34 இது நிரந்தரமா?
34 இது நிரந்தரமா?
மாலை
விதேஷ் தனது அறையை கடந்து செல்வதை கவனித்த மீரா, அவனை அழைத்தாள்.
"விதேஷ்..."
"ஹலோ மேடம், காங்கிராஜுலேஷன்ஸ்"
"தேங்க்ஸ், நீங்க ஹவுஸ் புரோக்கர்னு கேள்விப்பட்டேன். எனக்கு ஒரு வாடகை வீடு வேணும்"
"என்ன பட்ஜெட்ல பாக்குறீங்க மேடம்?"
"இருபதாயிரம்... ஒரு பெட்ரூம் இருக்கிற சின்ன வீடா இருந்தாலும் பரவாயில்ல"
"சரிங்க மேடம், ஏதாவது வீடு இருக்கான்னு பாத்துட்டு சொல்றேன்"
"தேங்க்ஸ்" என்று தன் அறைக்கு சென்றாள் மீரா.
மீரா விதேஷுடன் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த முகுந்தன், விதேஷுக்கு ஃபோன் செய்தான். அந்த அழைப்பை ஏற்றான் விதேஷ்.
"சொல்லுங்க சார்"
"மீரா உன்கிட்ட என்ன கேட்டா?" என்றான்.
"வாடகைக்கு வீடு வேணும்னு கேட்டாங்க" என்று உண்மையை கூறினான்.
"வாடகை வீடா?" என்று தன் பல்லை கடித்தான் முகுந்தன்.
"ஆமாம் சார், 20000 ரூபாய் பட்ஜெட்டாம். சின்ன வீடா இருந்தா கூட போதும்னு சொல்லிட்டாங்க"
"யாருக்காக வீடு பார்க்க சொன்னா?"
"அது எனக்கு தெரியாது சார்"
"நான் சொல்ற வரைக்கும் நீ எந்த வீடும் பார்க்க வேண்டாம். நான் சொன்ன பிறகு பார்த்தா போதும்"
"சரிங்க சார்"
அழைப்பை துண்டித்தான் முகுந்தன். பெருமூச்சு விட்டு நடந்தான் விதேஷ். அப்பொழுது மணி 5:30. கடிகாரத்தை பார்த்த முகுந்தன், இன்று அவள் வீட்டுக்கு வரட்டும் என்று எண்ணிக்கொண்டான்.
ஆறு மணிக்கு தனது பையை எடுத்துக்கொண்டு முகுந்தன் தன் அறையை விட்டு வெளியே வந்த போது, அங்கு மீரா இருக்கவில்லை. எரிச்சல் அடைந்த அவன், நந்தகோபாலிடம்,
"மீரா எங்க?" என்றான்.
"மீராவும் வைஷ்ணவியும் கோவிலுக்கு போனாங்க"
"எந்த கோவில்?"
"எனக்கு தெரியாது பங்கு"
"நீ அவங்க கிட்ட கேக்கலையா?"
"நீ இருக்கும் போது நான் ஏன் உன் பொண்டாட்டியை கேள்வி கேட்கணும்?" என்றான் கிண்டலாய்.
"நான் இல்லன்னா நீ அவளை கேப்பியா?" என்றான் மிரட்டலாய்.
"இல்ல, சும்மா தான்..."
தனது கைபேசியை எடுத்து மீராவுக்கு ஃபோன் செய்தான். கோவிலில் இருந்ததால், அவள் அந்த அழைப்பை ஏற்கவில்லை. அது முகுந்தனை கோபத்திற்கு ஆளாக்கியது. எப்படி இருந்தாலும் அவள் வீட்டிற்கு தானே வரவேண்டும் என்று எண்ணியபடி தன் வீட்டை நோக்கி சென்றான்.
மீரா வீட்டிற்கு வரும் பொழுது மணி ஏழாகி விட்டிருந்தது. வீடு மயான அமைதியுடன் காணப்பட்டது. முகுந்தன் வரவேற்பறையில் இருக்கவில்லை. அவனுடைய பை அங்கிருந்த சோபாவில் வைக்கப்பட்டு இருந்தது. அவன் ஏற்கனவே வீட்டிற்கு வந்து விட்டான், ஆனால் இன்னும் அவனது அறை திறக்கப்படவில்லை. அவன் எங்கு சென்றான்?
"நல்ல காலம், அவர் இங்க இல்ல. அவர் வர்றதுக்கு முன்னாடி என்னோட ரூமுக்கு போய் நான் கதவை சாத்திடணும். அதோட வெளியே வரவே கூடாது. அவர் இன்னைக்கு என்ன பண்றாருன்னு நான் பார்க்கிறேன்" என்று நினைத்தாள் மீரா.
