4
ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் தினமும் ஜான்வியும் அவளின் நண்பர்களும் அந்த bakeryக்கு சென்று லெமன் டீ குடிக்கிறேன் என்று ஒரு மணி நேரம் கலாட்டாக்கள் செய்ய கெளதம் என்றாவது தோன்றினால் அங்கு அவர்கள் செல்லும் நேரத்திற்கு அந்த bakeryயில் ஆஜராகி விடுவான் அவர்கள் கவனிக்காதவாரு .
அவள் செய்யும் குறும்பு தனங்கள் அவனை பொறுத்த வரை ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்ட்டராக இருந்தது அவ்வளவே .ஆதலால் வேலை பளு அதிகமாக தோன்றும் நிலையில் அந்த பேக்கரியில் சென்று நிற்பான் .இந்த வாரத்தில் இரண்டு முறை நின்று பார்த்திருக்கிறான் .எனில் அவளை பற்றி அறியவும் முற்பட்டதில்லை அவள் எங்கு வசிக்கிறாள் என்றும் அறிய முற்பட்டதில்லை .அது தனக்கு தேவை அற்றது என்று எண்ணம் அவனிற்கு.
அன்று காலை வழக்கம் போல் அவர்கள் புதுப்பிக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்றவன் மேற்பார்வை பார்த்தபடி அந்த இடத்தை வளம் வந்து கொண்டிருந்தான்.
அவன் வரும் வரை யாரும் வேலை செய்தனரோ என்னவோ அவன் வந்த வுடன் பேசுவது சிரிப்பது அனைத்தையும் மூட்டை கட்டி வைத்தவர்கள் தங்கள் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டனர் .கெளதம் அலுவலக வேலைகளை பொறுத்த வரை மிகவும் கோபக்காரன் .
சென்னையில் அவன் வேலை பார்க்கும் அலுவலகத்தில் இருப்பவர்கள் அனைவருமே கௌதமின் கீழ் வேலை பார்க்க போகிறார்கள் என்று தெரிந்தாலே அலறி ஓடுவார்கள் .யார் என்ன வென்று பார்க்கவே மாட்டான் எரிந்து விழுவான் .தன்மையாக பேசுவதென்றால் என்னவென்று கேட்கும் ரகம்.பெங்களூரில் அவன் வந்த ஒரே வாரத்தில் அங்கு வேலைபார்ப்பவர்கள் அனைவரும் அவனை கண்டு பயப்படும் நிலையில் வைத்திருந்தான் .
பார்த்துக்கொண்டே வந்தவன் அங்கு கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு பகுதிக்கு வந்தான் .ஏதோ தவறாக பட அங்கிருந்த தன் அசிஸ்டன்ட் என்ஜினீயர் ஒருவனை அழைத்தான் "ராகுல் "என்று
அவனோ மனதில் செத்தோம் என்று நினைத்தவாறே அவன் அருகில் வர நினைத்தவாறே அவன் புறம் கனலாய் திரும்பியவன் "நா பிளான்ல என்ன போட்டு குடுத்தா நீங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்க ?"என்று
வினவ ராகுலோ நாவு தந்தியடிக்க "அது அது சார் "என்க
கௌதமோ "என்ன... என்ன.... வேலைல கவனம் இருந்தா தான வேலை ஒழுங்கா நடக்கும் உங்க கவனம் வேற எங்கயோ இருந்தா ?இந்த கருமத்தை பண்றதுக்கு தான் கம்பெனில கை நீட்டி மாசா மாசம் காசு வாங்குறீங்களா "என்று அங்கே அவனை தாண்டி சென்ற பெண்களை கண்களால் சுட்டி காட்டியபடி கூற
ராகுலோ மனதில் "சைட் அடுச்சது ஒரு குத்தமாடா ?"என்று நினைத்துக்கொண்டான் வெளியே சொன்னால் தான் கடித்து குதறிவிடுவானே .
அவனை பார்த்த கெளதம் "இனி இப்டி ஏதாச்சு தப்பு நடந்துச்சு வார்ன் பண்ணிக்கிட்டுலாம் இருக்க மாட்டேன் மெமோ குடுத்துருவேன் do யூ understand ?"என்று கேட்க
ராகுலின் தலையோ வேக வேகமாய் மேலும் கீழும் ஆடியது அவனை பார்த்து "you may go now " என்று கூறியவன் அடுத்த ஆளை திட்ட சென்று விட்டான் .
