5 எவ்வளவு மகிழ்ச்சியானவள்
5 எவ்வளவு மகிழ்ச்சியானவள்
பூங்குழலியை மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள் மணிமாறனும் மலரவனும். அவள் இன்னும் மயக்க நிலையில் தான் இருந்தாள். அவளை பரிசோதித்த மருத்துவர்,
"இவங்க ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகியிருக்காங்க. ரொம்ப வீக்காகவும் இருக்காங்க. அவங்களுக்கு நான் இன்ஜெக்ஷன் போடுறேன். அவங்களை நல்லா சாப்பிட வைங்க
சரியாயிடுவாங்க" என்றார்.
"இந்த இன்ஜெக்ஷன் எதுக்காக டாக்டர்?" என்றான் மலரவன்.
"அவங்களோட மயக்கத்தை தெளிவிக்க"
"அப்படின்னா அந்த இன்ஜெக்ஷனை அவங்களுக்கு போடாதீங்க டாக்டர்" என்ற மலரவனை மருத்துவரும், மணிமாறனும் விசித்திரமாய் பார்த்தார்கள்.
"அவங்க எதுவுமே சாப்பிடாம இருக்காங்க. இதுக்கு பிறகும் நிச்சயம் சாப்பிட மாட்டாங்க. நீங்க மயக்கத்தை தெளிவிசிட்டா, அதுக்கப்புறம் அவங்க தூங்கவும் மாட்டாங்க. மாறா, அழ ஆரம்பிச்சிடுவாங்க. அவங்க அப்பா இறந்துட்டாரு டாக்டர்..."
"ஓ..."
"அவங்களுக்கு எனர்ஜி வேணும். நீங்க அவங்களுக்கு ஒரு ஸலைன் போட்டிங்கன்னா பெட்டரா இருக்கும்"
"சரி, அப்படியே செஞ்சிடலாம். அந்த ஸலைன் முடிய நேரம் ஆகும். அது வரைக்கும் அவங்க தூங்கட்டும்"
"தேங்க்யூ டாக்டர்"
ஒரு செவிலியை அழைத்த மருத்துவர், பூங்குழலிக்கு ஸலைன் ஏற்றச் சொல்லி உத்தரவிட்டு நகர்ந்தார்.
"மலரா, நான் குழலியோட இருக்கேன் நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு"
"நான் ஃபிளைட்ல வரும் போது தேவையான ரெஸ்ட் எடுத்துட்டேன். நீங்க வீட்டுக்கு போய் ஏதாவது சாப்பிடுங்க. நீங்க மாத்திரை போடணும் இல்ல? நான் மகிழனை வரச் சொல்லி குழலியோட இருக்க சொல்லிட்டு அப்புறம் வறேன்"
"சரி, நான் வீட்டுக்கு போயிட்டு, காரை அனுப்பி வைக்கிறேன்"
"சரி பா... உங்களை இன்னொரு விஷயம் கேட்கணும்னு நினைச்சேன். பூங்குழலியோட வீட்டை என்ன செய்யப் போறீங்க? அவங்க அதை காலி பண்ணனும் இல்ல?"
"ஆமாம். அவங்க காலி பண்ணனும். பேங்கர்ஸ் அவங்களுக்கு ஒரு நாள் தான் டைம் கொடுத்திருந்தாங்க. அது தான் தில்லைராஜனை உடைச்சி போட்டுடுச்சி. எப்படி தன்னோட மனைவியும் மகளும் நடுரோட்டுக்கு வர்றதை அவனால பார்க்க முடியும்? பேங்க்கர்ஸ் கிட்ட அவங்களோட சூழ்நிலையை எடுத்து சொல்லி நான் தான் கொஞ்சம் டைம் வாங்கியிருக்கேன். தில்லையோட காரியம் முடிஞ்ச உடனே அவங்க அங்கிருந்து கிளம்ப வேண்டியிருக்கும்"
"அவங்க எங்க பா போவாங்க?"
