67 சுவற்றில் எறிந்த பந்து

67 சுவற்றில் எறிந்த பந்து

"நீங்க அப்பாவாக போறீங்க" என்று புன்னகையுடன் கூறினாள் மீரா.

தான் என்ன செய்கிறோம் என்று உணராமல், பிரேக்கை அழுத்தினான் முகுந்தன், பின்னால் வந்து கொண்டிருந்த வாகன ஓட்டுநர்களின் திட்டல் பற்றி கவலைப்படாமல். தன் விழிகளை விரித்து மீராவை ஆச்சரியமாய் பார்த்த அவன்,

"நீ இப்போ என்ன சொன்ன?" என்றான் நம்ப முடியாமல்.

"நீங்க அப்பாவாக போறீங்கன்னு சொன்னேன்" என்றாள் அவன் முடியை கோதி விட்டு.

"மை காட்..." என்று சந்தோஷமாய் அவளை அணைத்துக் கொண்டான்.

பின்னால் இருந்த வாகனங்களில் இருந்து வந்த ஹாரன் சத்தத்தை அவர்கள் கேட்டார்கள்.

"வண்டியை கிளப்புங்க. இல்லனா நீங்க அடி வாங்குவீங்க" என்று கிண்டலாய் சிரித்தாள் அவள்.

அவள் நெற்றியில் தன் இதழ்களை அழுத்தமாய் பதித்து விட்டு, காரை ஸ்டார்ட் செய்தான் முகுந்தன்.

"இந்த விஷயம் உனக்கு எப்போ தெரிஞ்சது? என்றான் காரை ஓட்டியபடி.

"இப்போ தான்... ராதா வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி..."

"ஆனா எப்படி?"

"நீங்க வீட்ல இருந்து கிளம்பின உடனே எனக்கு தலை சுத்தல் வந்தது. எயித்து ஃப்ளோர்ல இருந்த டாக்டரை கூப்பிட்டேன். அவர் வந்து செக் பண்ணாரு. அப்போ தான், நான் கர்ப்பமா இருக்கேன்னு தெரிஞ்சது. ஒருவேளை எனக்கு ராதா வீட்டுக்கு வரவேண்டிய எண்ணம் இல்லாம இருந்திருந்தா, நான் டாக்டரை கூப்பிட்டு இருக்கவே மாட்டேன்"

"உனக்கு பீரியட்ஸ் நின்னதை நீ கவனிக்கலையா?"

"இல்ல. ராதா கொடுத்த டென்ஷன்ல நான் அதை மறந்தே போயிட்டேன்"

பெருமூச்சு விட்டான் அவன்.

"இப்போ, நீங்க என்கிட்ட இருந்து ஒரு வருஷத்துக்கு விலகி இருக்க ஒத்துக்குவீங்கன்னு நினைக்கிறேன்..."

"நான் ஏன் விலகி இருக்கணும்?" என்றான் அவன் சீரியஸாக.

"நான் பிரக்னண்டா இருக்கேன் பா..."

"நீ பிரக்னண்டா இருந்தா இப்போ என்ன? நான் உன்கிட்ட இருந்து விலகி இருக்கக் கூடாதுன்னு நீ தான் என்கிட்ட ரெக்வெஸ்ட் பண்ணனும்" என்றான் தெனாவட்டாக.

"அப்படி வேற நீங்க கனவு கண்டுகிட்டு இருக்கீங்களா?" என்றாள் அவள் கிண்டலாக.

"நான் கனவு காணல மா... நான் எதார்த்தத்தை தான் சொல்றேன்" என்றான்.

"என்ன எதார்த்தத்தை பத்தி பேசுறீங்க?"

"நான் உன்னை நேசிக்க ஆரம்பிச்சதுக்கு பிறகு நிறைய புக்ஸ் படிச்சேன். அது வெறும் தாம்பத்திய உறவைப் பத்தி மட்டும் இல்ல, பேரு காலத்தை பத்தியும், அந்த நேரத்துல ஒரு பொண்ணோட உடம்புல எப்படிப்பட்ட மாற்றமெல்லாம் ஏற்படும் அப்படின்னும் படிச்சேன்"

"சரி... அதனால?"

