மகாத்மாவின் மகாத்மா ஸ்ரீமத் ராஜ்சந்திரா.
ஜாலியான் வாலாபாக் படுகொலை சுதந்திர இந்தியா சிந்தனையில் கூடியிருந்தவர்களை ஜெனரல் டயர் குருவியை சுடுவது போல சுட்டுக்கொன்ற ரத்தக்கறை படிந்த வரலாறுகுழந்தைகளும் பெண்களும் பெரியவர்களும் குண்டடிபட்டும் கிணற்றில் விழுந்தும் இறந்த கொடுர சம்பவம் அது.
மொத்த இந்தியாவே கொதித்துப்போய் கண்ணில்படும் வெள்ளையர்களை எல்லாம் கண்டம் துண்டமாக வெட்டிக்கொல்ல வேண்டும் என்ற ஆவேசத்துடன் காந்தியின் ஒரு கண் அசைவிற்காக காத்திருந்த போது, 'ரத்தத்தை ரத்தத்தால் துடைப்பது தர்மம் இல்லை அது அஹிம்சையும் இல்லை' என்று சொல்லி அனைவரையும் அமைதிப்படுத்தினார்.
அப்போதுதான் இவர் சாதாரண ஆத்மா இல்லை மகாத்மா என்ற அனைவரும் உணர்ந்தனர் ஆனால் அப்படி உணரப்பட்ட மகாத்மா போற்றிய ஒரு மகாத்மா ஒருவர் உண்டு, 33 வயதில் இறந்து போன அந்த மகாத்மாவின் மகாத்மாவின் பெயர் ஸ்ரீமத் ராஜ்சந்திரா.
அனைவராலும் கவிராய்சந்த் என்று அழைக்கப்பட்டவர். நகைவணிகர். அரிய கற்களை மதிப்பிடுவதில் பெரும் நிபுணர். அசாதாரணமான ஆன்மீக ஆற்றல் கொண்டவர், ஒரு சதாவதானி.
சதாவதானி என்றால் ஒரே நேரத்தில் கணக்கு போடுதல் புத்தகம் படித்தல் செஸ் விளையாடுதல் போன்ற நுாறு வெவ்வேறு விதமான வேலைகளை கச்சிதமாக செய்யும் வல்லமை கொண்டவர்.அபார ஞாபகசக்திக்கு சொந்தக்காரர்.
வழக்கறிஞர் காந்தி அவரை கடுமையாக பரிசோதனை செய்கிறார். ராய்சந்த் கேள்விப்பட்டே இருக்காத பல்வேறு கவிதைகளையும் சட்டவாக்கியங்களையும் காந்தி சொல்லச் சொல்ல ராய்சந்த் அவற்றை அப்படியே திருப்பிச் சொல்கிறார்.
அவர்களின் உரையாடல் மெல்ல ஆன்மீகத்தின் பக்கம் திரும்பியது. ராய்சந்த் சமண மதத்தின் அடிப்படைக் கருத்துக்களில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். அவரிடமிருந்து காந்தி தன் முதல் ஞானத்திறவுகோலைப் பெற்றுக்கொண்டார்.
ராய்சந்திராவின் பேச்சு என்னை வசீகரித்தது. ராய்சந்திரா அளவுக்கு எவருமே என்னை கவர்ந்ததில்லை. அவரது சொற்கள் நேராக எனக்குள் புகுந்தன'என்று கடைசிவரை தொடர்ந்து வந்த காந்தியின் கருத்துக்கள் ராய்சந்திரா உருவாக்கியவையே. அகிம்சை என்பது சத்தியம், பிரம்மசரியம் இரண்டில் இருந்தும் பிரிக்கமுடியாதது. ஆசைகளை வெல்லாமல் அகிம்சையை அடைய முடியாது. காரணம் எல்லா ஹிம்சைகளும் ஆசைகளின் விளைவுகளே.
