நீரின்றி அமையப்போகிறதா சென்னை..!

வடகிழக்கு பருவ மழையும் பொய்த்துப் போய், ஆந்திரா கண்டேறு அணை தண்ணீரும் கைவிட்ட சூழ் நிலையில், சென்னையில் கூடும் மேகங்களும் கண்ணாமூச்சி காட்டிவந்தால் சென்னை மக்கள் குடிநீருக்கு என்ன செய்யப்போகிறார்கள்.

கிடைக்கும் தண்ணீரை வீணாக்கி கடலில் கலக்கவிடுவதில் கைதேர்ந்தவர்களான நம் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் எப்போது மழை நீரை முழுமையாக சேகரித்து பயன்படுத்துப் போகின்றனர்.

அரசியல் பேசி சீரியல் குறித்து விவாதித்து வெட்டியாக பொழுதை கழிப்பவர்களுக்கு கூட விக்கினால் குடிக்க தண்ணீர் வேண்டுமே இதை எண்ணி விவாதங்களும் பேச்சுக்களும் நீர் மேலாண்மை குறித்தல்லவா அமைய வேண்டும்.

அடுத்துவரும் தலைமுறை தண்ணீருக்கு என்ன செய்யப்போகிறது என்ற கவலை நீண்ட நாட்களாகவே உண்டு இப்போது கொஞ்ச நாட்களாக இந்த தலைமுறையே தண்ணீருக்கு என்ன செய்யப்போகிறது என்ற கவலை ஏற்ப்பட்டுவிட்டது.  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top