"தெரியல... உண்மையா சொல்றேன், எனக்கு என்ன செய்யறதுன்னு ஒண்ணுமே புரியல. நம்ம செய்ற உதவியை சிவகாமி மறுத்துட்டா என்ன செய்றதுன்னு யோசனையா இருக்கு"
"இதுல யோசிக்க என்னப்பா இருக்கு? நம்ம தான் அவங்களுக்கு ஒரு வீட்டை ஏற்பாடு பண்ணி கொடுக்கணும். அவங்க தில்லை அங்கிளோட ஃபேமிலியாச்சே. மகிழன் குழலியை கல்யாணம் பண்ணிக்க போறான். அவங்களுக்கு இதை நம்ம செஞ்சு தான் ஆகணும். சிவகாமி ஆன்ட்டியையும் ஒத்துக்க வைக்கணும். உங்களுக்கு அதை செய்ய தயக்கமாக இருந்தா, நான் பார்த்துக்கிறேன்"
"ரொம்ப தேங்க்ஸ் மலரா"
"நீங்க தில்லை அங்கிள் வீட்டுக்கு போங்க. ஏற்கனவே ரொம்ப லேட் ஆயிடுச்சு"
"நீயும் ஏதாவது சாப்பிடு"
"நான் பார்த்துக்கிறேன்"
மணிமாறன் அங்கிருந்து கிளம்பி சென்றார். பூங்குழலி படுத்திருந்த கட்டிலுக்கு பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து, மகிழனுக்கு ஃபோன் செய்தான் மலரவன். அவனது அழைப்பை ஏற்றான் மகிழன்.
"மகிழா, எம்ஹெச் ஹாஸ்பிடலுக்கு உடனே வா"
"என்ன ஆச்சி, மலரா?"
"என்ன கேக்குற நீ? அம்மா உன் கிட்ட எதுவும் சொல்லலையா?"
"இல்லையே... நான் அம்மாவை பார்க்கவே இல்ல"
"என்னடா சொல்ற? எங்க இருக்க நீ?"
"நம்ம வீட்ல தான். இன்னைக்கி ஃபுல்லா அலைஞ்சு திரிஞ்சதுல, ரொம்ப டயர்டா இருக்கேன்"
"இந்த மாதிரியான சாக்கு போக்கு சொல்றதுக்கு இது தான் நேரமா?"
"நான் ஏன் சாக்குப் போக்கு சொல்லணும்?"
"பூங்குழலி உன்னோட ஃபியான்சி. அவளை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்கு. இந்த மாதிரி நேரத்துல, எல்லாரையும் விட நீ தான் அவ கூட இருக்க வேண்டியது அவசியம். உன்னோட பொறுப்பை புரிஞ்சி நடந்துக்கோ. அவ ரொம்ப வீக்கா இருக்கான்னு ஸலைன் போட்டிருக்கு"
"ஓ..."
"நானும் அப்பாவும் அவளை ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கிட்டு வந்தோம்"
"அப்படின்னா ஒரு பிரச்சனையும் இல்ல. நீ தான் அவ கூட இருக்கியே"
"நான் நீயாயிட முடியாது"
"முடியும்... அதான் நீ ஏற்கனவே செஞ்சிட்டியே... புரிஞ்சுக்கோ மலரா. நான் அங்க வந்து என்ன செய்யப் போறேன்? என்னோட ஃபோன்ல சார்ஜ் கம்மியாயிகிட்டு இருக்கு. அது எப்ப வேணாலும் ஆஃப் ஆயிடும். ப்ளீஸ் அவளை அவங்க வீட்ல விட்டுடு. பை" அழைப்பை துண்டித்தான் மகிழன்.
எரிச்சலுடன் பல்லை கடித்தான் மலரவன். ஒரு உறவு முறையை தக்க வைத்துக்கொள்ள தேவையான அடிப்படை பொறுப்பு கூட இல்லாத ஒருவன் எதற்காக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள நினைக்க வேண்டும்?
