30 தாம்பத்தியம்

30 தாம்பத்தியம்

மீரா அணிந்திருந்த துண்டு நழுவி கீழே விழுந்ததை முகுந்தன் கவனிக்கவில்லை. அவன் கவனித்தே இருந்தாலும் கூட, அதைப்பற்றி அவன் கவலைப்பட்டிருப்பான் என்று நாம் கூறுவதற்கு இல்லை.

தன் அறைக்கு அவளை தூக்கி வந்து தன் கட்டிலில் கிடத்தினான். அவளை எழுப்புவதற்காக அவளது தோள்களை பற்ற நீண்ட அவனது கரம், அவள் அணிந்திருந்த துண்டு இல்லாததைக் கண்டு அப்படியே நின்றது. அப்பொழுது தான் அவனுக்கு *பாலியல் ரீதியான* ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. அது, அவன் ஒரு *ஆண்மகன்* என்பது. இதுவரை எந்த ஒரு பாலியல் உணர்வுக்கும் ஆடப்படாத அவனுக்கு, மீராவின் *பெண்மை* அதை நினைவூட்டியது.

தன் பார்வையை வேறு பக்கம் திருப்ப முடியாமல் திக்கு முக்காடினான் முகுந்தன். அவனது கண்களில் மினுமினுத்தாள் மீரா. *காணாததை கண்ட*  அவனுக்குள் ஏதேதோ புதிதாய் நிகழ்வதை உணர்ந்தான் அவன். இதுவரை, அவனுக்குள் இருக்கிறதா, இல்லையா என்பதே தெரியாமல் இருந்த அவனது பாலுணர்வை தூண்டும் ஹார்மோன்கள், *உள்ளேன் ஐயா* என்று கை உயர்த்தி, தங்கள் இருப்பை பதிவு செய்தன. கோவில் சிலை போல் இருந்த மீரா, அவனது நரம்புகளை முறுக்கேற செய்தாள்.

அவளைத் தொட துடித்த  தன் கை விரல்களை மடக்கி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான் முகுந்தன். சுயநினைவு இல்லாத தன் மனைவியை தொட அவன் விரும்பவில்லை. அதற்காக அவன் அவளை தொடப்போவதில்லை என்று அர்த்தம் இல்லை. அவளைத் தொட வேண்டும், அவள் கண் விழி பிறகு...! அவள் சுயநினைவின்றி இருக்கும் பொழுது எதற்காக அவளை தொட வேண்டும்? அவள் அவனது மனைவி. அவளைத் தொடும் அனைத்து உரிமையும் அவனுக்கு இருக்கிறது...! அவனால் உரிமையுடன் அவளை தொட முடியும்... அவன் தொடுவான்...!

அவனது மூளை பரபரவென வேலை செய்தது. அவர்கள் இருவரும் இணைந்து *ஒன்றானால்* அவனை விட்டு பிரிந்து செல்லும் எண்ணம் அவளுக்கு எழாது. தன்னை விட்டு விலகிச் செல்லாமல் அவளை தடுத்தாக வேண்டும். அதை செய்ய இது தான் சிறந்த உபாயம் என்று எண்ணினான் முகுந்தன்.

அவள் கண் விழிக்கட்டும். அவள் இங்கிருந்து எப்படி செல்கிறாள் என்று பார்க்கலாம். அவளை அங்கிருந்து செல்ல விடுவதில்லை, அவளை அடைந்தே தீருவது என்ற முடிவுக்கு வந்தான் அவன். நிச்சயம் மீரா அப்படி நடக்க விடமாட்டாள் என்று அவனுக்கு தெரியும். ஆனால், அவள் நடக்க விட்டு தான் ஆக வேண்டும். அதற்கு அவளை கட்டாயப்படுத்தவும் அவன் தயார்.

