41 எனக்குத் தெரியும்

 41 எனக்கு தெரியும்

"ஏன்னா, என்னோட வாழ்க்கையில நீ ஒரு சாய்ஸ் கிடையாது. மாத்தவே முடியாத ஒரே ஆப்ஷன்" என்றான் அவளை திகைக்க செய்து.

அவன் திடீரென ஏன் சம்பந்தமில்லாமல் ட்ராக் மாறுகிறான் என்று அவளுக்கு புரியவில்லை.

"என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி சிவகாமி ஆண்டி உன்கிட்ட சொன்னப்போ, அவங்களுக்கு நீ என்ன பதில் சொன்னேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா? *நான் சாய்ஸ் இல்ல. யாருக்கும் நான் சாய்ஸா இருக்க விரும்பலன்னு* சொன்ன. அது உனக்கு ஞாபகம் இருக்கா?"

ஆம், அவள் அப்படி கூறினாள் தான். இருந்தாலும் அவன் கேட்டதற்கு பதில் சொல்ல வேண்டியது அவசியம் என்று அவள் நினைக்கவில்லை. அவன் அதை எதற்காக கூறினான் என்று தான் தெரிந்து கொள்ள வேண்டும் அவளுக்கு.

"அன்னைக்கு நீ கேட்ட கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியல. ஆனா சொல்லணும்னு நினைச்சேன்...! அன்னைக்கு சூழ்நிலை எனக்கு சாதகமா இல்ல. இப்போ சொல்றேன் கேளு. என்னோட கல்யாணத்தைப் பொறுத்த வரைக்கும், எனக்கு இருந்தது ஒரே ஒரு ஆப்ஷன் தான். கிட்டதட்ட உனக்கு வேற ஒருத்தர் கூட கல்யாணம் நிச்சயமான பிறகு கூட, நான் என்னோட மனசை மாத்திக்கல. அது ஏன்னு உனக்கு தெரியுமா?"

அந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை பூங்குழலி

"இந்த விஷயத்துல நான் சாய்சே இருக்கக் கூடாதுன்னு நினைச்சேன்... நான் அதுல ரொம்ப ஸ்ட்ராங்கா ஃபிக்ஸ் ஆயிட்டேன்"

"அப்படின்னா என்ன அர்த்தம்?" இப்பொழுது அவள் கேள்வி எழுப்பினாள்.

"அப்படின்னா, என் மனசுல இருந்த அந்த பொண்ண என்னால ரீப்ளேஸ் பண்ண முடியும்னு நான் நம்பல" உண்மையை கூறினான் அவன்.

அவளை நோக்கி ஒரு அடியெடுத்து வைத்த அவன்,

"பூங்குழலி, நான் நம்ம ஹனிமூன் பத்தி உன்னை நான் கிண்டல் தான் பண்ணேன். நம்ம கேஷுவலா பேச ஆரம்பிச்சா, நமக்குள்ள இருக்கிற இடைவெளி குறையும்னு நெனச்சேன்... அதனால தான்..."

"அதனால?"

"என் கூட லண்டன் வர உனக்கு பயமா இருக்கா?"

"மலர், நம்ம ரெண்டு பேரும் ஒரே ரூம்ல தங்கி இருக்கோம்... ஒரே பெட்ல தூங்குறோம்... என்னை பொறுத்த வரைக்கும், இந்த ரூமுக்கும், லண்டனுக்கும் எந்த வித்தியாசமும் இல்ல. ரெண்டுமே ஒன்னு தான். ஏன்னா, லண்டன்ல நமக்கு இருக்க போற அதே பிரைவசி, இந்த ரூம்லயும்  இருக்கு தானே?"

"அப்புறம் எதுக்காக நீ லண்டனுக்கு வர மாட்டேங்குற?"

"அப்படின்னு நான் சொன்னேனா? நான் லண்டனுக்கு வரேன்" என்றாள் திடமாய்.

மலரவனுக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பத்துடன் அவளை பார்த்துக் கொண்டு நின்றான். அனைவரின் முன்னிலையிலும் லண்டன் செல்லப் போவதில்லை என்று கூறிவிட்டு, இங்கு லண்டனுக்கு வருகிறேன் என்கிறாளே...! அவள் மனதில் என்ன தான் இருக்கிறது?

