதுன்னு நினைச்சா, நான் சொல்றதை கேட்கணும்" என்றான் மலரவன் அவர்களை பார்த்தபடி.

ரஞ்சித் எதுவும் கூறுவதற்கு முன்,

"நீங்க எது சொன்னாலும் நான் கேக்குறேன். தேவைப்பட்டா, குமரேசன் எனக்கு கொடுத்த பணத்தை கூட திருப்பிக் கொடுத்துடுறேன்" என்றான் ராகேஷ்.

"குமரேசன் கிட்ட இருக்கிற அக்ரீமெண்ட் பேப்பர்ஸை திரும்ப வாங்கணும்னா, நீ அதைத் தான் செஞ்சாகணும் "

"ஆனா, அப்படி செஞ்சா அவர் என்னை சந்தேகப்படுவாரே"

"ஆமாம். அவரோட பணம் உனக்கு வேண்டாம், அவரோட கம்பெனியில ஒரு வேலை கொடுத்தா போதும்னு சொல்லு. அப்போ அவர் உன்னை நம்புவாரு. அந்த பணத்தை உன்னையே வச்சிக்க சொல்லி சொல்லுவாரு. ஆனா நீ அதுக்கு ஒத்துக்காதே. போலீஸ் உன்னை சந்தேகப்படுறதால தான் அதை திரும்பி கொடுக்கிறேன்னு சொல்லு. பணத்தை வாங்கிக்கிட்டு, போலீஸோட சந்தேகத்தில் இருந்து என்னை காப்பாத்துங்கன்னு கேளு"

"சரி"

"ஏற்கனவே குமரேசன் போலீஸ்ல மாட்டிக்கிட்டாரு. அவரை முடிக்கிறதுக்கு எனக்கு உன்னுடைய உதவி தேவையில்ல. இது கடைசியா நான் உனக்கு கொடுக்கிற சந்தர்ப்பம். அதை மறந்துடாத" என்றான் மலரவன்.

புரிந்தது என்பது போல் தலையசைத்தான் ராகேஷ்.

"நீ போய் நான் சொன்னதை செய். அப்போ தான், நான் இதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக முடியும். ஒருவேளை நீ டிலே பண்ணா, நான் உனக்காக காத்திருக்க மாட்டேன்.  உன்னை காப்பாத்திக்க உனக்கு கிடைச்சிருக்கிற கடைசி சந்தர்ப்பம் இது தான். ஒரு வேளை நீ வேற ஏதாவது செய்ய நினைச்சா, உன்னை யாராலயும் காப்பாத்த முடியாது" என்று ராகேஷை எச்சரித்தான் மலரவன்.

"இல்ல ண்ணா, நான் அப்படியெல்லாம் சத்தியமா எதுவும் செய்ய மாட்டேன்"

ரஞ்சித்தை பார்த்த மலரவன்,

"நீங்க உங்க வீட்டுக்கு போக வேண்டாம். எங்க கூட போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்க. எங்க குடும்பத்தை தீர்த்துக்கட்ட அவர் என்ன திட்டம் போட்டு வச்சிருக்காருன்னு போலீஸ்ல ஒரு ரிட்டன் கம்பளைண்ட் குடுங்க. அது போதும்"

 அதற்கு ஒப்புக்கொண்டார் ரஞ்சித்.

"ரஞ்சித் போலீஸ் ஸ்டேஷனுக்கு போறாரு. அவர் கம்ப்ளைன்ட் பண்ண உடனே, போலீஸ் குமரேசனை அரெஸ்ட் பண்ண அவங்க வீட்டுக்கு வருவாங்க. உனக்கு இருக்கிற நேரம் அவ்வளவு தான். அதுக்குள்ள நீ வேலையை முடிச்சாகணும்"

"ஒருவேளை குமரேசன் என்னை நாளைக்கு வான்னு சொல்லிட்டா என்ன செய்றது?" 

"அவரை நீ நம்ப வச்சாகணும். அப்போ தான் அவர் உன்கிட்ட அந்த அக்ரிமென்ட் பேப்பர்சை கொடுப்பாரு."

"நான் அவர்கிட்ட பேசும் போது, நான் உங்களை திட்டினா, தயவு செய்து என்னை தப்பா நினைக்காதீங்க அப்போ தான் அவர் என்னை நம்புவாரு"

சரி என்று தலையசைத்தான் மலரவன்.

"நீ கிளம்பு" என்றான் மகிழன்.