"புருஷனும், பொண்டாட்டியும் நெருக்கமா இருந்தா தான் டெலிவரி ஈஸியா இருக்கும். நம்மளோட தாம்பத்தியமும் உனக்கு நார்மல் டெலிவரி ஆகறதுக்கு ஒரு முக்கியமான சோர்ஸ்"

வாயை திறந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா.

"உனக்கு என் மேல சந்தேகமா இருந்தா, உங்க அம்மா கிட்டயாவது, இல்ல மாமியார் கிட்டயாவது கேட்டு தெரிஞ்சுக்கோ"

"ஆனா டாக்டர் என்னை ஜாக்கிரதையா இருக்க சொன்னாரே...?"

"அது, முதல் மூணு மாசத்தை பத்தின விஷயம். கவலைப்படாத, அந்த நாள்ல நம்ம ஜாக்கிரதையா இருக்கலாம். அதுக்குப் பிறகு, அந்த குழந்தையே தன்னை கவனிச்சிக்கும்"

அதைக் கேட்டு சிரித்தபடி தலையசைத்தாள் மீரா.

அவர்கள் இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள். கதவை சாத்தி தாளிட்ட முகுந்தன், அவளது தொடையை கைகளால் சுற்றி வளைத்து, அவளை தலைக்கு மேல் தூக்கினான்.

"மை காட்..." என்ற அவளது கண்கள் பிதுங்கியது.

தலையை நிமிர்த்தி அவளை பார்த்து புன்னகை புரிந்தான்.

"பயமா இருக்கா?"

அவள் இல்லை என்று தலையசைத்தாள்.

"இல்லையா? நீ ப்ரக்னண்டா இருக்க... நான் என் தலைக்கு மேல உன்னை தூக்கி வச்சுக்கிட்டு இருக்கேன்... ஆனாலும் உனக்கு பயம் இல்லையா?"

"என்னை தூக்கி வச்சிக்கிட்டு இருக்கிறது என் புருஷன் ஆச்சே... அப்புறம் ஏன் நான் பயப்படனும்?" என்று அவன் மூக்கை செல்லமாய் கிள்ளினாள்.

அவள் வயிற்றில் முத்தமிட்ட அவன், தலை சாய்த்து கண்களை மூடிக்கொண்டான்

"ஓய்... இப்பவே நீங்க என்னை விட்டுட்டு குழந்தைக்கு முத்தம் கொடுக்க ஆரம்பிச்சிட்டீங்களா?"

கண்களை மூடியபடி சிரித்தான் முகுந்தன்.

"என்னை கீழே இறக்கி விடுங்க"

சோபாவை நோக்கி நகர்ந்த அவன், அவளை சோபாவின் மேல் நிற்க வைத்துவிட்டு, மீண்டும் அவள் இடையை அணைத்துக் கொண்டான்.

"என்ன செய்றீங்க நீங்க?" என்றாள் தன் தலையை குனிந்து அவனைப் பார்த்தபடி.

"உன்னுடைய இதயத்துடிப்பை, உன் வயித்துல கேட்க நினைக்கிறேன்"

"நீங்க கேக்குறது என்னோட இதயத்துடிப்பா இருக்காது... வேற ஒருத்தரோடதா இருக்கும்" என்று சிரித்தாள் அவள்.

"எனக்கு தெரியும். கரு உருவாக ஆரம்பிச்ச உடனே, குழந்தைக்கு உருவாகிற முதல் உடல் உறுப்பு இதயம் தானாம்" என்று உணர்ச்சிவசப்பட்டு கூறிய அவன்,

அவளிடம் இருந்து விலகி அவளை பார்த்தபடி,

"கருவுல குழந்தை உருவாகுறது எவ்வளவு அழகான விஷயம் தெரியுமா? அதனால தான், பெண்களை எல்லாரும் கொண்டாடுறாங்க... என்னை அப்பாவாக்குனதுக்கு ரொம்ப தேங்க்ஸ்"

அவன் நெற்றியில் முத்தமிட்ட மீரா,

"இப்படித்தான் நீங்களும் உங்க அம்மாவோட கருவில் உருவாகி இருப்பிங்க... நீங்க மட்டும் இல்ல, எல்லாரும் அப்படித்தான்" என்றாள் சாதாரணமாய்.

"எல்லாரும் அனுபவிக்கிறாங்க அப்படிங்கிறதுக்காக, பிரசவ வலி ஒன்னும் சுலபமானது இல்லையே... நீ எனக்கு எப்பவுமே ஸ்பெஷல் தான்"

"ஏன் இவ்வளவு எமோஷனல் ஆயிட்டீங்க?"