"அதைப்பத்தி நான் உங்க கிட்ட பேசணும்னு நினைச்சேன்" என்றாள்

"என்ன?"

அதே நேரம், அவள் கைபேசி ஒலித்தது. அதில் ஒளிர்ந்த பெயரை பார்த்து புன்னகைத்தாள் அவள். அந்த அழைப்பு மின்னல்கொடியிடம் இருந்து வந்தது.

"ஆன்ட்டி என்னை கூப்பிடுறாங்க. நான் இப்ப வரேன்" என்று அங்கிருந்து ஓடினாள்.

பெருமூச்சு விட்டான் மலரவன். அவளது வேலை ஆரம்பம் ஆகிவிட்டது போல் தெரிகிறது. அவளும் கீர்த்தியும் கூறியது போல், அவனது அம்மா தன் மருமகளை அழைக்க துவங்கி விட்டார். ஆனால் பூங்குழலியோ, லண்டன் வருகிறேன் என்கிறாள். அவனுக்கு ஒன்றும் புரியாததால், எரிச்சலாய் வந்தது.

மின்னல்கொடியின் அறைக்கு வந்த பூங்குழலி, அங்கு மணிமாறனுடனும் மகிழனுடனும் கீர்த்தி இருந்ததை கண்டாள். அவள் எதுவும் கூறுவதற்கு முன்பு,

"பூங்குழலி, நீங்க உங்க டிக்கெட்டை கேன்சல் பண்ண வேண்டாம். மலர் பிளான் பண்ண மாதிரி, நீ லண்டனுக்கு போ மா" என்றார் மணிமாறன்.

"ஆமாம் பூங்குழலி, நீ உன்னோட ப்ரோக்ராமை கேன்சல் பண்ண வேண்டாம்னு கீர்த்தி நினைக்கிறா" என்றார் மின்னல்கொடி புன்னகையுடன்.

பூங்குழலி கீர்த்தியை பார்க்க, அவள் ஆம் என தலை யசைத்தாள்.

"இல்ல ஆன்ட்டி, உங்களை இந்த நிலைமையில விட்டுட்டு நான் எப்படி போக முடியும்?" என்றாள் கீர்த்தியை பதற்றத்திற்கு உள்ளாக்கி.

"நாங்க தான் இங்க இருக்குமே மா. நாங்க மின்னலை பார்த்துக்கிறோம்" என்றார் மணிமாறன்.

"ஆமா, பூங்குழலி. நீ டிக்கெட்டை கேன்சல் பண்ண வேண்டாம். எவ்வளவு பெரிய ப்ரோக்ராம்காக நீ எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செஞ்சிருக்க... அந்த ப்ரோக்ராமில் நீயும் கலந்துக்கிட்டா தானே நல்லா இருக்கும்? இந்த மாதிரி ஒரு நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டுடாத. நீ ஆரம்பிச்சதை நீயே முடி" என்றாள் கீர்த்தி மிகவும் நல்லவளை போல.

"கீர்த்தி, நீ ரொம்ப வசதியா வளர்ந்த பொண்ணு. உனக்கு ஒரு பேஷண்டை எப்படி கவனிச்சுக்கணும்னு எப்படி தெரியும்? அதை நீ தனியா எப்படி செய்ய முடியும்?"

"நான் பார்த்துகிறேன் பூங்குழலி. நான் ஆன்ட்டியை கவனிச்சிக்குவேன்"

"ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நான் உன் கூட இருக்கணும்னு தானே நீ விருப்பப்பட்ட? திடீர்னு உனக்கு என்ன ஆச்சு?" என்றாள் வேண்டுமென்றே.

"ஆமாம், ஆனா விஷயத்தை அனலைஸ் பண்ணி பார்க்கும் போது, எனக்கு இப்படி செய்யறது தான் சரின்னு தோணுது"

"ஓ..."

"எது சரின்னு எனக்கு புரிஞ்சிடுச்சு"

"ஓஹோ..."

"ப்ளீஸ் நீ லண்டனுக்கு போ,  பூங்குழலி"

மின்னல்கொடியை தயக்கத்துடன் ஏறிட்டாள் பூங்குழலி.

"கீர்த்தி உங்களை நல்லா பாத்துக்குவான்னு நீங்க நினைக்கிறீங்களா ஆன்ட்டி?" என்றாள் பூங்குழலி.