குமரேசன் தனக்கு கொடுத்த பணப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினான் ராகேஷ்.

"நீ இந்த பணத்துல கொஞ்சம் கூட செலவு பண்ணலையா?"

"இல்ல ண்ணா, இது போலீஸ் கேஸ் ஆனதால, அதை நான் தொடக்கூட இல்ல. எப்படியும் நீங்களும் ஏதாவது செய்வீங்கன்னு நான் எதிர்பார்த்தேன். அதனால இந்த பணத்தை எடுக்கிற தைரியம் எனக்கு வரல"

"நீ அப்படி செய்யாம இருந்ததும் நல்லது தான்"

அவர்கள் ராகேஷின் வீட்டை விட்டு வெளியே வந்தார்கள். தனது இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து புறப்பட்டான் ராகேஷ்.

"உங்களை நான் உங்க வீட்ல டிராப் பண்றேன் சார்" என்றான் மலரவன் ரஞ்சித்திடம்.

"போலீஸ் ஸ்டேஷனுக்கு போகலாம்னு சொன்னீங்களே?"

"இப்ப இல்ல. நம்ம ராகேஷுக்கு அவன் எடுத்துகிட்ட வேலையை முடிக்க கொஞ்சம் டைம் கொடுக்கலாம். விஷயத்தோடு சீரியஸ்னஸ் அவனுக்கு புரியணும்னு தான் நான் அவனை அவசரப்படுத்தினேன்"

அவனை வியப்புடன் ஏறிட்டார் ரஞ்சித்.

ரஞ்சித்தின் மனைவிக்கு, நடந்தவற்றை குறுஞ்செய்தியாக அனுப்பினான் மகிழன். அதை படித்த அவர், உடனே டெலிட் செய்தார். ரஞ்சித்தை அவரது வீட்டில் இறக்கி விட்டு கிளம்பினார்கள் நமது சகோதரர்கள்.

ரஞ்சித்தை நோக்கி ஓடிவந்த காவேரி அவரை கட்டிக்கொண்டு அழுதார்.

"கடவுள் புண்ணியதில் நீங்க திரும்ப வந்துட்டீங்க. இதுக்கப்புறம் எந்த பிரச்சனையும் இருக்காதே?"

"இருக்காதுன்னு தான் நினைக்கிறேன்"

"எப்படி போலீஸ் உங்களை போக விட்டாங்க?"

"மணிமாறன் சாரோட பிள்ளைங்க என்னை பெயில்ல எடுத்தாங்க"

"ஓ..." அவர் கைதான விஷயத்தை அவர்களுக்கு தெரியப்படுத்தியது அவர் தான் என்று ரஞ்சித்திடம் கூறவில்லை காவேரி.

"அவங்க என்னை பெயில்ல எடுத்ததை என்னால நம்பவே முடியல. என்னை அப்படியே விட்டிருந்தா அது அவங்களுக்கு தான் சாதகமா இருந்திருக்கும்..."

"ஏன் அப்படி நினைக்கிறீங்க?"

"குமரேசனுக்கு எதிரா அவங்க கிட்ட பலமான ஆதாரம் இருக்கு. என்னோட உதவி அவங்களுக்கு தேவையே இல்ல. இருந்தும் அவங்க என்னை வெளியிலே எடுத்திருக்காங்க"

"எப்படியோ நீங்க இந்த பிரச்சனையிலிருந்து வெளியே வந்துட்டீங்க. அதுவே எனக்கு போதும்"

"இல்ல. ஒருவேளை அவங்களுடைய பிளான் குமரேசனுக்கு தெரிஞ்சா, அவர் நிச்சயம் தப்பிச்சு போயிடுவாரு. அதுக்கு முன்னாடி குமரேசன் அரெஸ்ட் ஆகணும்"

"நீங்க அதைப் பத்தி ஏன் கவலைப்படுறீங்க? அந்த பசங்க பாத்துக்குவாங்க விடுங்க"

"உனக்கு எப்படி அவங்களை பத்தி தெரியும்?" என்றார் ரஞ்சித்.

தான் உளறி விட்டதை உணர்ந்தார் காவேரி.

"உங்களை அவங்க வெளியில கொண்டு வந்திருக்காங்கன்னா, ஏதோ திட்டத்தோட தான் அவங்க அதை செஞ்சிருக்கணும்னு நினைக்கிறேன்"

ஆம் என்று ரஞ்சித் தலையசைக்க, நிம்மதி பெருமூச்சு விட்டார் காவேரி.

