முதல் காதல்

அமைதியான மாலை நேரம், சில்லென வீசிய காற்று, காற்றில் அசைந்தாடிய அவளின் மென்மையான கூந்தல். இவை அனைத்தும் அம்மாலை நேரத்திற்குரிய மயக்கத்தை மேலும் தூண்டியது. மின்னும் அவளின் மீன் கண்களை கண்டதும் அவன் மூச்சிக் காற்று நின்றது. இதயத்தில் ஏனோ அறியாத ஒரு துடிப்பு.

நேரம் கடந்தது அறியாமல் இருவரும், ஒருவரை ஒருவர் நோக்கினார்கள். வெண்ணிலவு அன்று முழுமதியாய் காட்சியளிக்க, காற்றில் பூக்களின் மனம் வீச, அவள் அருகில் அமர்ந்தான் அவன். அவளும் அவனருகில் நெருங்க, அவன் பார்வை அவளின் இதழின் மேல் பாய்ந்தது. இதழோடு இதழ் இணைய சிறிதே இடைவெளி இருந்த நொடியில்,

"பிரவீன்.... பிரவீன்.. எழுந்துரு.. உன் வகுப்புக்கு நேரம் ஆகிவிட்டது" என்ற அவன் தாயின் குரல் கேட்டது.

மறுநொடி கடிகாரத்தின் மணி ஒலித்தது. தூக்கம் கலைந்து எழுந்ததும் தான் அவனுக்கு தெரிந்தது அது கனவு என்று.

'என்ன ஒரு அருமையான கனவு. அட! இப்படியா முடிவது? அம்மாவுக்கு இதே வேலையாய் ஆகிவிட்டது' என்று சலித்துக்கொண்டே குளிக்க சென்றான்.

அன்று முழுதும் அவனால் அக்கண்களையும், இதழையும் மறக்க இயலவில்லை. அன்றிலிருந்து அவன் அவள் நினைவிலே இருந்தான். அவளை தன் மனைவியாகவே கனவுக் கண்டான். ஆனால் ஏதோ ஓர் குரல் அவனுள் 'அவள் உனக்கு தெரிந்தவள். உனக்கு நெருக்கமானவள்' என்று கூறியது.

யார் என்று பல முறை சிந்தித்தும் யாரென்று அவனால் முடிவு செய்ய இயலவில்லை. அவளைக் காணும் நாள் எந்நாளோ என்று ஏங்கி தவித்தான். அவன் ஏங்கி தவித்ததை காணமுடியாமல் தெய்வங்கள் அந்நாளை அவனுக்கு அளித்தன.

அன்று மாலை மழை கனமாக பொழிந்துக் கொண்டிருந்தது. பிரவீன் அவன் இசை பயிற்சியை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தான். மழை காரணமாக அங்கிருந்த சூப்பர்மார்க்கெட்டின் முன் ஒதுங்கினான்.

அவன் நின்றுக்கொண்டிருக்க, யாரோ அவன் அருகில் தவறி விழுவதைக் கண்ட அவன், அவரை தாங்கி பிடித்தான். கண்ணோடு கண் நோக்கினான். அதே மின்னும் மீன் கண்கள். கண்டதும் தன் கனவுலகத்திற்கு சென்றான் பிரவீன்.

கண்ணில் துலைந்த அவன், அவள் முகத்தை காண மறந்தான். தன் கனவு காதலியை கண்ட மகிழ்சியில் இவ்வளவு நேரம் அவளை பிடித்து இருந்ததை மறந்தான். மெல்லிய சிரிப்பின் ஒலி அவன் காதுகளில் ஒலித்தது.

பின் ஒரு பெண்ணின் குரல், "எவ்வளவு நேரம் இப்படியே இருப்பதாக யோசனை? கைகள் வலிகா வில்லையா?" என்றது.

மனதினுள் 'உன்னைத் தாங்க எப்படி வலிக்கும்? உனக்காகவே படைத்த கைகள் இது' என்றெண்ணினான். நிமிர்ந்து அவளை பார்த்ததும் திடுக்கிட்டான். அப்பெண் வேறு யாரும் இல்லை, தன் நெருங்கிய தோழி என்பதை உணர்ந்தான்.

அவனால் எதுவும் பேச இயலவில்லை. சிலைப் போல் நின்றான். மீண்டும் அவள் பேச்சு அவன் எண்ண ஓட்டங்களை உடைத்தன.