"அவ பாத்துக்குறேன்னு தான் சொல்றா"

"ஆனா, என்னால இதை ஏத்துக்க முடியல"

" உங்க வீட்டுக்காரரை பத்தி நெனச்சு பாரு பூங்குழலி... அப்போ நீ நிச்சயம் ஏத்துக்குவ" என்று கூறி அனைவரையும் திகைக்க செய்தாள் கீர்த்தி.

இந்த பெண்ணுக்கு திடீரென்று என்னவானது? போதி மரத்தடியில் அமர்ந்திருந்தாளா? திடீரென்று ஞானம் பெற்றவளை போல் பேசுகிறாளே...! இவள் பேசுவதை பார்த்தால், கீர்த்தியை போலவே இல்லையே...!

"மலர் என்ன சொல்ல போறாருன்னு எனக்கு தெரியல. ஏன்னா, அவருடைய டிக்கெட்டையும் சேர்த்து கேன்சல் பண்றதை பத்தி அவர் யோசிச்சிகிட்டு இருக்காரு" என்றாள் சோகமாய்.

"அய்யய்யோ... எதுக்கு??" என்றார் மணிமாறன் அதிர்ச்சியுடன்.

"அவருக்கு ஆன்ட்டி மேல எவ்வளவு பிரியம்னு உங்களுக்கு தெரியாதா அங்கிள்?" என்றாள் பூங்குழலி.

"அவன்கிட்ட நான் பேசுறேன்... இந்த ப்ரோக்ராம்காக அவன் கிட்டத்தட்ட ரெண்டு மாசம் உழைச்சிருக்கான். அவன் இந்த ட்ரிப்பை கேன்சல் பண்றதை நான் ஒத்துக்க முடியாது. நீயும் அவனும் லண்டன் போறீங்க. அவ்வளவு தான் சொல்லிட்டேன்" என்றார் மணிமாறன் கட்டளையிடும் தொணியில்.

சரி என்று மெல்ல தலையசைத்தாள் பூங்குழலி.

"பூங்குழலி, மலர் டிக்கெட்டை கேன்சல் பண்றதுக்கு முன்னாடி, அவன்கிட்ட போய் சொல்லு" என்றார் மின்னல்கொடி

"சரிங்க ஆன்ட்டி" சந்தோஷமாய்  வெளியே வந்த பூங்குழலி, கைகளை கட்டிக்கொண்டு சுவற்றில் சாய்ந்தபடி நின்றிருந்த மலரவனை கண்டு சில நொடி திகைத்தாள். அவன் அவளை சந்தேக கண்ணோடு பார்த்தான். அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை அவன் கேட்டு விட்டான் என்பதை புரிந்து கொண்ட பூங்குழலி, சாதாரணமாய் அவனை கடந்து சென்றாள். சிரித்தபடி தங்கள் அறையை நோக்கி நடந்த பூங்குழலியை, குழப்பத்துடன் பின் தொடர்ந்தான் மலரவன். தங்கள் அறைக்கு வந்தவுடன்,

"இதெல்லாம் என்ன பூங்குழலி?"

"நம்ம பிளான் பண்ண படி லண்டனுக்கு போறோம்" என்றாள்.

"அது எனக்கு தெரியுது... எங்க கற்பனைக்கெல்லாம் எட்டாத ஏதோ ஒன்னு, இந்த விஷயத்துக்கு பின்னாடி இருக்கிறதா ஏன் எனக்கு தோணுது?"

"என்ன தோணுது?"

"கீர்த்தியோட திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, உன்னை வேணும்னே லண்டன் போக விடாம அவ தடுத்தா. ஆனா இப்போ, அவளே வலிய வந்து உன்னை வருந்தி வருந்தி லண்டனுக்கு போக சொல்றா. அவ விஷயத்தை அனலைஸ் பண்ணதால மட்டும் இது நடந்ததா எனக்கு தோணல. நிச்சயம் ஏதோ நடந்திருக்கு... அது உன்னால தான் நடந்திருக்குன்னு எனக்கு தெரியும்"

"என்னாலயா? நான் ரொம்ப அப்பாவி... என்னை நம்புங்க மலர்" என்று சிரித்தாள் பூங்குழலி.

"பூங்குழ.....லி..." என்றான் தன் பொறுமையை இழந்த மலரவன்.

