38
இது என்ன வகையான அன்பு என்று குழம்பிய பிரவீனின் மனதில் அவனே அறியாமல் ஒரு வித இதம் பரவுவதை தடுக்க முடியவில்லை .இவ்வாறு கலாட்டாக்களுடன் ஜான்வியையும் கௌதமையும் அவனது வீட்டிற்கு அழைத்து சென்றவர்கள் மாலை ஆனதும் களைய துவங்கி விட்டார்கள் புதுமணத் தம்பதியருக்கு அவர்களுக்கான தனிமையை தர வேண்டி .
திருமணத்திற்கு பின்னான சம்பிரதாயத்திற்கு ஏற்பாடுகள் எதுவும் செய்ய வேண்டாம் என்று கெளதம் முன்னே கூறி விட்டான் .கெளதம் "அத்தை இந்த கல்யாணம் எங்க உறவுக்கு ஒரு அங்கீகாரம் குடுக்க தான் நடக்குது .அவளுக்கும் இதுக்கான ஏஜ் இல்ல நானும் இதுக்கெல்லாம் மென்டலி prepare ஆகல .வேற எதுவும் ஏற்பாடு பண்ணீராதீங்க "என்று கூறி விட்டான் .பெரியவர்களும் சிறியவர்கள் மனநிலை உணர்ந்து சேரி என்று கூறி விட்டனர்
அனைவரும் ஆறு மணி போல் சென்று விட ஆயாசமாய் உணர்ந்த ஜான்வி அப்படியே தொப்பென்று அங்கிருந்த சோபியாவில் அமர்ந்தாள் .அவள் அருகில் சிரிப்புடன் கெளதம் அமர அவன் தோளில் சாய்ந்து கொண்டவள் சிறிது நேரம் அமைதியாய் இருந்தாள்.அவனும் அமைதியை தத்தெடுக்க கைகள் மட்டும் அவளின் தலை முடியை வருடியபடி இருந்தது.இருவருக்கும் இந்த அமைதி ஏனோ தேவையாய் இருக்க வாய்மொழி அல்லாது மௌனத்தின் வழியாய் தங்கள் காதல் நொடிகளை உணர்ந்து கொண்டிருந்தனர் இருவரும் .
ஜான்வி "அத்து "என்றழைத்து அவனை நிமிர்ந்து பார்க்க
அவனோ "என்ன ஜானு "என்று அவள் முகத்தை பார்த்து கேட்டான் .
ஜான்வி "அடுத்த என்ன பண்ணலாம்னு இருக்க ?"என்று கேட்க
அவனோ சற்று யோசித்தவன் "சமையல் கத்துக்கலாம்னு இருக்கேன் உயிர் முக்கியம் பாரு"என்று சீரியசாக கூற அவளோ அவன் கூறிய தோரணையில் கடுப்பானவள் அவனை தள்ளிவிட்டு எழ அவள் கையை பிடித்து இழுத்து தன் மேலே விழ வைத்தவன் இடையோடு அணைத்தபடி பேசினான் "அவ்ளோ கோவம் வருதா டி உனக்கு ."என்று கேட்க
அவளோ "அப்பறோம் என்னடா நா சீரியசா கேக்குறேன் நீ என்ன வச்சு காமெடி பண்ணுற "என்று கூற
அவனோ அவள் கண்ணை பார்த்தவன் குறும்பு விடுத்தது சிறு புன்னகையுடன் "சரி என்ன சொல்லு"என்று கேட்க
அவளோ தயக்கமாய் இழுத்தாள் "அதான்டா அடுத்து .... நம்ம லைப் ... ப.... பாப்பா "என்று கூறி அவனை பார்க்க
அவனோ மிக நிதானமாய் அவள் கன்னத்தை வருடியவன் "first நாம நம்மள முதல்ல புரிஞ்சுக்க ட்ரை பண்ணுவோம் ஜானு .நம்ம relationship ஒரு long டிஸ்டன்ஸ் relationship .நார்மலா நம்ம ரெண்டு பேரோட கேரக்டர் நமக்கு தெரியும் ஆனா ஒரு ஒருத்தரோட பழக்கம் ?நம்மளோட சின்ன சின்ன செய்கை? ரெண்டு பேரோட டேஸ்ட் ?இது எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்.உன்ன நா முழுசா தெரிஞ்சுக்கணும் டி.இது எல்லாத்தையும் விட உன்ன நான் இன்னும் இன்னும் நிறைய்ய்ய லவ் பண்ணனும் .லவ் marriageaah இருந்தாலும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்க டைம் எடுத்துப்போம் அதுக்கப்புறோம் இதெல்லாம் யோசிப்போம் "என்று கூற அவள் பாதி புரிந்தும் புரியாமலும் மண்டையை ஆட்டி வைத்தாள்.
