37 முகுந்தனின் அறையில்
37 முகுந்தனின் அறையில்
எண்ணங்களின் கலவையாய் மீராவை ஏறிட்டான் முகுந்தன். அவனிடம் பிடிபட்டு விடாமல் இருக்க அங்கிருந்து நகர்ந்தாள் மீரா. தன் அம்மா தங்கிருந்த அறைக்கு வந்தாள்.
"நீ காபி சாப்பிட்டியா?" என்றார் வைதேகி.
"சாப்பிட்டேன் மா. சரி... எது உங்களை திடீர்னு உங்க மகளோட வீட்டுக்கு வர வரவச்சது?" என்றாள் மீரா.
பெருமூச்சு விட்ட வைதேகி,
"அப்பா தான் மும்பைக்கு வரணும்னு ரொம்ப விருப்பப்பட்டார். உன்னை பத்தி எல்லாரும் விடாம கேட்டுக்கிட்டே இருந்தாங்க. மாப்பிள்ளையை பத்தி எங்களுக்கு எதுவுமே தெரியலனாலும், நீ விருப்பப்பட்டேன்னு தான் இந்த கல்யாணத்துக்கு நாங்க சம்மதிச்சோம். உன்னோட கல்யாணத்துக்கு பிறகு, நீ நம்ம வீட்டுக்கு மாப்பிள்ளையோட வரவே இல்ல. நீ எங்க இருக்க, எப்படி இருக்கேன்னு கூட எங்களுக்கு எதுவும் தெரியல. நாங்க எப்படி உன்னை அப்படியே விட்டுட முடியும்? உன்னோட கல்யாணத்தப்போ கூட மாப்பிள ரொம்ப இறுக்கமா இருந்தாரு. எங்ககிட்ட அவர் பேசக்கூட இல்ல. அது தான் எங்களுக்கு ரொம்ப கவலையை தந்துச்சு. உன்னோட அப்பா, அம்மாவா இருந்துகிட்டு, உன்னை மாப்பிள்ளையோட மும்பைக்கு அனுப்பி வச்சிட்டு, உங்களை பத்தி எதுவுமே தெரியாம நாங்க எப்படி நிம்மதியா இருக்க முடியும்?"
அமைதியாய் இருந்தாள் மீரா.
"அதனால தான், அப்பா மும்பைக்கு வந்து நீயும் மாப்பிள்ளையும் எப்படி இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்க விருப்பப்பட்டார்"
அவர்களை சமதள பார்வை பார்த்தாள் மீரா.
"நீ நல்லா இருக்கியான்னு தெரிஞ்சுக்க தான் நாங்க விருப்பப்பட்டோம்"
"நான் நல்லா தான் மா இருக்கேன்"
"மாப்பிள்ளை ஏர்போர்ட்டுக்கு வந்த போது அதை நான் புரிஞ்சுகிட்டேன். நல்ல காலம், அவர் நாங்க நினைச்ச மாதிரி இல்ல" என்றார் நிம்மதியுடன்.
லேசாய் புன்னகைத்தாள் மீரா.
"நீ உன் மாமியாருக்கு புடவை கொடுக்க சொல்லி என்கிட்ட சொன்ன இல்ல?"
ஆமாம் என்று தலையசைத்தாள் மீரா.
"நான் அதை எடுத்துக்கிட்டு உன் மாமியார் வீட்டுக்கு போன அந்த நேரம், மாப்பிள்ளை அவங்க அம்மாவுக்கு ஃபோன் பண்ணி இருந்தாரு. நான் அங்க இருந்த விஷயத்தை அவங்க அம்மா அவர்கிட்ட சொன்னாங்க. ஃபோனை என்கிட்ட குடுக்க சொல்லி, மாப்பிள்ளை என்கிட்ட பேசினாரு. அப்பாவோட நம்பரை வாங்கி, அன்னைக்கே அப்பாகிட்டயும் பேசினாரு. அன்னைக்கு நாங்க எவ்வளவு சந்தோஷப்பட்டோம்னு உனக்கு தெரியாது. மாப்பிளை எங்களை மும்பைக்கு வர சொல்லி கூப்பிட்டாரு. அதுக்கு தானே நாங்க காத்துக்கிட்டு இருந்தோம், அதனால உடனே ஒத்துக்கிட்டோம். எங்களுக்கு டிக்கெட் அனுப்பி வச்சு, எங்களை திக்குமுக்காட வச்சுட்டாரு"
"அவரா உங்களுக்கு டிக்கெட் அனுப்பினாரு?"