தனது அறையின் கதவை உள்புறமாக பூட்டி, அதன் சாவியை மீராவின் கைக்கு எட்டாத வண்ணம், தன் அலமாரியின் இழுப்பறையில் வைத்து பூட்டினான். அவள் அங்கிருந்து செல்லக்கூடாது. அவன் அவளை செல்ல விடப் போவதில்லை... அவள் *அவனுடையவள்* ஆகும் வரை...!

மீராவின் முகத்தில் தண்ணீர் தெளித்தான் முகுந்தன். மெல்ல கண் விழித்தாள் மீரா. தன் பக்கத்தில் அமர்ந்திருந்த முகுந்தனை பார்த்த பிறகு தான், அவள் அவனது அறையில் இருப்பதை கவனித்தாள். அது அவளை வியப்பில் ஆழ்த்தியது. சற்று முன் நடந்ததை நினைவு கூர்ந்தபடி எழுந்து அமர்ந்தாள். தன்னை முகுந்தன் தன் அறைக்கு கொண்டு வந்திருக்கிறானா? இது உண்மையா?

கட்டிலை விட்டு கீழே இறங்க முற்பட்டாள் மீரா. அவளது தோளை பற்றி தடுத்து நிறுத்தினான் முகுந்தன்.

"நீ பதட்டப்பட வேண்டிய அவசியமில்ல"

"ம்ம்ம்" என்றபடி மீண்டும் கீழே இறங்க முயன்றாள்.

அப்பொழுது தான், தன் அணிந்திருந்த துண்டு இல்லாததை அவள் கண்டாள். பரிதவிப்புடன் ஒரு தலையணையை இழுத்து அணைத்துக் கொண்டாள். மீண்டும் அவள் கீழே இறங்க முயன்ற போது,

"நான் சொன்னது உனக்கு புரியலையா? இங்கேயே படுத்துக்கோ" என்றான் திட்டவட்டமாக.

"இங்...கே...யா?" தடுமாறினாள்.

"இங்க தான்"

"ஏன்?" என்றாள் மெல்லிய குரலில்.

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் என்ன சொன்னேன்னு மறந்துட்டியா?"

"ஆனா, இது உங்க ரூம்... நீங்க எப்பவும் தனியா இருக்கனும்னு நெனச்ச இடம்" என்றாள் வேறு எங்கோ பார்த்தபடி.

"நான் தனியா இருக்கணும்னு நினைச்சேன் தான்... ஆனா இப்போ இல்ல"

"இல்ல, நான் போறேன்..."
 
"மீரா, என்னை கோபப்படுத்தாதே" எச்சரித்தான் அவன்.

திகைப்புடன் அவனை ஏறிட்டாள் .

"இங்கேயே இருன்னு சொன்னேன்" கட்டளையிட்டான்.

"ஏன்? இல்லன்னா என்ன செய்வீங்க?"

"என்ன வேணும்னாலும் செய்வேன்" என்றான் அமைதியாய்.

அவனை பிடித்து தள்ளி விட்டு, ஓடி சென்று கதவை திறக்க முயன்றாள் மீரா. ஆனால், அவளால் அதை திறக்க முடியவில்லை. அவனை அதிர்ச்சியுடன் ஏறிட்டாள். அவனோ, முகத்தில் எந்த பாவமும் இன்றி, அமைதியாய் அமர்ந்திருந்தான்.

"உன்னால இங்கிருந்து போக முடியாது. நான் கதவை பூட்டிட்டேன்" என்றான்.

தலையணையை கட்டிப்பிடித்துக் கொண்டு, கதவில் சாய்ந்து நின்றாள், மீரா. எதற்காக அவன் இப்படி எல்லாம் செய்கிறான்? அவளை தன் அறையில் இருத்திவைத்துக் கொள்வதற்காகவா? அதை கொஞ்சம் அன்பாய் தான் சொன்னால் என்ன?

"சாவியை குடுங்க"

"ஏன்?" கட்டிலை விட்டு எழுந்து நின்றான்.