அவள் மண்டையை ஆட்டிய விதத்திலேயே அவளிற்கு பாதி புரியவில்லை என்று அறிந்தவன் சிரித்தபடி "உனக்கு பாதி புரியலன்னு நல்லா தெரியுது ரொம்ப யோசிக்காத freeyaa விடு "என்றவன் பின் அவள் உடையை பார்த்தான் .
காலையில் பட்டுப்புடவையில் இருந்தவள் இப்பொழுது அவளின் தாயின் சொற்களுக்காக எளிமையான chiffon சேலைக்கு மாறி இருந்தாள்.கழுத்தில் காலையில் அவன் கட்டிய புது மஞ்சள் நான் அவள் உன்னவள் என்று உரக்க சொல்ல தன்னவளின் நெற்றியில் சிறு சிரிப்புடன் இதழ் பதித்தவன் "போய் நோர்மல் dressku change ஆகி வா "என்று கூற அதற்காகவே காத்திருந்தவள் வேகமாய் அவர்கள் அறைக்கு சென்று டீ ஷர்ட்டும் three fourthum மாற்றி வந்தவள் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து பாடல்களில் மூழ்கி போக கெளதம் அவளின் பின் சென்றவன் கை இல்லா டீ ஷர்ட்டும் முட்டிக்கு சற்று மேல் இருந்த ஷார்ட்ஸும் மாறி வந்தான் .
அவன் தன் அருகில் வந்து அமர்ந்த பின்னே அவனை கவனித்தவள் அவனின் இந்த உடையில் ஒரு வித அவஸ்த்தையில் நெளிய துவங்கினாள்.இது வரை அவனை jeansilum semi fromalsilume பார்த்து பழகியவளிற்கு அவனின் இந்த அரை குறை இரவு உடை சற்று வெட்கம் கொள்ள வைத்து அவனை நிமிர்ந்து பார்க்க தயக்கம் கொள்ள செய்தது .
அவள் தோள் மேல் கை போட்டிருந்தவன் அவள் நெளிவதை உணர்ந்து என்ன என்பதை போல் பார்க்க ஜான்வியோ"அது.... அத்து கொஞ்சம் போய் டிரஸ் மாத்திட்டு வரியா "என்று கேட்க
அவனோ தன் உடையை பார்த்தவன் "ஏன் இதுக்கு என்ன ?வீட்ல நா இப்டி தான் போடுவேன் "என்று கூற
அவளோ எப்படி இவனிடம் இதை கூறுவது என்று தெரியாமல் விழிக்க அவள் விழிப்பதை பார்த்து சிரித்தவன் அவள் மனநிலை புரிய "first டைம் பாக்குறதால இப்டி இருக்குனு நெனைக்கிறேன் .போக போக பழகிடும் விடு "என்று கூறி தொலைக்காட்சியில் மூழ்கி விட்டான் .