தன் கையில் இருந்த சாவியால் பூட்டை திறந்து, கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த மீரா, திடுக்கிட்டாள். அவள் கட்டிலின் மீது முகுந்தன் அமர்ந்துகொண்டு, அவளை விழுங்குபவன் போல பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனை தன் அறையில் பார்த்த மீரா, தடுமாறிப் போனாள். அவன் எப்படி அவள் அறைக்குள் வந்தான்? அவனிடம் மற்றும் ஒரு சாவி இருக்கிறதா? அவள் எண்ணியது சரி தான். அந்த வீட்டிற்கு மூன்று சாவிகள் இருந்தன. அதில் இரண்டை மட்டும் தான் அவன் மீராவிடம் கொடுத்திருந்தான். ஒன்றை பாதுகாப்புக்காக தன்னிடம் வைத்துக் கொண்டிருந்தான்.
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட மீரா,
"நீங்க என்னோட ரூம்ல என்ன பண்றீங்க?" என்றாள் அவனை பார்க்காமல்.
"என்னோட ரூமுக்கு வர நீ தயாரா இல்ல. அதனால இந்த ரூமுக்கு நான் வந்தேன், உன் கூட இருக்க" என்று சாவகாசமாய் பின்னால் சாய்ந்து, தன் கைகளை மெத்தையில் ஊன்றி கொண்டான்.
தனது கைப்பையை மேசையின் மீது வைத்தாள் மீரா.
நேராய் அமர்ந்து கொண்ட முகுந்தன், தன் கைகளை கட்டிக்கொண்டு,
"எதுக்காக வித்தேஷ் கிட்ட வாடகை வீடு வேணும்னு கேட்ட?" என்றான்.
அவனுக்கு எப்படி தெரிந்தது என்பது போல் அவனை அதிர்ச்சியுடன் ஏறிட்டாள் மீரா. அப்படியே அவள் வாடகை வீடு கேட்டாலும் தான் இப்பொழுது அதில் என்ன தவறு இருக்கிறது? தனது நண்பர்களுக்காக இந்த உதவி கூடவா அவள் செய்யக்கூடாது?
"என்னை பார்த்து பயந்துட்டியா?" என்றான் கிண்டலாய்.
பயமா? இவன் எதை எதோடு முடிச்சு போடுகிறான்?
"நீ என்னை பார்த்து பயப்பட எந்த காரணமும் இல்லையே.... நேத்து ராத்திரி நான் உன்கிட்ட ஜென்டிலா தானே நடந்துக்கிட்டேன்" என்றான்.
அவன் பேசிய விதம் அவளுக்கு மயிற்கூச்செரிந்தது. ஆம், அவன் அவளிடம் ஜென்டில் ஆகத்தான் நடந்து கொண்டான் அது தான் அவளை பாடாய்படுத்தியது.
"நான் உனக்குள்ள ஏற்படுத்தின அந்த தாக்கம் தான், இப்படி ஒரு முடிவை உன்னை எடுக்க வச்சிருக்குன்னு நினைக்கிறேன்"
மீரா சிறிதும் எதிர்பார்க்காத நிலையில், சட்டென்று கட்டிலை விட்டு எழுந்த அவன், கதவை தாழிட்டு அவளை தன் கரங்களுக்கு இடையில் சிறை பிடித்தான். அவளை ஊடுருவும் பார்வை பார்த்தான்.
"ஏன்? எதுக்காக என்னை பார்த்து நீ பயந்த?"
"நான்... நான்... ஒன்னும் உங்களை பார்த்து பயப்படல" தடுமாறினாள் அவள்.
"அப்படியா? என்று தன் உதடுகளை அவள் கன்னத்தில் வருடினான்.
தன் கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டாள் மீரா.
"எனக்கு தெரியும், நீ என்னை காதலிக்கிற... ரொம்ப ஆழமா... ரொம்ப உண்மையா"
அதற்கு மீராவிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
"உனக்கு இந்த வீட்ல இருக்க பிடிக்கலைன்னா, நான் உன்னை தொடும் போது ஏன் என்கிட்ட சண்டை போட மாட்டேங்குற?" என்றான்.
அப்படி என்றால், அவள் தனக்காக வீடு தேடுவதாய் அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். ஏன் இந்த மனிதன் எப்பொழுதும் அனைத்தையும் தவறாகவே புரிந்து கொள்கிறான்?
"நீ என்னை எவ்வளவு காதலிக்கிறேன்னு நான் நிரூபிச்சு காட்டட்டுமா?" என்ற அவன் கேள்விக்கு அவள் பதில் கூறவில்லை.
அவளது கழுத்தில் அவன் முத்தமிட, அவனை தடுக்காமல் தன் கண்களை மூடிக்கொண்டு அப்படியே நின்றாள் மீரா.
