27 நிச்சயதார்த்தம்
27 நிச்சயதார்த்தம்
தரையில் சிதறி கிடந்த ரோஜா பூ இதழ்களை கண்டாள் மீரா. அதை செய்தது நிச்சயம் முகுந்தனாகத் தான் இருக்கும் என்று அவளுக்கு தெரியும். ஜெகதீஷுடனும், நந்தகோபாலுடனும் அவள் பேசுவது அவனுக்கு பிடிக்கவில்லை என்பதும் அவளுக்கு தெரியும். வைஷ்ணவி நந்தகோபாலை காதலிக்கிறாள். நந்தகோபால் மீராவுக்கு பூ கொடுப்பதை வைஷ்ணவி பார்த்தால், தவறாக எண்ண கூடும். அதனால், மீரா நந்தகோபாலை கைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்தாள். அந்த அழைப்பை உடனடியாய் ஏற்றான் நந்தகோபால்,
"சொல்லுங்க மீரா" என்றான்.
"நீங்க கொஞ்சம் என் கேபினுக்கு வர முடியுமா?"
"நிச்சயம் வரேன். ஏதாவது முக்கியமான விஷயமா?"
"முக்கியமான விஷயம் தான்"
"சரி" என்று அந்த அழைப்பை துண்டித்து விட்டு மீராவின் அறைக்கு வந்தான் நந்தகோபால்.
"எதுக்கு என்னை வர சொன்னீங்க, மீரா?"
"உங்ககிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்" என்றாள் தாழ்ந்த குறலில்.
"சொல்லுங்க" என்று அவள் முன்னாள் இருந்த இருக்கையில் அமர்ந்தான் நந்தகோபால்.
"உங்களை ஒரு பொண்ணு ரொம்ப சின்சியரா, உண்மையா லவ் பண்ணா என்ன செய்வீங்க?" என்றாள் மீரா அவன் முகபாவத்தை கவனித்தவாறு.
அதை கேட்ட நந்தகோபால், வியப்பில் ஆழ்ந்தான். அவனை ஒரு பெண் காதலிக்கிறாளா?
"நீங்க என்ன நினைக்கிறீங்க, மீரா?"
"எனக்கு தெரியல. அதனால தான் நேரடியா உங்ககிட்டயே கேட்டுட்டேன். நீங்க அவளை ஏத்துக்குவீங்களா?"
"என்னை காதலிக்கிறது யாருங்கிறதை பொறுத்து அதை நான் முடிவு செய்வேன். அவளை எனக்கு பிடிச்சிருந்தா, நிச்சயம் ஏத்துக்குவேன்.
"அவ ரொம்ப நல்ல பொண்ணு, நந்தா"
"உண்மையிலேயே அந்த பொண்ணு என்னை உண்மையா காதலிக்கிறாளா?" என்றான் வியப்புடன்.
ஆமாம் என்று தலையசைத்தாள் மீரா.
"யார் அந்த பொண்ணு?"
"வைஷ்ணவி.."
"என்னது? வைஷ்ணவியா?" என்று அவன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான்.
"ஆமாம். அவ உங்களை ரொம்ப காதலிக்கிறா"
"உங்களுக்கு எப்படி தெரியும்?"
"அவ தான் என்கிட்ட சொன்னா"
"அவளே சொன்னாளா?"
"ஆமாம். நீங்க முடியாதுன்னு சொல்லிட்டீங்கன்னா, அவ ரொம்பவே உடைஞ்சி போயிடுவா"
"ம்ம்ம்"
"வேண்டிய டைம் எடுத்து, யோசிச்சு உங்க முடிவை சொல்லுங்க, நந்தா"
"நான் என்ன செய்யணும்னு நீங்க நினைக்கிறீங்க?"
"இது உங்களோட வாழ்க்கை. நான் உங்ககிட்ட சொல்றதெல்லாம் ஒன்னு தான். அவ ரொம்ப நல்ல பொண்ணு"
"சரி, அவளை கூப்பிடுங்க"
"என்னனது?"
"அவளை கூப்பிடுங்கன்னு சொன்னேன்"
"ஆனா..." என்று மீரா தயங்கினாள்.
"எதுக்காக பயப்படுறீங்க, மீரா?"