ராகுலோ வியர்வையை துடைத்தவன் "ஷோபா கூட்டிட்டு வந்துருக்கானுங்க பாரு சென்னைல இருந்து.தமிழன் வாரான் ப்ரொஜெக்ட்டுக்குனு சொன்னதும் சந்தோஷப்பட்டேன் நம் இனமாச்சேன்னு . இப்படியா ஒருத்தன் கோபப்படுவான்?இவன் பொண்டாட்டி பாவம்டா சாமி "என்று நினைத்தவன் அவன் செய்த பிழையை சரி செய்ய சென்று விட்டான் .
அவன் கத்தியதை பார்த்து வாக் spaceil அங்கு நடந்து கொண்டிருந்த சில பெண்களும் அவன் கம்பீர தோற்றத்தை பார்த்து சில பெண்களும் அவனை கவனிக்க அவனோ அவர்களை நோக்கி கனல் கக்கும் பார்வையோடு திரும்பியவன் "what ?" என்று சைகை செய்ய அனைவரும் தலை தெறிக்க ஓடி விட்டனர் .
இங்கு ஜான்வியின் அலுவலகத்திலோ கருமமே கண்ணாயினாறாய் அனைவரும் வேலை செய்து முடிக்க அன்று ஒரு மணி நேர லஞ்ச் பிரேக்கில் அவர்கள் டீம் மாதேஷ் அனைவரையும் அரை மணி நேரத்தில் உண்டு விட்டு ஒரு tabelil கூட சொல்லி இருந்தாள் திவ்யா .
அனைவரும் உண்டு விட்டு அவள் கூறியதை போல் அமர்ந்திட திவ்யாவோ "ஓகே guys இது நார்மலா எல்லா fresher குரூப்க்கும் நாங்க வைப்போம் join பண்ண ஒரு வாரத்துல .அவங்களுக்குள்ள ஒரு friendship வரணும்னு ஒரு ஐஸ் பிரேக்கிங் மாறி .இங்க நம்ம டீம்ல already நல்ல பாண்டிங் இருக்கு பட் தென் திஸ் will be fun என்றவள் truth or dare விளையாடுவதற்காக ஒரு காலி bottleலை சுற்றினால் .கூறியதை போல் கலாட்டாக்களோடு அந்த விளையாட்டு செல்ல கடைசி சுற்றில் மாட்டிக்கொண்டது ஜான்வியும் ப்ரவீனும் .
மாட்டிகிட்டியா என்று நினைத்தவன் அங்கு இருந்த பத்ரி என்ற தெலுகு பையனை காட்டி "ஜான்வி இப்போ நீ அவனுக்கு ப்ரொபோஸ் பண்ணனும் அதுவும் அலைப்பாயுதே ஸ்டைலில் "என்க
அவளோ பேந்த பேந்த முழித்தாள் .ஜான்வி "முடியவே முடியாது ப்ரொபோஸ்லாம் பண்ணவே முடியாது "என்க
ப்ரவீனா "நீ இப்போ பண்ணா நா அவனுக்கு translate பண்ண மாட்டேன் இல்ல நீ நார்மலா பேசுறதையும் தப்பு தப்பா translate பண்ணிருவேன் "என்க
அவளோ "அட துரோகி "என்று நினைத்தவள் அவனின் முன்பு போய் நின்றாள் பின் "தோ பாரு நீ அழகா இருக்கனுலாம் நினைக்கல (ஏன்னா நீ இல்ல )உன்ன லவ் பண்ணனும்னு நா நினைக்கல (எவனையும் நினைக்கல )ஆனா இதெல்லாம் நடந்துருமோனு பயமா இருக்கு (கண்றாவி )"என்று பாதியை சத்தமாகவும் இடை இடையில் சத்தமில்லாமல் கூறி முடிக்க அவனோ என்ன சொல்கிறாள் என்றே தெரியாமல் சிரித்துக்கொண்டிருந்தான் .
அதன் பின் அனைவரும் களைந்து செல்ல அன்றைய நாளும் முடிவிற்கு வந்தது .ஜான்வி அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டிருக்க அவளின் இடத்தில வந்து நின்றான் பத்ரி .திடீரென்று திரும்பியதும் அவனை பார்த்தவள் "அம்மா பேய்"என்று சற்று பின்னால் நகர அவனோ ஈஈ என்று இளித்துக்கொண்டிருந்தான் .