"என்னை ஏன் என் இஷ்டத்துக்கு நடக்க விடுற? என்னை அடி, புடிச்சு தள்ளு, என்னை எதுவும் செய்ய விடாம தடு... இல்லன்னா நீ என்னை காதலிக்கிறேன்னு நான் நிரூபிச்சுடுவேன். அதோட மட்டுமில்லாம, நான் உன்னை தொட்டுக்கிட்டு தான் இருப்பேன்... ஏன் தெரியுமா? உன் மேல நான் பைத்தியமா இருக்கேன்"
அதற்கும் அவள் ஒன்றும் கூறாமல் இருக்கவே, அவள் இடையை சுற்றி வளைத்து இழுத்து, கட்டிலில் அவளுடன் விழுந்தான்.
"ஏன் இப்படி இருக்க? என்ன பிடிச்சு தள்ளு..." கூறியபடி அவள் இதழ்களை தன் இதழ்களால் பற்றினான்.
"என்னை விட்டுட்டு போயிடுவியா?"
"மாட்டேன்னு சொன்னா என்ன செய்வீங்க?"
"நீ சொல்லித்தான் ஆகணும்"
"போகப் போறேன்னு சொன்னா என்ன செய்வீங்க?"
"இந்த ரூமை விட்டு உன்னை வெளியில போக விடமாட்டேன். உனக்கே தெரியும் நான் என்ன செய்வேன்னு"
"அப்படியா? என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோங்க" என்று தன் கண்களை மூடிக்கொண்டாள் மீரா.
"எனக்குள்ள தூங்கிட்டு இருக்கிற மிருகத்தை தட்டி எழுப்பாத..."
"அது ஏற்கனவே எழுந்து தான் இருக்கு"
"அப்படியா? மிருகம் என்ன செய்யும்னு காட்டட்டுமா?"
அவளுக்கு நெருக்கமாய் படுத்துக்கொண்ட அவன், அவள் நெற்றியில் துளிர்த்திருந்த ஓரிரு வியர்வை துளிகளை துடைத்து விட்டான்.
"நீ நேத்து என்கிட்ட சொன்ன, உனக்கும் உணர்ச்சிகள் இருக்கு, அதனால தான் நீ என்னை தடுக்கலன்னு. இன்னைக்கு ஏன் என்னை தடுக்காமல் இருக்க? எனக்கான உன்னோட உணர்ச்சிக்கு முடிவே இல்லையா?"
அந்த கேவிக்கு ஏற்கனவே பதிலை தயார் செய்து வைத்திருந்த மீரா, அவன் கண்களை தைரியமாய் ஏறிட்டாள்.
"நீ உன்னை எனக்கு முழு மனசோட தான் கொடுத்தேன்னு எனக்கு தெரியும். அப்படி என்கிட்ட உன்னை கொடுத்த பிறகு, நீ எப்படி இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிக்க முடியும்?"
"நம்ம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி. ஒரே வீட்ல ஒண்ணா வாழ்ந்துகிட்டு இருக்கோம். நமக்குள்ள ஒன்னும் நடக்கலன்னா யாரும் நம்ப மாட்டாங்க. நமக்குள்ள எல்லாம் முடிஞ்சிருக்கும்னு தானே எல்லாரும் நினைக்க போறாங்க? அப்போ அப்படியே இருந்துட்டு போகட்டுமே... நான் உங்களை ரொம்ப நேசிச்சேன். ஆனா உங்களுக்கு நான் எதுவுமே செய்யல. அதனால என்னை நான் உங்களுக்கு கொடுக்க நினைச்சேன். நான் இங்க இருக்கிற வரைக்கும், என்னை எடுத்துக்கணும்னு உங்களுக்கு தோணுச்சுன்னா, நீங்க தாராளமா எடுத்துக்கலாம்"
"நீ இங்க தான் இருக்க போற... எப்பவும்..." என்றான் உறுதியோடு.
"அதை நீங்க முடிவு செய்ய முடியாது"
"என்னால முடியும்... நான் தான் முடிவு செய்வேன்"
"நீங்க சொல்றதை யார் கேட்கப் போறா?"
"மீரா, என்னோட பொறுமையை சோதிக்காதே"
"என்ன செய்வீங்க? நேத்து ராத்திரி செஞ்சதை மறுபடியும் செய்வீங்க. அவ்வளவு தானே?"
"இல்ல, ஆஃபீஸ்ல எல்லாரும் முன்னாடியும் உன்னை கிஸ் பண்ணுவேன்"
திகைத்துப் போனாள் மீரா. இதுவே அவன் பழைய முகுந்தனாய் இருந்திருந்தால், இந்த வார்த்தைகளைக் கேட்டு அவள் வாய்விட்டு சிரித்து இருப்பாள். ஆனால் இப்பொழுது அதை செய்யும் தைரியம் அவளுக்கு இல்லை. ஏனென்றால் முகுந்தன் அதை செய்தாலும் செய்வான்.