அவளும் சிறிது நேரம் கழித்து இயல்பானவள் அவனோடு ஒன்றியபடி அமர்ந்து கொண்டாள் .அப்பொழுது தொலைக்க காட்சியில் சிகரம் படத்தில் இருந்து வண்ணம் கொண்ட வெண்ணிலவே பாடல் வர கெளதம் அந்த பாடலை பார்த்து சிரித்தவன் ஜான்வியிடம் திரும்பி ஜானு என்றான் .
அவள் "என்னடா ?"என்று கேட்க
அவனோ தொலைக்காட்சியை சுட்டி காட்டியவன் "உன்ன விட்டு விலகி இருந்தேன்ல அந்த மூணு மாசத்துல இந்த பாட்டு தான் அதிகமா கேட்பேன் ."என்று கூற
அவளோ அந்த பாடலையும் அவனையும் மாற்றி மாற்றி பார்த்தவள் "இந்த பாட்டா?"என்று கேட்க அவனோ லேசாய் தலை ஆட்டியவன் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு அவளின் முகத்தில் புரண்ட முடியை ஒதுக்கியவன் தனது குரலில் அந்த பாடலை பாட துவங்கினான் .
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!
என்று பாடியவன்
மனதில் அந்த மூணாரின் தனிமையான இரவுகளில் தன்னவளை தனதாக்கிக்கொள்ள முடியாத தன் இயலாமையை எண்ணி வருந்துபவன் அவள் தன்னிடமே சேர்ந்து விட மாட்டாளா என்று ஏங்கியபடி வெண்ணிலவை வெறித்தபடி அமர்ந்தது நினைவில் வர அடுத்த வரிகளை பாட துவங்கினான்
பக்கத்தில் நீயும் இல்லை!
பார்வையில் ஈரம் இல்லை!
சொந்தத்தில் பாஷை இல்லை!
சுவாசிக்க ஆசை இல்லை!
என்று பாட ஜான்வியின் நினைவுகளோ எத்தனை முறை கெளதம் அவளை விட்டு மொத்தமாக விலகி சென்று விட்டான் என்று நினைவு தனிமையின் கொடுமையை அதிகரிக்க தூக்க மாத்திரைகளை மொத்தமாக விழுங்க எண்ணி அதன் பின் தாய் முகம் மனக்கண்ணில் முன் வந்து அவற்றை கீழே கொட்டிவிட்டு மடிந்து அழுதிருப்பாள் என்று நினைக்க இன்றும் அவள் கண்ணில் நீர் கோர்த்தது .
கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை!
நீலத்தை பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை!
தள்ளி தள்ளி நீ இருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை !
என்ற வரிகள் பாடியபடி அவள் நெற்றியில் இதழ் பதித்தவன் அவளை தன்னோடு மேலும் இறுக்கிக்கொள்ள ஜான்வியும் அவன் மார்பில் ஒன்றியவள் தன்னவனை தன்னோடு இறுக்கிக் கொண்டாள்.
நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்ச்சத்திர பூ பறித்தேன்!
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி!
கன்னி உன்னை பார்த்திருப்பேன்
கால் கடுக்க காத்திருப்பேன்!
ஜீவன் வந்து சேரும்வரை
தேகம் போல் நான் கிடப்பேன்!
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்!
என்றவன் தன் ஜீவன் தன்னோடு சேர்ந்த நிம்மதியில் கண் மூடி அவளின் அருகாமையை ரசிக்க துவங்க மனக்கண்ணில் அந்த மூன்று மாதங்களில் இருவரும் அனுபவித்த மனவலியின் கொடுமை இருவரையும் மௌனமாக்கி விட்டிருந்தது .ஜான்வி தான் வெறுத்து ஒதுக்கவேண்டும் என்று நினைத்தவன் கொடுத்த வலியே ஒவ்வொரு நொடியும் நரகமாய் இருந்திருக்க தன் மேல் இத்தனை காதல் வைத்திருப்பவனிற்கு அப்படி பேச எவ்வளவு வலியாய் இருந்திருக்கும் என்று நினைக்க மனம் பதைபதைத்து .அவன் மார்பில் சாய்ந்திருந்தவள் கண்கள் எதேர்ச்சியாய் அவன் நெஞ்சின் அருகில் அந்த டீ ஷர்ட் விலகியதில் தெரிந்த இடைவேளையில் ஏதோ ஒரு பெயர் போல் இருக்க என்ன என்று விளக்கி பார்த்தவள் அங்கே தன்னவன் நெஞ்சில் மஞ்சம் கொண்டிருக்கும் தன் பெயரை கண்ணீரோடு வருடினாள் .