"என்ன ஆச்சு உனக்கு? ஏன் இப்படி நின்றுக் கொண்டு இருக்கிறாய்?" என்றாள்.

"ஒன்றுமில்லை" என்று பதிலளித்தான்.

"சரி என்னுடன் வா. என்னிடம் குடை இருக்கிறது. இருவரும் சேர்ந்து வீட்டிற்குச் செல்வோம்" என்றழைத்தாள்.

நடந்த தூரம் குறைவாக இருந்தாலும், அந்நொடிகள் யுகங்கள் போல் தோன்றின அவனுக்கு. அவளது நெருக்கம் இதுவரை அவனை பாதித்தது இல்லை. ஆனால் இன்று அவனுள் ஏதோ ஒரு நடுக்கம். ஏதோ ஒரு இனம் புரியா மாற்றம்,

அவன் வீடு வந்ததும், தான் விடை பெறுவதாக கூறிவிட்டு, அவன் கண்ணத்தில் தன் இதழ் பதித்து ஓடிவிட்டாள். அவளை கட்டி அணைக்கும் எண்ணத்தை கட்டுப்படுத்திக் கொண்டு உறங்க சென்றான். அவளை மறக்க நினைக்கும் போதெல்லாம் அவளின் நினைவுகள் அவனைக் கொன்றன.

அவர்கள் ஒன்றாய் படித்த கல்லூரி காலங்களை நினைத்துப் பார்த்தான். அவனை தன் தாயைப் போல் அவள் புரிந்துக் கொண்டாள். அவளைத் தவிர இவனை யாராலும் அந்த அளவு புரிந்துக் கொள்ள முடியவில்லை. அவளை இதுவரை அவன் தன் துணையாக எண்ணியது இல்லை.

ஆனால் அக்கனவு வந்ததிலிருந்து இவள் நினைவாகவே இருந்தான். அவளை நினைக்கும் போதெல்லாம் அவனின் காதல் அவள் மேல் பெருகியது. அவள் தன் துணையாக வந்தால் அவன் வாழ்வு நன்றாக இருக்கும் என்பத உணர்ந்தான்.

ஆனால் அவனுள் ஒரு அச்சம். தான் செய்வது தவறா சரியா என்று. தோழியை துணையாக என்னலாமா? அதனால் நட்பு முரிந்துவிடுமா என்றும் அஞ்சினான். விளைவுகள் எதுவாயினும் தன் ஆசையை அவளிடம் கூற முடிவு செய்தான்.

மீண்டும் அன்றிரவு அதே கனவு. இம்முறை கனவில் அவள் முகம் தெளிவாக இருந்தது. அழகிய வெள்ளை ஆடையில், தேவதை போல் இருந்தாள். கனவை ரசிக்கும் முன், மீண்டும் அவன் அலைப்பேசி மணி அடித்தது.

எடுத்து நோக்கினான். தன் தோழியிடம் இருந்து இரண்டு குறுஞ்செய்தி வந்திருந்தது.

"உறங்கிவிட்டாயா?" என்று அவள் கேட்டு இருந்தாள்.

"ஆம்! உன்னால்," என்று பதிலளித்தான்.

"நான் என்ன செய்தேன்?" என்றாள் அவள்.

"ஒன்றுமில்லை. விளையாடினேன்,: என்றான்.

"எல்லாம் சரி. உன்னுடைய அன்பானவளுக்கு என்ன பரிசு அளிக்க போகிறாய்?" என்று கேட்டு அனுப்பி இருந்தாள்.

"என்ன? எதுக்கு பரிசு?" என வினவினான்.

"மீண்டும் மறந்துவிட்டாய் என்று மட்டும் கூறாதே. உதய் வாங்குவாய் என்னிடம்," கோபித்துக் கொண்டாள் சிறுப்பிள்ளை தனமாய்.

அவன் சிரித்து விட்டு, "இல்லை நான் மறக்கவில்லை. இரவு 12 மணிக்கு உன் பரிசு உன்னிடம் இருக்கும்," என்றான்

"உன்னை என்ன செய்கிறேன் என்று பார்." என்றாள்

"என்ன செய்வாய்?" என்று கேட்டான்

"நான் உன்னை.... ஒன்றுமில்லை சென்று உறங்கு கும்பகர்ணனே!" என்று கூறிவிட்டு அவள் உறங்க சென்றாள்.