"நீ மட்டும் பிடிவாதமா இருந்து, என்னை என் தனிமையில இருந்து வெளியில கொண்டு வராம இருந்திருந்தா, நான் இந்த அழகான சந்தர்ப்பத்தை எல்லாம் வாழ்க்கையில அனுபவிக்காமலேயே போயிருப்பேன்...! உன்னையும் இழந்திருப்பேன். நீ என்னை தனியா விட்டிருந்தா, என் வாழ்க்கையே தரிசு நிலமா இருந்திருக்கும். அதை நெனச்சு பார்த்தேன்"

"நான் உங்களை தனியா விடவும் இல்ல, விடப்போறதும் இல்லை"

"அது எனக்கு தெரியும். அதனால தான் உனக்கு தேங்க்ஸ் சொன்னேன்"

"நீங்க எனக்கு தேங்க்ஸ் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. ஏன்னா, நான் உங்களை காதலிக்கிறேன்"

"நானும் தான்..." என்று மீண்டும் அவள் வயிற்றில் முத்தமிட்டான்.

"இது சீட்டிங்... என் பிரக்னன்சியை பத்தி தெரிஞ்சதுக்கு பிறகு, நீங்க குழந்தைக்கு மட்டும் தான் முத்தம் கொடுக்குறீங்க"

"பொறாமைப்படுறதை நிறுத்து. அது உன்னோட குழந்தை" சிரித்தான் அவன்.

"எக்ஸ்க்யூஸ் மீ... அதையெல்லாம் ஷேர் பண்ணிக்க முடியாது. என்னோடது எப்போதும் என்னோடதா தான் இருக்கும்... என் குழந்தையா இருந்தாலும் நான் அதை எல்லாம் விட்டுக் கொடுக்க மாட்டேன்"

"ஓ..."

"என்னோட ஷேர் எனக்கு வேணும்"

சிரித்தபடி அவளை கீழே இறக்கி விட்டு, அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

"எனக்கு தூக்கம் வருது"

"சரி வா," என்று அவளை தன் கையில் அள்ளிக் கொண்டு தன் அறையை நோக்கி நடந்தான். அவளை கட்டிலில் கிடத்திவிட்டு அவள் பக்கத்தில் படுத்துக் கொண்டான். அவன் பக்கம் திரும்பிய அவள், அவன் நெஞ்சில் தலை சாய்த்தாள்.

"மெதுவா... நீ இப்படி எல்லாம் டக்குன்னு திரும்பக் கூடாது" என்றான் பதட்டத்துடன்.

பெருமூச்சு விட்ட அவள், அவனை அணைத்துக் கொண்டாள்.

மறுநாள் காலை

ஜானகிக்கு ஃபோன் செய்தான் முகுந்தன். அவர் அந்த அழைப்பை ஏற்றார்.

"எப்படிடா இருக்க மகனே?"

"நான் நல்லா தான் இருக்கேன். ஆனா மீரா தான் நார்மலா இல்ல"

"ஏண்டா? அவளுக்கு என்ன ஆச்சு?" என்றார் அவர் படபடப்புடன்.

"நேத்து சாயங்காலம் மயங்கி விழுந்துட்டா"

"அவளை ஹாஸ்பிடலுக்கு கூட்டிகிட்டு போனியா இல்லையா? நீ அங்க என்ன செஞ்சுகிட்டு இருக்க? அவ இப்ப எங்க இருக்கா?"

"இங்க தான் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கா"

"இன்னமும் அவளுக்கு மயக்கமா தான் இருக்கா?"

"இன்னும் கொஞ்ச நாளைக்கு அவளுக்கு இப்படித்தான் இருக்குமாம்"

"என்னடா சொல்ற? டாக்டர் என்ன சொன்னாரு?"

"அவரு நீங்க பாட்டியாக போறீங்கன்னு சொன்னாரு"

புருவம் உயர்த்தினார் ஜானகி. அவர் வாயில் இருந்து வார்த்தைகள் வரவே இல்லை.

"மா, லைன்ல இருக்கீங்களா?" என்று சிரித்தான் முகுந்தன்.

"கடவுளே... நான் கேட்டது உண்மையா?" என்று கத்தினார் அவர்.