ஸ்ரீமத் ராஜ் சந்திரா. காந்திக்கு எழுதிய ஆன்மீக விவாதக் கடிதங்கள் புகழ்பெற்றவை. இவரே காந்திக்கு ஆன்மிக குருவாகவும் இருந்துள்ளார். காந்தி இவருக்கு சுமார் 200 கடிதங்களை எழுதியுள்ளார். இக்கடிதங்களுக்கு வரும் பதில்களைப் பொருத்தே காந்தியின் வாழ்க்கை அமைந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் தரம்பூரில் அமைந்துள்ள ராஜ்சந்திரா ஆன்மிக அறக்கட்டளை அமைப்பினர் உலகின் பல்வேறு பகுதிகளிலும் காந்திக்கும் சுவாமி ராஜ்சந்திராவுக்கும் இடையேயான உறவை விவரிக்கும் வகையிலான நாடகங்களை நடத்தி வருகின்றனர்.
பல்வேறு மொழிகளில் பல்வேறு நாடுகளில் பலமுறை மேடை கண்டு பலவிதமான உயர்விருதுகளை வாங்கிக்குவித்த இந்த யுகபுருஷ் நாடகம் தமிழில் முதன் முறையாக 'மகாத்மாவின் மகாத்மா' என்ற தலைப்பில் கடந்த வாரம் சென்னையில் மேடையேறியது.
மிக மிக அருமையான நாடகம் உள்ளூர் கலைஞர்களை வைத்து காட்சிகளை சுவராசியமாக்கிய விதத்தில் இயக்குனர் பாம்பே ஞானம் பலமாக பாராட்டப்படவேண்டியவர்.உண்மையை சொல்ப்போனால் இது ஒரு டாகுமெண்டரி நாடகம் ஆனால் அந்தச்சுவடே தெரியாமல் இரண்டு மணி நேரமும் நாடகம் மிக சுவராசியமாக சென்றது.
கவிஸ்ரீயாக வந்த நாடக நாயகன் ஜெ.சீனிவாசன் ஒரு அருமையான தேர்வு நல்ல நடிப்பு அதே போல காந்தியாக வந்த ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதிக்கு இதுதான் முதல் நாடகம் என்றே சொல்லமுடியாத நடிப்பு இவர்களுக்கு இணையாக இளம் காந்தியாக வந்த முனிஷ் மற்றும் பல கலைஞர்களும் பாராட்டப்பட வேண்டியவர்களே. 64 கேரக்டர்கள் ஆனால் 14 கலைஞர்களை வைத்தே அருமையாக சமாளித்துள்ளனர்.மேடை அமைப்பும் லைட்டிங்கும் அருமை.நாடக மேடையில் கப்பல் வருவது, கண்ணாடி வழியாக பேசுவது, சிறை அமைப்பு, சுழலும் மேடை என்ற நாடகத்தில் பல வியக்கவைக்கும் பிரம்மாண்டங்களும் இருக்கிறது.
ஆனால் இது அத்தனையையும் மீறி நாடகத்தில் ஒரு உயிரோட்டம் இருக்கிறது காந்தியின் ஆன்மீக பக்கம் அலசப்பட்டு இருக்கிறது வசனங்களில் எதார்த்தம் இருக்கிறது உண்மையின் தத்துவம் இருக்கிறது காந்தியை மகாத்மாவாக்கியவரின் கதை அருமையாக சொல்லப்பட்டு இருக்கிறது அவரைப்பற்றிய ஒரு அறிமுகம் கிடைத்திருக்கிறது எளிமையும் இனிமையும் உண்மையும் சத்தியமும் நேர்மையும் எக்காலத்திலும் நிற்கும் நிலைபெறும் என்ற உறுதியை விதைத்திருக்கிறது.
உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றுள்ள இந்த நாடகத்தை பார்க்கும் வாய்ப்பை வழங்கிய தமிழ்மொழிகூடம் காய்த்ரி ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதிக்கு இந்த தருணத்தில் நன்றியை கூறிக்கொள்கிறேன் .
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top