"சரி சரி, நீங்க கோபப்பட மாட்டேன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணுங்க"

"கோவமா? நான் எதுக்கு கோபப்பட போறேன்?"

"ப்ராமிஸ் பண்ணுங்கன்னு சொன்னேன்"

"சரி ப்ராமிஸ்... கோபப்பட மாட்டேன்"

"ஆன்ட்டியை கீழ விழ வெச்சது கீர்த்தி தான்"

"என்ன்னனது?"

"அவ வேணும்னு தான் அதை செஞ்சா"

"நீ அதை பார்த்தியா?"

"ஆமாம். அவ தேங்காய் எண்ணெயை கீழே கொட்டினா. ஆன்ட்டி பூஜை ரூம்ல இருந்து வெளியே வந்து அதுல காலை வச்சு வழுக்கி விழுந்துட்டாங்க"

"நீ என் கூட லண்டனுக்கு வரக்கூடாதுன்னு, அவ வேணுமின்னு தான் அதை செஞ்சிருப்பா"

"ம்ம்ம்"

"இதைப் பத்தி நீ ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல?"

"அவ மனசுல உண்மையிலேயே என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க நினைச்சேன். நானும் அவளும் சேர்ந்து ஆன்ட்டியை பார்த்துக்குவோம்னு அவ சொல்லும் போது தான், அவ மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரிஞ்சது"

"திடீர்னு அவ எப்படி உன்னை லண்டனுக்கு போக சொல்லி சொன்னா?"

"நான் அவளை மிரட்டினேன்" என்றாள் சாதாரணமாய்.

"என்ன்னனது?" என்றான் நம்ப முடியாமல்.

அவள் ஆம் என்று தலையசைத்தாள்

"நீ.... அவளை.... மிரட்டினியா...?" நிஜமாவா சொல்ற?"

"பொம்பளைங்களோட பவரை குறைச்சி மதிப்பிடாதீங்க..."

"ஓ..."

"பிரச்சனையைப் பார்த்து பயந்து ஓடுறதை நிறுத்திட்டு, அதை எதிர்த்து நிக்கணும்னு கல்யாணத்துக்கு முன்னாடி ஒருத்தர் சொன்னாரு. பொம்பளைங்களோட பவரைப் பத்தி எனக்கு லெக்சர் எல்லாம் கொடுத்தாரு. இப்போ நான் அதைத் தான் செஞ்சுக்கிட்டு இருக்கேன்..." என்று தன் தோள்களை அனாயாசயமாய் குளிக்கினாள்.

"நீ என்ன செஞ்ச?"

தான் படம் எடுத்த வீடியோவை அவனிடம் காட்டினாள் பூங்குழலி. மலரவனுக்கு கோபம் கொப்பளித்தது.

"அவளை இந்த வீட்டை விட்டு துரத்தி அடிச்சா தான் சரிப்பட்டு வரும்" என்றான் பல்லை கடித்துக் கொண்டு கோபமாய்.

"ஆஃப் கோர்ஸ், இந்த மாதிரி, விஷமே வடிவான ஒரு ஆள் நம்ம வீட்ல இருக்க கூடாது தான்... அவளை நிச்சயம் வீட்டை விட்டு வெளியே அனுப்பணும் தான். ஆனா இப்போ இல்ல. ஆன்ட்டியை கீழ விழ வச்சதுக்காக, அவ தான் அவங்களை பார்த்துக்கணும். அது தான் அவளுக்கு சரியான தண்டனை"

"ஆனா நம்ம லண்டனுக்கு போறோம். நம்ம போனதுக்கு பிறகு, அவ ரொம்ப ஃப்ரீயா ஆயிடுவாளே..."

"அது எப்படி நான் அவளை ஃப்ரீயா ஆக விட்டுடுவேன்?"

"ஏன் என்ன பண்ண போற?"

"அத்தையை வர சொல்லப் போறேன்"

அவளை வியப்புடன் பார்த்தான் மலரவன்.

"அவங்க கீர்த்தியை பாத்துக்குவாங்க"

வாய்விட்டு சிரித்தான் மலரவன்.

"அவளை இங்கிருந்து ஓட வைக்க பிளான் பண்ணிக்கிட்டு இருக்கியா?"

"அவளாவே அப்படி செஞ்சிட்டா அவளுக்கு ரொம்ப நல்லது" என்றாள் முகத்தை குழந்தை போல் வைத்துக்கொண்டு.