கௌதமோ கானல் நீரென தன் காதல் மறைந்து விட்டதோ என்று நினைத்து நினைத்து வெதும்பியவன் தன் முன் தன் மனைவியாய் இருப்பவள் அருகாமை கொண்டு மனதின் வலிகளை ஆற்றுவது போல் அவளை இறுக்கி அணைத்தபடி அவள் அருகாமையில் தொலைந்து இருக்க அவளின் கண்ணீர் தன் மார்பில் பட்டு தெறிக்கும் உணர்விலேயே தெளிந்தான் .
ஜான்வியோ அவனின் நெஞ்சில் இருந்த தன் பெயரை வருடியவள் கண்ணீர் நிறைந்த கண்களோடு "ரொம்ப கஷ்டப்பட்டுட்ட தான அத்து .நான் கூட உன்ன புருஞ்சுக்கலையே"என்று கூற
அவனோ அவள் கண்ணீரை துடைத்தவன் "அய்யயோ என்னடி இது குழந்தை மாறி .அதான் இப்போ எல்லாம் சரி ஆகிடுச்சுல்ல "என்று கூற
அவளோ அப்பெயரை வருடியபடி "வலிச்சுச்சா ?"என்று கேட்க அவனோ சிரிப்புடன் இல்லை என்று தலை அசைத்தவன் அவள் கண்ணீரை துடைத்துவிட்டு மணியை பார்க்க எட்டு என்றது .
அவள் கண்களை பார்த்தவன் அதில் சிறிது சோர்வு எட்டிப்பார்ப்பதை உணர்ந்து அவளை தன்னை விட்டு பிரிக்க அவள் என்ன என்பதை போல் பார்த்தாள்.அவனோ புன்னகையுடன் மணியை காட்டியவன் "டைம் ஆச்சு ஜானு சாப்பிட்டு தூங்கலாம் செம tiredaa இருக்கு நாளைக்கு வேலைக்கு வேற போகணும் "என்று கூற
அவள் "அப்போ உக்காரு அத்து நான் தோசை ஊத்துறேன் "என்று செல்ல
அவனோ கையை தலைக்கு மேல் தூக்கி கும்பிட்டவன் "ப்ளீஸ் டி கல்யாணம் ஆன அன்னைக்கே dysentry வந்து hospitalla அட்மிட் ஆக விரும்பல "என்று கூற
அவளோ முகத்தை உம்மென்று வைத்தவள் கையை காட்டியபடி முகத்தை வெடுக்கென்று திருப்ப அவள் செய்கையில் சிரித்தவன் தலையில் அடித்தபடி "சரி வா ஆனா நான் முதல்ல ஊத்துறத பாத்துட்டு அப்பறோம் நீ ஊத்து"என்று கூற
அவள் முகம் பிரகாசமாக "ஈஈ ஓகே "என்று கூறியபடி அவனுடன் நடை போட்டாள் .
அவள் அங்கிருந்த சமையல் மேடையில் எற முடியாமல் திணறிக்கொண்டிருக்க அவள் அருகில் வந்து அவள் இடையோடு தூக்கி அந்த சமையல் மேடையில் அமர்த்தியவன் பின்
முதலில் தேங்காய் சட்டினி அரைத்தவன் அதற்கு கடுகு கறிவேப்பிலை தாளித்து கொட்டிவிட்டு பின் தோசை கல்லை அடுப்பில் வைத்தான்.