"ஆமாம், அவர் தான் அனுப்பினாரு"
"அப்பா வேலையை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டாரே... எப்படி வந்தாரு?"
"உன்னைவிட எங்களுக்கு வேலை ஒன்னும் முக்கியமில்ல... ஆனா, மாப்பிள்ளை எங்களுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொன்னாரு"
"என்னது? அவர் சொன்னாரா? அவர் எப்படி உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்?"
"அவங்க அப்பா கிட்ட சொல்லி, நம்ம கடையை பார்த்துக்க சொன்னாரு. அவரும் சரின்னு சொல்லிட்டாரு"
"நீங்க இங்க வந்த விஷயம் என் மாமியாருக்கு தெரியுமா?"
"தெரியும்"
"ஆனா, அவங்க என்கிட்ட எதுவும் சொல்லலையே..."
"மாப்பிள்ளை தான் உன்கிட்ட யாரும் எதுவும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டாரு"
மீராவுக்கு தான் தெரியுமே, ஜானகி நிச்சயம் முகுந்தனின் பேச்சை மீறி நடக்க மாட்டார் என்று...!
"என் கூட இருக்க நீங்க மும்பைக்கு வந்தது, எனக்கு ரொம்ப சந்தோசம்" என்றாள் மீரா.
"உன்னை விட நாங்க தான் அதிகமான சந்தோசத்துல இருக்கோம். ஏன்னா, மாப்பிள்ளை ரொம்ப நல்லவர்" என்றார் வைதேகி சந்தோஷத்துடன்.
ஆம் என்று தலையசைத்தாள் மீரா.
"வா, கிச்சனுக்கு போலாம். நான் உங்களுக்கு டின்னர் பண்ணி கொடுக்கிறேன்" என்றார் வைதேகி.
"நான் கிட்டத்தட்ட சமையலை முடிச்சிட்டேன் மா. நீங்க இருங்க, நான் முடிச்சுட்டு வரேன்"
"நீ ஏற்கனவே டயர்டா இருக்க..."
"பரவாயில்லமா, அதெல்லாம் எங்களுக்கு பழகிப்போச்சு"
"எங்களுக்குன்னா?"
"அவரும் சமைப்பாரு. நாங்க ஒரு நாள் விட்டு ஒரு நாள் சமைச்சுக்குவோம்"
"நெஜமாவா சொல்ற?" என்றார் நம்ப முடியாமல்.
"கேட்கவே மனசுக்கு ரொம்ப நிறைவாய் இருக்கு. மாப்பிள்ளை அவ்வளவு புரிதல் உள்ளவரா?" என்றார் குளியலறையை விட்டு வெளியே வந்த ஜனார்த்தனன்.
"ஆமாம் பா, கல்யாணத்துக்கு முன்னாடி அவர் தான் சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு இருந்தாரு. கல்யாணத்துக்கு பிறகும் அவர் அதில் நிறுத்தல"
"மாப்பிள்ளை இவ்வளவு நல்லவரா இருப்பார்னு நான் நினைச்சு கூட பாக்கல. நாங்க தான் தேவையில்லாம உங்களைப் பத்தி கவலைப்பட்டுக்கிட்டு இருந்தோம் போலிருக்கு" என்று சிரித்தார்" ஜனார்த்தனன்.
ஆமாம் என்று தலையசைத்த மீரா,
"சரி மா, நான் போய் சமையலை முடிச்சிட்டு வரேன்" என்று நடந்தாள்.
"நானும் வரேன்" என்று அவளை பின்தொடர்ந்தார் வைதேகி.
அவர்களுக்கு முன்னதாகவே அங்கு வேலையை கவனித்துக் கொண்டிருந்த முகுந்தனை பார்த்து, அவர்கள் இருவரும் வாசலிலேயே நின்றார்கள்.
"என்ன மாப்பிள்ளை, நீங்க போய் இதெல்லாம் செஞ்சுகிட்டு... விடுங்க நான் பார்த்துக்கிறேன்" என்றார் வைதேகி.
"பரவாயில்ல அத்தை, நீங்க ரொம்ப நாள் கழிச்சு உங்க பொண்ணை பாக்குறீங்க. நீங்க அவ கூட இருங்க" என்றான் முகுந்தன்.