"ப்ளீஸ், ஏதாவது சொல்லி, அவ மனசை கஷ்டப்படுத்திடாதீங்க"
"சத்தியமா அவ மனசை நான் கஷ்டப்படுத்த மாட்டேன்"
சரி என்று தலைகசித்துவிட்டு தன் கைபேசியை எடுத்து வைஷ்ணவியை அழைத்தாள் மீரா.
"சொல்லு, மீரா"
"என்னோட கேபினுக்கு வா, வைஷ்ணவி"
"ஏன், மீரா?"
"வான்னா வாயேன்" என்று அழைப்பை துண்டித்தாள் மீரா.
மீராவின் அறைக்கு வந்த வைஷ்ணவி, அங்கு நந்தகோபால் இருந்ததை பார்த்து திகைத்தாள். மீராவை பார்த்த அவள், தன் கண்களால், *என்ன விஷயம்?* என்று கேட்டாள்.
"நான் கேள்வி பட்டது உண்மையா?" என்றான் நந்தகோபால் வைஷ்ணவியிடம்.
"என்ன கேள்வி பட்டீங்க?" என்றாள் வைஷ்ணவி தயக்கத்துடன்.
"நீ யாரையோ காதலிக்கிறியாமே?" என்று வேண்டுமென்றே கேட்டான் நந்தகோபால்.
"யாரையோவா?" என்றாள் ஏமாற்றத்துடன்.
"ஆமாம், மீரா சொன்னாங்க நீ யாரையோ காதலிக்கிறேன்னு"
மீராவை அதிர்ச்சியுடன் பார்த்தாள் வைஷ்ணவி.
"நீ ரொம்ப டீப்பா ஒருத்தரை லவ் பண்ற தானே?" என்றாள் மீரா.
"இதைப் பத்தி நீங்க ஏன் என்கிட்ட கேக்குறீங்க?" என்றாள் வைஷ்ணவி நந்தகோபாலிடம்.
"நான் உன்னை ப்ரொபோஸ் பண்ணலாம்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். மீரா சொன்னாங்க, நீ யாரையோ காதலிக்கிறேன்னு. ஆனா அது யாருன்னு மட்டும் சொல்லல. உன்கிட்ட நேரடியா கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு தான் வர சொன்னேன்"
"நீங்க என்னை ப்ரொபோஸ் பண்றதா இருந்தீங்களா?" என்றாள் வைஷ்ணவி ஆர்வத்துடன்.
"ஆமாம். அப்படித் தான் நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா நீ தான் வேற யாரையோ காதலிக்கிறீயாமே..."
"இல்ல... ஐ மீன் ஆமாம்... நான் காதலிக்கிறது வேற யாரையும் இல்ல... உங்களை தான்" என்றாள் அவசரமாக.
அதைக் கேட்டு, மீராவும் நந்தகோபாலும் சிரிக்க, அவர்களை விசித்திரமாய் பார்த்தாள் வைஷ்ணவி.
"அவ உங்களை காதலிக்கிறாள்னு நான் உங்ககிட்ட சொன்னேன்ல?" என்றாள் மீரா.
"ஆமாம் நீங்க சொன்ன போது நான் நம்பல" என்றான் நந்தகோபால்.
அவர்களது நாடகத்தைப் புரிந்து கொண்டு, வெட்க புன்னகை பூத்தாள் வைஷ்ணவி. நந்தகோபால் அங்கிருந்து செல்ல முயன்ற போது, மீராவை தவிப்புடன் ஏறிட்டாள் வைஷ்ணவி.
"நந்தா, நீங்க செய்றது கொஞ்சம் கூட நியாயமே இல்ல. அவளை இங்க வர சொல்லிட்டு, எதுவுமே சொல்லாம இங்கிருந்து போனா என்ன அர்த்தம்?"
அவன் என்ன கூற போகிறான் என்ற எதிர்பார்ப்புடன் நின்றிருந்த வைஷ்ணவியை ஏறிட்ட நந்தகோபால்,
"எனக்கு அவளை பிடிக்கும். ஆனாலும் எனக்கு இரண்டு நாள் டைம் வேணும்" என்றான்.
வைஷ்ணவி சரி என்று தலையசைக்க, அங்கிருந்து சென்றான் நந்தகோபால். மீராவை தாவி அணைத்துக் கொண்டாள் வைஷ்ணவி.
"தேங்க்யூ சோ மச் மீரா, நீ என்னோட பாதி பிரச்சனையை தீத்துட்ட..."