அசைவின்றி கட்டிலில் கிடந்த பூங்குழலியின் மீது அவனது பார்வை சென்றது. ஏன் வாழ்க்கை தனது கோரமான பக்கத்தை காட்டி அவளை அச்சுறுத்துகிறது? எவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்த பெண் இவள்! சிறிதும் மனகலக்கமின்றி சந்தோசமாய் சுற்றித் திறிந்தவள் ஆயிற்றே!
கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்தான் மலரவன். எந்த குடும்ப நண்பர்களுடனும் கலந்து உறவாடியது இல்லை மலரவன். தன் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தும் அரிதான பிள்ளையாய் இருந்தான் அவன். எந்த குடும்ப விழாக்களிலும் அதிகம் தலைகாட்டியது இல்லை அவன். குடும்ப விழாக்களுக்கு வரச் சொல்லி அவனது பெற்றோர்கள் அவனை கட்டாயப்படுத்தியதும் இல்லை. ஏனென்றால், அப்படியே வந்தாலும் கூட, ஒரு மூலையில் தன்னந்தனியாய் யாருடனும் பேசாமல் அமர்ந்திருப்பான். அதனால் அவனை அழைப்பதையே அவர்கள் நிறுத்திக் கொண்டார்கள்.
ஆனால்...
தன் குடும்பத்தில் நடந்த விழாவை அவனால் தவிர்க்க முடியவில்லை. அவன் லண்டன் செல்ல தயாராகிக் கொண்டிருந்த நேரம் அது. மணிமாறன், மின்னல்கொடி தம்பதியினரின் முப்பதாவது திருமண ஆண்டு விழா அது. முதன்முதலாய் அந்த விழாவை தானே முன்னிருந்து நடத்தினான், பெற்றவரின் சந்தோஷத்திற்காக எதையும் செய்யும் மலரவன். அப்படி ஒரு விழாவை ஏற்பாடு செய்து, தன் பெற்றோரை சந்தோஷக் கடலில் திக்கு முக்காட செய்தான் அவன். மிக நெருக்கமான நண்பர்களை அழைக்க மலரவன் ஒப்புக்கொண்டது, அவர்களுக்கு மேலும் ஆச்சரியத்தை தந்தது. ஆனாலும், மிக நெருக்கமான நண்பர்களையே அழைத்திருந்தார் மணிமாறன்.
விழா கோலாகலமாய் தொடங்கியது. விழாவுக்கு வந்திருந்த பிள்ளைகளின் குழு, அங்கு வந்திருந்த அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது, மலரவனின் கவனத்தையும் சேர்த்து. அவர்கள் சந்தோஷமாய் அந்தக்ஷரி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அது அந்த விழாவிற்கு உயிர்க்களை அளித்தது. அந்தப் பிள்ளைகளுக்கு இடையில், நடுநாயகமாய் இருந்தவள் பூங்குழலி தான். இங்கும் அங்கும் ஓடியாடி சேட்டை செய்து கொண்டிருந்த அனைத்து பிள்ளைகளையும் திரட்டி, அந்தக்ஷரி என்ற பெயரில், அவள் தான் ஒரு பக்கமாய் அமர வைத்திருந்தாள்.
ஆனால், ஐஸ்கிரீம் வழங்க ஆரம்பித்தவுடன், பிள்ளைகளை அவளாலேயே கூட கட்டுப்படுத்த முடியவில்லை. அனைவரும் கூச்சலிட்டபடி ஓடி போனார்கள். ஒரு சின்ன பெண், பூங்குழலிக்கும் ஐஸ்கிரீம் வாங்கி வந்து கொடுத்தாள். அதை பெற்றுக்கொண்டு திரும்பிய பூங்குழலி, பின்னால் வந்த மலரவனை கவனிக்காமல், அவன் மீது மோதி கொண்டாள். பூங்குழலியின் கையில் இருந்த ஐஸ்கிரீம், மலரவன் அணிந்திருந்த புத்தம் புதிய கோட்டை பழகியது. தடுமாறிய பூங்குழலியை, அவளது கரத்தை பற்றி நிறுத்தினான் மலரவன். தன் கையில் இருந்த ஐஸ்கிரீமால், அவனது கோட்டு பாழாகிப் போனதை பார்த்த அவள், பதட்டத்துடன் விழி விரித்தாள். தன் கையில் இருந்த கைகுட்டையால், அவன் கோட்டில் ஒட்டி இருந்த ஐஸ்கிரீமை துடைத்தபடி,
"ஐ அம் சாரி... ஐ அம் சாரி... ஐ அம் சோ சாரி" என்றாள்.