"நான் சமைக்கும் போது, அவ என் கூட தான் இருக்க போறா. நீங்க தயவுசெஞ்சி போங்க"
"மீரா கிட்டத்தட்ட எல்லாத்தையும் முடிச்சிட்டா. இதோ நானும் முடிச்சிடுவேன்"
"பரவாயில்ல விடுங்க... மீரா, அவர்கிட்ட சொல்லு"
"நீங்க போங்க. நாங்க பாத்துக்குறோம்" என்றாள் மீரா.
"நீ போ மீரா. என் சமையல் அவ்வளவு மோசமா இருக்காதுன்னு அத்தை கிட்ட சொல்லு" என்றான் முகுந்தன்.
அதைக் கேட்டு சிரித்த வைதேகி,
"என்னை ரொம்ப சங்கடப்படுத்தாதீங்க. ப்ளீஸ் போங்க" என்றார்.
பெருமூச்சு விட்டான் முகுந்தன்.
"நாங்க இங்க இல்லாதப்போ நீங்க உங்க வைப்புக்கு ஹெல்ப் பண்ணுங்க" என்றார் வைதேகி கிண்டலாய்.
சிரித்தபடி மீராவை ஏறிட்டான் முகுந்தன். அவளோ, சிரிக்கவே மாட்டேன் என்று பிடிவாதமாய் வந்த சிரிப்பை அடக்கி நின்றாள்.
அவர்கள் அனைவரும் ஒன்றாக இரவு உணவை உண்டார்கள். முகுந்தன் குறைவாகவே பேசினாலும், அவனை அவர்களுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. பேசியதை அவன் அர்த்தத்தோடு பேசினான்.
சாப்பிட்டுவிட்டு தன் அறைக்குச் சென்றான் முகுந்தன். ஆனால் மீரா செல்லவில்லை. அவள் தன் பெற்றோரிடம், தனது அலுவலகம் பற்றியும், புதிய நண்பர்கள் பற்றியும், மும்பையின் தாறுமாறான போக்குவரத்து நெரிசல் பற்றியும் பேசியபடி இருந்தாள்.
முகுந்தன் மீராவுக்காக காத்திருந்தான். அவள் நேரத்தோடு வருவதாய் தெரியவில்லை. அதனால் விளக்கை அணைக்காமல் படுத்துக் கொண்டான். மணி பத்தானது. அப்பொழுது உள்ளே நுழைந்தாள் மீரா. முகத்தை சாதாரணமாய் வைத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான் முகுந்தன். ஆனால் மீரா அவன் உறங்கிவிட்டான் என்று நம்பவில்லை. இரவு விளக்கை ஒளிர விட்டு, குழல் விளக்கை அணைத்தாள். கட்டிலுக்கு வந்து, சத்தம் செய்யாமல் படுத்துக் கொண்டாள்.
"இவ்வளவு லேட்டா வர்ற அளவுக்கு அப்படி என்ன பிசி?" என்றான் முகுந்தன். திடீரென்று அவன் குரல் கேட்டு திடுக்கிட்டாள் அவள்.
"அம்மா, அப்பா கிட்ட பேசிகிட்டு இருந்தேன்"
"பேசி முடிச்சிட்டியா?"
"இன்னும் முடிக்கல"
"அப்படின்னா, அவங்க கிட்ட பேச இன்னும் நிறைய விஷயம் இருக்கா?"
"நமக்கு பிடிச்சவங்க கிட்ட பேச எப்பவுமே நமக்கு நிறைய விஷயங்கள் இருந்துகிட்டு தான் இருக்கும்"
"அப்படின்னா என்கிட்ட பேச உனக்கு ஒண்ணுமே இல்லையா?" என்றான் அவன்.
அதற்கு பதில் கூறாமல் அமைதி காத்தாள்.
"நான் உனக்கு பிடிச்சவன் இல்லையா?"
அதற்கும் அமைதி.
"எனக்கு தெரியும், உனக்கு என்னை ரொம்ப பிடிக்கும். அதை நீ உன்னோட லெட்டர்ல எழுதியிருந்த"
மீண்டும் அமைதி.
"உன்னோட லெட்டரை எனக்கு ரொம்ப பிடிக்கும் தெரியுமா?" என்ற போது திரும்பி அவனை பார்த்தாள் மீரா.
"நீ அதை ரொம்ப நல்லா எழுதியிருந்த. அந்த லெட்டர் இன்னும் என் பர்ஸ்ல தான் இருக்கு" என்று அவன் கூற ஆச்சரியப்பட்டாள் மீரா.