"யூ ஆர் வெல்கம்" என்று நிம்மதி புன்னகை சிந்தினாள் மீரா.
மதிய உணவு இடைவேளை
வைஷ்ணவியும் ஸ்ரேயாவும் வருவதற்காக, தனது உணவு டப்பாவுடன் கேன்டினில் காத்திருந்தாள் மீரா. அப்போது ஸ்ரேயா மட்டும் வந்தாள்.
"வைஷ்ணவி எங்க?" என்றாள் மீரா.
"அவ நந்தகோபாலை பார்க்க போயிருக்கா"
"எதுக்கு?"
"அவர், அவகிட்ட ஏதோ பேசணும்னு சொன்னாராம்"
"ஓஹோ"
"பை தி வே, மீரா, நாளைக்கு என்னோட நிச்சயதார்த்தம்" என்றாள் ஸ்ரேயா.
சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, அவளை திகைப்புடன் ஏறிட்டாள் மீரா.
ரெண்டு நாளைக்கு முன்னாடி, மாப்பிள்ளை வீட்ல இருந்து என்னை பார்க்க வந்திருந்தாங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் எங்க அம்மா கால் பண்ணி, அவங்களுக்கு என்னை பிடிச்சதாகவும், நாளைக்கு சிம்பிளா நிச்சயதார்த்தம் பண்ணிக்கலாம்னு சொன்னதாகவும் சொன்னாங்களாம். நீங்க நிச்சயம் என் நிச்சயதார்த்தத்துக்கு வரணும்"
சில வினாடிகள் திகைத்தாள் மீரா. ஏனென்றால், நாளை ஜெகதீஷின் பிறந்தநாள். அவனும் அவளை தன் பிறந்தநாள் விழாவுக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறான். ஆனால் பிறந்த நாளை அடுத்த வருடம் கூட கொண்டாடிக் கொள்ளலாம். ஆனால் நிச்சயதார்த்தம் அப்படியல்ல. அது சிறப்பு வாய்ந்தது. அதனால்,
"நான் நிச்சயம் வரேன்" என்றாள் மீரா.
"தேங்க்யூ"
"உங்க உட்பி என்ன செய்றாரு?"
"மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் வேலை செய்றாரு"
"தட்ஸ் கிரேட்"
ஆமாம் என்று தலையசைத்த ஸ்ரேயா,
"பை தி வே, முகுந்தனோட வைஃப் யாருன்னு நான் தெரிஞ்சுகிட்டேன்" என்றாள் மெல்லிய குரலில்.
திகிலுடன் அவளை ஏறிட்டாள் மீரா. அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவு, அவள் தொண்டையில் சிக்கிக் கொண்டது.
"எனக்கு தெரிஞ்ச வரைக்கும், முகுந்தன் எதுக்காகவும் ஆத்திரப்பட்டதே இல்ல. ஆனா அபராஜித் உங்ககிட்ட தப்பா நடந்துக்கும் போது, அவர் ஆத்திரம் எல்லை மீறிப் போனதை நான் பார்த்தேன். அந்த நிமிஷமே நான் அலர்ட் ஆனேன். அடுத்த நாளே, அவரோட ஒய்ஃப் யாருன்னு பாக்க உங்க அப்பார்ட்மெண்டுக்கு வந்தேன். அப்போ தான், அவரோட ஒய்ஃப் வேற யாரும் இல்ல, நீங்க தான்னு தெரிஞ்சுகிட்டேன்"
மீரா தலை குனிந்தாள்.
"எனக்கு உங்க மேல எந்த வருத்தமும் இல்ல. அவரோட வைஃப் யாருன்னு உங்களையே கண்டுபிடிக்க சொன்னதுக்கு என்னை மன்னிச்சிடுங்க. நான் உங்களை ரொம்ப சங்கட படுத்திட்டேன்"
மீராவுக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை.