"ஒரு தப்புக்கு எத்தனை சாரி சொல்லுவ?" என்றான் மலரவன்.
"நீங்க வந்ததை நான் கவனிக்கல"
"நிச்சயமா கவனிச்சிருக்க முடியாது. உனக்கு தான் தலையில கண் இல்லையே" என்றான் சீரியஸாக.
கலகலவென சிரித்தாள் பூங்குழலி.
"ஐ அம் சாரி"
"இந்த ட்ரெஸ்ஸை ஸ்பாயில் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ்" என்றான் மலரவன்.
"என்ன சொன்னீங்க?" என்றாள் நம்ப முடியாமல்.
"இந்த கலர் எனக்கு சுத்தமா பிடிக்கல"
"ஆனா, லைட் பீக்காக் ப்ளூ செம கலராச்சே... எனக்கு ரொம்ப பிடிக்கும்"
"ஓ..."
"பை தி வே, ஐ அம் பூங்குழலி" கைகுலுக்கலுக்காக தன் கரத்தை அவனிடம் நீட்டினாள்.
அவள் கரத்தை பற்றி குலுக்கி,
"மலரவன்" என்றான்.
"நீங்க தான் மலரவனா?" என்றாள் பேரார்வத்துடன்.
ஆம் என்று தலையசைத்தான்.
"மணிமாறன் அங்கிளோட எல்டர் சன்னா?"
மறுபடியும் ஆம் என்று தலையசைத்தான்.
"அப்படின்னா, எம்எம் ஃபேஷண்ட்ஸோட சிஇஓ நீங்க தானா?"
ஆம் என்று புன்னகைத்தான்.
"உங்களுக்கு நான் யாருன்னு தெரியுமா?"
"இப்போ தானே சொன்ன, பூங்குழலின்னு...?"
"நான் பூங்குழலி, தில்லைராஜனோட டாட்டர்"
"ஓ..."
"நம்ம ரெண்டு பேரோட அப்பாவும் ஃபிரண்ட்ஸ் தெரியுமா?"
"தெரியும்"
"இதுக்கு முன்னாடி நான் உங்களை பார்த்ததே இல்ல. நீங்களும் என்னை பார்த்ததில்லைன்னு நினைக்கிறேன்"
"ஆமாம் பார்த்ததில்ல"
"ஏன் ஃபேமிலி கேதரிங்ஸ்க்கு நீங்க வர்றதே இல்ல"
புன்னகை புரிந்தான் மலரவன்.
"எனக்கு தெரியும், உங்களுக்கு கிரவுடுனா பிடிக்காது. சரி தானே?"
ஆமாம் என்று தலைசைத்தான்.
"ஆனா இந்த பாட்டியை நீங்க தான் அரேஞ்ச் பண்ணீங்கன்னு கேள்விப்பட்டேனே... அதை மட்டும் எப்படி செஞ்சீங்க?"
மீண்டும் புன்னகை.
"அங்கிளுக்கும் ஆன்ட்டிக்கும் சர்ப்ரைஸ் கொடுக்க தானே?" எல்லா கேள்விகளையும் கேட்டு, அதற்கு அவளே பதிலையும் கூறிக் கொண்டாள்.
"உனக்கு தான் எல்லாம் தெரிஞ்சிருக்கே... என்னை பத்தி..."
"ஆமாம் எனக்கு எல்லாம் தெரியும். அப்பா உங்க குடும்பத்தை பத்தி நிறைய பேசுவார். மாறன் இப்படி சொன்னான்... மின்னல் அப்படி செஞ்சாங்க... மலரவன் ரொம்ப கிரேட்... மகிழனுக்கு நாலு அரியர் பேப்பர் இருக்கு..." கலகலவென சிரித்தாள் பூங்குழலி.