.......

"நீ ரஞ்சித்தை நம்புறியா மலரா?" என்றான் மகிழன்.

"நீ அவரை நம்பலயா?" என்று அவன் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல், பதில் கேள்வி கேட்டான் மலரவன்.

"இல்ல, நான் அவரை நம்பல"

"நம்ம அவரை வாட்ச் பண்ணனும்னு நினைக்கிறியா?"

"அவரை ஏற்கனவே எனக்காக ஒருத்தர் வாட்ச் பண்ணிக்கிட்டு தான் இருக்காங்க"

"யாரு?"

"மிஸஸ் ரஞ்சித்"

வாய்விட்டு சிரித்த மலரவன்,

"அப்படின்னா நம்ம கவலைப்பட தேவையே இல்ல. ஒரு மனுஷனை அவன் பொண்டாட்டியை விட பெட்டரா யாராலயும் கண்காணிக்கவே முடியாது. அவங்க உளவுத்துறைக்கு இணையானவங்க" என்றான் மலரவன்.

ஆமாம் என்று தலையசைத்து சிரித்தான் மகிழன்.

அன்பு இல்லம் வந்த அவர்கள், நேராக மின்னல்கொடியின் அறைக்கு சென்றார்கள். மலரவனை பார்த்த பூங்குழலியின் கண்கள் பிரகாசம் அடைந்தன.

"இப்போ உங்களுக்கு வலி பரவாயில்லையா, மா?" என்றான் மலரவன்.

"எவ்வளவோ தேவலாம்... சிவகாமியும் அக்காவும் என்னை கவனிச்சிக்கிறதை பார்த்தா, கூடிய சீக்கிரமே நான் பத்து கிலோ ஏறிடுவேன் போல தெரியுது" என்று சிரித்தார் அவர்.

அதைக் கேட்ட மற்றவர்களும் சிரித்தார்கள்.

"நீ ஏதாவது சாப்பிட்டியா மல்லு?"

"இல்லம்மா இன்னும் எதுவும் சாப்பிடல"

"போய் முதல்ல சாப்பிடு"

சரி என்று தலையசைத்தான் மலரவன்.

"குழலி, போய் மலரவனக்கு சாப்பிட ஏதாவது குடு" என்றார் மின்னல்கொடி.

அந்த சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்த பூங்குழலி, உடனே தலையசைத்துவிட்டு, அங்கிருந்து சமையலறை நோக்கி நடந்தாள். அவளை பின்தொடர்ந்து வந்த மலரவன், அவளை அழைத்தான்.

"பூங்குழலி..."

"சொல்லுங்க..."

"நான் முதல்ல ஃப்ரெஷ் ஆகணும். நான் அப்புறமா சாப்பிடுறேன்"

"நீங்க போய் பிரஷ் ஆகுங்க. அதுக்குள்ள நான் உங்களுக்கு பிரேக்ஃபாஸ்ட் எடுத்துக்கிட்டு வரேன்"

"தண்டபாணியை கொண்டுவர சொல்லு" என்று கூறிவிட்டு *நீ என்னுடன் வா* என்பது போல் சைகை செய்தான். 

அவன் சைகையை புரிந்து கொண்ட அவள், அவனுடன் சென்றாள்.

"என்ன ஆச்சு மலர்? போன காரியம் முடிஞ்சுதா?"

"இன்னும் முடியல. குமரேசனை மீட் பண்ண, ராகேஷ் அனுப்பி இருக்கோம். கொடுத்த வேலையை முடிச்சிட்டு அவன் எங்களுக்கு ஃபோன் பண்ணுவான்"

"அவன் அதை ஒழுங்கா முடிப்பானா?"

"முடிப்பான். முடிக்காம விட்டா என்ன ஆகும்னு அவனுக்கு நல்லாவே தெரியும்"

"ஜாக்கிரதை மலர். அவனை முழுசா நம்பாதீங்க"

"நான் அவனை நம்பல. நான் ஜாக்கிரதையா தான் இருப்பேன்"

"நீங்க உண்மையிலேயே குமரேசனுக்கு எதிரா ஆக்‌ஷன் எடுக்க போறீங்களா?"

"பின்ன? அவரை சுதந்திரமா வெளியில விட கூடாது. அவருக்கு ஒரு நல்ல பாடத்தை சொல்லிக் கொடுக்கணும்" என்றான் கோபமாய்.

