நீண்ட தூரம்
சூரியன் சுடெரிக்க , பாலை நிலத்தில் நடந்தார்ப் போல் இருந்தது அந்த பனிரெண்டு மணி உச்சி வெயில் . அரசாங்கம் அறிவித்த, நூறு நாள் வேலைத் திட்டம்படி, நீர்நிலைப் பகுதிகளை தூர்வாரிக் கொண்டு இருந்தார்கள், அங்கம்மாளும் அவளின் மகள் கருவாச்சியும்.
"கருவாச்சி, உன் வீட்டுக் காரர் குடிச்சுட்டு தெருவில் கிடக்கான்டி " என்று காமட்சிக் கூற, இருவரும் காமாட்சிக் கூறிய தெருவை நோக்கி ஓடினார்கள்.
"இந்தக் குடிகாரமட்டைக்கு வாக்குப்பட்டு , காலம் பூரா என் பொண்ணுக் கஷ்டப் பட்டுட்டுத் தான் இருக்கா" என்று அந்தக் குட்சிக் கைகளை வைத்து அவளின் தலையில் அடித்துக் கொண்டே ஓடினாள், அங்கம்மாள்.
அத்தெருவில் கொரோனா விழிப்புணர்வுப் பற்றி தம்பட்டம் அடிக்க, அக்கொடிய நோய் பரவுவதையும் அதன் தாக்கத்தையும் அறிந்த தாய், வேகமாய் அந்த ஓட்டு வீட்டுக்குள் விரைந்துப் புதயலைத் தேடுவதைப் போல் கைபேசியை தேடி எடுத்தாள்.
"ராசா ... எப்படியாச்சும் ஊருக்கு வந்துருய்யா ..கவன குறையா இருந்துட்டா... உசுரு போயிடும்னு சொல்றாங்க... பயமா இருக்கு ராசா...நீ எப்படியாச்சும் வந்துருப்பா..." என்று வெளியூரில் கட்டிட வேலைப் பார்த்துக் கொண்டு இருக்கும் மகன் வசந்த்யிடம் மன்றாடினாள், அங்கம்மாள்.
அவன் வெளியூரில் இருக்கும் மருத்துவனையில் நின்றுக் கொண்டு,
"நீ கவலை படாத ஆத்தா...இங்க எந்தப் பிரச்சனையும் இல்ல இப்போ வர" என்று அங்கம்மாளைச் சமாதானம் படுத்தினான்.
"இல்லப்பா... சோலி எல்லாம் வேண்டாய்யா...என் உசுரு இருக்க வர நான் உன்ன பார்த்துப்பேன்னய்யா " என்று அவளின் நெஞ்சில் அடித்துக் கொண்டாள்.
"ஆத்தா, இப்போ வர முடியாது. ப்ளைட்டு எல்லாமே நிருத்திடாங்க " என்று சூழ்நிலையைப் புரிய வைக்கத் தடுமாறினான், வசந்த்.
"என்னய்யா சொல்ற , அப்போ இப்போ வர முடியாத ?" என்று அழுதவாரு அவள் கேட்க, "வார்டுக்கு வந்துட்டு ஃபோன் பேசாதீங்க " என்று அங்கு இருக்கும் செவிலியர் கூற, "ஆத்தா , உடம்ப நல்லாப் பார்த்துக்கோ , தங்கட்சியையும் கேட்டாத சொல்லு , தங்கட்சி அக்கவுண்ட்லக் காசுப் போற்றுக்கேன். என்ன பாதுகாப்பா பார்த்துகிடத் தூரக் கூட்டிட்டுப் போறாங்க, அங்க டவர் கிடைக்காது , நான் வைக்கிறேன்... நீ கவலைப் படாம இரு " என்று கண்களில் கண்ணீருடன் உண்மையைச் சொல்லாமல், பேசி முடித்தான்.
"கஷ்டம் எல்லாம் தீரும்னு நினச்சு, இப்படி ஊருக்கு அனுப்பி, தினமும் கஷ்ட பட வேண்டியாத இருக்கே " என்று அண்ணன் அழைக்க மாட்டானா என அவளின் கைபேசியையேப் பார்த்துக் கொண்டு இருந்தாள், கருவாச்சி.
வசந்த் இடம் இருந்து எந்த தகவலும் இல்லாமல் போக , நம்பிக்கை இழந்து வேதனை ஆட்கொள்ள (கொல்ல) சோர்ந்துப் போய் இருந்தது குடுபம்மே.
ஒரு வாரம் ஓடிய நிலையில் பெற்ற வயிறு இருப்புக் கொள்ளாமல், கண்களில் ஈரம் வற்றி கதற ஆரம்பித்தது.
"கடவுளே உனக்கு கண் இல்லையா?... என் பிள்ள எண்ணானானு தெரியலையே... பெத்த வயிர துடிக்க விட்டு, இப்படி அணு அணுவா சாவடிகுரத்துக்கு ஒரேடியா கொரோன வந்தாச்சும் கொன்றேன்..." என்று அவளின் வயிற்றிலையே அடித்துக் கொண்டு புரண்டாள், அங்கம்மாள்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top