ஜான்வியோ மனதில் இந்த வெள்ளகொரங்கு ஏன் நம்மள பாத்து இளிக்குது என்று நினைத்தவள் வெளியே தானும் மெல்லமாய் சிறிது வைக்க
அவனோ "ஜான்வி நுவ்வு தெலுகு கதா.அதி...நேனு நு resumelo சூசி full நேம் ஜான்வி ரெட்டின்னு உந்தி.மல்லி..... மாதேஷ் நா தோ செப்பிந்தி ஆ டயலாக் மீனிங் ஒக்கா. (நீ தெலுங்கு தானே.அது நான் உனது resume இல் பார்த்தேன் ஜான்வி ரெட்டி என்றிருந்தது.அப்றம் மாதேஷ் என்னிடம் அந்த வசனத்தின் அர்த்தத்தை கூறினான் ) "என்று என்னவோ தெலுங்கில் பிதற்றியபடி இருக்க
அவளோ அவன் என்ன கூறுகின்றான் என்றே புரியாமல் பேந்த பேந்த பார்த்துக்கொண்டிருந்தாள்.பின் நிறுத்து என்பதை போல் கையை காட்டியவள் "நல்லா தெலுகு பேச தெரிஞ்ச உனக்கு அதை யார்கிட்ட பேசணும்னு தெரியலையே டா."என்றவள் அவன் அவள் என்ன கூறினாள் என்று தெரியாமல் முழிக்கும் நேரம் வெளியேறி ஜீவிதா மற்றும் ப்ரவீனுடன் சேர்ந்துகொண்டாள்.
ஜான்வி "இந்த பத்ரி கொரங்கு ஏன்டி இப்டி இளிச்சுட்டு வந்து நிக்குது என் முன்னாடி "என்க
இருவருமோ அடக்க மாட்டாமல் சிரித்தவர்கள்"அதுவா ஒன்னும் இல்ல டி சும்மா நீ சொன்ன டயலாக் ஓட அர்த்தத்தை அவன் கிட்ட மாதேஷ் சொல்லிட்டான் அதோட effectaah இருக்கும்."என்று கூற
ஜான்வியோ அதிர்ந்து முழித்தவள் பின்னால் பார்க்க பத்ரியோ அவள் பார்த்ததும் முப்பத்தி இரண்டு பல்லையும் காட்டி சிரிக்க அவளோ "ஆத்தா என்ன காப்பாத்து" என்று கூறியபடி பஸ்ஸை நோக்கி ஓட ஆரம்பித்து விட்டாள் .
கௌதமிற்கும் அன்றைய நாள் முடிவிற்கு வர ஏனோ அவனின் மனம் மட்டும் உலைக்களமாய் கொதித்துக்கொண்டிருந்தது .சற்று நேரத்திற்கு முன் அவனின் தாய் அழைத்திருந்தார் .இவர் எதற்கு தனக்கு அழைக்கிறார் என்று நினைத்து காதில் வைத்தவன் "ஹலோ என்று கூறுவதற்குள்
அவரோ "பாரு கெளதம் உங்க அக்காவுக்கு இன்னும் பதினஞ்சு நாளுல வளைகாப்பு பண்ணலாம்னு பிஸ் பண்ணிருக்கோம் அதுக்கு ஒரு லட்ச ரூவா வேணும் அனுப்சு விட்டுரு"என்றவர் தான் பேச நினைத்தது அவ்வளவு தான் என்பதை போல் வைத்து விட்டார் .
அவனிற்கோ கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது .சிறு வயதிலிருந்து பார்க்கிறான் .அவனின் அக்காவிடம் ஒரு விதமாகவும் அவனிடம் ஒரு விதமாகவும் நடந்து கொள்பவர் அவன் கல்லூரி ஹாஸ்டெல்லிற்கு சென்ற பின் சுத்தமாக கண்டு கொள்ளவில்லை .உண்டானா உறங்கினானா என்று எதுவும் கேட்க மாட்டார் அவனின் தந்தை மட்டுமே பேசுவார் .