வாய்விட்டு சிரித்தான் முகுந்தன்.

"கடவுளே... கங்கிராஜுலேசன்ஸ் டா"

"தேங்க்ஸ் மா"

"அய்யய்யோ... எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல. என்ன செய்றதுன்னு தெரியலையே"

"நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம். அமைதியா இருங்க"

"என்ன்னனது...?  உனக்கு என்ன தெரியும்? அவளுக்கு ஏதாவது வேணும்னா நீ என்னடா செய்வே?"

"எங்க வீட்டு மாடியில ஒரு டாக்டர் இருக்காரு. அவரு எப்ப வேணும்னாலும் எங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாரு. அதனால நீங்க ஒன்னும் டென்ஷனாக வேண்டாம்"

"அப்படின்னா நான் அங்க வர வேண்டாமா?"

"நீங்க இங்க எப்ப வேணும்னாலும் வரலாம். ஆனா, இதுக்காக நீங்க இங்க வர வேண்டாம்"

"மீரா எங்க? அவ உன்ன மாதிரி பேச மாட்டா.  அவகிட்ட ஃபோனை குடு"

"அவ குளிச்சுகிட்டு இருக்கா"

"இப்ப தானடா ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கான்னு சொன்ன?"

"ஆமாம், இப்பதான் குளிக்கப் போனா"

"இல்ல, நீ பொய் சொல்ற. நீ என்கிட்ட பேசுறேன்னு தெரிஞ்சதுக்கப்புறம் அவ நிச்சயமா போயிருக்க மாட்டா"

"மா ரிலாக்ஸ்..."

"நான் அவ கிட்ட அப்புறம் பேசுறேன். நீ இப்ப ஃபோன வை"

"லவ் யூ மா"

அதைக் கேட்டு சிரித்த ஜானகி, அழைப்பை துண்டித்து விட்டு, உறங்கிக் கொண்டிருந்த கேசவனை எழுப்ப, அவர் அறைக்கு ஓடினார்.

"என்னங்க... எழுந்திருங்க... தூங்குனது போதும்" என்று அவரைப் பிடித்து உலுக்கினார்.

அவர் தூக்க கலக்கத்துடன் கண்களை மெல்ல திறந்தார்.

"எழுந்திருங்க... நீங்க தாத்தாவாக போறீங்க" என்றார் ஜானகி.

அதைக் கேட்டு திடுக்கிட்ட அவர், எழுந்து அமர்ந்து,

"என்ன சொன்ன?" என்றார்.

"இப்ப தான் முகுந்தன் ஃபோன் பண்ணினான். நம்ம மருமக முழுகாம இருக்கா"

"நெஜமாவா... நீ ரொம்ப கிரேட் டா மகனே...!" என்றார் சந்தோஷமாய்.

ஜானகி வாய்விட்டு சிரித்தார்.

"நம்ம எப்போ மும்பை போக போறோம்?" என்றார் கேசவன்.

"நான் எப்பவுமே ரெடியா தான் இருக்கேன்"

"அப்போ கிளம்பு, போகலாம்"

"மீராவோட அம்மா, அப்பா? அவங்க கிட்ட பேசலாமா?"

"இல்ல, அதை நம்ம செய்யறது நல்லா இருக்காது. முகுந்தனோ, மீராவோ தான் அவங்க கிட்ட விஷயத்தை சொல்லணும். அதுக்கப்புறம் நம்ம பேசலாம்"

சரி என்று தலை அசைத்தார் ஜானகி.

இதற்கிடையில்...

"எதுக்காக நீங்க என்னை அம்மா கிட்ட பேச விடல?" என்றாள் மீரா.

"அவங்க இங்க வரணும்னு துடிக்கிறாங்க"

"அப்படியா?" என்றாள் ஆர்வமுடன்.

"இங்க பாரு மீரா, அவங்க உன்கிட்ட கேட்டா, அதுக்கு ஒத்துக்காத"

"ஆனா ஏன்?"

"ரெண்டு மாசம் தான் ஆச்சு. அதுக்குள்ள அவங்க இங்க வந்து உட்கார்ந்துகிட்டு, டெலிவரி வரைக்கும் என்ன செய்ய போறாங்க?"

"அவங்க இங்க வரணும்னு விருப்பப்பட்டா, வேண்டாம்னு நாம் எப்படி சொல்ல முடியும்?"

"அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்"

"எப்படி பாத்துக்குவீங்க? அவங்க வருத்தப்பட மாட்டாங்களா?"

"மாட்டாங்க. நான் பாத்துக்கிறேன்னு சொன்னேன்ல?"

"சரி, அப்படின்னா, எங்க அப்பா அம்மாவை என்ன செய்யப் போறீங்க? அவங்க வரணும்னு நினைச்சாலும் வர வேண்டாம்னு சொல்ல போறீங்களா?"

"அவங்களை இங்க கூப்பிடாத மீரா" என்றான் கெஞ்சலாய்.

"சரி, நான் கூப்பிடல. ஆனா அவங்களாகவே வரேன்னு சொன்னா என்ன செய்றது?"

"அவங்க கிட்ட இந்த விஷயத்தை சொல்லியே இருக்க கூடாதுன்னு நினைக்கிறேன்" என்றான் சலிப்புடன்.

"அவங்க வர நினைக்கிறதுல என்ன தப்பு? அவங்க நம்ம கூட இருந்தா நமக்கு தானே ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்?"

"ஹெல்ப் ஃபுல்லா? என்ன செய்யப் போறாங்க? சமையல் செய்வாங்க, வீட்டை சுத்தப்படுத்துவாங்க, துணி துவைப்பாங்க, அது தானே? அதைத்தான் நானே செஞ்சுட்டு போவேனே... இதுக்கு எதுக்கு மத்தவங்களோட ஹெல்ப் எனக்கு?"

பதில் கூறாமல் புன்னகைத்தாள் மீரா. அவனுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்று அவளுக்கு புரியவில்லை. ஏனென்றால் இது வெறும் சமையலோ, சுத்தபடுத்தலோ, துணி துவைப்பது பற்றிய விஷயம் அல்ல அல்லவா? அதனால் என்ன செய்வது என்று தீர்மானித்தாள் அவள்.

மாலை

வாசுதேவனுக்கு ஃபோன் செய்தான் முகுந்தன். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அவர்கள் அன்று முழுவதும் சந்தித்துக் கொள்ளவில்லை.

"நீ ரெடியா இருக்கியா?" என்றான் வாசுதேவன்.

"ஆமாம். வெளியில தான் காத்துகிட்டு இருக்கேன்"

"நான் இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவேன்"

"சரி" என்று அழைப்பை துண்டித்தான் முகுந்தன்.

அது அபராஜித்தின் நிச்சயதார்த்த விழா. அவனுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் முன் தன் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான் வாசுதேவன். அவனுக்காக முகுந்தன் அங்கு காத்திருப்பதை கண்டான் அவன். உள்ளே சென்ற இருவரும், அங்கு  சவிதா திரிவேதியுடன் மேடையில் நின்றிருந்த அபராஜித்தை பார்த்தார்கள்.

மேடைக்கு அருகே சென்ற அவர்கள், அவனைப் பார்த்தபடி நின்றார்கள். அவர்களைக் கண்ட அபராஜித் திகில் அடைந்தான். அவர்கள் முகங்களில் தெரிந்த புன்முறுவல், அவனுக்கு சாவு மணி அடிப்பது போல் இருந்தது. இவர்கள் இங்கே எப்படி வந்தார்கள்? ஏன் ராதா எந்த தகவலும் அனுப்பவில்லை? அவள் இன்னும் கொடுத்த வேலையை முடிக்கவில்லையா?

மணப்பெண்ணையும், மணமகனையும் வீடியோ கவரேஜ் செய்து, மிகப்பெரிய திரையில் லைவாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று அதில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த காணொளி மாறியது. அபராஜித், ராதாவுடன் இருக்கும் காணொளி அதில் ஒன்றன்பின் ஒன்றாய் தோன்றியது. அவன் ராதாவுடன் நெருக்கமாய் இருந்ததை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். சவிதா திரிவேதி தான் அதிகமாய் அதிர்ச்சி அடைந்தவள் என்று கூறத் தேவையில்லை. என்ன செய்வது என்று புரியாத அபராஜித் திகைத்து நின்றான். தான் செய்த வினை, சுவற்றில் அடித்த பந்து போல்,  திரும்பி வந்து, இந்த விதத்தில் தன் முகத்திலேயே அறையும் என்பதை அவன் எதிர்பார்ப்பு அல்லவா?

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top