லேசாய் புன்முறுவல் பூத்தான் மலரவன்.
"நீ என்ன செஞ்சுகிட்டு இருக்க பூங்குழலி?"
"பிபிஏ... இது தான் லாஸ்ட் இயர்..."
"ஓ..."
"என்னால நம்பவே முடியல. நான் உங்ககிட்ட பேசிகிட்டு இருக்கேன்... இல்ல இல்ல, கரெக்ஷன்... நீங்க என்கிட்ட பேசிகிட்டு இருக்கீங்க..."
"ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?"
"நான் வழக்கமா எல்லார்கிட்டயுமே வாய் ஓயாம பேசிக்கிட்டே இருப்பேன். ஆனா நீங்க அப்படி இல்லன்னு அப்பா சொன்னாரு. நீங்க பொதுவா யார்கிட்டயும் ரொம்ப பேச மாட்டீங்களாமே. அவர் உங்களைப் பத்தி நினைச்சுகிட்டு இருக்கிறது தப்புன்னு இன்னைக்கு நான் அவர்கிட்ட சொல்லுவேன்"
"அவர் என்னை பத்தி நெனச்சுக்கிட்டு இருக்கிறது தப்பில்ல"
"அப்படியா?"
"இந்த பார்ட்டியை, அந்தாக்ஷரி விளையாடி லைவ்லியா மாத்துனதுக்கு ரொம்ப தேங்க்ஸ்"
"ஓஹோ... அதுக்காக தான் என்கிட்ட பேசிகிட்டு இருக்கீங்களா? ரொம்ப பெருமையா இருக்கு. ப்ளீஸ், சீக்கிரமா போய் இந்த கோட்டை மாத்திடுங்க. இல்லன்னா, இது எப்படி ஆச்சுன்னு கேட்டு, எல்லாரும் என்னை டோஸ் விடுவாங்க"
அப்பொழுது அவர்கள்,
"குழலி" என்று தில்லைராஜன் அழைப்பதை கேட்டார்கள்.
தன் கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்ட பூங்குழலி, தன் கையில் இருந்த ஐஸ்கிரீம் கப்பை, தான் அணிந்திருந்த காக்ராவின் துப்பட்டாவில் மறைத்துக் கொண்டாள். அவர்களிடம் வந்த தில்லைராஜன்,
"உன் கோட்டுக்கு என்ன ஆச்சி மலரா?" என்றார்.
பதட்டத்துடன் நகம் கடித்த பூங்குழலியை ஏறிட்ட மலரவன்,
"கால் தடுக்கி, கையிலிருந்த ஐஸ்கிரீம் கோர்ட்ல ஒட்டிக்கிச்சு அங்கிள்" என்றான் முகத்தில் எந்த பாவமும் இல்லாமல்.
ஆனால் முகம் முழுக்க பாவத்துடன் அவனை ஏறிட்டாள் பூங்குழலி.
"அடடா... நல்ல கோட்டு..."
"டிரைகிளீன் பண்ணிக்கலாம் அங்கிள்"
நிம்மதி பெருமூச்சு விட்டாள் பூங்குழலி.
"அப்பா, இவர் யார்கிட்டயுமே பேச மாட்டார்னு சொன்னீங்க... பாருங்க என்கிட்ட பேசிகிட்டு இருக்காரு"
"அவனை யாராலும் புரிஞ்சுக்க முடியாது. அவன் உன்கிட்ட எப்படி பேசிகிட்டு இருக்கான்னு எனக்கும் புரியல" என்று சிரித்தார்.
"நாங்க இப்ப தான் ஃபர்ஸ்ட் டைம் பாக்குறோம். இதுக்கு முன்னாடியே பார்த்திருந்தா, இன்னும் கூட நல்லா பேச ஆரம்பிச்சிருப்போம். நான் சொல்றது கரெக்ட் தானே?" என்றாள் பூங்குழலி.
"இருக்கலாம்..."