"இன்னைக்கு காலையில, நீங்க அவர் கூட கார்ல வந்ததை பார்த்தேன். நீங்க ஒரு தூணுக்கு பின்னால ஒளிஞ்சிக்கிட்டீங்க. நீங்க அவர் கூட அங்க இல்லாததால, அவரு பயங்கர கடுப்பாயிட்டாரு. நீங்க ரெண்டு பேரும் ஏதோ மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்ல இருக்கீங்கன்னு நினைக்கிறேன். முகுந்தனை புரிஞ்சுக்கிறது அவ்வளவு சுலபம் இல்லை தான். ஆனா, முடியவே முடியாதது ஒன்னும் இல்ல. அவர் முன்னாடி எப்படி இருந்தார்னு எனக்கு தெரியும். ஆனா நீங்க அவர் வாழ்க்கையில் வந்ததுக்கு பிறகு, அவர்கிட்ட நான் நிறைய மாற்றங்களை பாக்குறேன். எதுவா இருந்தாலும் வர்றதை ஏத்துக்கோங்க. அவர்கிட்ட எதையும் எதிர்பாக்காதீங்க, மீரா. ஏன்னா, அவர் நம்மளை மாதிரி இல்ல. அவர் மனசுல இருக்கிறதை சொல்ல மாட்டாரு, வாயை திறந்து பேச மாட்டார், தன்னுடைய உணர்வுகளை வெளி காட்ட மாட்டார், ஏன்னா அவர் அப்படித் தான். நீங்க உங்க வாழ்க்கையையே அவர்கிட்ட கொடுத்து இருக்கீங்க. உங்க வாழ்க்கையில நீங்க ஜெயிக்கணும்னா, நீங்க கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஆகணும். அதனால தான் நான் இதையெல்லாம் உங்க கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கேன். நீங்க அவரை விட்டு விலகிப் போனா, அவர் தன்னோட பொறுமையை இழந்துடுவாரு. ஏன்னா, வாழ்க்கையிலேயே முதல் முறையா, அவருக்கு ஒரு விஷயம் பிடிச்சிருக்கு... உங்களை பிடிச்சிருக்கு. அவர் ஆசைப்பட்டது கிடைக்கலன்னா அவர் அதை தாங்க மாட்டார். அவரை ஏத்துக்கோங்க மீரா"
மெல்லிய புன்னகையுடன் தலையசைத்தாள் மீரா, தன் சங்கடத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல்.
"அடுத்த வாரத்தில் இருந்து நான் ஆஃபீஸுக்கு வரமாட்டேன்" என்றாள் ஸ்ரேயா.
"ஆனா ஏன்?"
"என்னோட வுட் பி ஹஸ்பண்டுக்கு நான் வேலை செய்றதுல விருப்பம் இல்ல. நான் ஹவுஸ் ஒய்ஃபா இருக்கணும்னு அவர் விரும்புறாரு"
"உங்ககிட்ட உண்மையை மறைச்சதுக்கு என்னை மன்னிச்சிடுங்க ஸ்ரேயா"
"என்னால புரிஞ்சுக்க முடியுது... உங்க இரண்டு பேருக்கும் இடையில ஏதோ பிரச்சனை இருக்கு... கவலைப்படாதீங்க, இதெல்லாம் நிலையானது இல்ல. சீக்கிரமே எல்லாம் மாறும்"
"தேங்க்யூ
"என்னோட நிச்சயதார்த்தத்துக்கு வருவீங்க இல்ல?"
"நிச்சயமா வருவேன்"
"நான் நாளைக்கு ஆஃபீசுக்கு வரமாட்டேன். நீங்க வைஷ்ணவியோட சேர்ந்து எங்க வீட்டுக்கு வாங்க"
"சரி. ஆனா தயவு செய்து இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்லாதீங்க"
"நீங்க தான் மிஸ்ஸஸ் முகுந்தன்னு நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்"
"தேங்க்யூ சோ மச்"
தலையசைத்து விட்டு அங்கிருந்து சென்றாள் ஸ்ரேயா. பெருமூச்சு விட்டாள் மீரா. இந்த பெண்ணுக்குத் தான் எவ்வளவு உயர்ந்த மனது...! எதார்த்தத்தை எவ்வளவு அழகாய் ஏற்றுக்கொண்டு விட்டாள்...! பாவம் அவள், இதில் அவளுடைய தவறு என்ன இருக்கிறது? அவள் முகுந்தனை காதலித்தாள். ஆனால் விதி அவள் பெயரை முகுந்தனோடு இணைத்து எழுதியிருக்கிறது.
சாப்பிட்டு முடித்துவிட்டு, ஜெகதீஷின் அறைக்கு வந்தாள் மீரா.