"நான் என் ரூமுக்கு போகணும்"

"இதை உன்னோட ரூமுன்னு நினைச்சுக்கோ"

"இது என்னோட ரூம் இல்ல"

"இப்போதிலிருந்து இது தான் உன்னோட ரூம்"

தன் சட்டையின் பொத்தான்களை அவிழ்த்தவாறு அவளை நோக்கி வந்தான் முகுந்தன், தான் செய்ய இருப்பது என்ன என்பதை அவளுக்கு குறிப்பால் உணர்த்தி. மீராவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன. அவன் செய்ய முயல்வது என்ன? பயத்தில் விக்கித்து நின்றாள் அவள். அவன் உண்மையிலேயே *அதற்கு* தயாரா? அல்லது, அவளை பயமுறுத்தி பார்க்கிறானா?

தன் சட்டையை தூக்கி எறிந்து விட்டு, அவள் அருகில் வந்த முகுந்தனை மருட்ச்சியுடன் பார்த்தாள் மீரா. அவன் அவள் மீது சாய, தன் கண்களை இறுக்கமாய் மூடி கொண்டாள், அவனது வெற்றுடல்  தனக்குள் ஏற்படுத்திய பூகம்பத்தை உணர்ந்த மீரா. அவள் சிறிதும் எதிர்பார்த்திராத அவனது நெருக்கம், அவளது புத்தியை மழுங்க செய்தது.

"இந்த ட்ரெஸ்ல நீ ரொம்ப அழகா இருக்க" என்றான் அவள் கையில் இருந்த தலையணையை பிடுங்கி வீசிவிட்டு.

அவள் தன் கைகளால் தன்னை மறைத்துக் கொள்ளும் முன், அவள் கைகளை இருபுறமும் சிறைப்படுத்தி, அவளுக்கு மேலும் அதிர்ச்சியூட்டினான். அவன் செய்து கொண்டிருந்த எந்த செயலும் நம்பக் கூடியதாய் இல்லை. அவனுக்கு திடீரென என்ன ஆனது? எது அவனை இந்த அளவிற்கு நடக்கச் செய்கிறது?

"என் பொண்டாட்டிய நான் இப்படி பாப்பேன்னு நினைச்சு கூட பார்த்ததில்ல... இது ஒரு ட்ரீட்..."

திடுக்கிட்டாள் மீரா. இப்படி எல்லாம் பேசுவது உண்மையிலேயே முகுந்தன் தானா? தன் கன்னத்தை அவள் கன்னத்துடன் உரசி, அவளை கண்களை மூடச் செய்தான். ஏற்கனவே பலவீனமடைந்திருந்த மீரா, மேலும் பலவீனம் அடையாமல் இருக்க தன் கைகளை இறுக்கமாய் மூடி கொண்டாள்.

முகுந்தனின் எண்ணம் அவளுக்கு புரிந்து போனது. அவன் அவளை பயமுறுத்துவதற்காக இதையெல்லாம் செய்யவில்லை. அவர்களது உறவை, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அவன் தயாராகி விட்டான்...! அவர்கள் இன்னும் ஆட்டத்தை ஆரம்பிக்கவே இல்லை. ஆனால், அதற்குள் அவன் ஆட்டத்தையே முடிக்க நினைக்கிறான். இப்பொழுது அவள் என்ன செய்ய வேண்டும்? அவனது எண்ணம் அவளுக்கு புரிந்து விட்ட போதிலும், அதை அவள் தெளிவு படுத்திக் கொள்ள நினைத்தாள்.

"நீங்...க என்ன செய்றீங்க...ன்னு தெரிஞ்சு தான் செய்றீங்களா?"