"சரி மலரா, நான் போறேன். இல்லன்னா இந்த பொண்ணு, சிவன் பூஜையில கரடி புகுந்த மாதிரி ஏன் வந்தீங்கன்னு என்கிட்ட சண்டை போடுவா" என்றார் தில்லைராஜன்.
அப்படியா? என்பது போல் மலரவன் அவளை பார்க்க,
"இவளைப் பத்தி உனக்குத் தெரியாது மலரா. இவ ரொம்ப பெரிய வாயாடி. எல்லார்கிட்டயும் சண்டை போடுவா" சிரித்தார் தில்லைராஜன்.
"அப்பா... நீங்க ஒரு அப்பாவா? உங்க பொண்ணை பத்தி இப்படித் தான் சொல்லுவிங்களா?"
"ஆனா, ரொம்ப நல்ல பொண்ணு கூட" மேலும் சிரித்தார் தில்லைராஜன்.
"போங்கப்பா... நான் உங்க கிட்ட பேச மாட்டேன்" உதடு சுழித்தாள்.
"மலரா நான் இப்ப வரேன்" என்று அங்கிருந்து நைசாக நழுவி சென்றார் தில்லைராஜன்.
"அவர் சொன்னதை நம்பாதீங்க. அவர் எப்ப பார்த்தாலும் என்னை இப்படித் தான் கிண்டல் பண்ணுவாரு"
"சரி, நான் அவர் சொன்னதை நம்பல" என்றான் சீரியஸாக மலரவன்.
"எங்க அப்பா கிட்ட இருந்து பொய் சொல்லி என்னை காப்பாத்துனதுக்கு ரொம்ப தேங்க்ஸ்"
"நான் எப்போ பொய் சொன்னேன்?"
"கால் தடுக்கி ஐஸ்கிரீம் ஒட்டிக்கிச்சின்னு சொன்னீங்களே"
"அது பொய் இல்லையே..."
"ஓ..."
புன்னகைத்தான் மலரவன்.
"வர்ற 17-ஆம் தேதி என்னோட பர்த்டே. இப்பவே உங்களை கூப்பிட்டுட்டேன். நிச்சயமா நீங்க வரணும்"
"சாரி பூங்குழலி. நான் இன்னும் ரெண்டு நாள்ல லண்டன் போறேன்"
"ஆனா என் பர்த் டேக்கு இன்னும் 15 டேஸ் இருக்கே..."
"நான் திரும்பி வர ஒரு மாசத்துக்கு மேல ஆயிடும். லண்டன்ல புது ப்ரான்ச் ஓபன் பண்ண போறோம் அதுக்காக தான் நான் போறேன். நிச்சயம் டைம் ஆகும்"
"சரி, ஆனா நீங்க எனக்கு கால் பண்ணனும். அப்போ தான் நீங்க என்னை மறக்கலன்னு நான் நினைச்சுக்குவேன். டீல்?"
"டீல்..." புன்னகைத்தான் மலரவன்.
யாரோ தன் தோளை தொடுவதை உணர்ந்த மலரவன், கண் விழித்தான். பூங்குழலி மருத்துவமனையின் படுக்கையில் படுத்திருப்பதையும், தான் அவளுக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பதையும் கண்டான். அவனை எழுப்பியவர், மணிமாறனின் கார் ஓட்டுநர்.
"அம்மா இதை உங்ககிட்ட கொடுக்க சொன்னாங்க"
அவனுக்கு இரவு உணவை கொடுத்து அனுப்பி இருந்தார் மின்னல்கொடி. அதை பெற்றுக் கொண்டவுடன், கார் ஓட்டுநர் அங்கிருந்து சென்றார். அதை கீழே வைத்து விட்டு பூங்குழலியை வருத்தத்துடன் ஏறிட்டான். யூகிக்க முடியாத புதிர் இந்த வாழ்க்கை. ஒரே நாளில் அனைத்தும் தலைகீழாய் மாறிவிடுகிறது...! பழைய படி கலகலப்பாய் மாற முடியுமா பூங்குழலியால்? அது மகிழனின் கையில் தான் இருக்கிறது என்று எண்ணினான் மலரவன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top