அவன் தோளை பற்றிய அவள்,

"ரிலாக்ஸா இருங்க" என்றாள்.

"இந்த விஷயம் முடியற வரைக்கும் என்னால ரிலாக்ஸா இருக்க முடியாது"

"எல்லாம் நீங்க நினைச்ச படியே முடியும். கவலைப்படாதீங்க"

"நான் நினைச்சபடியே எல்லாத்தையும் முடிச்சு காட்டுவேன். இன்னைக்கு சூரியன் மறையறத்துக்கு முன்னாடி குமரேசன் அரெஸ்ட் ஆவாரு"

அதை ஆமோதித்த படி தலையசைத்த பூங்குழலி, இன்டர் காமை எடுத்து, தண்டபாணிக்கு ஃபோன் செய்து, மலரவனுக்கு சிற்றுண்டி கொண்டு வர சொன்னாள்.

"என்ன அவசரம் பூங்குழலி?"

"நீங்க எதுவுமே சாப்பிடாம இருக்கீங்க. ராகேஷ் கிட்ட இருந்து ஃபோன் வந்தா, நீங்க சாப்பிடாமலேயே உடனடியா வீட்டை விட்டு கிளம்பி போயிடுவீங்க. அதனால தான் அவசரப்படுறேன்"

"நான் வீட்ல இருக்கிற வரைக்கும் என் கூட இரு. அது போதும்"

"நான் உங்க கூட தான் இருக்கப் போறேன். அதுக்காக நீங்க சாப்பிடாம இருக்கணும்னு அவசியம் இல்ல"
 
அப்போது கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. கதவை திறந்த பூங்குழலி, தண்டபாணி கையில் தட்டுடன் நின்றிருப்பதை கண்டாள். அதை அவனிடமிருந்து பெற்றுக் கொண்டு, கதவை சாத்தி தாளிட்டு விட்டு உள்ளே வந்தாள். அதை மலரவனிடம் கொடுத்துவிட்டு அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

"எனக்கு சாப்பிடுற மூடே இல்ல பூங்குழலி"

அவன் கூறியதை காது கொடுத்து கேட்காமல், தோசையை பிய்த்து அதை வடகறியில் தொட்டு, அவன் வாய்ருகே நீட்டினாள். மறுத்தளிப்பதை நிறுத்திவிட்டு வாயைத் திறந்தான் மலரவன். சிரித்தபடி அவனுக்கு ஊட்டி விட்டாள் பூங்குழலி.

"உனக்கு என்னோட வீக்னஸ் நல்லாவே தெரிஞ்சிருக்கு இல்ல?"

இல்லை என்று தலையசைத்தாள்.

"உங்க பலம் என்னன்னு தெரிஞ்சுகிட்டு அதுக்கு தகுந்த மாதிரி நான் நடந்துக்கிறேன்"

அவளது இடையை தன் கரங்களால் சுற்றி வளைத்துக் கொண்டு, அவள் தோளில் சாய்ந்து கொண்டான்.

"என்னுடைய பலமும் நீ தான்... என்னுடைய பலமான பலவீனமும் நீ தான்"

சிரித்தபடி அவனுக்கு அடுத்த வாய் உணவை ஊட்டி விட்டு,

"நான் நியூஸ் பார்த்தேன்" என்றாள்

"ம்ம்ம்"

"எப்பவும் இல்லாத அளவுக்கு லண்டன்ல மழை கொட்டி தீக்குதாம்"

"ஓ..."

"நிறைய இடத்துல வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கு. பல இடங்கள்ல தண்ணீ தேங்கி நிக்குது"

"சரி நான் அப்பாகிட்ட பேசுறேன்"

"நீங்க வர்றதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அவர்கிட்ட நான் பேசினேன்"

"என்ன சொன்னாரு?"

"ப்ரோக்ராம் கேன்சல் ஆக வாய்ப்பு இருக்குன்னு சொன்னாரு"

"ஓ..." என்றான் உணர்ச்சி இல்லாமல்.

"இவ்வளவு பெரிய விஷயத்துக்கு  நீங்க இவ்வளவு தான் ரியாக்ட் பண்ணுவீங்களா?"

"நம்ம என்ன செய்ய முடியும்? நம்மால எதையும் மாத்த முடியாது" என்றான் எதையோ யோசித்தவாறு.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top