"உன்கிட்ட நான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் போல இருக்கு. நீ ரொம்ப டேஞ்சரான பொண்ணா இருக்க" என்று சிரித்தான் மலரவன்.

"வளவளன்னு பேசுறதை நிறுத்திட்டு பேக்கிங் வேலைகளை பாருங்க" என்று கூறிவிட்டு அவள் அங்கிருந்து செல்ல முயன்ற போது, அவள் வழியை மறித்து கதவை சாத்தினான். அவனை கேள்விக்குறியுடன் பார்த்தாள் பூங்குழலி.

"நீ சொன்ன விஷயம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துது"
 
"எந்த விஷயம்?"

"உன்னைப் பொறுத்த வரைக்கும் இந்த ரூமும், லண்டனும் ஒன்னு தான்னு சொன்னியே...!"

"அதுக்கு?" என்று தன் கைகளை கட்டிக் கொண்டாள்.

அவனும் தன் கைகளை கட்டிக் கொண்டு,

"லண்டன் போய் சேர்ர வரைக்கும் நம்ம எதுக்காக காத்திருக்கணும்? இங்கேயே நமக்கு வேண்டிய பிரைவசி இருக்கு... நம்ம ஃபர்ஸ்ட் நைட்டை இங்கேயே வச்சுக்கிட்டா என்ன?" என்றான் கிண்டலாய்.

"வச்சுக்கலாம்" என்றாள் அவனது கண்களை உறுதியுடன் நோக்கி.

கட்டப்பட்ட அவனது கைகள், தானே கீழே இறங்கின. அவனது முகத்தில் அவநம்பிக்கை பரவி கிடந்தது.

"நீ... என்ன்னன சொன்ன்னன?" என்றான்.

"இங்கேயே வச்சுக்கலாம்னு சொன்னேன்"

அவன் முகம், ஒரு கணம் ஸ்தம்பித்து இயல்பு நிலைக்கு திரும்பியது.

"நீ விளையாடுற தானே?"

ஒன்றும் கூறாமல் அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள் பூங்குழலி. தன் நடுவிரலால் நெற்றியை தேய்த்தான் மலரவன்.

"ஏன் அமைதியாயிட்டீங்க மலர்?"

அவன் ஒன்றும் கூறவில்லை. அவனுக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை. அவள் எந்த அர்த்தத்தில் பேசுகிறாள் என்பதை புரிந்துகொள்ள திணறினான் அவன். அவள் விளையாடுகிறாளா அல்லது சீரியஸாய் பேசுகிறாளா என்று அவனுக்கு தெரியவில்லை.

"உங்க பிரச்சனை என்ன மலர்? சும்மா என்னை டீஸ் பண்ணிக்கிட்டே இருந்தீங்க... ஆனா இப்போ வாயடைச்சு போய்ட்டீங்க... நீங்க இதை எதிர்பார்க்கலையா?" என்றாள் அழகான புன்னகையோடு.

"தயவுசெய்து என்கிட்ட இப்படி விளையாடுறதை நிறுத்து பூங்குழலி" என்றான் உள்ளடங்கிய குரலில்.

"நான் ஏன் உங்ககிட்ட விளையாட கூடாது? நீங்க மட்டும் என்கிட்ட உரிமையோட விளையாடுறிங்க...!"

"நீ பேசுறதை நான் சீரியஸா எடுத்துக்குவேன்" என்றான் எச்சரிக்கும் தொணியில்.

"அப்படின்னா நீங்க அதை சீரியஸா எடுத்துக்கலையா?" சாதாரணமாய் கேட்டதில், அவன் ஏகத்துக்கும் சில்லிட்டு போனான்.

அவள் அங்கிருந்து செல்ல முயல, அவளது கரத்தை பற்றினான். அவள் பின்னால் திரும்பாமல் அப்படியே நிற்க, அவளை தன்னை நோக்கி இழுத்த அவன்.

"ஐ அம் டேம் சீரியஸ்" என்றான்.

"எனக்கு தெரியும்" என்றாள் யோசிக்காமல்.

"உனக்கு என்ன தெரியும்?"

அவன் நினைத்தும் பார்க்காதபடி, அவனது நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு, அவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டு, அவன் நெஞ்சில் சாய்ந்தாள் பூங்குழலி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top