"அதனால?" என்றாள் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு.
"அதனால, என்னை கோபப்படுத்தி பார்க்காத. நான் ஏற்கனவே வீடு பார்க்க வேண்டாம்னு விதேஷ் கிட்ட சொல்லிட்டேன்"
"ஏன் இப்படி செஞ்சீங்க?"
"உன்னோட திங்ஸை எல்லாம் என்னோட ரூமுக்கு மாத்து. நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா தான் இருக்கப் போறோம்"
"அப்படியா?" என்றாள் கிண்டலாய்.
"ஆமாம். நீ அதை செய்யலன்னா, நான் உன்னை செய்ய வைப்பேன்"
எகத்தாளமாய் சிரித்தாள் மீரா.
"என்னை குறைச்சி எடை போடாதே" என்றான் முகுந்தன்.
முகம் சுருக்கினாள் மீரா. அவளை தன் அறைக்கு வரவழைக்க முகுந்தன் ஏதாவது திட்டமிடுகிறானா?
"இன்னைக்கு எல்லார் முன்னாடியும் உன்னை என்னோட வைஃப்ன்னு நான் அனவுன்ஸ் பண்ணிட்டேன். தாலியையும் எல்லாருக்கும் தெரியிற மாதிரி போட்டுக்க சொல்லிட்டேன். உனக்கு வேற என்ன வேணும்?"
"நம்ம கல்யாணத்துல கூட தான் நீங்க என் கழுத்துல தாலி கட்டினீங்க"
"அன்னைக்கு நடந்ததுக்கும், இன்னைக்கு நான் நடந்துகிட்டதுக்கும் உனக்கு வித்தியாசம் தெரியலையா?"
"ஆமாம், நிறைய கோபம் தெரிஞ்சது"
"ஆமாம் நான் கோபமா தான் இருந்தேன். என் பொண்டாட்டியை வேற யாரும் பார்க்கிறது எனக்கு பிடிக்கல"
"ஓ... அதுக்காகத் தான் இதெல்லாம் செய்றீங்களா?"
"அதுக்காக மட்டும் இல்ல"
"வேற எதுக்காக செய்றீங்க?"
"மீரா உனக்கு என்னை பிடிக்கலையா? நீ என்னை எவ்வளவு கடுப்பேத்துறன்னு உனக்கு புரியலயா?"
"நீங்க ரொம்ப புத்திசாலி. இதே வார்த்தைகளை நான் சொல்றதுக்கு முன்னாடி, நீங்க முந்திக்கிட்டீங்க"
"நீ ரொம்ப நல்ல பொண்ணு. ஒரு நிமிஷம் என்னை ரொம்ப ஸ்பெஷலா ஃபீல் பண்ண வைக்கிற.. ஆனா அடுத்த நிமிஷம், நான் எதுக்குமே உதவாதவனா நினைக்க வைக்கிற. ஏன் இப்படி செய்ற மீரா?"
"ஏன்னா, எதுக்காக நீங்க இப்படி எல்லாம் செய்றீங்கன்னு எனக்கு புரியல. எது உங்களை திடீர்னு இப்படி மாத்துச்சு? உங்களோட இந்த மாற்றம், நிரந்தரமானது தானான்னு எனக்கு தெரியல"
"சரி, இந்த மாற்றம் நிரந்தரமானது தான்னு நான் நிரூபிச்சா, நீ என்ன செய்வ? என்னோடவே இருந்துடுவியா?"
"நிச்சயமா... நீங்க மட்டும் அப்படி செஞ்சா, என்னோட எல்லா பொருளையும் உங்க ரூமுக்கு மாத்திடுறேன்"
"நான் நிரூபிக்கிறதுக்கு முன்னாடியே, நீ அதை செய்வ பாரு" என்றான் உறுதியோடு.
தன் புருவம் உயர்த்தினாள் மீரா.
"நீ அதை நிச்சயம் செய்வ"
"பாக்கலாம்"
"இப்போ, வா போகலாம்"
"எங்க?"
"நம்ம ரூமுக்கு"
கட்டிலை விட்டு இறங்கிய அவன், அவளை தன் கையில் அள்ளிக்கொண்டு தன் அறையை நோக்கி நடந்தான். புன்னகையுடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா. அவன் மனதில் என்ன இருக்கிறது என்று அவளுக்கு புரியவில்லை. எப்படி அவன் அவளை தன் அறைக்கு வரவழைக்க போகிறான்? அவளுக்கு ஆர்வம் மிகுந்தது...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top