"நான் என்ன செயறேன்னு எனக்கு நல்லாவே தெரியும். நம்ம தாம்பத்திய வாழ்க்கையை ஆரம்பிச்சி இருந்தோம்னா, இன்னொத்தரை கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் உனக்கு வந்திருக்காது. நான் அதை செய்ய தவறிட்டேன். இனிமே என்னால சும்மா இருக்க முடியாது"

திகைப்புக்கு உள்ளானாள் மீரா. அவர்களுக்குள் தாம்பத்தியத்தை துவக்கிவிட்டால், அவள் அவனை விட்டு செல்ல மாட்டாள் என்று நினைக்கிறானா முகுந்தன்? அப்படி என்றால், ஒரு பெண் மற்ற எல்லாவற்றையும் விட, தாம்பத்தியத்தை முக்கியமாய் கருதுவதாய் நினைக்கிறானா? ஒரு பெண்ணை தாம்பத்திய உறவின் மூலம் திருப்தி படுத்தவும், கட்டுப்படுத்தவும் முடியும் என்று அவன் நினைக்கிறானா? கணவனும் மனைவியும் தாம்பத்தியமே இல்லாமல் கூட சந்தோஷமாய் வாழ முடியும் என்பது அவனுக்கு புரியவில்லையா? எவ்வளவு குழந்தைத்தனமான எண்ணம்?

இருக்கட்டும்... தாம்பத்திய உறவால் ஆகிவிடக் கூடியது எதுவும் இல்லை என்று காட்டி விட வேண்டியது தான். அவனது செயலை ஏற்க தயாரானாள் மீரா... ஒரு பெண்ணின் மனதில், தாம்பத்தியம் எந்த மாற்றத்தை ஏற்படுத்தி விடாது என்பதை அவனுக்கு புரிய வைக்க...!

அவள் சுதாகரிக்கும் முன், அவளை தன் தோளில் தூக்கிச் சென்று கட்டியில் கிடத்தினான். அவனது செயலுக்கு அவள் தயார் தான் என்றாலும், அவன் பெரிதாய் எதையும் தொடங்கும் முன், அதை தடுக்க முயன்றாள். ஆனால், அந்த சந்தர்ப்பத்தை அவன் அவளுக்கு வழங்கவில்லை. அடுத்த நொடி அவள் மீது சரிந்து, முழுதாய் அவளை கையகப்படுத்தினான். தன் தொடுதலால் அவளைக் கொன்று, தானும் ஒவ்வொரு கணமும் செத்து பிழைத்தான்.

அவனது செயலில் எந்த தயக்கமும் இல்லை. தான் ஒளிந்திருந்த கூட்டை அவன் எப்படி உடைத்தான் என்று புரியவில்லை மீராவுக்கு. அவன் தொடுதல் தந்த பெயர் கூற முடியாத புதிய உணர்வுகள், அவளை தன்னிலை இழக்க செய்தன. தன் கணவன் மீது அளவற்ற காதலில் திளைத்த மீரா, அவனது செயலை தடுக்கும் சக்தியை அறவே இழந்தாள்.

அப்பொழுது, அவள் தன் உடைக்குள் மறைத்து வைத்திருந்த தாலி அவன் கண்களில் பட்டது. அதை பார்த்த முகுந்தன் திகைத்துப் போனான். மீராவோ எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. அவள் இன்னும் அந்த தாலியை அணிந்து கொண்டு தான் இருக்கிறாளா? எதற்காக இந்த பெண் இப்படி எல்லாம் செய்கிறாள்? இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? அவளுக்கு இந்த உறவு வேண்டும் என்றால், எதற்காக நந்தகோபாலின் காதலை ஏற்க வேண்டும்? இவளுக்கு என்ன தான் பிரச்சனை? இப்பொழுது கூட, அவன் முன் எப்படி தன்னிலை மறந்து, தன்னை முழுவதும் அர்ப்பணித்து கிடக்கிறாள்...! பிறகு ஏன் வேறு ஒருவரை மணந்து கொள்ள தயாரானாள்?