அது சிறு புன்னகையை அவள் முகத்திற்கு இட்டு வந்தது. அந்த புன்னகையை காண, அந்த மெல்லிய விளக்கொலியே முகுந்தனுக்கு போதுமானதாய் இருந்தது. அவளிடம் நெருங்கி வந்து அவளுக்கு சங்கடத்தை தந்தான். ஆனால், அவனிடம் எந்த மனஉலைவும் இல்லை.
"கடைசியில, நீ என் ரூமுக்கு வந்துட்ட"
"நான் என் அப்பா அம்மாவுக்காக வந்தேன்"
"அதை நான் நம்பிட்டேன்" என்றான் சிரித்தபடி.
முகத்தை *சுளுக்* என்று வைத்துக் கொண்டாள் மீரா.
"எப்படி என்னோட சர்ப்ரைஸ்?"
"எதுக்காக நீங்க அவங்களை இங்க கூட்டிகிட்டு வந்தீங்க?"
"உன்னை என் ரூமுக்கு கூட்டிட்டு வரத்தான்"
"நீங்க என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? அவங்க இங்க எதுக்காக வந்திருக்காங்கன்னு உங்களுக்கு தெரியுமா?"
"நம்ம எப்படி இருக்கோமான்னு பார்க்க வந்திருப்பாங்க"
"அது உங்களுக்கு தெரியுமா?"
"ஏன் தெரியாது? எல்லா அப்பா அம்மாவும் அதை தெரிஞ்சுக்க தானே நினைப்பாங்க? அதுல பெருசா என்ன இருக்கு?"
மீரா கண்களை மூடினாள். அவள் கன்னத்தில் அவன் முத்தமிட்டான். அவள் கண்களை திறக்கவில்லை. தன் இதழ்களை அவள் இதழ்களின் மீது ஒற்றினான். அது அவள் எதிர்பார்த்தது தான் என்றாலும் கூட, அது அவளுக்கு சிலிர்ப்பை தந்தது. போர்வையை இறுக்கமாய் பற்றினாள்.
"எனக்கு இன்னைக்கு கோட்டா வேணும்" என்றான் உரிமையோடு.
அவளிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே, தன் மூக்கால் அவள் கன்னத்தை உரசியவாறு,
"இந்த மாதிரி, உன்னோட உரிமையை என்கிட்ட இருந்து நீ எப்போ எடுத்துக்க போற?" என்றான் மெல்லிய குரலில்.
மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று கூறுவார்கள். ஆனால் மீராவின் விஷயத்தில், அவள் எதிர்த்தாலும் கூட, அதற்கு சம்மதம் என்று தான் பெயர். அது முகுந்தனுக்கு நன்றாகவே தெரியும். வார்த்தைகளால் விவரிக்க முடியாத, அனைவரும் அனுபவத்தால் உணர துடிக்கும், வாழ்வின் அடியாதர உணர்வை, அனுபவபூர்வமாய் உணர துவங்கினான் முகுந்தன்.
வழக்கம் போல், மீரா அவனை தடுக்கவில்லை தான்...! ஆனால், தன்னைத்தானே கட்டுப்படுத்த அவள் தடுமாறிப் போனாள். அவள் ஒன்றும் மரக்கட்டை இல்லையே, உணர்வுகள் உள்ள மனித பிறவி தானே! அவனை அணைக்க வேண்டும், முத்தமிட வேண்டும், என அவள் உள்ளம் அலைபாய்ந்தது... எல்லாவற்றிற்கும் மேலாக உணர்ச்சி தொகுப்பின் உச்சத்தில், அவன் பெயர் சொல்லி கதற வேண்டும் என்று துடித்தது...! அவளால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணினாள் அவள். அவளுடைய எதிர்பார்ப்பு என்ன என்பது முகுந்தனுக்கு தெரியாது தான். அதை அவனிடம் கூறுவதும் சங்கடமாகத் தான் இருக்கும். ஆனால் அவளுக்கு வேறு வழி இல்லை. அவனிடம் அதை கூறித்தான் ஆக வேண்டும். அவளுடைய எதிர்பார்ப்பும், தேவையும் என்ன என்பதை அவனுக்கு புரிய வைத்து தான் ஆக வேண்டும்.
"என்னை தடுக்காம இருந்ததுக்கு தேங்க்ஸ்" என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான் முகுந்தன்.
அதை மனப்பூர்வமாய் ஏற்றாள் மீரா.