அவள் இதுவரை நள்ளிரவில் பேசியது இல்லை அவனிடம். திடீரென அவளின் மாற்றம் இவனுக்கு புதிதாய் இருந்தது. அவனை குழப்பவும் செய்தது.

'தன்னிடம் என்ன கூற வந்தாள்? சொல்ல ஆரமித்து விட்டு ஏன் நிறுத்தினாள்?' என்றெல்லாம் சிந்தித்தான்.

பிப்ரவரி 14, காதலர் தினத்தன்று அவளின் பிறந்தநாள். அன்று தன் காதலை தெரிவிக்க அவன் முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளையும் செய்தான். அவளுக்கான பரிசை தேடி வாங்கிவிட்டான்.

அப்போது மீண்டும் அவளிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி, "என் பிறந்தநாளன்று நான் கேட்கப் போவதை தருவாயா?" என்று

"நிச்சயம் தருவேன். கேள்" என்றான்

"என் வீட்டின் அருகில் உள்ள பூங்காவிற்கு இரவு 12 மணிக்கு வா. அப்போது சொல்கிறேன்" என்றாள்

அவளின் திடீர் மாற்றத்திற்கு காரணம் புரியாதவனாய் "சரி" என்று பதில் அனுப்பி வைத்தான்.

அவள் கூறியவாறு இரவு பூங்காவிற்கு சென்றான். பூங்காவில் அவளுக்காக காத்திருந்த நேரத்தில் அவனுக்கு எல்லையில்லா ஆனந்தம். அங்கும் இங்கும் பயத்தில் நடந்துக் கொண்டிருந்தான்.

அவள் அப்போது வந்தாள். கனவில் வந்த அதே ஆடையை அணிந்து இருந்தாள். கனவை விட நேரில் அவள் மிகவும் அழகாய் இருந்தாள். தன் காதலியாய் பார்ப்பதாலோ என்னவோ அவனுக்கு அவள் இம்முறை வித்தியாசமாக தெரிந்தாள்.

அங்கிருந்த ஒரு பலகையில் அமர்தார்கள். அவளுக்காக தான் எழுதிய பாடலை இசைத்து பாடினான். எல்லாம் அவன் கனவில் வந்ததைப் போலவே இருந்தது. சில்லென வீசும் காற்று, முழுமதி நிலவு, காற்றில் ஆடும் பூக்கள், அவற்றின் மனம் எல்லாம் அவனை வேறு ஓர் உலகிற்கு அழைத்துச் சென்றது.

காற்றில் அசைந்தாடிய அவளின் கூந்தலை மெல்ல அவள் காதின் பின்னால் அகற்றினான். கண்கள் இரண்டும் இசைப்பாடின. தன் சுற்றத்தை மறந்து இருவரும் அவரின் உலகில் இருந்தார்கள்.

அங்கு இம்முறை அவனை தடுக்க யாருமில்லை. இதழோடு இதழ் இணைந்தது. நேரம் சற்று சென்றதும் தான் அவன் தன் சுய நினைவுக்கு வந்தான். அவள் என்ன செய்வாளோ என்ற அச்சத்தில் சற்று விலகி அமர்ந்தான்.

அவளை உற்று நோக்கினான். ஆனால் அவளின் கன்னங்களோ வெக்கத்தில் சிவந்து இருந்தன. இதழ்கள் அழகிய புன்னகையில் மலர்ந்தது. அவளுக்கும் தன்னை பிடித்தது என்று தெரிந்தது அவனுக்கு.

நேரம் கடத்தாமல், அவன் முழங்காலிட்டு, தன் சட்டைப்பையிலிருந்து கண்கவரும் மோதிரம் ஒன்றை நீட்டி, "என் துணையாக நீ வருவாயா?" என்றான்.

அவளின் முகம் எல்லையில்லா ஆனந்தத்தில் மின்னியது. தன் தலையை வேகமாய் அசைத்து "நான் உன்னை காதலிக்கிறேன்" என்றுறைத்தாள்.

அவளின் விரல்களில் மோதிரத்தை மாட்டி அவளை தனதாக்கினான் பிரவீன். தான் கண்ட கனவையும் நினைவாக்கினான்.

****முற்றும்****

Kyra92 (13.02.17)

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top