அது சூடானப்பின் எண்ணெய் வைத்து துடைத்து விட்டு தோசை ஊற்ற அவன் ஊற்றிய மூன்று தோசையும் பொன்னிறமாய் மொரு மொறுவென்று அழகாய் வந்தது .அதை விழி விரித்து பார்த்தவள் "சூப்பரா சுடுற அத்து "என்று கூற அவனோ இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொண்டவன் அவளிடம் தட்டை கொடுத்து இடை வரை குனிந்து "நன்றி மஹாராணி "என்று கூறி
அவனிற்கு ஊற்ற செல்ல அவளோ அடுப்படி மேடையில் இருந்து கீழே குதித்தவள் "அத்து அத்து நான் உனக்கு ஊத்துறேன் ட "என்று கூற அவனோ அவளை இரண்டு நொடி பார்த்தவன் பின் அவள் கண்ணில் இருந்த ஆர்வத்தை பார்த்து அவள் கையில் கொடுத்தான் .
ஜான்வி ஆர்வமாய் முதல் தோசையை ஊற்ற அது வட்டமாய் வராமல் ஏதோ அமீபா போல் ஒரு வடிவத்தில் வந்தது .அவள் அந்த வடிவத்தை பார்த்து கௌதமிடம் திரும்பி அசடு வழிய சிரிக்க அவனோ சிரிப்பை கட்டுப்படுத்த ப்ரம்ம பிரயத்தனம் செய்தான் .
அதன் பின் அந்த தோசையை பிய்த்து பிய்த்து எடுத்து அவன் தட்டில் கொட்ட கௌதமோ என்ன இது என்பதை போல் பார்த்தான்.அவன் கேலிப்பார்வையில் அசடு வழிந்தவள் "அத்து எனக்கு உன் மேல எவ்ளோ பாசம் பாத்தியா நீ தோசையை பிச்சு சாப்பிட கஷ்டப்படுவானு நானே உனக்கு பிச்சு பிச்சு சுட்டு கொடுத்துட்டேன் "என்று கூற
அவனோ சிரிப்பை கட்டுப்படுத்தியவாறு "என் பொண்டாட்டிக்கு என் மேல எவ்ளோ பாசம் அப்டியே புல்லரிக்குது ஜானு "என்று கூற
அவளோ முகம் சுருக்கியவள் "first டைம் செஞ்சா அப்டி தான் இருக்கும் "என்று கூற
அவனோ அவள் பின் வந்து நின்றவன் சிரித்தபடி அவள் கையில் தன் கையை வைத்து அடுத்த தோசையை வட்ட வடிவமாய் ஊற்ற அவளோ தான் வட்ட வடிவமாய் சுட்ட தோசையை பார்த்து கண்கள் விரித்தவள் சிறு குழந்தை போல் கை தட்டி குதித்தாள் .அவள் சிறுபிள்ளை தனத்தில் வழக்கம் போல் மயங்கி சிரித்தவன் .அடுத்த தோசையை இதே போல் ஊற்று என்று கூறி விட்டு அவளிற்கு தோசையை ஊட்ட துவங்கினான் ஆறினால் நன்றாக இருக்காது என்று .
அவள் அவன் கூறியதை போலவே அடுத்த தோசையை வட்டமாய் இல்லை என்றாலும் ஒரு ஓவல் வடிவில் சுட்டவள் பிய்ந்து விடாமல் எடுக்க அவளை பாராட்டியவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு இரண்டுக்கு மேல் சாப்பிட மாட்டேன் என்றவளை சமையல் மேடையில் அமர்ந்தவாறு தன் காலிடுக்கில் நிறுத்தி வைத்தவன் அவளுக்கு தான் ஊட்டிவிட்டு தனக்கு அவளை ஊட்டி விட வைத்து என்று அவளுடனான ஒவ்வொரு நொடியையும் ரசித்துக் கொண்டிருந்தான் கெளதம் .
Andha song ethana per ketturupeenganu therila but en favourite song.ketu paarunga
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top