"வாங்க மீரா"
"என்னை மன்னிச்சிடுங்க ஜெகதீஷ். நாளைக்கு உங்க பர்த்டேவுக்கு என்னால வர முடியாது"
"ஏன் மீரா?"
"நாளைக்கு ஸ்ரேயாவுக்கு நிச்சயதார்த்தம். அவங்க என்னை கூப்பிட்டு இருக்காங்க"
"ஓ... நாளைக்கு ஸ்ரேயாவுக்கு நிச்சயதார்த்தமா?" என்றான் ஜெகதீஷ் ஆச்சரியத்துடன்.
ஆம் என்று தலையசைத்தாள் மீரா.
"அவங்க நிச்சயதார்த்தம் முடிஞ்ச பிறகு, நீங்க என்னோட பர்த்டே பார்ட்டிக்கு வரலாமே...?"
"இல்ல ஜெகதீஷ், அதுக்கு நிறைய டைம் ஆகும். என்னால் வீட்டுக்கு லேட்டா போக முடியாது"
"சரி, ஆனா, தயவு செய்து வர ட்ரை பண்ணுங்க" என்றான்.
சரி என்று தலையசைத்து விட்டு அவன் அறையை விட்டு வெளியே வந்த மீரா, வைஷ்ணவி சந்தோஷமாய் வருவதை பார்த்தாள்.
"என்ன ஆச்சு? குதூகலமா இருக்க?"
"நந்து என்னோட ப்ரொபோசலை அக்செப்ட் பண்ணிட்டாரு"
"நெஜமாவா? ஆனா ரெண்டு நாள் டைம் வேணும்னு கேட்டாரே..."
"என்னோட ஆர்வத்தை பார்க்கத்தான் அப்படி சொன்னாராம்"
"அப்படியா? சூப்பர்" என்று சிரித்தாள் மீரா.
"நாளைக்கு நீ வர்ற தானே?" என்றாள் வைஷ்ணவி.
"நிச்சயம் வருவேன். அது எப்படி நான் வராம போவேன்?" என்றாள் மீரா.
"நம்ம ஆஃபீஸ்ல இருந்து நேரா போயிடலாம், என்ன சொல்ற?"
"அப்படின்னா நான் ஆபீசுக்கு புடவையை கொண்டு வந்துடறேன். நம்ம இங்கேயே டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கிட்டு போகலாம்"
"குட் ஐடியா" என்றாள் வைஷ்ணவி.
"சரி, இந்த பிளான்ல ஏதாவது சேஞ்ச் இருந்தா எனக்கு சொல்லு"
"சரி" என்று அங்கிருந்து சென்றாள் வைஷ்ணவி.
அவர்கள் பேசுவதை முகுந்தன் கேட்டுக் கொண்டிருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை. மீராவும் வைஷ்ணவியும் ஸ்ரேயாவின் நிச்சயதார்த்தத்திற்கு செல்வது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். ஸ்ரேயாவின் நிச்சயதார்த்தம் பற்றி அறியாத முகுந்தன், அவர்கள் இருவரும் ஜெகதீஷின் பிறந்தநாள் பார்ட்டிக்கு செல்வதாய் நினைத்துக் கொண்டான். ஜெகதீஷின் பிறந்த நாளுக்கு மீரா செல்வது முகுந்தனுக்கு பிடிக்கவில்லை. வாசுதேவன் ஜெகதீஷிடம் கேட்டது அவன் நினைவுக்கு வந்தது. அவன் எப்போது மீராவிடம் தன் காதலை கூற போகிறான் என்று வாசுதேவன் கேட்டான் இல்லையா? ஒருவேளை, அதை தன் பிறந்த நாளில் ஜெகதீஷ் செய்ய திட்டமிட்டு இருக்கிறானோ? சினிமாவில் வரும் கதாநாயகன் போல் தன் காதலை அவன் மீராவிடம் கூறினால் என்ன செய்வது? அதற்கு மீராவின் பதில் என்னவாக இருக்கும்? அவனை ஏற்றுக் கொண்டு விடுவாளா? பெயர் அறியாத ஒரு பதற்றம் அவனை தொற்றிக் கொண்டது. அவனது பிறந்தநாளுக்கு செல்லாமல் மீராவை எப்படி தடுப்பது? அவனுக்கு புரியவில்லை. அன்று மாலை அதைப் பற்றி மீராவிடம் பேசுவது என்று தீர்மானித்தான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top