"இது தான் உங்களுடைய டெய்லி கோட்டாவா?" என்றாள்.
"அப்படியும் சொல்ல முடியாது... சில நாள், ரெண்டு மூணு தடவை கூட எனக்கு தேவைப்படலாம்" என்று சிரித்தான்.
"அப்ப அந்த கோட்டா என்ன கணக்கு?"
"மாசத்துல மூணு நாள் நான் தள்ளி தானே இருக்கணும்? அதை நான் பேலன்ஸ் பண்ண வேண்டாமா??" என்று அவளை திகைக்க செய்தான்.
"எனக்கு இதெல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு. நீ, நான், நம்ம ரூம், எல்லாமே..."
"உங்களுக்கு என்ன ஆச்சு? நீங்க சந்தோஷமா இருந்த தனிமையை பத்தி பேசவே மாட்டேங்கிறீங்க? நீங்க அதை மறந்துட்டீங்களா?"
"நீ தான் என்னை அதை கம்ப்ளீட்டா மறக்க வச்சிட்டியே...! தனியா இருக்கிறது எனக்கு பிடிக்காம இல்ல. ஆனா அதைவிட அதிகமா, உன் கூட இருக்க எனக்கு பிடிச்சிருக்கு"
மீரா ஏதோ கூற போக,
"காரணம் என்னவா வேணும்னாலும் இருக்கட்டும். எனக்கு நீ வேணும்... என்னோட ரூம்ல... என் பக்கத்துல..."
"எவ்வளவு நாளைக்கு?"
"எப்பவுமே..."
"உங்களுக்கு நான் சலிச்சிட மாட்டேனா? மறுபடியும் உங்களுக்கு உங்க தனிமையை பிடிச்சா என்ன செய்றது?"
பெருமூச்சு விட்ட முகுந்தன், அவள் நெஞ்சில் தலை சாய்த்தான்.
"இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்றதுன்னு எனக்கு தெரியல. ஒருவேளை நான் பதில் சொன்னா, நீ அதை செக்ஸ் கூட சம்பந்தப்படுத்தி பாக்க வாய்ப்பிருக்கு. ஆனா அது செக்ஸ் சம்பந்தப்பட்டது இல்ல"
"அப்படின்னா?"
"ஒரு பொண்ணு கிட்ட இருந்து ஒரு ஆம்பளைக்கு இவ்வளவு சந்தோஷம் கிடைக்க முடியும்னு எனக்கு தெரியாது. நான் இதை உடம்பு ரீதியா மட்டும் சொல்லல, உணர்வுபூர்வமாகவும் தான் சொல்றேன். அதை, நான் உன்கிட்ட தான் தெரிஞ்சுகிட்டேன். என்னை பொறுத்த வரைக்கும், என் உடம்புலயும் மனசுலயும் ஏற்படுற உணர்வுள வித்தியாசம் இருக்கிறதா எனக்கு தெரியல. ஏன்னா, அது ரெண்டுமே ஏங்குறது உனக்காக தான்"
"உடல் ரீதியா ஏற்படுற உணர்வுகள ஒரு கட்டத்தில் திருப்திப்படுத்திட முடியும். ஆனா, மனரீதியான உணர்வுகளை அவ்வளவு சுலபமா திருப்தி படுத்த முடியாது"
"அதையே தான் நானும் சொல்றேன். அது அவ்வளவு சுலபமா திருப்தி அடையாது... ஆனா, நீ என்னை திருப்திப்படுத்தி இருக்க. அது தான் நான் சொல்ல வர்ற விஷயம்"
"நீங்க சொல்றது உண்மையா?"
"சத்தியமான உண்மை"
"சரி, நம்ம அதை பத்தி நாளைக்கு பேசலாம்"
"அது ரொம்ப முக்கியமானதா?"
"ஆமாம்"
"ஓ..."
"இப்போ தூங்குங்க"
"நாளைக்கு நீ ஆஃபீசுக்கு வர போறியா?"
"எனக்கு தெரியல. நான் இன்னும் அதைப் பத்தி அம்மா கிட்ட பேசல"
"சரி, நீ லீவு போட்டுட்டு அவங்க கூட இரு. உனக்கு தேவைப்பட்டா நானும் லீவ் போடுறேன்"
"ம்ம்"
"குட் நைட்"
மீரா கண்களை மூடினாள். அவள் இடையை சுற்றி வளைத்துக் கொண்டு, அவள் தோளில் தஞ்சம் புகுந்தான் முகுந்தன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top