பண்டிகை ஏதேனும் வந்தாலும் அவனின் தந்த இ தான் அவனை அழைக்க வேண்டும் வீட்டிற்கு வா என்றோ அல்லது விடுமுறை எடுத்துக்கொண்டு வா என்றோ அவர் மறந்தும் அழைக்க மாட்டார் .வேலைக்கு சென்ற பின் சம்பள நாள் வரும் பொழுது மட்டும் சரியாக வந்து முக்கால் பாக சம்பளத்தை வாங்கி கொண்டு சென்று விடுவார் அதற்கு வேண்டும் இதற்கு வேண்டுமென்று .அது போக அவனை அழைத்தார் என்றால் இப்படி ஏதாவது பணத்தேவைக்காக மட்டுமே அழைப்பார்.
இப்பொழுதும் சரியாய் அவன் ஒரு லட்ச ரூபாய்க்கு போட்டு வைத்திருந்த பாலிசி mature ஆக இருந்தது அடுத்த மாதம் கேட்டு விட்டார் .பெருமூச்சொன்றை விட்டவன் முகம் இறுகி இருக்க மனமும் அதற்கு இணையாய் இறுகி இருந்தது .
வெளியில் வெறித்த பார்வை பார்த்தபடி பஸ்ஸில் இருந்து இறங்கி நடந்துவந்துகொண்டிருந்தவன் எதிரில் ஜான்வியும் ஜீவிதாவும் ப்ரவீனும் நடந்து வந்து கொண்டிருந்ததை பார்த்தான் .அவர்கள் இருவரும் சாதாரணமாய் நடக்க ஜான்வியோ குதித்து குதித்து கையில் இருந்த kit kattai குழந்தை போல் கவரிலேயே வைத்து மொக்கிக்கொண்டு சென்று கொண்டிருந்தாள் .
அவள் செய்கையை பார்த்தவனிற்கு இது வரை கொதித்துக்கொண்டிருந்த மனம் எங்கிருந்து தான் அத்தனை இதமாய் மாறியதோ இதழில் சிறு புன்னகை விரிய அவர்கள் கடந்து செல்லும் அந்த கணப்பொழுதில் அவளது செய்கைகளை மனதினுள் சேமித்து வைத்தபடி அதை அசைபோட்டுக்கொண்டு தனது இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தான் கெளதம் .
இவ்வாறே அடுத்த இரண்டு வாரங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து விட அன்று மாலை அலுவலக பணிகளை லெப்டோப்பில் பார்த்துக்கொண்டிருந்த கௌதமிற்கு ஒரு அழைப்பு வந்தது .என்ன என்று பார்க்க அதுவோ திவ்யாவின் எண்.அதை அன்டன் செய்து காதில் வைத்தவன் "ம்ம் சொல்லு திவி"என்க
அவளோ "கெளதம் இந்த சண்டே நீ freeyaa ?"என்க
அவனோ வேலை பார்த்துக்கொண்டே "ஏன் கேக்குற?"என்க
அவளோ "அது ஒண்ணுமில்லடா கூட work பண்றவங்க ஒரு groupaah மத்தியானம் சாப்பிட restaurant போலாம்னு பிளான் பண்ணோம் நீயும் வந்தா நல்லாருக்கும்னு கேட்டேன் "என்க
அவனோ "இல்ல திவி நா வரல அங்க யாரை எனக்கு தெரி..... என்று ஆரம்பித்தவன் பின் ஏதோ தோன்ற " திவி திவி ...." என்க
அவளோ "என்னடா ?"என்க
அவனோ "கூட வேலை பாக்குறவங்கன்னா.... யார் யாரு ?"என்க
அவளோ "புது டீம் mates தான்டா ஏன் கேக்குற ?"என்க
அவனோ ஒரு நிமிடம் யோசித்தவன் "நா வரேன் "என்று கூற
அவளோ "என்னடா நீ வரேன்னு சொல்ற வரலன்னு சொல்ற முடிவா என்ன சொல்ற ?"என்று கேட்க
அவனோ "நா வரேன் திவி "என்று கூறி வைத்தான் .இன்னும் இரண்டு நாட்களுக்கு பின் சண்டே என்றிருக்க அவனின் மனம் எனோ அந்த ஞாயிற்று கிழமையை ஆவலோடு எதிர் நோக்கியது அவளின் சேட்டைகளை கண்டு அன்றைய வாரத்தின் மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ளலாம் என்று .(என்னடா என் heroineah காமெடி பீஸ் ஆக்கிட்ட ).
இரு துருவங்களை சந்திக்க போகும் அத்தருணம் எப்படி அமையுமோ ?
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top