எது சரி, எது தவறு, எது நியாயம் எது தர்மம் என்றெல்லாம் சிந்திக்கவில்லை முகுந்தன். அவனுக்கு வேண்டியதெல்லாம் அவனது மனைவி அவனுடன் இருக்க வேண்டும் என்பது மட்டும் தான். மீராவோ எதையும் பற்றி சிந்திக்கும் நிலையிலேயே இல்லை. அவள் தன்னை முழுமனதோடு அர்ப்பணித்தாள் என்று தாராளமாய் கூறலாம். வாழ்க்கை போகிற போக்கில் செல்ல தயாராய் இருந்த அவள், இப்பொழுதும் அதைத்தான் செய்தாள்.

முகுந்தன் தன்னை கட்டி வைத்திருந்த அத்தனை முடிச்சுகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன. அவனை எதை செய்யவும் தடுக்கவில்லை மீரா. வார்த்தைகளால் தன் காதலை கூற தயங்கிய அந்த மனிதன், தன் செயல்களால் அதை விவரித்துக் கொண்டிருந்தான். பெண் என்பவள் தன் வாழ்க்கைக்கு தேவையற்றவள் என்று எண்ணிக் கொண்டிருந்த அவன், தனது உணர்ச்சிகளை பற்றி அன்று தான் தெரிந்து கொண்டான்... ஏன், தனக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை அவன் அன்று தான் புரிந்து கொண்டான்.

தன் மனைவியை முழுதாய் தனதாக்கிக் கொள்ளும் செயலில் தீவிரமாய் இறங்கினான். அந்த சந்தர்பத்தை தவறவிட அவன் தயாராக இல்லை. இப்படி ஒரு சந்தர்ப்பம் அவனுக்கு மறுபடி கிடைக்குமோ தெரியாது.

மீராவிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. அவளுக்கு ஒரு விஷயம் தான் புரியவே இல்லை. யாருமே வேண்டாம் என்று தனிமை கூட்டில் ஒளிந்து வாழ்ந்த அவனுக்கு, இந்த விஷயத்தில் எப்படி இவ்வளவு தெளிவு இருக்கிறது?

மீராவை அடைய, தான் மிகவும் பிரயத்தனப்பட வேண்டும் என்று எண்ணியிருந்தான் முகுந்தன். ஆனால் அவளோ வெண்ணை போல் வழுக்கி கொண்டு வந்து அவன் மடியில் விழுந்து விட்டாள். தான் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே மீரா தன்னை காதலிப்பதை அவன் அன்று புரிந்து கொண்டான். இல்லாவிட்டால் அவள் தன்னை தொட விட்டிருப்பாளா? மீராவிடமிருந்து அவன் அந்த நிமிடம் பெற்ற அனுபவம், அவனை அடிமையாக்கி கொண்டிருந்தது. மீரா வின் பெயரை தன்னை மீறி முணுமுணுத்தான் அவன்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவன் உதிர்த்த அவளது பெயர், மீராவின் கண்களை கலங்கச் செய்தது. அவள் மீது சரிந்து விழுந்தான் முகுந்தன். அவளால் நம்பவே முடியவில்லை, அவர்களது தாம்பத்தியம் பூர்த்தி அடைந்து விட்டது என்பதை. முகுந்தன் தானாகவே முன்வந்து இப்படி ஒரு அடியை எடுத்து வைப்பான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை, அதுவும் அவளது சம்மதம் இன்றி...! அவனுக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்ததோ என்று உள்ளுக்குள் புன்னகைத்தாள் மீரா.

"நமக்குள்ள இப்போ நடந்ததை நினைக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றான் முகுந்தன் அவள் காதில்.

ஆனால், மீராவின் அடுத்த வார்த்தைகள் அவனை அதிர்ச்சி அடைய செய்தன.

"உங்க வேலை முடிஞ்சிடுச்சுன்னா, நான் என்னுடைய ரூமுக்கு போகலாமா?"

தன் தலையை உயர்த்தி அவளை அதிர்ச்சியோடு ஏறிட்டான் முகுந்தன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top