இரத்தவெறி பிடித்த மனித மிருகத்திடம் சிக்கியதொரு கூட்டம் வீரர்களின் உறுப்புகள் தெறித்து சிதறுகின்றன. பதுங்கு குழிகளெங்கும்
இரத்தஆறுகள் ஓடுகின்றன எதிர்படும் உயிர்களெல்லாம்
மரணபயத்தில் அலறுகின்றன.
அதோ அங்கே உடல்கள் தரம் பிரிக்கப்பட்டு தலைகள் கொய்யப்படுகின்றன தேர்ந்தெடுக்கப்பட்ட பிணங்கள் நிர்வாணமாகி காமப்பசிக்கு உணவாகின்றன.
சுமையான சதைப்பிண்டங்கள் குப்பையென வீசப்படுகின்றன
அதோ அங்கே ஒருவன் உயிருடன் உள்ளான் போகிற போக்கில் பொழுதுபோக்காக கத்தியால் கழுத்து துண்டிக்கப்படுகிறது.
தொடர்கிறது வேட்டை விடிய விடிய இரத்தபலி குவிகிறது சடலங்கள்
அழகான காட்சிகள் நன்றாக வேடிக்கை பார்த்தோம் இரவு உணவை முடித்துவிட்டு நிம்மதியாக உறங்களாம் அந்த வெறிபிடித்த மிருகமோ
புத்தனை பிரார்த்தனை செய்கிறது. தன் பாவங்களை போக்க!
நாமோ மெளனமாக வேடிக்கை பார்க்கிறோம் மெளனம் கலைவீரோ தோழர்களே...!
உடலுக்கு தான் சிறகுகள் தேவை மனதிற்கு தேவையில்லை. இப்போதே பறக்க ஆரம்பித்துவிடு...!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top